Pages

Monday, November 22, 2010

மன்மதன் அம்பு [2010 ] ACDrip~VBR~320kpbs~CD-Cover

Banner: Red Giant Movies


Cast: Kamal Haasan, R. Madhavan, Trisha Krishnan, Ramesh Arvind & Sangeetha

Direction: K. S. Ravikumar

Production: Udhayanidhi Stalin

Music: Devi Sri Prasad

Lyricis: Kamal Haasan & Viveka


01. Dhagudu Dhattham ... - Download
Singers : Kamal Haasan
Lyricis : Kamal Haasan

02. Who's The Hero... -  Download
Singers : Andrea Jeremiah
Lyricis : Kamal Haasan

03. Neela Vaanam... - Download
Singers : Kamal Haasan & Priya Hemesh
Lyricis : Kamal Haasan

04. Oyyale....- Download
Singers : Mukesh Suchitra & Karthik Kumar
Lyricis : Viveka

05. Kamal Kavidhai... - Download
Singers : Kamal Haasan & Trisha
Lyricis : Kamal Haasan
06. Theme Of Mma... - Download
Singers : Music
Lyricis : Music

07. Manmadan Ambu... - Download
Singers : DSP
Lyricis : Kamal Haasan 



மன்மதன் அம்பு [2010 ] - Click Here To Download



 மன்மதன் அம்பு [2010 ] - Click Here To Download

Saturday, November 20, 2010

Eesan (2010) Mp3 Songs [ACD-VBR][320 Kbps]




Movie - Eesan

Cast - Samudrakani, Vaibhav, A.L.Alagpappan, Abhinaya, Aparna

Year - 2010

Music Director - James Vasanthan

Banner - Company Productions

Label - Think Music

                                                                                  

01. Meyyana Inbam …Singers : Sukhwinder Singh, Benny Dayal & Sunandan - Download
Lyricis : Na.Muthukumar

02. Jilla Vittu…Singers : Thanjai Selvi  - Download
Lyricis : Mohan rajan

03. Get Ready…Singers : Benny Dayal & Gerard Thompson - Download
Lyricis : Na.Muthkumar

04. Kannil Anbai….Singers : Padmanaban - Download
Lyricis : Na.Muthkumar

05. Sugavasi…Singers : K.S.Chitra & Malgudi Subha - Download
Lyricis : Yugabharathi



Eesan (2010) Mp3 Songs [ACD-VBR][320 Kbps]   - Click Here To Download



Eesan (2010) Mp3 Songs [ACD-VBR][320 Kbps]   - Click Here To Download

Thursday, November 18, 2010

கோலாகலமாகமாக நடந்தது அழகிரி மகன் திருமணம்-கருணாநிதி நடத்தி வைத்தார்

மதுரை: மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி-அனுஷ்கா திருமணத்தை முதல்வர் கருணாநிதி [^] இன்று நடத்தி வைத்தார்.


முதல்வரின் பேரனும், அழகிரியின் இளைய மகனுமான துரை தயாநிதிக்கும், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சீதாராமனின் மகள் அனுஷ்காவுக்கும் இன்று திருமணம் நடைபெற்றது. இதற்காக தமுக்கம் மைதானத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

காலை 9.50 மணியளவில் நிதியமைச்சர் க.அன்பழகன் தலைமையில் முதல்வர் கருணாநிதி நடத்தி வைத்தார். அவர் தாலியை எடுத்துக் கொடுக்க, அதை வாங்கி அனுஷ்கா கழுத்தில் கட்டினார் தயாநிதி அழகிரி.

கோவில்களில் அன்னதானம்:

திருமணத்தையொட்டி மதுரை மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளி மாணவர்கள் பள்ளிகள், முதியோர் இல்லங்கள், ஆரவற்றோர் அமைப்புகளின் மையங்கள், கோவில்களில் இன்று அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சின்ன சொக்கிகுளத்தில் உள்ள காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத குழந்தைகளுக்கான பள்ளி, செனாய் நகரில் உள்ள சேவாலய பள்ளி, திருப்பாலையில் உள்ள லவ் அண்டு கேர் மையம், பைக்காராவில் உள்ள நாராயண குரு முதியோர் இல்லம், பசுமலையில் உள்ள பாரதி முதியோர் இல்லம், பரவையில் உள்ள பார்வையற்ற குழந்தைகளுக் கான பள்ளி.

நத்தம் சாலையில் உள்ள சேவா ஆசிரமம், ஆரப்பாளையத்தில் உள்ள அபோர்டு பள்ளி, கூடல் நகரில் இருக்கும் ஈமா மையம், சுந்தர்ராஜன் பட்டியில் உள்ள பார்வையற்றோருக்கான பள்ளி ஆகியவற்றில் இலவச மதிய உணவு வழங்கப்படும்.

அதேபோல கே.கே.நகரில் உள்ள என்.எம்.ஆர். ஆதரவற்றோர் பள்ளி, பசுமலை இன்பா இல்லம், கிருஷ்ணாபுரம் காலனியில் உள்ள நாகராஜ் இல்லம், கே.புதூரில் உள்ள ஆதரவற்றோர் இல்லம், அழகர்கோவில் சாலையில் உள்ள ஆக்சீலியம் ஆங்கிலப்பள்ளி, வில்லாபுரத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளி, முத்துப்பட்டியில் உள்ள உபகார் மையம், ஆரப்பாளையத்தில் உள்ள ஆப்பிள் கிட் மையம் ஆகிய இடங்களில் உள்ள அனைவருக்கும் இலவச மதிய உணவு வழங்கப்படுகிறது.

மேலும், மீனாட்சி அம்மன் கோவில், அழகர்கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில், ஒத்தக்கடையில் உள்ள நரசிங்கப் பெருமாள் கோவில் ஆகியவற்றிலும் பக்தர்கள் அனைவருக்கும் மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கலகலப்பான வரவேற்பு:

முன்னதாக நேற்று மாலை வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கோலாகலமாக நடந்த இந்தநிகழ்ச்சியில், முதல்வர் கருணாநிதி, ஆளுநர் பர்னாலா, நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

மாலை 6.35 மணியளவில் மணமகன் துரை தயாநிதி, மணமகள் அனுஷா ஆகியோரை கயல்விழி-வெங்கடேஷ், அஞ்சுக செல்வி-விவேக் தம்பதியினர் அழைத்துச் சென்று வரவேற்பு மேடையில் அமர வைத்தனர்.

இரவு 7.10 மணிக்கு முதல்வர் கருணாநிதி வந்தார். அவர் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து விட்டு வரவேற்பு மேடை அருகே போடப்பட்டிருந்த நாற்காலியில் போய் அமர்ந்தார். இரவு 8 மணிக்கு கவர்னர் பர்னாலா வந்து மணமக்களை வாழ்த்தினார்.

தமிழக போலீஸ் டிஜிபி லத்திகா சரண், கூடுதல் டிஜிபி ராஜேந்திரன்,தென்மண்டல ஐ.ஜி. கிருஷ்ணமூர்த்தி, மதுரை போலீஸ் கமிஷனர் பாலசுப்பிரமணியன், நடிகர்கள் எஸ்.எஸ்.ராஜேந்திரன், அஜீத், பாக்கியராஜ், பிரபு, அவருடைய அண்ணன் ராம்குமார், வடிவேலு, மாதவன், சூரியா, அவருடைய தம்பி கார்த்தி, சிவா, நடிகை குஷ்பு, தயாரிப்பாளர் சங்க தலைவர் ராம.நாராயணன், இயக்குனர் [^] வெங்கட்பிரபு, இயக்குநர் பாலா, கவிஞர் பா.விஜய், இந்திய கிரிக்கெட் [^] தேர்வு [^] குழு தலைவர் ஸ்ரீகாந்த்,

மத்திய அமைச்சர்கள் பிரபுல் படேல், ஜி.கே.வாசன், நெப்போலியன், அனைத்து தமிழக அமைச்சர்கள் உள்ளிட்டோர் வந்திருந்தனர். இவர்கள் போக பல்துறைப் பிரமுகர்களும் வந்திருந்தனர்.

முதல்வர் குடும்பத்திலிருந்து மனைவி தயாளு அம்மாள், துணைவியார் ராஜாத்தி அம்மாள், பேரன் உதயநிதி ஸ்டாலின், மகள்கள் செல்வி, கனிமொழி, மகன்கள் மு.க.முத்து, மு.க.தமிழரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பாட்டுப் பாடிய சம்பந்திகள்:

அனைவரின் எதிர்பார்ப்பும் திருமணத்திற்கு முன்னாள் அமைச்சர் ராஜா வருவாரா என்பதில்தான் இருந்தது. இருப்பினும் முதல்வருடன் சேர்ந்து ராஜாவும் வந்திருந்தார்.

கோட், சூட்டில் படு கம்பீரமாக காணப்பட்டார் மு.க.அழகிரி. அதை விட ஆச்சரியமாக, மேடையேறி அவர் இரண்டு பாடல்களையும் பாடி அனைவரையும் வியக்க வைத்தார். இந்த பாடல்களை முதல்வர் கருணாநிதியின் விருப்பத்திற்கேற்ப பாடினார் அழகிரி. ஒரு பாடலோ சோலோவாகவும், இன்னொரு பாடலை, சம்பந்தி சீதாராமனுடன் இணைந்தும் பாடினார்.

கங்கை அமரன் குழுவினர் இசைக் கச்சேரியைக் கலக்கிக் கொண்டிருந்தபோது அழகிரியையும், சீதாராமனையும் அழைத்த முதல்வர் கருணாநிதி படித்தால் மட்டும் போதுமா படத்தில் வரும் பொன் ஒன்று கண்டேன் பாடலைப் பாடுமாறு கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து சம்பந்திகள் இருவரும் மேடையேறி மைக்கைப் பிடித்து அப்படியே பாடினார்கள். இதைப் பார்த்து முதல்வர் உள்பட அனைவரும் குஷியுடன் ரசித்தனர். அனைவரும் கரகோஷம் எழுப்பி ஆரவாரம் செய்தனர்.

பாடலை பாடி முடித்து விட்டுத் திரும்பிய அழகிரி மறுபடியும் மேடைக்கு வந்தார். இந்தமுறை தனக்கு மிகவும் பிடித்த பாடலான கண்ணெதிரே தோன்றினாள் பாடலைப் பாடி அசத்தினார். எழுதி வைக்காமல் அப்படியே அவர் பாடியதைக் கேட்டு வரவேற்புக்கு வந்திருந்தவர்களும், அழகிரி ரசிகர்களும் அசந்து போய் விட்டனர்.

இப்படியாக படு கோலாகலமாக, குஷியாக, ஜாலியாக நடந்து முடிந்தது அழகிரி மகன் திருமண வரவேற்பு.

Wednesday, November 17, 2010

வந்தது பேஸ்புக் மின்னஞ்சல் (E-MAIL) - அறிமுகப்படுத்தியது பேஸ்புக்

வாஷிங்டன்: 500 மில்லியன் பயனாளர்களைக் கொண்ட பேஸ்புக்குக்கென தனி இமெயில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை அமெரிக்காவில் தொடங்கிய இணைய தள மாநாட்டில் அறிமுகப்படுத்தினார் பேஸ்புக் சிஇஓ ஜுகர்பெர்க்.


கூகுளுக்குப் போட்டியாகவே ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த மெயில் வசதியில் இனி பயனாளர்கள் @facebook.com ஐடியைப் பெற முடியும்.

பேஸ்புக் CEO ஜுகர்பெர்க்

இமெயில் சேவையில் ஜாம்பவானான கூகுளுக்கு இது பெரும் சவாலாக மாறியுள்ளது.

பேஸ்புக்கின் இந்த போட்டியைச் சமாளிக்க பல வழிகளை யோசித்து வருகிறது கூகுள். பெரும்பாலான பேஸ்புக் பயனாளர்கள், கூகுள் மெயிலைப் பயன்படுத்துபவர்களாகவே உள்ளதால், அவர்களைத் தக்க வைக்க பேஸ்புக்கை விட அதிக வசதி கொண்ட சமூகத் தளத்தை உருவாக்கும் வேலைகளில் மும்முரமாக உள்ளது கூகுள்.

Tuesday, November 16, 2010

ஜெ. அறிக்கை : முதல்வர் கருணாநிதி பதில்

சென்னை: டான்சி நில ஊழலில், உச்சநீதிமன்றத்தால் கடுமையாக தண்டிக்கப்பட்டு தீர்ப்பு கூறப்பட்ட பிறகும் ஜெயலலிதா என்ன செய்தார் என்பதை மறந்து விட்டு, ஸ்பெக்ட்ரம் பிரச்சினை தொடர்பாக ஜெயா தற்போது அறிக்கை விடுவதில் என்ன நியாயம் இருக்கிறது என்பதை நாட்டு மக்கள்தான் சிந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கை:

கேள்வி: அமைச்சர் ராசாவை மத்திய அரசு பதவி நீக்கினால் நிபந்தனையற்ற ஆதரவை மத்திய அரசுக்கு தெரிவிப்போம் என்று தானாகவே முன்வந்து அழையா விருந்தாளியாக ஜெயலலிதா கூறியது மக்கள் நலனைப் பாதுகாக்க உதவாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது பற்றி?

பதில்: அந்தத் தீர்மானம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் என்ற போதிலும், அம்மையாரின் மனம் நோகக்கூடாது என்பதைப் போல, அந்த தீர்மானத்தில் மத்திய அரசையும், அதற்கு ஆதரவாக உள்ள தி.மு.க. அரசையும் பலவிதங்களிலும் தேவையில்லாமல் குறை கூறியிருக்கிறார்கள். அவர்களது நோக்கம், அ.தி.மு.க. தலைவியை குறை கூற வேண்டும் என்பதை விட, மத்திய மாநில அரசுகளையும் தாக்கிட வேண்டு மென்பதாகத்தான் உள்
ளது.

காங்கிரஸ் கட்சியோடு அணி சேர வேண்டுமென்பதற்காக அம்மையார் எப்படியெல்லாம் தானாக முன்வந்து அறிக்கை விடுகிறார் என்ற உண்மையை புரிந்து கொள்ளாமல், ஏதோ அதைக் கண்டிக்கிறோம் என்ற அளவிற்காவது அறிக்கை விட முன் வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீர்மானம் ஓரளவிற்கு மனதுக்கு ஆறுதலாகவே உள்ளது; ஆனால் மார்க்சிஸ்டுகளின் மனச்சாட்சிக்கு நிறைவானதாக இருக்குமா என்பது சந்தேகம்தான். நல்ல முடிவு தான்; ஆனால் நழுவுகிறதே எங்கேயோ! ஏனெனில் இன்றைய தி.மு.க. ஆட்சியின் மீது அவர்கள் சொல்கிற குறைகள்; கடந்தகால ஜெயலலிதா ஆட்சியில் நடைபெற்ற குறைபாடுகள், முறைகேடுகள் இவற்றோடு ஒப்பிடும்போது; முறையே, அது கடுகளவு - இது மலையளவு என்றுதான் கூறமுடியும்.

கேள்வி: இந்திய பாராளுமன்ற ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டுமென்ற பொறுப்புணர்வோடு மத்திய அமைச்சர் ராசாவை பதவி விலகுமாறு தாங்கள் செய்த பிறகும் ஜெயலலிதா அவரை கைது செய்ய வேண்டும், வழக்கு தொடர வேண்டும் என்றெல்லாம் சொல்லியிருக்கிறாரே?

பதில்: எதிர்க்கட்சி என்றால் மேலும்மேலும் எதையாவது சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். ஒரு விரலை எதிரி முன்னால் காட்டும்போது மற்ற விரல்கள் அவர்களை நோக்கித்தான் இருக்கின்றன என்பதை மறந்துவிடக் கூடாது. அ.தி.மு.க. தலைவி மீது பல ஊழல் குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்டு தீர்ப்பு கூறப்பட்ட பின்னரும் நான்கு இடங்களில் தேர்தலில் போட்டியிட்டு, அவைகள் செல்லாது என்று கூறப்பட்ட பின்னரும் - ஆளுநரை வலியுறுத்தி பதவிப் பிரமாணம் செய்துகொண்டு, அதுவும் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட வரலாற்றையெல்லாம் மக்கள் மறந்திருப்பார்கள் என்று அவர் எண்ணுகிறார் போலும்!

கட்சிக் கட்டுப்பாட்டினையேற்று பதவி விலகிய ராசா தன்மீது எந்தத் தவறும் இல்லை என்றும், எல்லாமே சட்டப்படி தான் நடந்துள்ளது என்பதை உரிய முறையில் நிரூபிப்பேன் என்றும் கூறியிருப்பதையும் மறந்துவிடக் கூடாது.

இன்னும் சொல்லவேண்டுமேயானால், அரசுக்குச் சொந்தமான டான்சி நிலத்தை முதல்-அமைச்சராக பதவிப் பொறுப்பில் ஜெயலலிதா இருந்த போது குறைந்த விலைக்கு வாங்கியது பற்றிய வழக்கு உச்சநீதிமன்றம் வரை நடந்து அதிலே நீதிபதிகள் கூறும் போது, பொதுத் துறைக்குச் சொந்தமான நிலங்கள் ஜெயலலிதா பங்குதாரராக உள்ள கம்பெனிகளுக்கு, அவர் முதலமைச்சராக பதவியிலே இருந்த காலத்தில் விற்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது.

டான்சி நிறுவனத்தின் விதிமுறைகளின்படி அதை விற்பனை செய்வதற்கு முன்பு அரசிடமிருந்து ஒப்புதல் பெற்றாக வேண்டும். அதுவரை விற்பனை முழுமை அடைந்ததாகாது. விற்பனை தொடர்புடைய ஆவணங்களில் ஜெயலலிதா தன்னைச் சம்பந்தப்படுத்திக் கொள்ளாவிட்டாலும், அந்த அனுமதியினை அரசு இயந்திரம் உடனடியாக வழங்கியுள்ளது.

நீதிமன்ற நடவடிக்கை காரணமாக ஏலத்திற்கு வருகின்ற சொத்துக்களை ஏலம் போடுகின்ற ஒரு சாதாரண அதிகாரியோ, கால்நடைகளை அடைத்து வைத்து அதனைப் பாதுகாக்கும் அதிகாரியோ, ரெயில்வே சொத்துக்களைப் பராமரிக்கும் அதிகாரியோ அவர்களுடைய அதிகாரத்திலே உள்ள சொத்துக்களை விலைக்கு வாங்க முடியாது.

வழக்கு சம்பந்தப்பட்ட சொத்துக்களின் மதிப்பு குறித்து எங்களின் முடிவு எதுவாக இருந்த போதிலும், அதிலே ஜெயலலிதாவிற்கு லாபம் இருந்ததா இல்லையா என்பதை விட, முதல்-அமைச்சரே அரசின் சொத்துக்களை வாங்க எத்தனித்து விட்ட நிலையில், அதிகாரவர்க்கம் அளவுக்கு மீறி அதிலே ஆர்வம்காட்டி இந்த விற்பனையை சுமுகமாக முதலமைச்சர் ஜெயா விரும்பும் விலைக்கே முடித்திருக்கிறார்கள் என்பதை எங்களால் தெரிந்துகொள்ள முடிகிறது. எந்த நிலையிலும், ஜெயலலிதாவின் இந்தச் செயல்கள் நடத்தைவிதிகளின் உட்பொருளுக்கு விரோதமானதாகும்.

நியாயமாக பேசவேண்டுமென்றால், அரசின் சாதாரண அதிகாரிகளுக்காக ஒரு சட்டமும், முதல்-அமைச்சருக்காக ஒரு சட்டமும் இருக்க முடியுமா? இது போன்ற நிலைகளில், நன்னடத்தை விதி என்பது அருங்காட்சியகத்திலே வைக்கப்பட வேண்டிய வெறும் ஆடம்பர பொருள் மட்டும்தானா? அது கடைப்பிடிக்கப்பட வேண்டிய ஒன்று அல்லவா? இவைகள்தான் எங்களுடைய மனச்சாட்சியைத் துன்புறுத்துகிறது. முதல் குற்றவாளியான ஜெயலலிதா தான் இந்த வழக்கிலிருந்து தப்பித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக டான்சி நில பத்திரத்திலே உள்ள, அவருடைய ஆடிட்டரும் அரசு அதிகாரிகளும் ஏற்றுக்கொண்ட அவருடைய கையெழுத்தையே இல்லை என்று மறுக்கக்கூடிய அளவிற்குச் சென்றிருக்கிறார்.

இந்த அளவிற்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறப்பட்ட பிறகும் ஜெயலலிதா என்ன செய்தார் என்பதை மறந்து விட்டு, ஜெயா தற்போது அறிக்கை விடுவதில் என்ன நியாயம் இருக்கிறது என்பதை நாட்டு மக்கள்தான் சிந்திக்க வேண்டும்.

ஜேபிசி விசாரணை தேவையில்லை

கேள்வி: அமைச்சர் ராசா தனது பதவியை ராஜினாமா செய்த பிறகும், நாடாளுமன்றக் கூட்டுக்குழு (ஜே.பி.சி.) வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதால் நேற்று நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதே?

பதில்: ஸ்பெக்ட்ரம் விவகாரம் உச்சநீதிமன்றத்தின் விசாரணையில் இருப்பதால் வேறுயாரும் இறுதி முடிவெடுத்து விட முடியாது. மத்திய கணக்கு தணிக்கை தலைமை அதிகாரியின் அறிக்கையை பொது கணக்குக் குழு பரிசீலனை செய்யவுள்ளது. அதன் பிறகு அந்தக் குழு தனது அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து அதன் மீது விரிவான விவாதம் நடைபெறலாம்.

பொது கணக்குக் குழுவின் தலைவராக தற்போது பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ.க.வைச் சேர்ந்தவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான முரளி மனோகர் ஜோஷிதான் இருந்து வருகிறார். நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை வேண்டுமென்று கோருவதின் மூலம் எதிர்க்கட்சியினருக்கு முரளி மனோகர் ஜோஷி மீது நம்பிக்கை இல்லையா? அல்லது நாடாளுமன்றத்தை நடத்தவிடாமல் செய்ய வேண்டும் என்பதற்காகவே கையாளுகின்ற யுக்தியா?

பொது கணக்குக் குழு என்பது நாடாளுமன்றக் கூட்டுக்குழுவை விட அதிகாரம் மிக்கதாகும். நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் தலைவராக ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் தான் இருப்பார். இந்த விவரங்களைத்தான் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சாலும், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் விளக்கியிருக்கிறார்கள்.

சேப்பாக்கத்தில்தான் மீண்டும் போட்டியிடுவேன்

கேள்வி: 2011, தமிழகச் சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் தாங்கள் சென்னை-கொளத்தூர் தொகுதியில் போட்டியிடப்போவதாக நேற்றைய தமிழ் நாளேடு ஒன்றில் செய்திக் கட்டுரை வெளியிட்டிருக்கிறார்களே?

பதில்: தமிழகச் சட்டப்பேரவைக்கான கடந்த மூன்று பொதுத் தேர்தல்களில் தொடர்ந்து சென்னை-சேப்பாக்கம் தொகுதியில் நின்று வென்றவன் நான். 2011 சட்டப்பேரவை பொதுத் தேர்தலில், எந்தத் தொகுதியில் நான் போட்டியிடப் போகிறேன் என்று பல்வேறு வகையான யூகங்களை பத்திரிகைகள் வெளியிடுகின்றன. அந்த யூகங்கள் அனைத்தும் உள்நோக்கம் கொண்டவை - கற்பனையானவை - எவ்வித அடிப்படையும் இல்லாதவை. பத்திரிகைச் சுதந்திரத்தைப் பயன்படுத்திக் கொண்டு, அவரவர் யூகங்களை செய்திகளாக்குவதில் தீவிரம் காட்டுவது, ஜனநாயக வளர்ச்சிக்கு உகந்ததல்ல.

மோகனாஸ்த்திரம்

கேள்வி: காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தருவதாக; தன்னிச்சையாக, வலிய முன் வந்து ஜெயலலிதா அறிவித்தது; ``ராஜதந்திரம்'' என்றும், அந்த அறிவிப்பு ``பிரம்மாஸ்திரம்'' போன்றதென்றும் தினமலர் செய்திக் கட்டுரை வெளியிடப்பட்டிருந்ததே?

பதில்: காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தருவதாக ஜெயலலிதா வலிய வந்து அறிவித்ததை; ஏற்க முடியாதென்றும்; ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடமில்லையென்றும்; அம்மையார் அறிவித்த 24 மணி நேரத்திற்குள்; காங்கிரஸ் கட்சி பதிலளித்து கதவை மூடிவிட்டது.

ஜெயலலிதா பேசுவதற்கும், அறிவிப்பதற்கும் பின்னணிப் பொருள் தேடி அலைவதற்கும்; அவற்றில், ஏதோ பெரிய பின்னணி இருப்பதைப் போன்ற, மிகைப்படுத்தப்பட்ட பிரமையை பொதுமக்கள் மனதில் ஏற்படுத்துவதற்கும், தமிழகத்தில் சில பேர் இருக்கிறார்கள்.

ஜெயலலிதாவின் தற்போதைய அறிவிப்பு, எந்தவித முகாந்திரமும் இன்றி; தமிழக அரசியலிலும், தேசிய அரசியலிலும், குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும்; என்ற தீயநோக்கத்துடன் வலியவந்து செய்யப்பட்ட அறிவிப்பாகும். அந்த அறிவிப்புக்கு பொருளுமில்லை, பொருத்தமுமில்லை. எனினும், அந்த அம்மையாரை தலையில் வைத்து ஆடிக் கொண்டிருப்போர், அது "ராஜதந்திர அறிவிப்பெ''ன்றும்; "பிரம்மாஸ்திரம்'' என்றும் "மோகனாஸ்திரத்தால்'' மயக்கி, அதைப் படிப்பவர்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள். நிச்சயம்; இதற்குப் பிறகும் அ.தி.மு.க. தொண்டர்கள் கூட ஏமாறமாட்டார்கள்.

1999-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், கூட்டணி அமைத்து, போட்டியிட்டு, அறிவிப்புக்கு மேல் அறிவிப்பு என பல அறிவிப்புகளை வெளியிட்டார். அந்த ராஜதந்திரமும் வெற்றி பெறவில்லை. அப்போது தமிழகத்தில் கழகக் கூட்டணியே வெற்றி பெற்றது.

2006-ம் ஆண்டு தமிழகச் சட்டப் பேரவைக்கான பொதுத் தேர்தலிலும், ஜெயலலிதா என்னென்னவோ சொல்லிப் பிரசாரம் செய்தார். தமிழக வாக்காளர்கள் மத்தியில் அவர் ராஜதந்திரம் என்று நினைத்துக் கொண்டு சொன்ன எதுவும் எடுபடவில்லை. கழகத்தின் தலைமையிலான கூட்டணியே வெற்றி பெற்றது.

2007-ம் ஆண்டு தேசிய அளவில் மூன்றாவது அணி ஒன்றை அமைத்து, அதற்கு, தான் தலைவியாக வேண்டும் என்ற எண்ணத்தில், சந்திரபாபு நாயுடுவுடன் சேர்ந்து கொண்டு, பல்வேறு சாகசங்களை யெல்லாம் செய்து பார்த்தார். எதுவும் கைகூடவில்லை; எல்லாம் தோல்வியிலேயே முடிந்தது.

அப்போதெல்லாம் வெற்றி பெறாத அவரது ராஜதந்திரமும், பிரம்மாஸ்திரமும்; வலியவந்து இப்போது அவர் செய்திருக்கும் அறிவிப்பாலா வெற்றிபெறப் போகின்றன? ``பொய் நெல்லைக் குத்தியே, பொங்க நினைத்தவன், கை நெல்லை விட்டானம்மா'' என்ற முடிவுதான், அவரது ராஜதந்திரத்திற்கும், பிரம்மாஸ்திரத்திற்கும் ஏற்படப் போகிறதென்பதை; அவரையே துதிபாடிக்கொண்டிருக்கும் ஒரு சிலர் இப்போதாவது உணர்ந்து, திருத்திக்கொள்ள மாட்டார்களா; என்ன என்று அவர் கூறியுள்ளார்.

Monday, November 1, 2010

பள்ளி மாணவர்கள் சவுகரியமாக சென்று வர சிறப்புப் பேருந்துகள் - முதல்வர் உத்தரவு

சென்னை: சென்னையில் பள்ளி மாணவ, மாணவியர் கூட்ட நெரிசல் சிக்கித் தவிக்கும் அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் 12 ரூட்களில் சிறப்புப் பேருந்துகளை இயக்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.


இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

சென்னையில் பள்ளி மாணவர்கள் பள்ளிக்குச் செல்லும்பொழுதும், வீடு திரும்பும்பொழுதும் பேருந்துகளில் ஏற்படும் நெரிசல் காரணமாக பயணம் செய்வதில் சிரமம் ஏற்படுகிறது.

இதைத் தவிர்க்கும் நோக்குடன் மாணவ, மாணவியர் பள்ளிகளுக்குச் சென்று வருவதற்கு வசதியாக, 23சி, 29ஏ, 11ஜி, 12பி, 21எல், 27டி, 29சி, 47, 5பி, 6டி, 37பி, 38சி ஆகிய 12 வழித்தடங்களில் காலையில் இரண்டு முறையும், மாலையில் இரண்டு முறையும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான சிறப்புப் பேருந்துகளை உடனடியாக இயக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.