Pages

Tuesday, February 26, 2013

+2 படித்தவர்களுக்கு இந்திய விமான படையில் வேலை வாய்ப்பு: 02 March 2013 இடம் : VOORHEES COLLEGE, VELLORE (TAMIL NADU)

விமான படையில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளைச் சார்ந்த திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து குரூப் எக்ஸ் வகையைச் சார்ந்த டெக்னிகல் பிரிவிலான ஏர்மேன் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 


 தேவைகள்: 

இந்திய விமானப் படையின் ஏர்மேன் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.01.1992க்குப் பின்னரும் 31.03.1996க்கு முன்பும் பிறந்தவராக இருக்க வேண்டும். ப்ளஸ்டூ அளவிலான படிப்பில் இயற்பியல், கணிதம் மற்றும் ஆங்கிலத்தைப் படித்திருப்பதோடு குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

அரசு அங்கீகாரம் பெற்ற பாலிடெக்னிக் கல்லூரி வழியாக மூன்று வருட இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பை மெக்கானிகல், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., இன்ஸ்ட்ருமென்டேஷன் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் முடித்தவர்களும் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும். மேற்கண்ட கல்வித் தகுதிகளுடன் சில குறைந்த பட்ச உடல் தகுதிகளும் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க கட்டாயம் தேவைப்படும். உயரம் குறைந்த பட்சம் 152.5 செ.மி.,யும் இதற்கு நிகரான எடையும் இருக்க வேண்டும்.

மார்பு குறைந்த பட்சம் 5 செ.மி., விரிவடையும் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். கண்ணாடி அணிந்தவர்கள் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு விண்ணப்பிக்க முடியும். ஏனைய விபரங்கள்: இந்திய விமானப் படையின் டெக்னிகல் காலி இடமான ஏர்மேன் பதவிக்கு எழுத்துத் தேர்வு, உடல் தகுதி தேர்வு மற்றும் நேர்காணல் என்ற அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

இவை வரும் மார்ச் 2, 3, 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் நடத்தப்படும் என்று தெரிகிறது. இந்தப் பதவிக்கு இந்தத் தேதிகளில் நடைபெறும் ரெக்ரூட்மென்ட் ராலிக்கு பதிவு செய்து கொள்வதும், தேவைப்படும் ஆவணங்கள் மற்றும் பொருட்களுடன் செல்வதும் முக்கியம் என்பதால் பின்வரும் இணையதளத்திலிருந்து முழுமையான விபரங்களை அறியவும். விபரங்களைப் பின்வரும் முகவரியைத் தொடர்பு கொண்டும் அறியலாம்.

முகவரி: 

Commanding Officer, 
8 Airmen Selection Centre, Air Force Station, Tambaram, 
Chennai - 600 046 

இணையதள முகவரி: