Pages

Thursday, September 30, 2010

எந்திரன் பிரிமியர் பரவசத்தில் நடிகர் நடிகைகள்!

எந்திரனுக்கு பிரிமியர் ஷோ கிடையாது என்று திட்டவட்டமாக இருந்த சன் பிக்சர்சை போன் மேல் போன் அடித்து நாலு படி இறங்க வைத்திருக்கிறார்கள் நட்சத்திரங்கள். எங்களுக்கு தனி ஷோ உண்டா? இல்லை, தியேட்டர்ல புக் பண்ணிக்கலாமா? என்று சன் பிக்சர்சின் முக்கியஸ்தர்களுக்கு நாள் தோறும் போன் வருகிறதாம். 


செய்கிறவர்களும் முன்னணி நட்சத்திரங்கள் என்பதால் என்ன செய்வது என்று யோசித்தார்களாம். முடிவில் நட்சத்திரங்களுக்கென்று தனி ஷோ போடுவதென்று முடிவெடுத்திருக்கிறார்கள். .

என்றாலும் இந்த ஷோ ரிலீசுக்கு முதல் நாள் போடப்பட மாட்டாது என்றும், அக்டோபர் 1 ந் தேதி இரவுதான் என்றும் செய்திகள் கசிகின்றன. சத்யம் திரையரங்கில்தான் இந்த ஷோ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு ஸ்டார்களும் குடும்பம் குடும்பமாக வந்தால் என்ன செய்வது என்ற யோசனையும் இருப்பதால் அதே வளாகத்தில் உள்ள மேலும் சில தியேட்டர்களையும் காலியாக வைத்திருக்க உத்தரவு வந்திருக்கிறதாம்.

அடிக்கடி பார்த்த அதே ரஜினியைதான் படம் முடிகிற நேரத்திலும் நேரில் பார்க்கப் போகிறோம் என்ற உணர்வையும் தாண்டி, இப்பவே அந்த 1 ந் தேதிக்காக பரவசத்தோடு காத்திருக்கிறார்கள் ஹீரோக்களும் அழகு வழியும் ஹீரோயின்களும்!

வெளிநாடுகளில் திருவிழாக் கோலம்... எந்திரன் மெகா ஹிட்...

"சூப்பர் ஸ்டார் ரஜினியை இதற்கு முன் இப்படியொரு பிரமாத கெட்டப்பில் பார்த்ததில்லை... எக்ஸலெண்ட் நடிப்பு, பிரமாதமான ஸ்டன்ட், ஐஸ் அழகு சொக்க வைக்கிறது. இயல்பான காமெடி, மிரள வைக்கும் இரண்டாம் பாகம்... குடும்பத்தோடு பார்க்க மிகச் சிறந்த பொழுதுபோக்குப் படம்!"


எந்திரன் படம் குறித்து வந்திருக்கும் 'முதல் தகவல் அறிக்கை' இது என்றால் மிகையல்ல.

துபாயில் இன்று காலை முதல் காட்சி 7.30 மணிக்கு திரையிடப்பட்டது. இந்தக் காட்சிக்காக ஒரு மணிநேரம் முன்பாகவே காத்திருந்தனர் ரசிகர்கள். அவர்களில் துபாயில் மார்க்கெட்டிங் அதிகாரியாகப் பணியாற்றும் வருணும் ஒருவர்.

படம் பார்த்ததையும், முடிந்தபிறகு ரசிகர்கள் மனநிலையையும் அவர் நம்மிடம் தொலைபேசி மூலம் இப்படிக் கூறினார்:

"சான்ஸே இல்ல சார். படம்னா இதான். இதுக்கு மேல ஒரு ஹைடெக் கமர்ஷியல் படத்தை இனி இந்தியாவில் யாராலும் தர முடியுமா தெரியவில்லை. ரஜினி - ஷங்கர் காம்பினேஷன் அட்டகாசம். இரண்டே முக்கால் மணி நேரப் படம். எப்போது இடைவேளை வந்தது என்றே தெரியவில்லை. அதன் பிறகு, ஒன்றரை மணி நேரப் படம் போன வேகம் பிரமிக்க வைக்கிறது.

எந்திரனில் கிராபிக்ஸ் காட்சி எது என்று கண்டுபிடித்தால் ஒரு கோடி பரிசு என்று போட்டியே வைக்கலாம். அந்த அளவு மிரட்டல், அசத்தல். ஸ்டான்வின்ஸ்டன் ஸ்டுடியோ மற்றும் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் செய்த ஹாலிவுட் நிறுவனத்தினர் கலக்கி இருக்கிறார்கள்.

எந்த ஆங்கிலப் படத்தின் பாதிப்பும் இல்லை, ஒரிஜினல் இந்திய ஆங்கிலப் படம் என்றுதான் இதனை நான் வர்ணிப்பேன்.

ரஜினியின் நடிப்புக்கு இந்த முறை தேசிய விருது நிச்சயம். ரோபோவாக கலக்கி இருக்கிறார். இந்த மனிதரை இதற்கு முன் யாருமே இத்தனை அற்புதமாகக் காட்டியதில்லை. ரஜினி - ஐஸ்வர்யா ஜோடி பிரமாதம். பல காட்சிகளில் பஞ்ச் டயலாக் இல்லாத, இயல்பான ரஜினியைப் பார்க்க முடிகிறது. இயக்குநர் ஷங்கருக்கு நன்றிகள். இந்தப் படம் சர்வதேச அளவில் விருதுகள் குவிக்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை.

குடும்பத்துடன் அச்சமின்றிப் பார்க்கலாம் என உத்தரவாதமே தரலாம். படம் அத்தனை டீஸன்டாக உள்ளது.

படத்தின் பாடல்களுக்காகவே தனியாக இன்னொரு முறை பார்க்க வேண்டும். குறிப்பாக கிளிமாஞ்சாரோ கலக்கல்..." என்றார் அவர்.

அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் இன்றே எந்திரன் சிறப்புக் காட்சிகள் நடக்கின்றன. அந்த திரையரங்குகள் இப்போதே திருவிழாக் கோலம் பூண்டுள்ளதாக ரசிகர்கள் தொலைபேசி மூலம் தெரிவித்தனர்.

முதல் நாள் முதல் காட்சிக்கு பல நாடுகளில் ஒரு டிக்கெட் ரூ 3500 வரை விலை போயுள்ளது. அப்படியும் டிக்கெட் கிடைக்கவில்லை என்ற மனக்குறைதான் பலருக்கு.

நார்வேயில் டிக்கெட்டுகள் முழுக்க விற்றுத் தீர்ந்துள்ளன. மீண்டும் டிக்கெட் கேட்பவர்களைத் தவிர்க்க செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதாக விநியோகஸ்தர் தெரிவித்தார்.

ஸ்வீடனில் இந்தப் படம் நான்கு நாட்களுக்கு திரையிடப்படுகிறது. இந்த நாட்டில் இதுவே பெரும் சாதனையாம். இந்த நான்கு நாள் காட்சிகளுக்கான டிக்கெட்டுக்கும் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளதாம்.

சிங்கப்பூரில் 11 திரையரங்கில் எந்திரன் ரிலீஸாகிறது. முதல் காட்சி இரவு 8 மணிக்கு என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக இப்போதிலிருந்தே தவம் கிடக்கிறார்களாம் ரசிகர்கள்.

எந்திரனுக்காக மகிழ்ச்சியோடு கஷ்டப்பட்டோம்

எந்திரன் படத்துக்காக ரஜினி [^] சார், நான், ஷங்கர் என அனைவருமே மகிழ்ச்சியோடு கஷ்டப்பட்டோம், என்றார் படத்தின் நாயகி ஐஸ்வர்யா ராய்.


மும்பையில் சமீபத்தில் நடந்த ரோபோ (எந்திரன்) படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்ற அவர், அளித்த பேட்டியிலிருந்து...

நான் நடிக்கும் முதல் சயின்ஸ் பிக்ஷன் படம் [^] எந்திரன். பொதுவா எல்லோரும் இந்த மாதிரி படங்களுக்கு ஹாலிவுட்டை உதாரணமா காட்டுவாங்க. ஆனா எந்திரன் அதுக்கும் மேல. இதுபோல ஒரு சப்ஜெக்டை ஹாலிவுட்டில் கூட, இத்தனை பிரமாண்டமா சொன்னதில்லை.

இந்தப் படத்தில் எனக்கும் நிறைய ஆக்ஷன் சீன்ஸ் இருக்குனு சொன்னார். ஷங்கரோட ஸ்டோரிபோர்டை பார்த்தப்ப இவ்வளவு ஆக்ஷனானு பிரமிச்சுப் போனேன்.. எப்படி இதையெல்லாம் விஷுவலா கொண்டு வரப் போறார்னு நினைப்பேன்.. ஷூட்டிங் நடந்தப்பதான் அவர் எந்த அளவுக்கு கவனமா இதுக்கு ப்ளான் பண்ணிருந்தார்னு புரிஞ்சுது.. வொண்டர்புல் ஜாப்!

எந்திரன்ல நான் ஒரு ஸ்டூடன்டா வர்றேன்... சனா என்னோட பேரு. இதுக்கு மேல சொன்னா தப்பு.. படம் பாத்துட்டு நீங்கதான் என் கேரக்டரை பத்தி சொல்லணும்..

'கிளிமஞ்சாரோ' பாடலை ஷூட் பண்றதுக்கு மச்சுபிச்சு மலைய செலக்ட் பண்ணினதே சூப்பர் ஐடியாதான்.. உலகத்தின் எங்கோ ஒரு மூலைல இருக்கிற அந்த லொகேஷனை கண்டுபிடிச்ச ஷங்கரை பாராட்டணும்.. அந்த இடத்துக்கு போய் சேர்றதுல இருந்து பாடல் ஷூட் பண்ணி முடிச்ச வரைக்கும் என்னோட அனுபவத்தை மறக்கவே முடியாது.. 

பெரிய அட்வெஞ்சர் அது.. நிறைய டான்சர்கள், காஸ்ட்லியான காஸ்ட்யூம்ஸ்.. ரொம்ப என்ஜாய் பண்ணினேன். ஏன்னா, இந்த மாதிரியான வாய்ப்பு என் கேரியர்ல கிடைச்சதில்லை.

ஸ்டைல் கிங் ரஜினி!

'காதல் அணுக்கள்' இப்படி அட்டகாசமான படத்துல இந்த மாதிரி ஒரு மெலடியானு அசர வைக்கிற பாடல். எனக்கு ரொம்ப பிடிச்ச மெலடி அது. அடிக்கடி முணுமுணுக்கிற பாடலும் கூட. பிரேசில்ல இருக்கிற லாங்காய் பாலைவனத்துல ஷூட் நடந்துது. இப்படியொரு லொகேஷனை கற்பனைலகூட பார்த்ததில்லை. 

பாலைவனத்துக்கு நடுவுல குட்டி குட்டியான ஏரிகள் பிரமாதம். ஸ்டைல் கிங் ரஜினி இந்த பாடல் சீன்ல செம கேஷுவலா நடிச்சிருப்பார்.. பாத்தா மெய்மறந்து நிப்பீங்க, நிச்சயமா..

'அரிமா அரிமா' பாடல் படத்துல முக்கியமான சிச்சுவேஷன்ல வருது. ரஜினி சாருடன் கிளாமரான காஸ்ட்யூம்ல ஆடியிருக்கேன். இந்தப் பாட்டுக்கும் சரி, எந்திரனுக்காவும் சரி நாங்க எல்லோருமே சந்தோஷமா கஷ்டப்பட்டோம் என்பதுதான் பொருத்தமான வார்த்தை.

கடவுளின் அற்புதப் படைப்புகள் ரஜினி, அமிதாப்

ரஜினி சாரை பத்தி எக்கச்சக்கமா கேள்விப்பட்டிருக்கேன்.. படிச்சிருக்கேன்.. படத்துல அவரோட நடிச்சதும், அவர் நடிப்பை பக்கத்துல இருந்து பார்த்ததும் புது அனுபவம்.. அவரோட கமிட்மென்டை பார்த்து அசந்துட்டேன். அற்புதமான மனிதர். சூப்பர் ஸ்டார்ங்கிற பந்தா கொஞ்சம்கூட இல்லாம எளிமையா பழகினார். அவர்கிட்ட இருந்து நிறைய கத்துகிட்டேன்.

என் வீட்டில் அப்பா (அமிதாப்) என்ற சூப்பர் ஸ்டார்... இங்கே ரஜினி என்ற சூப்பர் ஸ்டார். இந்த இருவருமே கடவுளின் அற்புதப் படைப்புகள். எளிமைதான் இவர்களின் அழகு. எளிமைதான் இவர்களை அண்ணாந்து பார்க்க வைக்கிறது. இவர்களிடம் நான் மட்டுமல்ல, எல்லோருமே கற்றுக் கொள்ள ஏராளம் உள்ளது.

எந்திரன்ல பல காட்சிகள்ல ரஜினி சாரோட ஸ்டைல், நடிப்பு பார்த்து என்னையே மறந்து போய் நின்னிருக்கேன். என் அனுபவத்தில் இதுபோல எப்போதும் நடந்ததில்லை.

எந்திரன் மாதிரியான ஒரு பிரமாண்டமான படத்தை எடுக்கணும்னா அது கலாநிதி மாறன் போன்றவர்களால் மட்டும்தான் முடியும்னு ஷங்கர் சொல்லுவார்.. அது எவ்வளவு கரெக்ட்னு படம் பார்க்கும்போது ஒவ்வொருத்தரும் புரிஞ்சுக்குவாங்க. இந்திய சினிமா [^] வரலாற்றுல எந்திரன் கண்டிப்பா ஒரு மைல்கல்.. இதுல நடிச்ச அனுபவங்களை என்னால் மறக்கவே முடியாது!" என்றார் ஐஸ்வர்யா.

மேகக் கணினியக் கனவுகள்!

பாரம்பரிய, பிரபலக் கணினி நிறுவனங்களான Dellம் HPம் வரிந்து கட்டிக்கொண்டு போடும் சண்டை இந்த வாரத்தில் குறிப்பிடத்தக்க நிகழ்வு. சண்டைக்குக் காரணம், மேகக் கணினியக் கனவுகள் (Cloud Computing). என்னதான் நடக்கிறது?


3 PAR (http://www.3par.com/index.html) என்ற டெக் நிறுவனம் Dell, HP போன்ற பிரமாண்ட ஹார்ட்வேர் நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது அளவில் மிகச் சிறியது. கடுகு சைஸில் இருந்தாலும், அதன் காரத்துக்குக் காரணம், மேகக் கணினியம் சார்ந்த தொழில் நுட்பம். அதன் உள்கட்டமைப்புக்குத் தேவையான சாதனங்களையும், மென்பொருட்களையும் உருவாக் கும் இந் நிறுவனத்தின் மீது இந்த இரண்டு நிறுவனங் களின் பார்வையும் விழுந்ததில் ஆச்சர்யம் ஏதும் இல்லை. 

இதற்குச் சமமான ஓர் உதாரணம் கொடுக்க, கார் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை எடுத்துக்கொள் ளலாம். புதுமையான டயர் ஒன்றைச் சிறிய நிறுவ னம் ஒன்று வெளியிட்டால், அந்த நிறுவனத்தின் மீது கார் தயாரிப்பு நிறுவனங்களின் கவனம் திரும் பும் அல்லவா? அதுபோலவே இதுவும்!

டெக் உலகில் innovators எனப்படும் புதியன கொண்டுவருபவர்களும் உண்டு. இதில் தோல்விக்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்றாலும், வெற்றிபெறும் பட்சத்தில் அதன் அளவும் தாக்கமும் மிக அதிக மாகவே இருக்கும். உதாரணத்துக்கு, ஹாட்மெயில். இ-மெயிலை இணையதளம் ஒன்றில் பார்க்கலாம் என்ற புதுமையைச் செயலில் கொண்டுவந்து மா பெரும் வெற்றி அடைந்தது. நிறுவப்பட்டு ஐந்து வருடங்களுக்குள் 500 மில்லியன் டாலர்களுக்கு மைக்ரோசாஃப்ட்டால் வாங்கப்பட்டது.

அதே நேரத்தில், புதிதாக அறிமுகப்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் வெற்றி அடைகின்றனவா என்பதைப் பார்த்து உறுதி செய்துவிட்டு, அதைவிடவும் பிரமாதமாக தமது தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்து வெற்றி அடைவது இன்னொரு ரகம். ஆப்பிள் நிறுவனம் இதற்கு நல்ல உதாரணம். 

மியூஸிக் பிளேயரான ஐ-பாட், தொலைபேசும் சாதனமான ஐ-போன் போன்றவை புதுமையானவை அல்ல என்றாலும், நுகர்வோரிடம் பிரபல மாகி வந்த இந்தச் சாதனங்களை நவீனமாக்கி வெற்றியடைய வைத்தது ஆப்பிள் சாமர்த்தியம்.

இன்னொரு வகையும் உண்டு. இந்த நிறுவனங்களின் கல்லாப்பெட்டியில் எக்கச்சக்கமான பணம் இருக்கும். இந்த நிறுவனங்கள் புதிதாகக் கண்டறியவும் மாட்டார்கள். இருக்கும் தொழில்நுட்பங்களை நவீனப்படுத்தவும் விரும்ப மாட்டார்கள். இதற்குப் பதிலாக, வெற்றி அடையும் சாத்தியக்கூறுகள்கொண்ட நிறுவனங்களைக் காய்கறிச் சந்தையில் கத்திரிக்காய் வாங்குவதுபோல வாங்கி, தமது நிறுவனத்துடன் இணைத்து வளர்வார்கள். Growth by acquisition என்று அழைக்கப்படும் இதைத்தான் Dell மற்றும் HP போன்ற நிறுவனங்கள் தாங்கள் வளரப் பயன்படுத்துகின்றன. பெரிய மீன், சின்ன மீன்களை இரையாக விழுங்குவதுபோல!

பொதுவாக, பெரிய நிறுவனம் ஒன்றைச் சின்ன நிறுவனம் வாங்குவது, அத்தனை சிக்கலானதுஅல்ல. தனது பணத்தையோ, அல்லது பங்குகளையோ நிறு வனத்தின் மதிப்புக்கு ஏற்பக் கொடுத்து வாங்கிக் கொள்ளும். சில தருணங்களில், இந்தக் கொடுக்கல்வாங்கல்... பிரச்னையாகவும் நேரிடும்.

உதாரணத்துக்கு, சிறிய நிறுவனத்தை நிர்வகிப்பவர்களுக்கு, தாம் விலைபோவதில் விருப்பம் இல்லாது இருக்க லாம். இந்த பட்சத்தில் சிறிய நிறுவனத்தின் முதலீட் டாளர்களை அணுகி, தாங்கள் கொடுக்கும் பணம், வாங்கப்படும் நிறுவனத்தின் மதிப்பைவிடவும் அதி கம்; இதை வாங்குவதால், முதலீட்டாளர்களுக்குப் பெரும் நன்மை என்பதைச் சொல்லி, நிர்வகிப்பவர் களை அவர்களது பதவியில் இருந்து தூக்கிவிட்டு, நிறுவனத்தை நாங்கள் எடுத்துக்கொள்கிறோம் என்று தடாலடி வேலைகளைச் செய்யலாம். Hostile Take-over எனப்படும் இந்த டெக்னிக்கை Oracle போன்ற நிறுவனங்கள் பல முறை பயன்படுத்தியது உண்டு.

வாங்கும் நிறுவனமும் வாங்கப்படும் நிறுவனமும் இணைந்தால், அதனால், பயனீட்டாளர்களுக்குப் பிரச்னை வரும் அல்லது இணைந்து உருவாகும் நிறுவனம் தனிக்காட்டு ராஜாவாக Monoply ஆகி விடும் என்றால், அரசாங்கம் இதில் தலையிட்டு, இணைதலைத் தடுக்கலாம். திறந்த சந்தை பொருளா தாரத்தைப் பின்பற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளிலேயே, இந்தக் கெடுபிடி அதிகம் என்றால், மற்ற நாடுகளைப்பற்றி கேட்கத் தேவை இல்லை.

இப்படி எல்லாம் எந்தப் பிரச்னையும் இங்கு இல்லை. மாறாக, மேகக் கணினியத் தொழில்நுட்பத்தில் நுழைந்தே ஆக வேண்டும் என்ற வேட்கையின் உத்வேகத்தில், Dell, HP இரண்டும் சென்ற இரண்டு வாரங்களாகப் போட்டி போட்டு தாங்கள் அதிகம் கொடுப்பதாக 3 PAR நிறுவனத்தின் விலையைக் கூட்டிக்கொண்டே போகிறார்கள். கிட்டத்தட்ட ஒரு பில்லியனுக்கு வாங்குவதாக Dell ஆரம்பித்துவைக்க, அதை HP இருமடங்கு ஆக்க, இந்தக் கட்டுரை எழுதப்படும் வேளையில், இந்த இரண்டு நிறுவனங்களும் தொடர்ந்து 3 Par முதலீட் டாளர்களிடம் விலையைக் கூட்டியபடியே இருக் கின்றன. அடுத்த வாரக் கட்டுரை எழுதப்படும் முன்னால், சுற்றி வரும் இருவரில் யாருக்கு 3 Par மாங்கனி கிடைத்தது என்பது தெரிந்துவிடும். நீங்களும் இந்த ஏலப் போட்டியில் கலந்துகொள்வது எளிதுதான். 10,000 கோடி மட்டுமே உடனடித் தேவை!

காமெடி நீங்கலாக, இந்த நிகழ்வு சொல்வது மேகக் கணினியம் முக்கியமான தொழில்நுட்பத் துறையாக வளரப்போவதால், சாஃப்ட்வேர் துறை யில் நுழையும் நோக்கத்தில் இருக்கும் பாளையங் கோட்டை ரூபன் போன்ற இளைஞர்கள் இதில் கவனம் செலுத்தத் தொடங்கலாம்!

மேகக் கணினியத்தில் அமேசானுக்கு அடுத்தபடி ஆதிக்கம் செலுத்தும் கூகுளும், ஷாப்பிங் மூடில்தான் இருப்பதாகத் தெரிகிறது. ஆனால், கூகுள் வாங்கிக் குவிக்கும் விதத்தைப் பார்த்தால், பொருட்காட்சி மைதானத்தில் கை நிறையக் காசுடன், எதை வாங்கு வது என்பது தெரியாமல், கண்டதையும் வாங்கிக் குவிக்கும் திடீர்ப் பணக்காரக் குடும்பத் தலைவி போல இருக்கிறது.

கூகுள் கடந்த சில மாதங்களில் வாங்கிக் குவித்து இருக்கும் நிறுவனங்கள்:

ஆன்லைன் விளம்பர நிறுவனமான இன்வைட் மீடியா - 81 மில்லியன்

பயணத் தொழில்நுட்ப மென்பொருள் நிறுவனம் ITA Software - 700 மில்லியன்

சமூக விளையாட்டு வலைதளமான slide.com 182 மில்லியன்

சமூக விளையாட்டு நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் இகாமர்ஸ் தொழில்நுட்ப நிறுவனமான ஜாம்பூல் (www.jambool.com) 70 மில்லியன் இன்னும் பல.

இவை தவிர, Farmville போன்ற பிரபல சமூக விளையாட்டுகளை உருவாக்கும் Zynga நிறுவனத்தில் 200 மில்லியன்களை முதலீடு செய்திருக்கிறது.

(http://en.wikipedia.org/wiki/List_of_acquisitions_by_google). இதைப் பார்க்கையில் இதுவரை தான் ஈடுபடாத சமூக விளையாட்டு ஏரியாவில் கூகுள் இறங்க தொடை தட்டித் தயாராவது தெரிகிறது. 

நன்றி - அண்டன் பிரகாஷ் 

சீனாவில் மு.க.ஸ்டாலின்

தமிழகத்துக்கு பல்வேறு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, துணை முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் சீனா, தென்கொரியா நாடுகளுக்கு நேற்று பயணம் ஆனார். அவர் அக்டோபர் 5-ம் தேதி தமிழகம் திரும்புகிறார்.



தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, தொழில்துறை அமைச்சர் என்ற விதத்தில் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வேறு திட்டங்களை வகுத்து அவற்றை செயல்படுத்தி வருகிறார்.


அதன் தொடர்ச்சியாக மேலும் பல தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, சீனா, தென்கொரியா நாடுகளுக்கு பயணமாக துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று புறப்பட்டுச் சென்றார். அவர், நேற்றிரவு 11 மணி விமானத்தில் பயணமானார்.



அவர் நேராக, சீனாவில் உள்ள ஷாங்காய் நகருக்குச் சென்றார். அங்கு உலக வர்த்தக கண்காட்சி நடக்கிறது. அதில், பல்வேறு நாடுகள் ஒரு லட்சம் சதுர அடி பரப்புக்கு பிரமாண்டமான அரங்குகளை அமைத்துள்ளன.

தமிழக தொழில்துறை அமைச்சர் என்ற விதத்தில் அவர் அதனை பார்வையிட்டார்.

இந்திய அணிக்கு புதிய சீருடை

சண்டிகர் : ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணிக்கு புதிய சீருடை நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. சண்டிகரில் நேற்று நடந்த வண்ணமயமான நிகழ்ச்சியில் இந்திய வீரர்கள் சச்சின்,  சேவக்  கம்பீர்,  ஹர்பஜன், ஜாகீர் ஆகியோர் புதிய சீருடை அணிந்து உற்சாகமாக வலம் வந்தனர். 


இந்த சீருடையை நைகி நிறுவனம் வடிவமைத்துள்ளது. ஆஸ்திரேலிய அணியுடன் நடக்கவுள்ள ஒருநாள் தொடரில் (3 போட்டி)  இந்திய வீரர்கள் புதிய சீருடையுடன் களமிறங்க உள்ளனர். 


தென் ஆப்ரிக்காவில் நடந்த சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரில் பங்கேற்ற கேப்டன் டோனி மற்றும் சுரேஷ் ரெய்னா இருவரும் நேற்று காலையில்தான் சண்டிகர் வந்தனர். பயணக் களைப்பு காரணமாக  சீருடை அறிமுக விழாவில் அவர்கள் கலந்துகொள்ளவில்லை.


நிகழ்ச்சியில் பேசிய தொடக்க வீரர் கம்பீர்,  ‘ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். இந்த தொடர் மிகவும் சவாலாக இருக்கும்’ என்றார்.%0D%0Aசாம்பியன்ஸ் லீக் தொடரில் விளையாடிய மைக் ஹஸி, போலிஞ்சர் இருவரும் சக ஆஸ்திரேலிய வீரர்களுடன் நேற்று இணைந்தனர். 

இந்தியா , ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி மொகாலியில் நாளை தொடங்குகிறது

புதிய வைரஸ் எச்சரிக்கை

கூகுள், நாசா,டிஸ்னி, கோகா கோலா போன்ற மிகப் பெரிய பாதுகாப்பான நிறுவனங்களை எல்லாம் பாதித்த வைரஸ் ஒன்று இப்போது உலகெங்கும் பரவி வருகிறது.


“Here You Have” என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த வைரஸ், இந்த சொற்களை சப்ஜெக்ட் பெட்டியில் கொண்டு வரும் இமெயில்கள் மூலம் பரவுகிறது. உங்கள் நண்பரின் மின்னஞ்சல் முகவரியிலிருந்து வரும், மின்னஞ்சல் கடிதமாக இது இன் பாக்ஸை வந்தடைகிறது. அதில் “நீங்கள் கேட்ட பாலியல் பட பைல் இதோ இங்குள்ளது’ என்று ஒரு பிடிஎப் பைலுக்கு லிங்க் தருகிறது. 

இது பிடிஎப் பைலே அல்ல. .scr. என்ற துணைப்பெயருடன் உள்ள ஒரு கோப்பு. விண்டோஸ் ஸ்கிரிப்ட் அடங்கிய வைரஸ் கோப்பு.

இது CSRSS.EXE என்னும் கோப்பினை உங்கள் விண்டோஸ் டைரக்டரியில் பதிக்கிறது. இயங்கத் தொடங்கியவுடன் உங்கள் ஆண்ட்டி வைரஸ் கோப்பின் இயக்கத்தை நிறுத்துகிறது. இது ஒரு பாட்நெட் வகை வைரஸ். 

ஆனால் பழைய நிம்டா, அன்னா கோர்னிகோவா (2001 ஆம் ஆண்டு) மற்றும் மெலிஸ்ஸா வைரஸ் போல பரவுகிறது. ஆர்வத்தில் அல்லது ஆசையில் இதில் உள்ள லிங்க்கில் கிளிக் செய்தவுடன் இந்த வைரஸ் உங்கள் கம்ப்யூட்டரில் வந்து இறங்குகிறது.

 அடுத்து உங்கள் இமெயில் முகவரி ஏட்டில் உள்ள அனைத்து முகவரிக்கும் இதே போல ஒரு செய்தியை அனுப்புகிறது. இது கடந்த செப்டம்பர் 10 முதல் உலகெங்கும் பரவி வருகிறது. தேடுதல் தளங்களில் தேடப்பட்ட தகவல்களில் இந்த தகவல் தான் இரண்டாம் இடம் கொண்டிருந்தது. 

SANS Technology Institute என்ற நிறுவனத்தின் இன்டர்நெட் கண்காணிப்பு பிரிவு, இந்த இமெயில் டன் கணக்கில் பரவுவதாக அறிவித்துள்ளது. மெக் அபி நிறுவனம் இந்த வைரஸ் குறித்து முழுமையாக அறிய சில நாட்கள் ஆகும் என்று தெரிவித்துள்ளது. 

இந்த வைரஸ் பாதிப்பால் Comcast என்ற கம்ப்யூட்டர் நிறுவனம் தன் இமெயில் சர்வர்களை எல்லாம் மூடிவிட்டது. இந்த வைரஸை அனுப்பிய சர்வர் மூடப்பட்டுவிட்டது. அதிலிருந்து இந்த வைரஸ் கோப்பு எடுக்கப் பட்டிருக்கலாம். ஆனாலும், ஏற்கனவே பரவிய கம்ப்யூட்டர்களிலிருந்து இந்த வைரஸ் இன்னும் உலகம் முழுவதும் பரவி வருகிறது.

இதிலிருந்து எப்படி தப்பிப்பது?

நல்ல ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினை பதிந்து இயக்குங்கள். ஏற்கனவே பதிந்திருந்தால், உடனே அப்டேட் செய்திடவும். இமெயில் இணைப்புகள் எது வந்தாலும் திறப்பதற்காக முயற்சி எடுக்க வேண்டாம். அனுப்பியவருக்கு தனி இமெயில் அனுப்பி, அனுப்பியதை உறுதி செய்து கொண்டு பின் திறக்கவும். “Here you Have” அல்லது “Just For You” என்று இருந்தால் எந்த சலனமும் இல்லாமல், முற்றிலுமாக அழித்துவிடவும். 

இந்த வைரஸ், நார்டன்/சைமாண்டெக் (Norton & Symantec)  ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளால் பாதுகாக்கப்பட்ட கம்ப்யூட்டர்களில் பரவ முடியவில்லை என்று ஒரு செய்தியும் வந்துள்ளது. இருப்பினும் இமெயில்களைக் கவனமாகக் கையாளுங்கள்.

Wednesday, September 29, 2010

உதயநிதி படத்தில் சந்தானம்

ராஜேஷ் எம். இயக்கிய சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் இரண்டுமே ஹிட். இரண்டிலுமே கதாநாயகர்கள் வேறு என்றாலும் காமெடியன் ஒரேயொருவர்தான், சந்தானம்.


கதையில்லாமல் படமெடுத்தாலும் சந்தானம் இல்லாமல் ராஜேஷ் படமெடுக்க மாட்டார் என்றே தோன்றுகிறது. இரண்டு படங்களை வைத்து இதைச் சொல்லவில்லை.

ராஜேஷ் அடுத்து உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தை இயக்குகிறார். இதுவும் காமெடி கதைதான். இதிலும் ஹீரோவுடன் சேர்ந்து உடுக்கடிக்கப் போகிறவர் வேறு யாருமில்லை, சந்தானமேதான்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்ப‌ரில் தொடங்குகிறது.

கை கொடுத்த தயாநிதி அழகிரி

சூர்யா, விவேக் ஒபராய் நடித்துள்ள 'ரத்த சரித்திரம்', தமிழகத்தில் வெளிவருவது கேள்விக்குறியாக இருந்த நிலையில், தயாநிதி அழகிரி கை கொடுத்ததால் 'எல்லாம்' சுபமாகியிருக்கிறது!


பாலிவுட்டின் முன்னணி இயக்குனரான ராம் கோபால் வர்மாவின் இயக்கத்தில் நடிகர் சூர்யா, ப்ரியாமணி மற்றும் நடிகர் விவேக் ஒபராய் நடித்திருக்கும் படம்,'ரத்த சரித்திரம்'.

ஆந்திராவில் நடந்த அரசியல் கொலைகளை பின்னணியாக கொண்ட இப்படத்தில், விவேக் ஓபராயும் முக்கிய கதாப்பாத்திரம் என்பதால் தான் பிரச்னை தொடங்கியது.

ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்...

சில மாதங்களுக்கு முன் இலங்கையில் நடந்த இந்திய திரைப்பட விருதுகள் விழாவுக்கு நடிகர் - நடிகைகள் செல்லக் கூடாது என தென்னிந்திய திரைப்பட சங்கங்கள் தடை விதித்தன. குறிப்பாக, தமிழ் சினிமா அமைப்புகள் கண்டிப்புடன் இருந்தன.

சல்மான்கான், ஹிரித்திக் ரோஷன், விவேக் ஒபராய் முதலான இந்தி நடிகர்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் இலங்கை பட விழாவில் பங்கேற்று திரும்பினர்.

அவ்விழாவில் கலந்து கொண்டதன் எதிரொலியாக, ஹிரித்திக் ரோஷன் நடித்து தமிழகத்தில் ஓடிக் கொண்டிருந்த 'கைட்ஸ்' படத்தின் படப்பெட்டிகள் திருப்பி அனுப்பப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக, சூர்யாவின் 'ரத்த சரித்தரம்' படத்தில் விவேக் ஒபராயும் நடித்திருப்பதால், அப்படத்டை தமிழகத்தில் திரையிடுவதை எதிர்த்து போராட்டம் நடத்துவோம் என்று இந்து மக்கள் கட்சி அமைப்புச் செயலாளர் கண்ணன் அறிவித்திருந்தார்.

இதனால், தமிழில் 'ரத்த சரித்திரம்' வெளிவருவதில் சிக்கல் வலுவானது. இப்படத்தை வாங்க எந்த வினியோகஸ்தரும் முன்வரவில்லை.

இந்தச் சூழலில், 'ரத்த சரித்திர'த்தை வாங்கியிருக்கிறது, தயாநிதி அழகிரியின் கிளவுட் நைன் மூவீஸ்.

இப்படத்தின் ஆடியோ வெளியீடு நாளை (செப்.30) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், ரத்த சரித்திரம் எவ்வித தடையும் இன்றி வெளிவரவிருக்கிறது!

'எஸ்கேப்'பில் நாளை எந்திரன் சிறப்புக் காட்சி!

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில், உலகமே ஆவலுடன் பார்க்கக் காத்துக் கிடக்கும் எந்திரன் படத்தின் சிறப்புக் காட்சி நாளை மாலை சென்னை எஸ்கேப் சினிமாவில் நடைபெறுகிறது.


மிக மிக முக்கிய விஐபிக்கள் மட்டுமே பங்கேற்கும் இந்தக் காட்சி, இதுவரை ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது (நாம் கடந்த வாரமே வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம்!). 

இந்தக் காட்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினி, தயாரிப்பாளர் கலாநிதி மாறன், இயக்குநர் [^] ஷங்கர் உள்பட மிக முக்கியமானவர்கள் பங்கேற்கிறார்கள். ராயப்பேட்டையில் சத்யம் [^] சினிமாஸுக்கு சொந்தமான புதிய மல்டிப்ளெக்ஸான எஸ்கேப் சினிமாவில் இந்தக் காட்சி நடக்கிறது.

திரையுலக, அரசியல் [^] விவிஐபிகளுக்காக ஒரு சிறப்புக்காட்சி வெள்ளிக்கிழமை மாலை சத்யம் திரையரங்கில் நடக்கிறது. இந்தக் காட்சியிலும் ரஜினி பங்கேற்று அனைவரையும் வரவேற்கிறார். முன்னதாக அவர் ஹைதராபாதில் நடக்கும் பிரிமியர் காட்சியில் பங்கேற்பார் என்று கூறப்பட்டது.

மும்பை சிறப்புக் காட்சியில் ஐஸ்வர்யா ராய் பங்கேற்பார் என்று தெரிகிறது.

அப்போ ஜோதிகா... இப்போ அனுஷ்கா..! - சிம்பு ஓபன் ஸ்டேட்மென்ட்

முன்பு நான் ஜோதிகாவின் ரசிகனாக இருந்தேன். இப்போது அனுஷ்காவின் ரசிகனாகிவிட்டேன், என்றார் நடிகர் சிம்பு.


'வானம்' படத்தின் நடிகர்கள் - தொழில்நுட்பக் கலைஞர்கள் நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

சிலம்பரசன், பரத், அனுஷ்கா, வேகா, சோனியா அகர்வால், ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இயக்குநர் [^] கிரிஷ், பட அதிபர் வி.டி.வி.கணேஷ் மற்றும் படக்குழுவினர் இந்தச் சந்திப்பில் பங்கேற்றுப் பேசினர்.

படம் குறித்தும் படத்தின் நாயகி குறித்தும் சிம்பு கூறுகையில், "விண்ணைத்தாண்டி வருவாயா படம் வெளிவந்த பிறகு, 150 நாட்கள் வேறு எந்த படத்திலும் நடிக்காமல், சும்மா உட்கார்ந்திருந்தேன்.

நடுவில் நான் ஒப்புக் கொண்ட 'கோ,' பட விவகதாரம் உங்களுக்கே தெரியும். 'போடா போடி' படப்பிடிப்பும் தள்ளிப்போய் விட்டது.

அப்போதுதான் அல்லு அர்ஜுன் நடித்த 'வேதம்' என்ற தெலுங்கு [^] படத்தை பார்த்தேன். வித்தியாசமான படம். மிக அருமையான திரைக்கதை. பாதி படம் பார்த்தபோதே இந்த படத்தை தமிழில் நாம் பண்ணலாம் என்ற முடிவுக்கு வந்தேன். என் நண்பர் கணேஷ், இந்த படத்தை தயாரிக்க முன்வந்தார்.

படத்தில் பரத், அனுஷ்கா, வேகா, சோனியா அகர்வால் என்று நட்சத்திர கூட்டம் நிறைய இருப்பது சந்தோஷமாக இருக்கிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்த படம் ஈடுகட்டும். 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தில் வேறு ஒரு சிலம்பரசனை பார்த்தது போல், 'வானம்' படத்தில் இன்னொரு சிலம்பரசனை பார்க்கலாம்...'' என்றார்.

உங்களை விட, அனுஷ்கா உயரமானவர் என்கிறார்களே, என்று ஒரு நிருபர் கேட்க, "அது குள்ளமானவர்களைப் பார்த்து கேட்க வேண்டிய கேள்வி. நான் வேண்டுமானால் பக்கத்தில் நிற்கிறேன். பார்த்துக்கொள்ளுங்கள்..." என்று கூறிய சிம்பு, அனுஷ்காவை அழைத்து பக்கத்தில் நின்று காட்டினார். சிம்பு உயரமாகத்தான் இருந்தார்!

அடுத்து, "நீங்கள் அனுஷ்காவின் ரசிகர் என்கிறீர்கள். மற்ற கதாநாயகிகளிடம் இல்லாத அம்சம் அனுஷ்காவிடம் இருப்பதாக நினைக்கிறீர்களா?" என்று சிம்புவின் வாயைக் கிளறினார் இன்னொரு நிருபர்.

அதற்கு சிம்பு சொன்ன பதில்:

"நான் அவ்வளவு எளிதில் யாருடைய ரசிகராகவும் மாற மாட்டேன். முன்பு ஜோதிகாவின் ரசிகராக இருந்தேன். 'அருந்ததி' படம் பார்த்ததில் இருந்து அனுஷ்காவின் ரசிகராக மாறிவிட்டேன். பொதுவாக, ஒரு படத்தை கதாநாயகன்தான் தோளில் தூக்கி சுமப்பார். ஆனால், ஒரு முழு படத்தையும் கதாநாயகி அனுஷ்கா தோளில் தூக்கி சுமந்திருந்தார். அதனால்தான் நான் அனுஷ்காவின் ரசிகராக மாறினேன்..." என்றார்.

ஒரு நடிகையை அழைத்துப்போய், "இவளைத்தான் நான் திருமணம் [^] செய்துகொள்ளப்போகிறேன். ஆசீர்வாதம் செய்'' என்று உங்கள் அம்மாவிடம் சொன்னதாக ஒரு தகவல் பரவியதே, உண்மையா என்ற கேள்விக்கு, "ஏங்க இதெல்லாம் ஓவர். அப்படி யாரையும் நான் அழைத்துப்போகவில்லை. அது வெறும் வதந்தி..." என்றார்.

வானம் படத்தில் பரத்துடன் சேர்ந்து நடிக்கிறார் சிம்பு. இதே போல தனுஷுடன் நடிப்பீர்களா என்று கேட்டதற்கு, யாருடன் வேண்டுமானாலும் சேர்ந்து நடிப்பேன். அதில் தயக்கமில்லை, என்றார்.

எந்திரன்... அமெரிக்க காட்சி நேரங்கள்!

கிட்டத்தட்ட தமிழகத்தில் ரிலீஸாவது போலவே அமெரிக்காவிலும் ஆர்ப்பாட்டமாக ரிலீஸாகிறது சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன்.

அமெரிக்காவின் அனைத்து முன்னணி நகரங்களிலும் எந்திரன் ரிலீஸாகிறது. பெரும்பாலான நகரங்களில் முதல் சில தினங்களுக்கு அனைத்து காட்சிகளுக்கும் டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்துவிட்டன.

இன்டியானாபொலீஸில் உள்ள ஐமேக்ஸ் திரையரங்கில் தொடர்ந்து இரு தினங்களுக்கு எந்திரன் திரையிடப்படுகிறது. இந்தி மற்றும் தெலுங்குப் பதிப்புகளும் கணிசமான திரையரங்குகளில் ரிலீசாகின்றன.

அமெரிக்க காட்சி நேரங்கள்

1) San Jose

Serra Theaters
200 SERRA WAY #37 ,
MILPITAS , CA 95035
Phone: (408) 935-9674

9/30/2010 Thursday - 4:00pm;5:45pm;7:30pm;11:00pm
10/1/2010 Friday- 4:00pm;7:30pm;11:00pm
10/2/2010 Saturday - 12:00pm;1:30pm;3:30pm;7:00pm;10:30pm
10/3/2010 Sunday [^] - 12:00pm;1:30pm;3:30pm;7:00pm;10:30pm
10/4/2010 Monday- 4:30pm;6:15pm;8:00pm
10/5/2010 Tuesday - 4:30pm;6:15pm;8:00pm
10/6/2010 Wednesday - 4:30pm;6:15pm;8:00pm

Fremont

Bigcinemas
39160 Paseo Padre Pkwy,
Fremont, California, CA-94538
Online tickets: www.us.bigcinemas.com

9/30/2010 Thursday- 7:30pm;8:30pm;9:30pm
9/4/2010 Friday - 3:30pm;4:30pm;5:15pm;7:00pm;8:00pm;8:45pm;10:30pm; 11:30pm
9/5/2010 Saturday - 12:00pm;1:45pm;3:30pm;5:15pm;7:00pm;8:45pm;10:30pm
9/6/2010 Sunday - 12:00pm;1:45pm;3:30pm;5:15pm;7:00pm;8:45pm
9/7/2010 Monday - 3:30pm;5:15pm;7:00pm;8:45pm
9/8/2010 Tuesday - 3:30pm;5:15pm;7:00pm;8:45pm
9/9/2010 Wednesday - 3:30pm;5:15pm;7:00pm;8:45pm
9/9/2010 Thursday - 3:30pm;5:15pm;7:00pm;8:45pm

Sanjose

Big Cinemas Towne 3,
1433 The Alaeda,, San Jose,
California, CA-95126
Online tickets: www.us.bigcinemas.com

9/30/2010 Thursday- 7:30pm;8:30pm;9:30pm
10/1/2010 Friday - 3:30pm;4:30pm;5:15pm;7:00pm;8:00pm;8:45pm;10:30pm; 11:30pm
10/2/2010 Saturday - 12:00pm;1:45pm;3:30pm;5:15pm;7:00pm;8:45pm;10:30pm
10/3/2010 Sunday - 12:00pm;1:45pm;3:30pm;5:15pm;7:00pm;8:45pm
10/4/2010 Monday - 3:30pm;5:15pm;7:00pm;8:45pm
10/5/2010 Tuesday - 3:30pm;5:15pm;7:00pm;8:45pm
10/6/2010 Wednesday - 3:30pm;5:15pm;7:00pm;8:45pm
9/7/2010 Tuesday- 3:30pm;5:15pm;7:00pm;8:45pm

Sanjose

Big Cinemas Towne 3,
1433 The Alaeda,, San Jose,
California, CA-95126
Online tickets: www.us.bigcinemas.com

9/30/2010 Thursday- 7:30pm; 9:00pm
10/1/2010 Friday - 4:00pm;4:45pm;7:30pm;8:15pm;11:00pm;11:45pm
10/2/2010 Saturday- 12:30pm;1:15pm;4:00pm;4:45pm;7:30pm;8:15pm;11:00pm; 11:45pm
10/3/2010 Sunday - 12:30pm;1:15pm;4:00pm;4:45pm;7:30pm;8:15pm
10/4/2010 Monday - 4:00pm;4:45pm;7:30pm;8:15pm
10/5/2010 Tuesday - 4:00pm;4:45pm;7:30pm;8:15pm
10/6/2010 Wednesday - 4:00pm;4:45pm;7:30pm;8:15pm
10/6/2010 Thursday- 4:00pm;4:45pm;7:30pm;8:15pm

Cupertino

9/30/2010 Thursday - 10:40pm(TBD)
10/1/2010 Friday - 1:00pm;3:00pm;4:45pm;6:30pm;8:15pm;10:10pm
10/2/2010 Saturday- 1:00pm;3:00pm;4:45pm;6:30pm;8:15pm;10:10pm
10/3/2010 Sunday - 1:00pm;3:00pm;4:45pm;6:30pm;8:15pm;10:10pm
10/4/2010 Monday - 1:00pm;3:00pm;4:45pm;6:30pm;8:15pm;10:10pm
10/5/2010 Tuesday - 1:00pm;3:00pm;4:45pm;6:30pm;8:15pm;10:10pm
10/6/2010 Wednesday - 1:00pm;3:00pm;4:45pm;6:30pm;8:15pm;10:10pm
10/6/2010 Thursday - 1:00pm;3:00pm;4:45pm;6:30pm;8:15pm;10:10pm

Berkeley

Oaks Theater
1875 Solano Avenue
Berkeley, CA 94707
Online tickets: http://www.ficusmovies.com/

9/30/2010 Thursday- 8:30pm
10/1/2010 Friday - 6:15pm;9:30pm
10/2/2010 Saturday- 3:00pm;6:15pm;9:30pm
10/3/2010 Sunday - 3:00pm;6:15pm;9:30pm3:00pm;6:15pm;9:30pm
10/4/2010 Monday - 8:00pm
10/5/2010 Tuesday - 8:00pm
10/6/2010 Wednesday - 8:00pm
10/6/2010 Thursday- 8:00pm

Norwalk

Big Cinemas Norwalk 8,
13917 Pioneer Blvd.,
Norwalk, California, CA-90650
Online tickets: http://www.bigcinemas.com/

9/30/2010 Thursday- 7:30pm;9:30pm
10/1/2010 Friday - 12:00pm;1:45pm;3:30pm;5:15pm;7:00pm;8:45pm;10:30pm
10/2/2010 Saturday- 12:00pm;1:45pm;3:30pm;5:15pm;7:00pm;8:45pm;10:30pm
10/3/2010 Sunday - 12:00pm;1:45pm;3:30pm;5:15pm;7:00pm;8:45pm;10:30pm
10/4/2010 Monday - 12:00pm;1:45pm;3:30pm;5:15pm;7:00pm;8:45pm
10/5/2010 Tuesday - 12:00pm;1:45pm;3:30pm;5:15pm;7:00pm;8:45pm
10/6/2010 Wednesday - 12:00pm;1:45pm;3:30pm;5:15pm;7:00pm;8:45pm
10/6/2010 Thursday- 12:00pm;1:45pm;3:30pm;5:15pm;7:00pm;8:45pm

Niles

Big Cinemas Golf Glen 5, 9180
West Golf Road, Niles, Illinios,
IL-60714
Online tickets: http://www.bigcinemas.com/IN/

9/30/2010 Thursday- 7:30pm;8:30pm;9:00pm
10/1/2010 Friday - 12:00pm;1:00pm;3:30pm;4:30pm;7:00pm; 8:00pm;10:30pm; 11:30pm
10/2/2010 Saturday- 12:00pm;1:00pm;3:30pm;4:30pm;7:00pm; 8:00pm;10:30pm; 11:30pm
10/3/2010 Sunday - 12:00pm;1:00pm;3:30pm;4:30pm;7:00pm; 8:00pm;10:30pm;
10/4/2010 Monday - 12:00pm;1:00pm;3:30pm;4:30pm;7:00pm;8:00pm
10/5/2010 Tuesday - 12:00pm;1:00pm;3:30pm;4:30pm;7:00pm;8:00pm
10/6/2010 Wednesday - 12:00pm;1:00pm;3:30pm;4:30pm;7:00pm;8:00pm
10/6/2010 Thursday- 12:00pm;1:00pm;3:30pm;4:30pm;7:00pm;8:00pm

Downers Grove

Sathyam Cinemas
2119 West 63rd Street
Downers Grove, IL - 60516
Online tickets: http://www.sathyamusa.com/

9/30/2010 Thursday- 7:00Pm;10:00Pm
10/1/2010 Friday - 12:10pm;3:00pm; 6:00pm; 9:00pm;11:59pm
10/2/2010 Saturday- 1:00pm;4:00pm;7:00pm;10:00pm
10/3/2010 Sunday - 12:10pm;3:00pm;6:00pm;9:00pm;
10/4/2010 Monday - 5:00pm;8:00pm
10/5/2010 Tuesday - 5:00pm;8:00pm
10/6/2010 Wednesday - 5:00pm;8:00pm
10/6/2010 Thursday- 5:00pm;8:00pm

North Bergen

Big Cinemas Columbia Park 12,
3125 Kennedy Blvd., North
Bergen, New Jersey, NJ-07047
Online tickets: http://www.bigcinemas.com/

9/30/2010 Thursday- 7:30pm;8:30pm;9:00pm
10/1/2010 Friday - 12:00pm;1:00pm;2:00pm;3:30pm;4:30pm;5:30pm;7:00pm; 8:00pm;9:00pm;10:30pm;11:30pm
10/2/2010 Saturday- 12:00pm;1:00pm;2:00pm;3:30pm;4:30pm;5:30pm;7:00pm; 8:00pm;9:00pm;10:30pm;11:30pm
10/3/2010 Sunday - 12:00pm;1:00pm;2:00pm;3:30pm;4:30pm;5:30pm;7:00pm; 8:00pm;9:00pm;10:30pm
10/4/2010 Monday - 12:00pm;1:00pm;2:00pm;3:30pm;4:30pm;5:30pm;7:00pm; 8:00pm;9:00pm
10/5/2010 Tuesday - 12:00pm;1:00pm;2:00pm;3:30pm;4:30pm;5:30pm;7:00pm; 8:00pm;9:00pm
10/6/2010 Wednesday - 12:00pm;1:00pm;2:00pm;3:30pm;4:30pm;5:30pm;7:00pm; 8:00pm;9:00pm
10/6/2010 Thursday- 12:00pm;1:00pm;2:00pm;3:30pm;4:30pm;5:30pm;7:00pm; 8:00pm;9:00pm

எடிசன்

Big Cinemas Movie City 8, 1655
31655 Oak tree Road,, Edison,
New Jersey, NJ-08820
Online tickets: http://www.bigcinemas.com/

9/30/2010 Thursday- 7:30pm;8:30pm;9:00pm
10/1/2010 Friday - 3:00pm;4:00pm;5:00pm;6:30pm;7:30pm;8:30pm;10:00pm; 11:00pm
10/2/2010 Saturday- 11:30am;12:30pm;1:30pm;3:00pm;4:00pm;5:00pm;6:30pm; 7:30pm;8:30pm;10:00pm;11:00pm
10/3/2010 Sunday - 11:30am;12:30pm;1:30pm;3:00pm;4:00pm;5:00pm;6:30pm; 7:30pm;8:30pm;10:00pm;11:00pm
10/4/2010 Monday - 3:00pm;4:00pm;5:00pm;6:30pm;7:30pm;8:30pm
10/5/2010 Tuesday - 3:00pm;4:00pm;5:00pm;6:30pm;7:30pm;8:30pm
10/6/2010 Wednesday - 3:00pm;4:00pm;5:00pm;6:30pm;7:30pm;8:30pm
10/6/2010 Thursday- 3:00pm;4:00pm;5:00pm;6:30pm;7:30pm;8:30pm

Eastwindsor

Multiplex Cinemas at Town Center Plaza
31655 Oak tree Road,, Edison,
East Windsor - NJ
319 Route 130 North. East Windsor NJ 08520
Online tickets: http://www.bigcinemas.com/

9/30/2010 Thursday- 7:30pm;
10/1/2010 Friday - 12:00pm;3:20pm;6:40pm;10:00pm
10/2/2010 Saturday- 12:00pm;3:20pm;6:40pm;10:00pm
10/3/2010 Sunday - 12:30pm;4:00pm;7:20pm
10/4/2010 Monday - 12:30pm;4:00pm;7:20pm
10/5/2010 Tuesday - 12:30pm;4:00pm;7:20pm
10/6/2010 Wednesday - 12:30pm;4:00pm;7:20pm
10/6/2010 Thursday- 12:30pm;4:00pm;7:20pm

Dallas

Hollywood Theaters
MacArthur Marketplace 16, 8505
Walton Blvd, Irving TX 75063
Online tickets: http://www.funasia.net/

9/30/2010 Thursday- 6:00pm;9:30pm
10/1/2010 Friday - 2:30pm;6:00pm;9:30pm
10/2/2010 Saturday- 2:30pm;6:00pm;9:30pm
10/3/2010 Sunday - 2:30pm;6:00pm;9:30pm
10/4/2010 Monday - 5:00pm;8:45pm
10/5/2010 Tuesday - 5:00pm;8:45pm
10/6/2010 Wednesday - 5:00pm;8:45pm
10/6/2010 Thursday- 5:00pm;8:45pm

Houston

FunAsia
2703 Highway [^] 6 south, houston,
TX 77082
Online tickets: http://www.ficusmovies.com/

9/30/2010 Thursday- 6:30pm;9:30pm
10/1/2010 Friday - 6:30pm;9:30pm
10/2/2010 Saturday- 2:30pm;6:30pm;9:30pm
10/3/2010 Sunday - 2:30pm;6:00pm;9:30pm
10/4/2010 Monday - 7:30pm
10/5/2010 Tuesday - 7:30pm
10/6/2010 Wednesday - 7:30pm
10/6/2010 Thursday- 7:30pm

Dallas - Garland

Walnut Theaters
3310 West Walnut Street
Garland,TX 75042
Online tickets: http://www.ficusmovies.com/

9/30/2010 Thursday- 4:15pm;7:30pm;10:45pm
10/1/2010 Friday - 4:15pm;7:30pm;10:45pm
10/2/2010 Saturday- 1:00pm;4:15pm;7:30pm;10:45pm
10/3/2010 Sunday - 1:00pm;4:15pm;7:30pm;10:45pm
10/4/2010 Monday - 5:00pm;8:00pm
10/5/2010 Tuesday - 5:00pm;8:00pm
10/6/2010 Wednesday - 5:00pm;8:00pm
10/6/2010 Thursday-

Dallas - Grapevine

Cinemark Tinseltown Grapevine
911 State Hwy 114 W
Grapevine, TX 76051
Online tickets: http://www.cinemark.com/

9/30/2010 Thursday-
10/1/2010 Friday - 6:45pm;10:00pm
10/2/2010 Saturday- 3:30pm;6:45pm;10:00pm
10/3/2010 Sunday - 3:45pm;7:00pm
10/4/2010 Monday - 7:30pm
10/5/2010 Tuesday - 7:30pm
10/6/2010 Wednesday - 7:30pm
10/6/2010 Thursday- 7:30pm

Peachtree

Big Cinemas Peachtree 8
6135 Peach Tree Parkway,
Norcross, Georgia, GA-30092
Online tickets: http://www.bigcinemas.com/

9/30/2010 Thursday-7:30pm;8:30pm;9:00pm
10/1/2010 Friday - 12:00pm;1:00pm;1:45pm;3:30pm;4:30pm;5:15pm;7:00pm; 8:00pm;8:45pm;10:30pm;11:30pm;12:15am
10/2/2010 Saturday-12:00pm;1:00pm;1:45pm;3:30pm;4:30pm;5:15pm;7:00pm; 8:00pm;8:45pm;10:30pm;11:30pm;12:15am
10/3/2010 Sunday - 12:00pm;1:00pm;1:45pm;3:30pm;4:30pm;5:15pm;7:00pm; 8:00pm;8:45pm;10:30pm
10/4/2010 Monday - 12:00pm;1:00pm;1:45pm;3:30pm;4:30pm;5:15pm;7:00pm; 8:00pm;8:45pm;10:30pm
10/5/2010 Tuesday - 12:00pm;1:00pm;1:45pm;3:30pm;4:30pm;5:15pm;7:00pm; 8:00pm;8:45pm;10:30pm
10/6/2010 Wednesday - 12:00pm;1:00pm;1:45pm;3:30pm;4:30pm;5:15pm;7:00pm; 8:00pm;8:45pm;10:30pm
10/6/2010 Thursday- 12:00pm;1:00pm;1:45pm;3:30pm;4:30pm;5:15pm;7:00pm; 8:00pm;8:45pm;10:30pm

Falls Church

Big Cinemas Loehmann's Twin,
7291 Arlington Blvd., Falls Church,

6135 Peach Tree Parkway,
Virginia, VA-22042
Online tickets: http://www.bigcinemas.com/

9/30/2010 Thursday-7:30pm;8:00pm
10/1/2010 Friday - 3:30pm;7:00pm;10:30pm
10/2/2010 Saturday-1:00pm;4:30pm;8:00pm
10/3/2010 Sunday - 4:30pm;8:00pm
10/4/2010 Monday - 4:30pm;8:00pm
10/5/2010 Tuesday - 4:30pm;8:00pm
10/6/2010 Wednesday - 4:30pm;8:00pm
10/6/2010 Thursday- 4:30pm;8:00pm

Reston

11900 Palace Way, Fairfax, VA
Online tickets: http://www.ravemotionpictures.com/buytickets.aspx

9/30/2010 Thursday-
10/1/2010 Friday -1:45pm;5:15pm;8:45pm
10/2/2010 Saturday-1:45pm;5:15pm;8:45pm
10/3/2010 Sunday - 1:45pm;5:15pm;8:45pm
10/4/2010 Monday - 1:45pm;5:15pm;8:45pm
10/5/2010 Tuesday - 1:45pm;5:15pm;8:45pm
10/6/2010 Wednesday - 1:45pm;5:15pm;8:45pm
10/6/2010 Thursday- 1:45pm;5:15pm;8:45pm

Columbus

"The Screens at the continent
6360 Busch Blvd, Columbus, OH 43229"
Online tickets: http://www.ficusmovies.com/

9/30/2010 Thursday- 9.30pm
10/2/2010 Satday - 9.30pm
10/3/2010 Sunday- 6.00pm

Columbus

"Ariena Grand
175 W Nationwide Blvd Columbus, OH 43215"
Online tickets: http://www.ficusmovies.com/

10/1/2010 Friday- 9.00pm

Cincinatti

"Ariena Grand
175 W Nationwide Blvd Columbus, OH 43215"
Online tickets: http://www.ficusmovies.com/

10/1/2010 Friday- 9.00pm

Cleaveland

"1345 S.O.M. Center Road
Mayfield Heights, OH 44124"
Online tickets: www.bigcinemas.com/

9/30/2010- Thu - 10/1/2010- Fri -12:00pm;3:30pm;7:00pm;10:30p
10/2/2010- Sat- 12:00pm;3:30pm;7:00pm;10:30p
10/3/2010- Sun- 1:00pm;4:30pm;8:00p
10/4/2010- Mon- 1:00pm;4:30pm;8:00p
10/5/2010- Tue- 1:00pm;4:30pm;8:00p
10/6/2010- Wed- 1:00pm;4:30pm;8:00p
10/7/2010- Thu- 1:00pm;4:30pm;8:00p

Portland

"CORNEILUS
200 N 26th Ave,
Cornelius, OR 97113 "

9/30/2010- Thu- 7:30pm
10/1/2010- Fri- 7:30pm
10/2/2010- Sat- 2:00pm
10/3/2010- Sun- 2:00pm
10/4/2010- Mon- 7:30pm
10/5/2010- Tue- 7:30pm
10/6/2010- Wed- 7:30pm
10/7/2010- Thu- 7:30pm

Seattle

"Amc Oak Tree 6
10006, Aurora Ave N
Seattle, WA- 98133"

9/30/2010- Thu- 8:30pm
10/1/2010- Fri -8:00p
10/2/2010- Sat -1.30 pm;5.30pm;9.30pm
10/3/2010- Sun- 2.30pm;6.30pm
10/4/2010- Mon
10/5/2010- Tue
10/6/2010- Wed
10/7/2010- Thu

Kansas City

"Cinemark 20
5500 Antioch
Merriam, KS 66202"

Online tickets: http://www.cinemark.com/

9/30/2010- Thu 10/1/2010- Fri- 1:10pm;5:05pm;9:00pm
10/2/2010- Sat- 1:10pm;5:05pm;9:00pm
10/3/2010- Sun- 1:10pm;5:05pm;9:00pm
10/4/2010- Mon- 1:10pm;5:05pm;9:00pm
10/5/2010- Tue- 1:10pm;5:05pm;9:00pm
10/6/2010- Wed- 1:10pm;5:05pm;9:00pm
10/7/2010- Thu- 1:10pm;5:05pm;9:00pm

Charlotte

"Cinemark Movies 10
9508 Northeast Court
Matthews, NC 28105"
Online tickets: www.cinemark.com

9/30/2010- Thu 10/1/2010 -Fri- 1:15pm;5:00pm; 9:00pm
10/2/2010- Sat- 1:15pm;5:00pm; 9:00pm
10/3/2010- Sun- 1:15pm;5:00pm; 9:00pm
10/4/2010- Mon- 1:15pm;5:00pm; 9:00pm
10/5/2010- Tue- 5:00pm; 9:00p
10/6/2010- Wed- 5:00pm; 9:00p
10/7/2010- Thu- 5:00pm; 9:00p

Rochester

"Cinemark Movies 10
2609 West Henrietta Road Rochester, NY 14623"
Online tickets: www.cinemark.com

9/30/2010- Thu- 10/1/2010- Fri- 1:00pm;4:35pm; 8:10pm
10/2/2010- Sat- 1:00pm;4:35pm; 8:10pm
10/3/2010- Sun- 1:00pm;4:35pm; 8:10pm
10/4/2010- Mon- 1:00pm;4:35pm; 8:10pm
10/5/2010- Tue- 4:35pm; 8:10p
10/6/2010- Wed- 4:35pm; 8:10p
10/7/2010- Thu- 4:35pm; 8:10p

"Boston- Cambridge "
"Entertainment Cinemas DTS- Fresh Pond
168 Alewife Brook Parkway Cambridge, MA"
Online tickets: Imoviecafe.com, Radiantmovies.com

9/30/2010- Thu- 9:15pm
10/1/2010- Fri- 3:00pm; 6.30pm; 9.55pm
10/2/2010- Sat- 3:00pm; 6.30pm; 9.55pm
10/3/2010- Sun- 2:00pm;5.30pm;9:00pm
10/4/2010- Mon- 1:00pm;4.30pm;8:00pm
10/5/2010- Tue- 1:00pm;4.30pm;8:00pm
10/6/2010- Wed- 1:00pm;4.30pm;8:00pm
10/7/2010- Thu- 1:00pm;4.30pm;8:00pm

Boston-Worcester

"Showcase Cinemas Worcester North
135 Brooks Street
Worcester, MA 01606"
Online tickets: Imoviecafe.com, Radiantmovies.com

9/30/2010- Thu- 8:30pm
10/1/2010- Fri- 3:00pm;6:30pm;10:00pm
10/2/2010- Sat- 3:00pm;6:30pm
10/3/2010- Sun- 6:30pm;10:00pm
10/4/2010- Mon- 7:30pm
10/5/2010- Tue- 7:30pm
10/6/2010- Wed- 7:30pm
10/7/2010- Thu

Connecticut - Bloomfield

"Bloomfield 8 Cinemas - DTS
863 Park Avenue,
Bloomfield, CT - 06002"
Online tickets: Imoviecafe.com, Radiantmovies.com

9/30/2010- Thu- 9:00pm 10/1/2010- Fri- 3:00pm; 6.30pm; 9.55pm
10/2/2010- Sat- 3:00pm; 6.30pm; 9.55pm
10/3/2010- Sun- 1:00pm;4:30pm;8:00pm
10/4/2010- Mon- 4:00pm;7:30pm
10/5/2010- Tue- 4:00pm;7:30pm
10/6/2010- Wed- 4:00pm;7:30pm
10/7/2010- Thu- 4:00pm;7:30pm

Los Angeles
"Laguna Hills Malls Cinemas
24155 Laguna Hills Mall Rd
Laguna Hills, CA 92653
Online tickets: latamil.com

9/30/2010- Thu- 9:00pm
" Los Angeles- Fallbrook"
"Laemmle's FALLBROOK 7
6731 Fallbrook Ave
West Hills, CA 91307"
Online tickets: latamil.com

9/30/2010 Thu 8:00pm
10/1/2010 Fri 12:30pm;3:45pm;7:00pm;10:15pm
10/2/2010 Sat 12:30pm;3:45pm;7:00pm;10:15pm
10/3/2010 Sun 1:00pm;4:30pm;8:00pm
10/4/2010 Mon 1:00pm;4:30pm;8:00pm
10/5/2010 Tue 1:00pm;4:30pm;8:00pm
10/6/2010 Wed 1:00pm;4:30pm;8:00pm
10/7/2010 Thu 1:00pm;4:30pm;8:00pm

SanAntonio
"Santikos NorthWest
(7600 IH-10 West,
San antonio Tx.)"
Online tickets: www.ficusmovies.com

9/30/2010 Thu 9:00p (premier)
10/3/2010 Sun 3:00pm;6:00pm;
10/4/2010 Mon 7:30pm

Austin

"Cinemark Tinseltown 17
S. I-35 North Of Stassney Ln.
5501 Ih 35
Austin, TX 78744"

Online tickets: http://www.cinemark.com

9/30/2010- Thu-
10/1/2010- Fri- 3:00pm;6:30pm;10:00pm
10/2/2010- Sat- 11:30a;3:00pm;6:30pm;10:00pm
10/3/2010- Sun- 11:30a;3:00pm;6:30pm;10:00pm
10/4/2010- Mon-5:00pm;9:00p
10/5/2010- Tue-
10/6/2010- Wed
10/7/2010- Thu

Houston

"Cinemark Memorial City
Located at Memorial City Mall
310 Memorial City Mall
Houston, TX 77024"
Online tickets: www.ficusmovies.com

9/30/2010- Thu- For Schedules visit www.cinemark.com
10/1/2010- Fri
10/2/2010- Sat
10/3/2010- Sun
10/4/2010- Mon
10/5/2010- Tue
10/6/2010- Wed
10/7/2010 Thu

Pittsburg

"2100 Settlers Ridge Center Drive
Ridge Rd.
Exit off the Parkway West
Robinson Township, PA 15205"
Online tickets: www.cinemark.com
9/30/2010- Thu- For Schedules visit www.cinemark.com
10/1/2010- Fri
10/2/2010- Sat
10/3/2010- Sun
10/4/2010- Mon
10/5/2010- Tue
10/6/2010- Wed
10/7/2010 Thu

Jacksonville
Cinemark Tinseltown and XD
4535 Southside Blvd
Jacksonville, FL 32216
Online tickets: www.cinemark.com

9/30/2010- Thu- 12:00pm;4:00pm;8:00pm;
10/1/2010- Fri- 12:00pm;4:00pm;8:00pm;
10/2/2010- Sat- 12:00pm;4:00pm;8:00pm;
10/3/2010- Sun- 12:00pm;4:00pm;8:00pm;
10/4/2010- Mon- 12:00pm;4:00pm;8:00pm;
10/5/2010- Tue- 12:00pm;4:00pm;8:00pm;
10/6/2010- Wed -12:00pm;4:00pm;8:00pm;
10/7/2010- Thu- 12:00pm;4:00pm;8:00pm;

Denver

"Regency Theatres (Tamarac Square),
7777 E Hampden Avenue
Denver CO - 80231 "
Online tickets: BuyTickets.htm
9/30/2010- Thu- 7:00pm
10/1/2010- Fri- 11.00a;2:30pm;9:30pm
10/2/2010- Sat- 11:00a;6:00pm
10/3/2010- Sun- 11:00a;2:30pm;6:00pm
10/4/2010- Mon- 7:00pm
10/5/2010- Tue- 7:00pm
10/6/2010- Wed- 7:00pm
10/7/2010- Thu- 7:00pm

Detroit

"Cinemark Movies 16
28600 Dequindre
Warren, MI 48092"
Online tickets: "www.cinemark.com"
9/30/2010- Thu -For Schedules visit www.cinemark.com
10/1/2010- Fri
10/2/2010- Sat
10/3/2010- Sun
10/4/2010- Mon
10/5/2010- Tue
10/6/2010- Wed
10/7/2010- Thu

Detroit

"Phoenix Theaters
17310 N Laurel Park Dr
Livonia, MI 48152-3907"
Online tickets: http://www.phoenixmovies.net/loc_laurelpark.asp

9/30/2010- Thu- 7:00pm; 10:30p (Preview)
10/1/2010- Fri- 11:30a;3:00pm;6:30pm;10:00pm
10/2/2010- Sat- 11:30a;3:00pm;6:30pm;10:00pm
10/3/2010- Sun- 11:30a;3:00pm;6:30pm;10:00pm
10/4/2010- Mon- 11:30a;3:00pm;6:30pm;10:00pm
10/5/2010- Tue- 11:30a;3:00pm;6:30pm;10:00pm
10/6/2010- Wed- 11:30a;3:00pm;6:30pm;10:00pm
10/7/2010- Thu- 11:30a;3:00pm;6:30pm;10:00pm

Detroit-Ypsilanti/Ann Arbor

"4100 Carpenter Rd
Ypsilanti, MI 48197
(734) 973-8380"
9/30/2010 Thu 10/1/2010 Fri 12:15pm; 3:45pm; 7:15pm; 10:45pm
10/2/2010 Sat 12:15pm; 3:45pm; 7:15pm; 10:45pm
10/3/2010 Sun 11:45am; 3:15pm; 6:45pm; 10:15pm
10/4/2010 Mon 11:45am; 3:15pm; 6:45pm; 10:15pm
10/5/2010 Tue 11:45am; 3:15pm; 6:45pm; 10:15pm
10/6/2010 Wed 11:45am; 3:15pm; 6:45pm; 10:15pm
10/7/2010 Thu 11:45am; 3:15pm; 6:45pm; 10:15pm

Detroit

"Big Cinemas - Novi Town Center 8
26085 Town Center Dr, Novi, Michigan, MI-48375
Phone : (248) 344-0014"
Online tickets: www.bigcinemas.com
9/30/2010- Thu- 7:30pm; 8:00pm; 8:30; (Preview)

Milwaukee

"Fox Bay Cinema [^] Grill
334 East Silver Spring Dr
Whitefish Bay, WI"
Online tickets: "HitCinemas.com"
9/30/2010- Thu- 8:00pm;

Milwaukee

"Silver Cinemas Budget South 6 Theater
4475 S. 108th St.
Milwaukee, WI - 53228"
Online tickets: "HitCinemas.com"
10/1/2010- Fri- 8:00pm;

Madison

"Sundance Cinemas
430 N. Midvale Blvd
Madison, WI 53705"
Online tickets: HitCinemas.com
10/2/2010- Sat- 11:00am

"Appleton/ Green Bay"

"Fox Cinema
400 3rd Street,
Menasha, WI"
Online tickets: "HitCinemas.com"
10/2/2010- Sat- 5:00pm

St.Louis

"St. Charles Stadium 18 Cinemas
1830 S. First Capitol Drive, St. Charles, MO 63303"
9/30/2010- Thu- Call Local exhibitor for schedules.
10/1/2010- Fri-
10/2/2010- Sat-
10/3/2010- Sun-
10/4/2010- Mon-
10/5/2010- Tue-
10/6/2010- Wed-
10/7/2010- Thu -

Indianapolis

"IMAX
650 west Washington st
Indianapolis,IN 46204"
Online tickets: "www.ficusmovies.com"
10/1/2010- Fri- 9:30pm
10/2/2010- Sat- 9:30pm

எந்திரன் : இசை அனுபவம் பற்றி ஏ.ஆர்.ரகுமான்

இசைப்புயல் ரகுமான் அதிகம் பேசாதவர். தனது இசை பேசப்பட வேண்டும் என எதிர்பார்ப்பவர். ஒவ்வொரு படத்தையும் முதல் படமாக கருதி கடுமையாக உழைப்பவர். அதனால்தான் இரட்டை ஆஸ்கர் விருதுகளை வென்றெடுக்க முடிந்தது. அப்படிப்பட்ட செயல்வீரர்களுக்கு பேச நேரம் கிடைக்காதுதான். 


ஆனாலும், ரஜினியும் ஷங்கரும் எந்திரன் பட தயாரிப்பில் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை வாசகர்களோடு பகிர்ந்துகொண்டதை சுட்டிக் காட்டி, அடுத்ததாக உங்கள் பேட்டியை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள் என சொன்னதும் கூச்சத்துடன் புன்னகைத்தார். அப்போது சிதறிய முத்துக்கள்..

எந்திரன் படத்துல எல்லாமே பிரமாண்டமா இருக்கும்னு தெரிஞ்சுகிட்டேன். பாடல்கள் ஒவ்வொன்னையும் ஒரு வகையான உணர்வோட படமாக்கி இருக்கார் ஷங்கர். படத்தோட மையக் கருத்துக்கு பின்னணி இசையும் பொருத்தமா அமையணும்னு அவர் எதிர்பார்த்தார். 

படத்துல ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் காட்சிகள் நிறைய இருக்குறதனால ரசிகர்கள் ஒன்றி போயிடுவாங்க.. அந்த இடத்துல சவுண்ட் பெருசா இருந்தாதான் கவனிப்பாங்க.. ஸோ, பெருசா செய்யணும்னு ஆசைப்பட்டோம்.

அதனால என்ன ஆச்சுன்னா, லண்டன் சென்னை மும்பைனு மூணு இடத்துல பின்னணி இசை சேக்குற மாதிரி ஆயிருச்சு.. அதுக்கு ரொம்ப செலவாகும்னு சொன்னோம். சன் பிக்சர்ஸ் தயங்காம அதுக்கு ஏற்பாடு பண்ணினாங்க.. 

அதுக்கு நன்றி சொல்லணும். லண்டன்ல பாத்தீங்கன்னா 100 இசைக் கலைஞர்களை வச்சு ரெக்கார்ட் பண்ணிருக்கோம். அங்க டோல் பவுண்டேஷன்னு சொல்லிட்டு ஃபேமஸான ஒரு டோல் குரூப் இருக்கு. அவங்க இந்த படத்துக்கு வேலை செஞ்சுருக்காங்க.

ரொம்ப தள்ளிப்போக கூடாது, படத்தை சீக்கிரம் ரிலீஸ் பண்ணணும்னு சொன்னதால கடுமையா வேலை செஞ்சிருக்கோம்.. சீக்கிரமாவும் முடியணும் ரொம்ப நல்லாவும் வரணும்னா அவ்ளோ உழைச்சாதான முடியும்.. அந்த வேலை நடந்தப்ப ஒரு நாளைக்கு ரெண்டு மணி நேரம்தான் தூங்கினோம்னா நீங்களே பார்த்துக்குங்க.. 

‘சிவாஜி‘ படம் பண்ணும்போது செக்கஸ்லோவியாவுல உள்ள பிராக்ல ரெக்கார்ட் பண்ணினோம். அங்க சிம்ஃபனி இசைக் கலைஞர்கள் கிடைப்பாங்க. ஆனா, எந்திரன்ல இன்னும் ஒரு ஸ்டெப் மேல போய், பிராஸ்ங்கற இசைக்குழுவை பயன்படுத்தியிருக்கோம். பாடல்கள் எல்லாமே பிரமாண்டமா பிரமாதமா வந்திருக்கு. லண்டன்ல இருக்கிற பிராஸ் செக்ஷன், என்னோட ஆர்க்கெஸ்ட்ரா ட்ரூப் இவங்கல்லாம் நிறைய ஹெல்ப் பண்ணிருக்காங்க. இதுதவிர நிறைய மாடர்ன் டெக்சர்ஸ் மியூசிக் பண்ணியிருக்கோம். நீங்க எல்லாருமே ரொம்ப ரசிப்பீங்கனு எனக்கு நம்பிக்கை இருக்கு..


எந்திரன் MP3 பாடல்கள் 

Tuesday, September 28, 2010

கிளிமஞ்சாரோ Trailer HQ AVI



கிளிமஞ்சாரோ Trailer HQ AVI



SERVER :: HOT FILE

கிளிமஞ்சாரோ Trailer HQ AVI - தரவிறக்கம் செய்ய

சச்சினுக்கு ஒரு நியாயம்... ரஹ்மானுக்கு ஒரு நியாயமா? - லதா மங்கேஷ்கர்

காமன்வெல்த் போட்டி மைய நோக்கு பாடலுக்காக, ஏ.ஆர்.ரஹ்மானை கடுமையாக விமர்சிப்பது குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ளார், இந்திய திரையிசைப் பாடகி லதா மங்கேஷ்கர்.


அண்மையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த மைய நோக்கு பாடல் வெளியானது. அந்தப் பாடல் சரியில்லை என பல தரப்பிடம் இருந்தும் எதிர்மறை விமர்சனங்கள் எழுந்தன.

ரசிகர்களுக்கு உத்வேகத்தைத் தூண்டும் வகையில் பாடல் அமையவில்லை என்ற கருத்து நிலவியது.

இதன் எதிரொலியாக, காமன்வெல்த் போட்டி ஒருங்கிணைப்புக் குழு கேட்டுக் கொண்டதற்கு இணங்க, அப்பாடலின் நேர அளவைக் குறைத்து துடிப்பினை அதிகரித்துக் கொடுத்தார், ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்.

இந்த நிலையில், காமன்வெல்த் போட்டி மைய நோக்கு பாடலுக்காக ரஹ்மான் விமர்சிக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள லதா மங்கேஷ்கர், "நான் இன்னும் அந்தப் பாடலைக் கேட்கவில்லை. ஆனால், அந்தப் பாடல் மீதான விமர்சனங்களை தான் அதிகாமாக கேட்டு வருகிறேன்.

ரஹ்மான்... அளப்பறிய அர்ப்பணிப்பு மிக்க இசைக் கலைஞர். ஒரே ஒரு தோல்வியை முன்வைத்து மக்கள் கடுமையாக நடந்துகொள்வது ஏற்புடையதல்ல.

சச்சின் டெண்டுல்கர் தனது ஒவ்வொரு போட்டியிலும் செஞ்சுரி அடிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதைப் போன்றது இந்த விஷயமும்.

எல்லா ஜாம்பவான்களும் சில தவறுகளை இழைப்பது இயல்புதான். நான் பாடிய ஒவ்வொரு பாடலுமே மிகச் சிறந்தது என்றும், கச்சிதமானது என்றும் ஒருபோதும் சொல்ல மாட்டேன். பல நேரங்களில், நான் பாடிய பாடல்கள் எனக்கு ஏமாற்றத்தைத் தந்துள்ளன," என்றார் 'பாரத ரத்னா' லதா மங்கேஷ்கர்.

ஐபிஎல் 4 : யாரு டீமுல யாரு?

ஐபிஎல் 3-ஐ அடுத்து எதிர்பார்க்கப்பட்ட சாம்பியன்ஸ் லீக்கையும் கைப்பற்றிவிட்ட சந்தோஷத்தில் உள்ள சென்னை ரசிகர்களுக்கு, ஞாயிற்றுக்கிழமை கோப்பையை வென்ற பின் கேப்டன் தோனி பத்திரிகையாளர்களிடம் இறுதியாக தெரிவித்த ஒரு விஷயம் பெரும் கவலையை ஏற்படுத்திவிட்டது.


"வீரர்களின் கூட்டு முயற்சியால் வெற்றி பெற்ற நாங்கள் அடுத்த ஐபிஎல் தொடரில் யார் யார் சென்னை அணியில் இருப்பார்கள் என்பது தன்னால் இப்போது கணிக்க முடியவில்லை," என்று கூறியிருந்தார். அப்போது அவர் முகத்தில் தெரிந்த சிறிய ஏமாற்றம் யாரும் கவனிக்காமல் இல்லை.

காரணம்... சென்னை உரிமையாளர்களும், சென்னை சூப்பர் கிங்ஸ் தேர்வாளர்கள் தோனியின் கருத்து இல்லாமல் இறுதி முடிவு எடுத்ததில்லை. கிட்டத்தட்ட கேப்டன் தோனி மற்றொரு சென்னை உரிமையாளராகவே வலம் வந்தார். அவரது கருத்துப்படியும் சென்னை அணி செயல்பட்டது. அதற்கு ஒரு சிறு எடுத்துக்காட்டு...

முதல் ஐபிஎல் போட்டியில் இறுதி ஆட்டம் வரை சென்ற சென்னை அணி, இரண்டாவது ஐபிஎல் போட்டியில் அரையிறுதியுடன் வெளியேறியது. போதுமான வேகப்பந்து வீச்சு இல்லாததையே இது உணர்த்தியதால் மூன்றாவது ஐபிஎல் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் போலிங்கர் அணியில் சேர்க்கப்பட்டார். அதுவும் "மூன்றாவது ஐபிஎல் போட்டி தொடர் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் வேகமாக இடையில் சேர்க்கப்பட்டவர்தான் போலிங்கர்".

முன்னதாக இது தொடர்பான உள் தேர்வு நிகழ்ச்சியில் தோனியின் முடிவு இது என்பதால் சென்னை அணியின் முக்கிய தலைவரான சீனிவாசன் உடனடியாக போலிங்கரை அணுகி அவரை உடனடியாக சென்னை அணியில் இணைத்தார். அதன் பிறகுதான் சென்னை அணி பந்து வீச்சில் வலு பெற்று வெற்றிகள் குவித்தது.

இதுவரை தோனியின் கருத்துக்கும் ஆசைக்கும் முழு ஆதரவு கொடுத்த சென்னை அணியில் தோனியே தொடர்ந்து இருப்பாரா என்ற கேள்வியும் கூடவே எழுந்துள்ளது. காரணம், தோனி ஜார்க்கண்டை சேர்ந்தவர். அவரை தக்க வைத்தாலும் அவர் முடிவு செய்த வீரர்கள் தொடர்ந்து சென்னை அணியில் நீடிப்பார்களா என்ற சந்தேக கேள்வியும் எழுகிறது.

இப்போது இருக்கும் ஐபிஎல் விதிமுறைப்படி ஒரு அணியில் நான்கு முக்கிய வீரர்களை மட்டுமே வைத்துக்கொள்ளலாம். அதாவது, சென்னையை சேர்ந்த வீரர்களை தவிர்த்து சுரேஷ் ரெய்னா, ஜகாட்டி, ஜோகிந்தர் சர்மா, கோனி என்று உள்நாட்டு வீரர்களை குறிப்பிட்டு சொன்னாலும், இவர்களை தவிர வெளிநாட்டு வீரர்களான மேத்யூ ஹெய்டன், மைக்கெல் ஹசி, ஆல்பி மோர்கள், போலிங்கர், முரளிதரன், துஷாரா, சுரேஷ் பெரேரா என வரிசையாக அணி வகுக்கும் நட்சத்திர வீரர்களின் வரிசையில் சென்னை அணி எந்த நான்கு வீரருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் என்றும் தெரியவில்லை.

கேப்டன் தோனியே மற்ற அணிகள் விலை பேச வாய்ப்பு உள்ளதால், அவரை எந்த விலைகொடுத்தும் தக்க வைக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முயலும். அப்படி அதிக விலை பேசி இவரை ஒப்பந்தம் செய்தால் மற்ற வீரர்களை வாங்க போதுமான பணம் இருக்குமா என்ற ஐயமும் இத்துடன் எழுந்துள்ளது. ஆனால் இதற்காக ஒரு குறிப்பிட்ட விலையையும் ஐபிஎல் நீர்ணயிக்கும் என்று கூறப்படுகிறது.

அதே வேளையில் வெளிநாட்டு வீரர்களில், முக்கியமாக இரண்டு வேகப்பந்து வீச்சாளார்கள் முரளிதரன், போலிங்கர், துஷாரா, மக்காயா நிட்டினி ஆகியோரில் யாரை தக்க வைக்க முடியும்? பந்து வீச்சியில் இப்படியென்றால் பேட்டிங் வரிசையில், மேத்யூ ஹெய்டன், மைக்கெல் ஹசி, சுரேஷ் பெரேரா, ஆல்ரவுண்டரில் ஆல்பி மோர்கள், ஜேக்கப் ஓரம், ஆண்ட்ரூ பிலிண்டாப் என இந்த லிஸ்ட் நீழுகிறது. இதில் பிலிண்டாப் மீண்டும் எடுக்க வாய்ப்பு இல்லை.

வெளிநாடு வீரர்கள் தான் இப்படி என்றால், உள்நாட்டு வீரர் சுரேஷ் ரெய்னாவை வாங்க அனைத்து ஐபிஎல் உருபினர்களும் இவரை எந்த விலை கொடுத்தும் வாங்க தயாராக உள்ளனர். இவரை தக்க வைக்கவும் சென்னை அணி அதிக விலை கொடுக்க வேண்டியது இருக்கும். 

ஆரம்பத்தில் ஒன்று ரெண்டு வீரர்கள் வைத்துக்கொண்டு அவர்களின் திறமையாக மெருகேற்றி சமாளித்து வந்த மற்ற அணிகள் கூட தற்போது சிறந்த வீரர்களை அணியில் சேர்க்கவே விரும்புகின்றனர்.

முன்னதாக சென்னை அணியிலிருந்து யார் யார் வெளியேறுவார்கள் என்ற கேள்வி எழுந்த போது மேத்யூ ஹெய்டன், சென்னை தன் தாய் வீடு போன்றது என்றும், நான் சென்னை அணியை விட்டு எந்த அணிக்கும் மாறி விளையாட தயாராக இல்லை எனக் கருத்து தெரிவித்துவிட்டார்.

நேற்று போட்டி முடிவடைந்த உடன் மைக்கெல் ஹசி, நாங்கள் ஒன்றினைந்து முழு அர்பணிப்புடன் விளையாடியதால் ஐபிஎல் மற்றும் சாம்பியன் லீக்கை கைப்பற்ற முடிந்தது. தன்னை இதுவரை உற்சாகமாகவும், மரியாதையாகவும் நடத்திய சென்னை அணியை விட்டு போக மனமில்லை. ஆனால் அது என் கையில் இல்லையே என வேதனையுடன் குறிப்பிட்டார்.

இவர் இப்படியென்றால் தமிழகத்தின் மருமகன் முரளிதரனை கேட்கவே வேண்டாம். சென்னை நகரமும், ரசிகர்களும் தன்னை இதுவரை பிரித்து பார்த்ததே இல்லை. தான் இன்னும் தன் தாய் நாட்டுக்கு விளையாடுவது போன்றுதான் உணருகிறேன். இறுதி வரை சென்னை அணிக்கு விளையாடவே விரும்புகிறேன் என்று ஐபிஎல் 3-ஐ கைப்பற்றியதும் வெளிப்படையாகவே தன் கருத்து தெரிவித்தார்.

ஒட்டு மொத்தத்தில் சென்னை அணி கோப்பை வென்ற மகிழ்ச்சியை விட தற்போது யார் யாரை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற டென்ஷன் தான் பெரிதாக எழுந்துள்ளது.

அதே நேரத்தில் சென்னை அணியும் மற்ற அணிகளில் இடம் பெற்று சிறந்த வீரர்களை வாங்கவும் முயற்சி செய்யும்.

சச்சினின் எதிப்பு...

சென்னைக்கு மட்டுமல்ல மற்ற அணிகளும் இந்த கவலை தற்போது எழுந்துள்ளது. ஐபிஎல் விதிமுறைக்கு மும்பை அணித்தலைவர் சச்சின் டெண்டுல்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தன் அணியில் தற்போது தான் ஒன்றிணைதந்த முழு சிறந்த அணியாக மாற்றியுள்ளது. இந்த நிலையில் நான்கு வீரர்கள் மட்டுமே அணியில் தக்க வைக்க முடியும் என்பது ரொம்ப கஷ்டமான பணி என கருத்து தெரிவித்துள்ளார்.

சரி... சென்னை அணியில் எந்தெந்த வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம்? யாரை வாங்கலாம்? நீங்களே யோசனை சொல்லுங்களேன்...

நன்றி - இரா.செந்தில்குமார்  

கேரளாவில் 125 தியேட்டரில் ‘எந்திரன்’ சில மணி நேரத்தில் டிக்கெட்கள் விற்று தீர்ந்தன

கேரளாவில் எந்திரன் படத்திற்கான முன்பதிவு நேற்று கோலாகலமாக தொடங்கியது. சில மணி நேரத்தில் 2 நாட்களுக்கான அனைத்து காட்சிகளுக்கும் டிக்கெட் விற்று தீர்ந்தன.


கேரளாவில் ‘எந்திரன்’ படம் 125 தியேட்டர்களில் வெளியாகிறது. இது கேரள சினிமா வரலாற்றில் புதிய சாதனை. மலையாள திரைப்பட வரலாற்றில் இதுவரை எந்த ஒரு படமும் 100 தியேட்டர்களுக்கு அதிகமாக திரையிடப்பட்டதில்லை. 

முதல் முதலாக இந்த சாதனையை எந்திரன் படைத்துள்ளது. திருவனந்தபுரம், கொச்சி, பாலக்காடு, கோழிக்கோடு ஆகிய இடங்களில் எந்திரன் பட முன்பதிவு நேற்று தொடங்கியது. திருவனந்தபுரத்தில் அஞ்சலி, அதுல்யா, நியூ, தன்யா, அஜந்தா ஆகிய 5 தியேட்டர்களில் படம் வெளியாகிறது.

இந்த தியேட்டர்களில் நேற்று காலை 11 மணிக்கு முன்பதிவு தொடங்கியது. காலை 9 மணிக்கு முன்பாகவே ரஜினி ரசிகர்கள் தியேட்டர் முன் குவிந்தனர். முன்பதிவு தொடங்கிய சில மணி நேரத்தில் 5 தியேட்டர்களிலும் 2 நாட்களுக்கான அனைத்து காட்சிகளுக்கும் டிக்கெட் விற்று தீர்ந்தன. 

இதேபோல் மற்ற பகுதிகளிலும் 2 நாள் காட்சிகளுக்கான டிக்கெட்கள் விற்று தீர்ந்தன.அஞ்சலி, அதுல்யா தியேட்டர்களின் மேலாளர் அசோகன் கூறுகையில், ‘மலையாளத்தில் இதற்கு முன் எந்த படத்திற்கும் முன்பதிவு செய்யப்பட்டதில்லை. எந்திரன் படம் இந்த புதிய சாதனையை படைத்துள்ளது. முன்பதிவு தொடங்கிய சில மணி நேரத்திலேயே 2 நாட்களுக்கான அனைத்து காட்சிகளுக்கும் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டன’ என்றார்.

எந்திரன் : ஷங்கருக்கு பிடித்த காதல் அணுக்கள்...

‘காதல் அணுக்கள்‘ ரொம்ப மென்மையான பாடல். கனவுப் பாடல். அதனால ஐரோப்பால ஜெர்மனி மாதிரி குளுமையான ஒரு நாட்டுல அந்த பாடலை படமாக்கலாம்னு திட்டம் போட்டிருந்தேன். 




ஆனா, லொகேஷன் பார்க்க போனா எல்லா இடமும் ஏதோ ஒரு டீவில வர்ற பாடல்ல பார்த்த மாதிரியே இருந்துது. அதே மாதிரி, லொகேஷன் மானேஜரும் ஒவ்வொரு இடத்துக்கு போனதும், ‘போன வாரம்தான் இந்த இடத்துல ஒரு தெலுங்கு ஷூட்டிங் நடந்துச்சு.. இந்தி பாட்டு எடுத்தாங்க..’ அப்படீம்பார். யாரும் ஷூட் பண்ணாத இடமா இருக்கணும்னு நான் உறுதியா இருந்தேன்.. 

அப்பதான் பிரேசில் நாட்ல, ‘கிளிமஞ்சாரோ‘ பாடலுக்கு இடம் தேடினப்ப பாத்து வச்ச லாங்காய்னு ஒரு இடம் ஞாபகம் வந்துது. பெரிய பாலைவனத்துல நடுவுல துண்டு துண்டா நிறைய ஏரிகள் இருந்தா எப்படி இருக்கும்? அதுதான் லாங்காய். அந்த மாதிரி இடம் உலகத்துல வேற எங்கயுமே கிடையாது. 

ஆனா, கஷ்டப்பட்டு அங்க போனதுக்கு அப்புறம்தான் தெரிஞ்சுது, ‘கிளிமஞ்சாரோ‘ பாடல்ல ஒரு பகுதியதான் அங்க எடுக்க முடியும். முழு பாடலும் எடுக்க முடியாது. அதனால் கிளம்பி வந்துட்டோம். ‘

காதல் அணுக்கள்‘ அங்க எடுத்தா என்னானு தோணுச்சு. நிறைய ஸ்டில்ஸ் எடுத்துருந்தோம். அதையெல்லாம் பாத்ததும் ‘மென்மையான பாட்டுக்கு இந்த இடம் பிரமாதமான விஷுவலா இருக்கும்’னு (ஒளிப்பதிவாளர்) ரத்னவேலு அடிச்சு சொன்னார்.

உடனே புறப்பட்டோம். லாங்காய் பெரிய டூரிஸ்ட் ஸ்பாட். ரொம்ப கட்டுப்பாடுகள். சின்ன பேப்பர்கூட கீழே போடக்கூடாது. ஓட்டல்ல இருந்து கார்ல ஒரு பயணம், அப்புறம் படகுல ஒன்றரை மணி நேரம், திரும்ப ரெண்டு மணி நேரம் கார்ல, அதுக்கு பிறகு பாலைவனத்துல போறதுக்கு ஸ்பெஷலா பண்ணின ஜீப்ல பயங்கரமான பயணம். கடைசி அஞ்சு நிமிஷம் தண்ணிக்குள்ள ஜீப் போகும். அதுக்கப்புறம் இறங்கி நடக்கணும். 

ஏன்னா, அது காடு. ஜீப் போகக்கூடாது. எல்லாத்தையும் தூக்கிட்டு போய் ஷூட் பண்ணுவோம். மத்தியானம் பசிக்கும். அங்க எதுவும் சாப்பிட கூடாது. திரும்ப ஒரு மணிநேரம் டிராவல் பண்ணி சாப்பிட்டுட்டு ஓடி வரணும். சிரமப்படறதுக்குன்னே போய் எடுத்த மாதிரி கஷ்டப்பட்டு எடுத்தோம். ‘

சும்மா சொல்லக்கூடாது, ஷங்கர்.. கூட்டிட்டு வந்தீங்களே இடம்.. இந்த மாதிரி நான் பார்த்ததே இல்லை..‘ன்னு ரஜினி சார் சொல்லிட்டே இருப்பார். அந்த பாலைவனத்துல எப்பவும் காத்தடிச்சுட்டே இருக்கும். எல்லார் மேலயும் மணல் விழும். முகத்துல துணி கட்டிகிட்டு கொள்ளை கோஷ்டி மாதிரி வேலை பாத்தோம். பிரமாண்டமான ஏரியா. கண்ணுக்குள்ள அடங்காது. அதனால ஹெலிகாப்டர்ல பறந்து படம் பிடிச்சோம்.

ரஜினி சார்கிட்ட எல்லாருக்கும் பிடிச்ச ஒரு லுக் இருக்கு. அதோட ஒரிஜினலை ரீ கிரியேட் பண்ணணும்னு சொல்லி பழைய ஸ்டில்ஸ் எல்லாத்தையும் பார்த்தேன். அதுல ஒரு லுக் ரொம்ப பிடிச்சிருந்துது. 

அருமையான லுக் அது. அதுக்கான விக் ரெடி பண்ணி, நினைச்சது வர்ற வரைக்கும் நிறைய மாற்றங்கள் பண்ணி, அதே மாதிரி லுக் கொண்டு வந்திருக்கோம். பானுவோட மேக்கப்பும் ரத்னவேலுவோட லைட்டிங்கும் சேந்து அவரை இன்னும் அழகா காட்டும்.

‘ஜானி‘ படத்துல ஒரு பாட்டுல ரஜினி சார் ரொம்ப கேஷுவலா வருவார். அதே மாதிரி ‘தம்பிக்கு எந்த ஊரு‘ படத்துல ரொம்ப யதார்த்தமா பேன்ட் பாக்கெட்ல கைய விட்டு பாடிக்கிட்டே நடப்பார். அத பார்க்கும்போது நல்ல ஃபீல் கிடைக்கும். இன்னைக்கும் மறக்க முடியாது. அது மாதிரி பண்ணணும்னுதான் இந்த பாட்டுக்கு மெனக்கிட்டோம். 

ரகுமான் அழகா ட்யூன் போட்ருக்கார். ரஜினி சார் கிடார் வச்சுகிட்டு ஃப்ரீயா பண்ணியிருக்கார். படத்துல எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல்னு கேட்டா இதைத்தான் சொல்லுவேன்.காதல் வந்த ஒரு விஞ்ஞானி பாடுற பாடல். வழக்கமான காதல் மொழி தெரியாது. 

அதனால் விஞ்ஞான ரீதியா ரொமான்டிக் பாடல் வேணும்னு கேட்டேன். வைரமுத்து சார் நியூட்ரான், எலக்ட்ரான்னு வச்சு வித்தியாசமா எழுதினார். எல்லாரோட பங்களிப்பும் சேந்து அந்த பாடல் சீனை எப்படி சூப்பரா அமைச்சுருக்குன்னு படத்தை பாத்துட்டு சொல்லுங்க..


காதல் அணுக்கள் பாடல் வரிகள்

காதல் அணுக்கள்
உடம்பில் எத்தனை
நியூட்ரான் எலெக்ட்ரான்
உன் நீலக்கண்ணில் மொத்தம் எத்தனை
உன்னை நினைத்தால்
திசுக்கள் தோன்றும் ஆசைச் சிந்தனை
ஹையோ

சனா சனா ஒரே வினா
அழகின் மொத்தம் நீயா

நீ நியூட்டன் நியூட்டனின் விதியா
உந்தன் நேசம் நேசம் எதிர்வினையா
நீ ஆயிரம் விண்மீன் திரட்டிய புன்னகையா
அழகின் மொத்தம் நீயா
நீ முற்றும் அறிவியல் பித்தன்
ஆனால் முத்தம் கேட்பதில் ஜித்தன்
உன்னால் தீம் தோம் தோம்
தீம் தோம் தோம்
தீம் தோம் தோம் மனதில் சத்தம்
தேன் தேன் தேன் இதழில் யுத்தம்
ரோஜாப் பூவில் ரத்தம்
தீம் தோம் தோம் மனதில் சித்தம்

ஹோ பேபி ஹோ பேபி
செந்தேனில் வஸாபி
ஹோ பேபி ஹோ பேபி
மேகத்தில் பூத்த குலாபி

ஹோ பேபி ஹோ பேபி
செந்தேனில் வஸாபி
ஹோ பேபி ஹோ பேபி
மேகத்தில் பூத்த குலாபி

பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி
கால்களைக் கொண்டுதான் ருசியறியும்
காதல் கொள்ளும் மனிதப்பூச்சி
கண்களைக் கொண்டுதான் ருசியறியும்

ஓடுகிற தண்ணியில் தண்ணியில்
ஆக்சிஜன் மிக அதிகம்
பாடுகிற மனசுக்குள் மனசுக்குள்
ஆசைகள் மிக அதிகம்

ஆசையே வா வா
ஆயிரம் காதலை ஐந்தே
நொடியில் செய்வோம்
பெண்ணே வா வா வா

காதல்காரா...
நேசம் வளர்க்க ஒரு
நேரம் ஒதுக்கு எந்தன்
நெஞ்சம் வீங்கி விட்டதே

காதல்காரி...
உந்தன் இடையைப் போல
எந்தன் பிழைப்பில் கூட
காதலின் நேரமும் இளைத்துவிட்டதே

ஹோ பேபி ஹோ பேபி
செந்தேனில் வஸாபி
ஹோ பேபி ஹோ பேபி
மேகத்தில் பூத்த குலாபி

ஹோ பேபி ஹோ பேபி
செந்தேனில் வஸாபி
ஹோ பேபி ஹோ பேபி
மேகத்தில் பூத்த குலாபி

காதல் அணுக்கள்
உடம்பில் எத்தனை
நியூட்ரான் எலெக்ட்ரான்
உன் காந்தக்கண்ணில் மொத்தம் எத்தனை
உன்னை நினைத்தால்
திசுக்கள் தோன்றும் ஆசைச் சிந்தனை
அன்பே

சனா சனா ஒரே வினா
அழகின் மொத்தம் நீயா

நீ நியூட்டன் நியூட்டனின் விதியா
உந்தன் நேசம் நேசம் எதிர்வினையா
நீ ஆயிரம் விண்மீன் திரட்டிய புன்னகையா
அழகின் மொத்தம் நீயா

ஹோ பேபி ஹோ பேபி
செந்தேனில் வஸாபி
ஹோ பேபி ஹோ பேபி
மேகத்தில் பூத்த குலாபி

ஹோ பேபி ஹோ பேபி
செந்தேனில் வஸாபி
ஹோ பேபி ஹோ பேபி
மேகத்தில் பூத்த குலாபி

ஹோ பேபி ஹோ பேபி
செந்தேனில் வஸாபி
ஹோ பேபி ஹோ பேபி
மேகத்தில் பூத்த குலாபி

இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: விஜய் பிரகாஷ், ஷ்ரேயா கோஷல்
வரிகள்: வைரமுத்து

நன்றி : தேன்கிண்ணம் (பாடல் வரிகள்) 

Monday, September 27, 2010

‘‘எந்திரன்" ஒரு டெக்னிக்கல் மிரட்டல்

உலகம் முழுக்க பரபரத்துக் கிடக்கிறது, சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன் தயாரித்துள்ள ‘எந்திரன்’ பட ரிலீசுக்கு. படத்தின் டிரெய்லர், பிரமாண்டத்தை பறைசாற்றி விட்டதால் எதிர்பார்ப்பு டிரிபிள் மடங்கு எகிறியிருக்கிறது. 


பட வெளியீட்டுக்காக பிரபஞ்சமே காத்திருக்கும் நேரத்தில் எவர்க்ரீன் சூப்பர் ஸ்டாரான ரஜினியை இப்படத்தில் இன்னும் இளமையாக்கியிருக்கிற ஹைடெக் ஒளிப்பதிவாளர் ஆர்.ரத்னவேலுவிடம் பேசினோம்.

‘‘‘எந்திரன்’ ஒரு டெக்னிக்கல் மிரட்டல். படத்தின் ஒவ்வொரு ஷாட்டும் பிரமிப்பா இருக்கும். இந்த பிரமிப்புக்கு டைரக்டர் ஷங்கரின் திரைக்கதைதான் காரணம். கதையை அவர் சொன்னதுமே ரொம்ப ரிஸ்கான வேலைங்கறதை புரிஞ்சுகிட்டேன். டாப் ஹீரோ ரஜினி, டாப் ஹீரோயின் ஐஸ்வர்யா, டாப் டைரக்டர் ஷங்கர். 

இதோட டாப் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ்... இந்த மாதிரி காம்பினேஷன்ல வேலை பார்த்தா எந்த ரிஸ்கையும் எடுக்கலாம்னு முடிவு பண்ணி, களத்துல இறங்கிட்டேன். முதல்ல, பாட்டை ஷூட் பண்ணினோம். பெரு நாட்டுல இருக்கிற எட்டாவது

உலக அதிசயமான ‘மச்சுபிச்சு’ல ‘கிளிமாஞ்சாரோ...’பாடலை எடுத்தோம். வழக்கமான டான்சர்ஸ், விஷுவல்ஸ் எதுவும் இருக்கக் கூடாதுன்னு பிரேசில்ல சம்பா டான்ஸ் ஸ்கூல்ல போய் அந்த டான்சர்களை வரவழைச்சோம். 

நம்ம பாரம்பரிய நடனம் மாதிரி சம்பா டான்ஸுக்கு பெரிய வரலாறே இருக்கு. இந்த பாடலை ஷூட் பண்ணும் போது அந்த மலைல லைட் வைக்கக் கூடாதுன்னு சொல்லிட்டாங்க.

அங்க இருக்கிற ஒவ்வொரு கல்லையும் அவங்க தெய்வமா மதிக்கிறாங்க. சரியான லைட்டிங் இல்லாம இதை எடுக்க முடியுமான்னு ரஜினி சார் என்னை பார்த்தார். முடியும்னு, வேற டெக்னிக் பயன்படுத்தி எடுத்தேன். அதேமாதிரி ரோபோ ரஜினி, விஞ்ஞானி ரஜினி இந்த ரெண்டு பேரையும் வித்தியாசமா காட்ட ரொம்ப மெனக்கெட்டோம்.

என்னதான் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்ல பண்ணினாலும் படத்துல பார்க்கிறப்ப அது கிராபிக்ஸ்னு தெரிஞ்சுரும். ‘எந்திரன்’ல அப்படி தெரிய கூடாதுனுஹாலிவுட்ல இருக்கிற ஸ்டான் வின்ஸ்டன் ஸ்டூடியோவுக்கு போனோம். 

இங்கதான் ‘ஜூராசிக் பார்க்’லேந்து ‘அவதார்’ வரைக்கும் சிஜி பண்ணியிருக்காங்க. அங்க போய் அனிமேட்ரானிக்சை பயன்படுத்தி, ரஜினி மாதிரியே ஒரு அசையும் எந்திர மனிதரை உருவாக்கினோம்.

அதுதான் ரோபோ ரஜினி. ஒவ்வொரு ஸ்டேஜா வந்துதான் மனித உருவத்துக்கு இந்த கேரக்டர் வரும். இப்ப மெட்டல் உருவம், ரொம்ப பளிச்சுன்னு தெரியும். விஞ்ஞானி ரஜினியும் அதே கலர்ல தெரியக் கூடாதில்லையா? அதனால, லைட்டிங்ல வித்தியாசம் காட்டி பண்ணினோம். வழக்கமா தமிழ் படங்கள்ல லைட்டிங்னா, கயிறுகட்டி தொங்க விட்டுட்டு நிறைய வேலை பார்ப்பாங்க.

ஆனா, நான் எல்லத்தையும் புரோக்ராமா மாத்திட்டேன். அதாவது இதை இன்டலின்ட் லைட்டிங்னு சொல்வாங்க. 2008ல ஆரம்பிச்சப் படம் 2010ல ரிலீஸ்னா, லைட்டிங் ஒரே மாதிரி இருக்கணும். அதுக்காக ரொம்ப சிஸ்டமேட்டிக்கா கேமரா ரிப்போர்டை தயார் பண்ணினேன். 

எனக்கு ரொம்ப சவாலான வேலைன்னா, அது ‘அரிமா அரிமா...’ பாடல்தான். டெக்னிக்கலா இதுல புதுமையான வேலை பண்ணியிருக்கோம். இப்ப நான் சொல்லக்கூடாத பல விஷயங்கள் இந்த பாடல் காட்சியில இருக்கு.

இந்த பாடல்ல மூணு வித்தியாசமான லொகேஷனை லைட்டிங்ல காட்டணும். ஆனா, நேரமேயில்லை. இடைவிடாம ஷூட்டிங். ஸோ, பகல்ல ஷூட் பண்ணிட்டு, ராத்திரி லைட்டிங்கை மாத்துவோம். 

இப்படி ரஜினில ஆரம்பிச்சு யூனிட்ல இருக்கிற எல்லாருமே முழு உழைப்பை இறக்கியிருக்கோம். இப்ப நான் சொல்றதை விட பட ரிலீசுக்கு பிறகு பேச நிறைய விஷயங்கள் இருக்கு. இந்தப் படத்துல ஷங்கரோட டெடிகேஷனை பார்த்து மிரண்டு போயிருக்கேன்.

ஒவ்வொரு காட்சிக்கும் பத்து தடவை திட்டமிடுவார். இப்படியொரு படத்தை சன் பிக்சர்ஸை விட்டா வேற யாரும் தயாரிச்சிருக்கவே முடியாது. எந்த நிமிஷம் எதை கேட்டாலும் அடுத்த நிமிஷமே நமக்கு அது கிடைக்கும். 

இதுக்காக அவங்க தனி டீமையே உருவாக்கியிருந்தாங்க. ஒரு நாள் டப்பிங் பேசிட்டு இரவு நேரத்துல ரஜினி எனக்கு போன் பண்ணினார். தெரியாத நம்பர்களை நான் எடுக்கறதில்லை.


யார் ஃபோனோன்னு விட்டுட்டேன். அப்புறம் தொடர்ந்து கால் வந்துட்டே இருந்தது. எடுத்து பேசினா, ரஜினி. ‘படம் பார்த்தேன். உங்க வேலை ரொம்ப பிரமாதம்’னு பாராட்டினார். ‘ஏன் சார், இதை காலையில சொல்லியிருக்கலாமே’னு கேட்டேன். ‘இல்லை... சந்தோஷத்தை உடனே பகிர்ந்துக்கணும்னுதான் ராத்திரி ஃபோன் பண்றேன்’னு சொன்னார். இன்னும் பிரமிப்பாதான் தெரியறார் ரஜினி’’ வியப்பாக முடிக்கிறார் ரத்னவேலு.

எந்திரன் பற்றி : ஆர்ட் டைரக்டர் சாபு சிரில்

'எந்திரன்’ மாதிரி ஒரு படம், இனி இந்தியாவில் தயாரிக்கப்படுமா என்பது தெரியாது. இந்த சவாலான படத்தில் நான் பணியாற்றியது பெருமையான விஷயம்’’ என்கிறார் சாபு சிரில். இந்திய சினிமாவின் ஹாட் ஆர்ட் டைரக்டர்.


‘‘பத்து வருஷங்களுக்கு முன்னாலயே ஷங்கர் இந்த கதையை சொன்னார். அப்பவே கொஞ்சம் வித்தியாசமா போட்டோ ஷூட்டெல்லாம் பண்ணினோம்.

அதுக்கப்புறம் ஷங்கர் மற்ற வேலைகள்ல பிசி. நானும் அதை மறந்துட்டேன். மூணு வருஷங்களுக்கு முன்னால, திடீர்னு ஒரு நாள் ‘‘எந்திரன்’ பண்றோம். நீங்கதான் ஆர்ட் டைரக்டர்’னு ஷங்கர் சொன்னார்.

எனக்கு ஜில்லுனு ஆயிடுச்சு. ஏன்னா, படத்தோட கதை எனக்கு தெரியும். இந்த மாதிரி சயின்ஸ் பிக்ஷன் படத்துல வேலை பார்க்கிறது சவாலானது. அந்த சவாலை சூப்பரா பண்ணிடலாம்னு சந்தோஷமா முடிவு பண்ணினோம்...’


 அதிகமா படத்தை செட்லதான் எடுத்திருக்கோம். இப்படியொரு செட்டை எங்கயும் இதுவரை பார்த்திருக்க முடியாதபடி பண்ணியிருக்கோம். ரோபோ லேப், ஹைடெக் பில்டிங், அதுக்கான இன்டீரியர், எல்லாமே மிரட்டும்.

கொஞ்சம் பர்சனலா சொல்லμம்னா ஷங்கர் என்னை பிழிஞ்சு எடுத்துருக்கார். அதற்கான பலனை படம் பார்த்ததும் தெரிஞ்சுகிட்டேன். இந்த படத்துல வேலை பார்த்தது எனக்கு சுகமான சவாலான அனுபவம்.


நான் ஏற்கனவே, ‘என் இனிய இயந்திரா’ சீரியலுக்காக ஒரு நாய்க்குட்டி ரோபோவை வெறும் அஞ்சாயிரம் ரூபாய்ல பண்ணினேன். அப்ப அது பெரிய தொகை. அது பரபரப்பா பேசப்பட்டுச்சு. ‘எந்திரனு’க்காக ஹாலிவுட்ல உள்ள பெரிய ஸ்பெஷல் எபெக்ட்ஸ் ஸ்டூடியோக்களுக்கு போய் பார்த்தேன்.

எனக்கு நம்பிக்கை வந்தது. ஹாலிவுட் ஸ்டூடியோவுல ரோபோவை உருவாக்க கேட்டப்ப, அவங்க சொன்ன செலவு 5 கோடி ரூபாய். நான் ஷங்கர்கிட்ட வெறும், 5 லட்சம் ரூபாய்ல ரோபோ பண்றேன்னு சொன்னேன்.

அவர் ஆச்சர்யத்தோட என்னை பார்த்தாரு. சொன்னா மாதிரியே உருவாக்கினேன். ஹாலிவுட்லயும் ரெண்டு ரோபோக்களை உருவாக்கியிருக்காங்க. சிங்கத்தை பிடிச்சுட்டு ரஜினி வர்ற மாதிரி ஸ்டில் இருக்குல... அந்த சிங்க ரோபோவையும் நான்தான் உருவாக்கினேன்.


படத்துல மொத்தம் 35 செட் இருக்கு. மாயாஜால் பக்கத்துல ஒன்னரை கிலோமீட்டர் தூரத்துக்கு போட்ட செட்டை பிரமாண்டம்னு சொல்லாம வேறெப்படி சொல்ல முடியும்? அங்க 30 நாட்கள் ஷூட்டிங் நடந்திருக்கு.


ஒரு பெரிய பால் உருண்டு வந்து மோதுற மாதிரி ஒரு காட்சி. டிரெய்லர்ல இதை பார்த்துட்டு, ‘எப்படி இதை பண்μனீங்க? அவ்வளவு மிரட்டலா இருக்கு’னு கேட்டாங்க. டிரெய்லர்ல பார்த்ததை விட, பல மடங்கு மிரட்டல் படத்துல இருக்கு.

கிளைமாக்ஸுக்காக போடப்பட்டிருக்கிற ஒரு ஹால் செட், இதுவரை யாருமே பண்ணாதது. எப்படிங்கறதை இப்ப சொன்னா சஸ்பென்ஸ் போயிரும்.


டெக்னிக்கலா இந்தியாவுல இதுவரை வராத படம். ஷங்கரோட திரைக்கதைதான் படத்துக்கு முதுகெலும்பு. அடுத்தது ரஜினிகாந்த்தோட மாஸ். செட்டை பொறுத்தவரை, கதைக்கு என்ன தேவையோ அதைத்தான் பண்ணியிருக்கோம்.

ஜேம்ஸ்பாண்ட் படங்கள்ல, ஆர்ட் வொர்க் எதுனு யாராலயும் கண்டுபிடிக்கவே முடியாது. அதேமாதிரி இந்த படத்துலயும் எது செட், எது நிஜம்னு யாராலயும் கணிக்க முடியாது.

ஐரோப்பாவின் பிரமாண்ட 'கொலோஸியம்' அரங்கில் ரஜினியின் எந்திரன்!

ஆஸ்லோ: ஐரோப்பாவிலேயே மிகப் பெரிய திரையரங்கமான கொலோஸியம் கினோ-1 (Colosseum) -ல் சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் சிறப்புக் காட்சி திரையிடப்படுகிறது.


கடந்த 10 ஆண்டுகளில் இங்கு வெளியாகும் முதல் இந்தியப் படம் ரஜினியின் எந்திரன் மட்டுமே. இந்தக் காட்சிக்கான டிக்கெட்டுகள் வேகமாக விற்பனையாகி வருகின்றன.


இந்த அரங்கம் நார்வேயின் தலைநகரமான ஆஸ்லோவில் அமைந்துள்ளது. Matrix, அவதார் போன்ற சரித்திரப் புகழ்பெற்ற படங்கள் இங்கே வெளியாகியுள்ளன.

மேற்கத்திய நாடுகளில் ஒரு திரையரங்கில் 700 இருக்கைகளே அதிகம் என்ற நிலைதான் இப்போது உள்ளது. அந்த பாணியைத்தான் இன்றைக்கு இந்தியாவிலும் பின்பற்றி வருகிறார்கள். ஆனால் கொலோஸியம் அரங்கம் 975 இருக்கைகள் கொண்டது. அதிநவீன முறையில், சர்வதேச தரத்திலான (THX) ஒலியமைப்புடன் கட்டப்பட்ட இந்த அரங்கம்தான் ஐரோப்பாவிலேயே பெரியதாகும்.

இந்த அரங்கில் ஆங்கிலம் தவிர்த்த பிறமொழிப் படங்களை வெளியிடுவதில்லை. காரணம் அவற்றை ஒரு காட்சி கூட முழுமையாக ஓட்ட முடியாது என்பதே. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் முதல்முறையாக வெளியாகும் இந்திய/தமிழ் திரைப்படம் என்றால் அது எந்திரன் மட்டுமே.

நார்வேயில் உள்ள தமிழரான வசீகரன் சிவலிங்கத்தின் வி.என் மியூசிக் ட்ரீம்ஸ் நிறுவனமும், அபிராமி கேஷ் அண்ட் கேரி நிறுவனமும் இணைந்து இந்த சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன.

இதுகுறித்து வசீகரன் கூறுகையில், "கொலோசியத்தில் ரஜினி சாரின் எந்திரன் தமிழ்ப் படம் திரையிடுவது மிகுந்த பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது.

இந்த வாய்ப்பை எங்களுக்குத் தந்த ஜாக் ஏ ராஜசேகரின் ஃப்யூஷன் எட்ஜ் மீடியா மற்றும் ஐங்கரன் நிறுவனத்துக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.." என்றார்.

அவரிடம் எந்திரன் படத்துக்கான வரவேற்பு எப்படி உள்ளது என்று கேட்ட போது, 'பிரமிபக்கத்தக்க வகையில் உள்ளது. நார்வேயில் மொத்தம் 14000 தமிழர்கள் வசிக்கிறார்கள். இவர்களில் அதிகபட்சம் 20 சதவீதத்தினர்தான் திரையரங்குகளுக்குப் போய் படம் பார்ப்பார்கள். பொதுவாக தமிழ்ப் படம் போட்டால் 1400 பேர் வரை வருவார்கள். இதனால் சின்ன தியேட்டர்களாகப் பார்த்து ரிலீஸ் பண்ணுவோம்.

ஆனால் இது சூப்பர் ஸ்டார் படமாச்சே. எதிர்ப்பார்ப்பும் எக்கச்சக்கம். எனவேதான் இந்த பெரிய தியேட்டரில் வெளியிடுகிறோம். மிகக் குறுகிய நேரத்தில் 75 சதவீதம் டிக்கெட்டுகளை விற்றுவிட்டோம். அட, சில நார்வே மக்கள் கூட எந்திரனுக்கு டிக்கெட் வாங்கியுள்ளார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். நார்வேயைப் பொறுத்தவரை இது முன்னெப்போதும் நிகழாத சாதனைதான்..." என்றார்.

இந்த கொலோஸியம் அரங்கில் சிறப்புக் காட்சி முடிந்ததும், 300 இருக்கைகள் கொண்ட வேறு திரையரங்கில் எந்திரன் காட்சிகள் தொடரும் என்றும் அவர் கூறினார்.

எந்திரன் படம் குறித்து வசீகரன் கூறுகையில், "நிச்சயம் இந்தப் படத்தால் தமிழ் சினிமாவுக்குப் பெருமை. சூப்பர் ஸ்டார் ரஜினியின் மேஜிக் குறிப்பிட்ட எல்லைக்குட்பட்டதல்ல. உலகம் முழுவதையும் வசீகரப் படுத்தும் சக்தி கொண்டவர் அவர். இந்தப் படம் மிகச் சிறந்த படைப்பாக வந்திருக்கிறது. நிச்சயம் உலக சினிமாவில் எந்திரன் புதிய சாதனைப் படைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை," என்றார்.