Pages

Monday, August 30, 2010

3டி படத்தை இனி தொட்டும் பார்க்கலாம்

டோக்கியோ: 3டி தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வருகிறது. ஹாலிவுட்டில் பல சினிமாக்கள் 3டி-யில் வருகின்றன. வீட்டு நிகழ்ச்சிகளை 3டி-யில் படம் பிடிக்கும் கேமராக்கள் வந்துவிட்டன. 3டி ஒளிபரப்பு அனுமதிக்கு டிஸ்கவரி உள்ளிட்ட சேனல்கள் விண்ணப்பித்துள்ளன. 3டி காட்சிகளை பார்த்து ரசிக்கும் டிவியை எல்ஜி, சோனி, பானாசோனிக் நிறுவனங்கள் அறிமுகப்படுத்துகின்றன.


இந்நிலையில், திரையில் தெரியும் 3டி காட்சிகளை தொட்டு, தடவிப் பார்க்கும் வசதியை ஜப்பான் தேசிய அறிவியல், தொழில்நுட்ப நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. திரையில் ஒரு பலூன் வருகிறது என வைத்துக்கொள்வோம். அதை எடுப்பதுபோல கையை கொண்டு சென்றால், நம் கையில் பலூன் தவழ்வதுபோல காட்சி மாறும். பலூனின் பிம்பம் நமது கையிலேயே விழும். பலூனை தத்ரூபமாக நம் கையிலேயே பார்க்கலாம்.


குத்துவது போல விரலை கொண்டு சென்றால், பலூன் பிம்பம் மாறுதல் அடைந்து குழி உருவானது போல காட்சியளிக்கும். பிரத்யேக கேமராக்களின் உதவியுடன் நமது கைகளின் இயக்கம் தொடர்ந்து படம் பிடிக்கப்பட்டது அதற்கேற்ப காட்சிகள் மாறுகின்றன. சு

குபா நகரில் நேற்று நடந்த அறிமுக நிகழ்ச்சியின்போது இதை அந்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் செய்துகாட்ட, பார்த்தவர்கள் மிரண்டே போய்விட்டனர். முக்கியமான ஆபரேஷன்கள், வீடியோகேம் ஆகியவற்றில் இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளனர்.

Sunday, August 29, 2010

A.R. ரஹ்மான் இசை அமைத்த காமன்வெல்த் பாடல்



Direct Download

SERVER - I

A.R. ரஹ்மான் இசை அமைத்த காமன்வெல்த் பாடல் - தரவிறக்கம் செய்ய

SERVER - II

A.R. ரஹ்மான் இசை அமைத்த காமன்வெல்த் பாடல் - தரவிறக்கம் செய்ய

Saturday, August 28, 2010

பாஸ் (எ) பாஸ்கரன் ஆடியோ வெளியீட்டு படங்கள்















பாஸ் (எ) பாஸ்கரன் [2010] Mp3 Songs 320Kbs ACDRIP W/CD COVERS

Banner: Red Giant Movies



Cast: Arya, Nayantara, Santhanam, Vijayalakshmi & Rajendran

Direction: Rajesh

Production: K. S. Sreenivasan

Music: Yuvan Shankar Raja

Lyricis: Na. Muthukumar










Singers : Sathiya
Lyricis : Na. Muthukumar

Singers : Haricharan
Lyricis : Na. Muthukumar

03. Thaithi Thavum Per Nan... - தரவிறக்கம் செய்ய
Singers : Karthik
Lyricis : Na. Muthukumar

Singers : Vijai Prakash
Lyricis : Na. Muthukumar

Singers : Vijai Jesudas & Suvetha
Lyricis : Na. Muthukumar

Download As Single RAR File


பாஸ் (எ) பாஸ்கரன் [2010] Mp3 Songs 320Kbs -  தரவிறக்கம் செய்ய


பாஸ் (எ) பாஸ்கரன் [2010] Mp3 Songs 320Kbs - தரவிறக்கம் செய்ய


பாஸ் (எ) பாஸ்கரன் [2010] Mp3 Songs 320Kbs - தரவிறக்கம் செய்ய

Thursday, August 26, 2010

சேவக் சதம்: பைனலில் இந்தியா

தம்புலா, ஆக.25: சேவாக்கின் அதிரடியான ஆட்டம், பிரவீண் குமார், முனாப் படேல் ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் 105 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது இந்தியா.


முத்தரப்பு ஒரு நாள் தொடரில் இந்திய- நியூசிலாந்து அணிகள் மோதிய கடைசி லீக் ஆட்டம் தம்புலாவில் புதன்கிழமை நடந்தது.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெறுவதன் மூலம் மட்டுமே இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற முடியும் என்ற நிலையில், இந்திய பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.

டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி, பேட்டிங்கை தேர்வு செய்தார். தினேஷ் கார்த்திக், சேவாக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.


தொடக்கமே தடுமாற்றம்: 3 பந்துகளை மட்டுமே சந்தித்த கார்த்திக், ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி, யுவராஜ் சிங், ரெய்னா ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினர்.

நாயகன் சேவாக்: 

தொடர்ச்சியாக விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் பதற்றமில்லாமல் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார் சேவாக்.

அவரை ஆட்டமிழக்க நியூசிலாந்து பந்து வீச்சாளர்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்க வில்லை. சேவாக்குக்கு துணையாக கேப்டன் தோனியும் நிதானமாக ஆடி ரன் சேர்த்தார்.


110 ரன்களைச் சேர்த்திருந்தபோது மெக்குலம் பந்துவீச்சில் எதிர்பாராதவிதமாக, வாட்லிங்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் சேவாக்.

அவரை அடுத்து தோனியும் 38 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தோனிக்கு அடுத்து வந்த வீரர்களில் ஜடேஜா மட்டும் 17 ரன்கள் எடுத்தார். மற்ற எவரும் நிலைத்து நின்று ஆடவில்லை. ஒற்றை இலக்க எண்களிலேயே ரன் எடுத்து ஆட்டமிழந்தனர்.

46.3 ஓவர்களில் இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 223 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் செüதி சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவருக்கு அடுத்தபடியாக சுழற்பந்து வீச்சாளர் மெக்குலம் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அடுத்து களமிறங்கியது நியூசிலாந்து. தொடக்க வீரர்களாக வாட்லிங், குப்தில் களமிறங்கினர்.

தொடர் சரிவு: 


வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு தொடக்கமே சோதனையாக அமைந்தது. பிரவீண் குமார் பந்துவீச்சில் தான் சந்தித்த முதல் பந்திலேயே, எல்.பி.டபிள்யூ.ஆகி வெளியேறினார் குப்தில். அவரைத் தொடர்ந்து வாட்லிங் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.


கேப்டன் ராஸ் டெய்லர் 8 ரன்களுக்கும், ஸ்டைரிஸ் ஒரு ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர்.


இலியட் 11 ரன்களுக்கும், வில்லியம்ஸன் 13 ரன்களுக்கும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். 80 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது நியூசிலாந்து. அந்த அணியில் மில்ஸ் மட்டும் சிறப்பாக விளையாடி, 35 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார். இதில் 7 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் அடங்கும்.


நியூசிலாந்து அணி 30.1 ஓவரில் 118 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து, 105 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.

இந்திய தரப்பில் பிரவீண் குமார், முனாப் படேல் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். 110 ரன்கள் எடுத்த சேவாக் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.


சூப்பர் ஜோடி


நேற்று சேவக்-தோனி ஜோடி 5வது விக்கெட்டுக்கு 107 ரன் சேர்த்தது. இதன்மூலம் நியூசிலாந்துக்கு எதிராக 5வது விக்கெட்டுக்கு அதிக ரன் சேர்த்த இந்திய ஜோடி என்ற சாதனை படைத்தது. முன்னதாக கடந்த 1981ல் பிரிஸ்பேனில் நடந்த போட்டியில், இந்தியாவின் வெங்சர்க்கார்-சந்தீப் படீல் ஜோடி 5வது விக்கெட்டுக்கு 92 ரன்கள் சேர்த்திருந்தது.

"1000' பவுண்டரி

நியூசிலாந்துக்கு எதிராக நேற்று 16 பவுண்டரிகள் விளாசிய சேவக், ஒருநாள் அரங்கில் 1000 பவுண்டரிகளை கடந்த 7வது சர்வதேச வீரர் என்ற பெருமை பெற்றார். 

இதுவரை இவர் 227 போட்டியில் பங்கேற்று 1013 பவுண்டரி அடித்துள்ளார். இவ்வரிசையில் இந்தியாவின் சச்சின் (1927 பவுண்டரி), இலங்கையின் ஜெயசூர்யா (1500 பவுண்டரி), ஆஸ்திரேலியாவின் பாண்டிங் (1164 பவுண்டரி) "டாப்-3' வரிசையில் உள்ளனர்.

* தவிர இச்சாதனை படைத்த 3வது இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார் சேவக். ஏற்கனவே சச்சின், கங்குலி (1122 பவுண்டரி) ஆகியோர் 1000 பவுண்டரிகளை கடந்தனர்.

* டெஸ்ட் போட்டியில் 1007 பவுண்டரி விளாசியதன்மூலம், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் 1000 பவுண்டரிகளை கடந்த 4வது சர்வதேச வீரர் என்ற பெருமை பெற்றார் சேவக். இவ்வரிசையில் இந்தியாவின் சச்சின், வெஸ்ட் இண்டீசின் லாரா, இலங்கையின் ஜெயசூர்யா உள்ளனர். தவிர, இச்சாதனை படைத்த 2வது இந்திய வீரரானார்.

முனாப் "50'

நியூசிலாந்து வீரர் நாதன் மெக்கலம்மை அவுட்டாக்கிய இந்திய வீரர் முனாப் படேல், ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் தனது 50வது விக்கெட்டை(44 போட்டி) பதிவு செய்தார்.

பழிதீர்த்தது

முத்தரப்பு தொடரின் முதல் லீக் போட்டியில் நியூசிலாந்து அணி, இந்தியாவை 88 ரன்களுக்கு சுருட்டியது. இதற்கு நேற்று இந்திய அணி பழி தீர்த்தது. நியூசிலாந்தை 118 ரன்களுக்கு சுருட்டிக் காட்டியது.

ஆகஸ்ட் 28ம் தேதி நடைபெறும் இறுதி ஆட்டத்தில் இலங்கை அணியை இந்தியா சந்திக்கிறது.

Tuesday, August 24, 2010

ஐ.சி.சி பீப்பிள்ஸ் (People) சாய்ஸ் விருது : சச்சினுக்கு VOTE பண்ணுங்க

துபாய் : முதன்முறையாக ஐ.சி.சி., வழங்கும் பீப்பிள்ஸ் சாய்ஸ் விருதுக்கான பட்டியலில் சச்சின் இடம்பெற்றுள்ளார். வரும் அக்டோபர் மாதம் 6ம் தேதி ஐ.சி.சி., விருதுகள் வழங்கப்படவுள்ளன. 


இவ்விழாவில், முதன்முறையாக பீப்பிள்ஸ் சாய்ஸ் எனப்படும் மக்களால் மிகவும் விரும்பப்படும் வீரருக்கான தேர்வு நடக்கவுள்ளது. இதற்கான பட்டியலில் 5 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்

இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர், ஆஸி., வீரர் மைக் ஹஸி., இலங்கையின் மகிளா ஜெயவர்த்தனே, இங்கிலாந்து வீரர் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் மற்றும் தென் ஆப்ரிக்க வீரர் டி வில்லியர்ஸ் ஆகியோர் பட்டியலில் இடம்பெற்றவர்களாவர்.



ஐ.சி.சி பீப்பிள்ஸ் (People) சாய்ஸ் விருது - சச்சினுக்கு VOTE பண்ண இங்கு கிளிக் செய்யவும்

Thursday, August 19, 2010

சிக்கு புக்கு (Chikku Bhukku ) [2010] ஆடியோ (MP3) பாடல்கள் 320 Kbps ACD Rip

Movie : Chikku Bhukku



Cast: Arya as Arjun, Shriya Saran as Anu, Preetika, Santhanam & Vaiyapuri

Direction: Manikandan

Music: Colonial Cousins

Lyricis: Padmashree Valee & Pa. Vijay


Singers : Benny Dayal, Rahul Nambiyar, Maya & Sree Charan
Lyricis : Pa. Vijay

Singers : Shankar Mahadevan, Chandrayee Battacharya & Uma Padmanabhan
Lyricis : Padmashree Valee

Singers : Benny Dayal & Lavanya
Lyricis : Pa. Vijay

Singers : Suchith Suresan
Lyricis : Pa. Vijay

Singers : Hariharan & Wadali Brothers
Lyricis : Padmashree Valee

Singers : Adnan Sami & Sujatha
Lyricis : Pa. Vijay

Singers : Pradeep Vijay & Suvi
Lyricis : Pa. Vijay

Composer : Colonial Cousins

Download as Single Rar File


சிக்கு புக்கு [2010] ஆடியோ (MP3) பாடல்கள் - தரவிறக்கம் செய்ய


சிக்கு புக்கு [2010] ஆடியோ (MP3) பாடல்கள் - தரவிறக்கம் செய்ய


சிக்கு புக்கு [2010] ஆடியோ (MP3) பாடல்கள் - தரவிறக்கம் செய்ய

ஐ.சி.சி., விருது

துபாய்: ஐ.சி.சி., விருதுக்கு இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், கேப்டன் தோனி, அதிரடி வீரர் சேவக் உள்ளிட்ட வீரர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.


கிரிக்கெட் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் ஆண்டு தோரும் விருது வழங்கும் விழா நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா வரும் செப். 6ம் தேதி பெங்களூருவில் நடக்கிறது.


இந்நிகழ்ச்சியில் சிறந்த கிரிக்கெட் வீரர், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கான சிறந்த வீரர் என 7 விதமான விருதுகள் வழங்கப்பட உள்ளன. இதில் இந்தியாவின் சச்சின், தோனி, சேவக், இலங்கையின் மகிலா ஜெயவர்தனா, ஆஸ்திரேலியாவின் போலிஞ்சர், வாட்சன், தென் ஆப்ரிக்காவின் காலிஸ், ஆம்லா உள்ளிட்ட எட்டு வீரர்கள் மூன்று விதமான விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

வளர்ந்து வரும் இளம் வீரருக்கான விருதுக்கு இந்தியா சார்பில் விராத் கோஹ்லியின் பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த "டுவென்டி-20' வீரருக்கான விருதுக்கு இந்தியா சார்பில் சுரேஷ் ரெய்னாவின் பெயர் இடம் பெற்றுள்ளது. பெண்களுக்கான சிறந்த கிரிக்கெட் வீராங்கனை விருதுக்கு இந்தியாவின் மிதாலி ராஜ், கவுகர் சுல்தானாவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐ.சி.சி., தலைமை அதிகாரி ஹாரூன் லார்கட் கூறுகையில், ""ஏழாவது ஐ.சி.சி., விருது வழங்கும் விழா பெங்களூருவில் வரும் செப். 6ம் தேதி நடக்கிறது. இவ்விழாவில் வழங்கப்படும் விருதுக்கான வீரர்களின் பட்டியலை, முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கிளைவ் லாய்டு தலைமையிலான 5 பேர் கொண்ட குழு பரிந்துரை செய்துள்ளது. இம்முறை ஒரு விருது "ஆன்-லைன்' மூலம் ரசிகர்கள் தேர்வு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.