Pages

Thursday, September 30, 2010

மேகக் கணினியக் கனவுகள்!

பாரம்பரிய, பிரபலக் கணினி நிறுவனங்களான Dellம் HPம் வரிந்து கட்டிக்கொண்டு போடும் சண்டை இந்த வாரத்தில் குறிப்பிடத்தக்க நிகழ்வு. சண்டைக்குக் காரணம், மேகக் கணினியக் கனவுகள் (Cloud Computing). என்னதான் நடக்கிறது?


3 PAR (http://www.3par.com/index.html) என்ற டெக் நிறுவனம் Dell, HP போன்ற பிரமாண்ட ஹார்ட்வேர் நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது அளவில் மிகச் சிறியது. கடுகு சைஸில் இருந்தாலும், அதன் காரத்துக்குக் காரணம், மேகக் கணினியம் சார்ந்த தொழில் நுட்பம். அதன் உள்கட்டமைப்புக்குத் தேவையான சாதனங்களையும், மென்பொருட்களையும் உருவாக் கும் இந் நிறுவனத்தின் மீது இந்த இரண்டு நிறுவனங் களின் பார்வையும் விழுந்ததில் ஆச்சர்யம் ஏதும் இல்லை. 

இதற்குச் சமமான ஓர் உதாரணம் கொடுக்க, கார் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை எடுத்துக்கொள் ளலாம். புதுமையான டயர் ஒன்றைச் சிறிய நிறுவ னம் ஒன்று வெளியிட்டால், அந்த நிறுவனத்தின் மீது கார் தயாரிப்பு நிறுவனங்களின் கவனம் திரும் பும் அல்லவா? அதுபோலவே இதுவும்!

டெக் உலகில் innovators எனப்படும் புதியன கொண்டுவருபவர்களும் உண்டு. இதில் தோல்விக்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்றாலும், வெற்றிபெறும் பட்சத்தில் அதன் அளவும் தாக்கமும் மிக அதிக மாகவே இருக்கும். உதாரணத்துக்கு, ஹாட்மெயில். இ-மெயிலை இணையதளம் ஒன்றில் பார்க்கலாம் என்ற புதுமையைச் செயலில் கொண்டுவந்து மா பெரும் வெற்றி அடைந்தது. நிறுவப்பட்டு ஐந்து வருடங்களுக்குள் 500 மில்லியன் டாலர்களுக்கு மைக்ரோசாஃப்ட்டால் வாங்கப்பட்டது.

அதே நேரத்தில், புதிதாக அறிமுகப்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் வெற்றி அடைகின்றனவா என்பதைப் பார்த்து உறுதி செய்துவிட்டு, அதைவிடவும் பிரமாதமாக தமது தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்து வெற்றி அடைவது இன்னொரு ரகம். ஆப்பிள் நிறுவனம் இதற்கு நல்ல உதாரணம். 

மியூஸிக் பிளேயரான ஐ-பாட், தொலைபேசும் சாதனமான ஐ-போன் போன்றவை புதுமையானவை அல்ல என்றாலும், நுகர்வோரிடம் பிரபல மாகி வந்த இந்தச் சாதனங்களை நவீனமாக்கி வெற்றியடைய வைத்தது ஆப்பிள் சாமர்த்தியம்.

இன்னொரு வகையும் உண்டு. இந்த நிறுவனங்களின் கல்லாப்பெட்டியில் எக்கச்சக்கமான பணம் இருக்கும். இந்த நிறுவனங்கள் புதிதாகக் கண்டறியவும் மாட்டார்கள். இருக்கும் தொழில்நுட்பங்களை நவீனப்படுத்தவும் விரும்ப மாட்டார்கள். இதற்குப் பதிலாக, வெற்றி அடையும் சாத்தியக்கூறுகள்கொண்ட நிறுவனங்களைக் காய்கறிச் சந்தையில் கத்திரிக்காய் வாங்குவதுபோல வாங்கி, தமது நிறுவனத்துடன் இணைத்து வளர்வார்கள். Growth by acquisition என்று அழைக்கப்படும் இதைத்தான் Dell மற்றும் HP போன்ற நிறுவனங்கள் தாங்கள் வளரப் பயன்படுத்துகின்றன. பெரிய மீன், சின்ன மீன்களை இரையாக விழுங்குவதுபோல!

பொதுவாக, பெரிய நிறுவனம் ஒன்றைச் சின்ன நிறுவனம் வாங்குவது, அத்தனை சிக்கலானதுஅல்ல. தனது பணத்தையோ, அல்லது பங்குகளையோ நிறு வனத்தின் மதிப்புக்கு ஏற்பக் கொடுத்து வாங்கிக் கொள்ளும். சில தருணங்களில், இந்தக் கொடுக்கல்வாங்கல்... பிரச்னையாகவும் நேரிடும்.

உதாரணத்துக்கு, சிறிய நிறுவனத்தை நிர்வகிப்பவர்களுக்கு, தாம் விலைபோவதில் விருப்பம் இல்லாது இருக்க லாம். இந்த பட்சத்தில் சிறிய நிறுவனத்தின் முதலீட் டாளர்களை அணுகி, தாங்கள் கொடுக்கும் பணம், வாங்கப்படும் நிறுவனத்தின் மதிப்பைவிடவும் அதி கம்; இதை வாங்குவதால், முதலீட்டாளர்களுக்குப் பெரும் நன்மை என்பதைச் சொல்லி, நிர்வகிப்பவர் களை அவர்களது பதவியில் இருந்து தூக்கிவிட்டு, நிறுவனத்தை நாங்கள் எடுத்துக்கொள்கிறோம் என்று தடாலடி வேலைகளைச் செய்யலாம். Hostile Take-over எனப்படும் இந்த டெக்னிக்கை Oracle போன்ற நிறுவனங்கள் பல முறை பயன்படுத்தியது உண்டு.

வாங்கும் நிறுவனமும் வாங்கப்படும் நிறுவனமும் இணைந்தால், அதனால், பயனீட்டாளர்களுக்குப் பிரச்னை வரும் அல்லது இணைந்து உருவாகும் நிறுவனம் தனிக்காட்டு ராஜாவாக Monoply ஆகி விடும் என்றால், அரசாங்கம் இதில் தலையிட்டு, இணைதலைத் தடுக்கலாம். திறந்த சந்தை பொருளா தாரத்தைப் பின்பற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளிலேயே, இந்தக் கெடுபிடி அதிகம் என்றால், மற்ற நாடுகளைப்பற்றி கேட்கத் தேவை இல்லை.

இப்படி எல்லாம் எந்தப் பிரச்னையும் இங்கு இல்லை. மாறாக, மேகக் கணினியத் தொழில்நுட்பத்தில் நுழைந்தே ஆக வேண்டும் என்ற வேட்கையின் உத்வேகத்தில், Dell, HP இரண்டும் சென்ற இரண்டு வாரங்களாகப் போட்டி போட்டு தாங்கள் அதிகம் கொடுப்பதாக 3 PAR நிறுவனத்தின் விலையைக் கூட்டிக்கொண்டே போகிறார்கள். கிட்டத்தட்ட ஒரு பில்லியனுக்கு வாங்குவதாக Dell ஆரம்பித்துவைக்க, அதை HP இருமடங்கு ஆக்க, இந்தக் கட்டுரை எழுதப்படும் வேளையில், இந்த இரண்டு நிறுவனங்களும் தொடர்ந்து 3 Par முதலீட் டாளர்களிடம் விலையைக் கூட்டியபடியே இருக் கின்றன. அடுத்த வாரக் கட்டுரை எழுதப்படும் முன்னால், சுற்றி வரும் இருவரில் யாருக்கு 3 Par மாங்கனி கிடைத்தது என்பது தெரிந்துவிடும். நீங்களும் இந்த ஏலப் போட்டியில் கலந்துகொள்வது எளிதுதான். 10,000 கோடி மட்டுமே உடனடித் தேவை!

காமெடி நீங்கலாக, இந்த நிகழ்வு சொல்வது மேகக் கணினியம் முக்கியமான தொழில்நுட்பத் துறையாக வளரப்போவதால், சாஃப்ட்வேர் துறை யில் நுழையும் நோக்கத்தில் இருக்கும் பாளையங் கோட்டை ரூபன் போன்ற இளைஞர்கள் இதில் கவனம் செலுத்தத் தொடங்கலாம்!

மேகக் கணினியத்தில் அமேசானுக்கு அடுத்தபடி ஆதிக்கம் செலுத்தும் கூகுளும், ஷாப்பிங் மூடில்தான் இருப்பதாகத் தெரிகிறது. ஆனால், கூகுள் வாங்கிக் குவிக்கும் விதத்தைப் பார்த்தால், பொருட்காட்சி மைதானத்தில் கை நிறையக் காசுடன், எதை வாங்கு வது என்பது தெரியாமல், கண்டதையும் வாங்கிக் குவிக்கும் திடீர்ப் பணக்காரக் குடும்பத் தலைவி போல இருக்கிறது.

கூகுள் கடந்த சில மாதங்களில் வாங்கிக் குவித்து இருக்கும் நிறுவனங்கள்:

ஆன்லைன் விளம்பர நிறுவனமான இன்வைட் மீடியா - 81 மில்லியன்

பயணத் தொழில்நுட்ப மென்பொருள் நிறுவனம் ITA Software - 700 மில்லியன்

சமூக விளையாட்டு வலைதளமான slide.com 182 மில்லியன்

சமூக விளையாட்டு நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் இகாமர்ஸ் தொழில்நுட்ப நிறுவனமான ஜாம்பூல் (www.jambool.com) 70 மில்லியன் இன்னும் பல.

இவை தவிர, Farmville போன்ற பிரபல சமூக விளையாட்டுகளை உருவாக்கும் Zynga நிறுவனத்தில் 200 மில்லியன்களை முதலீடு செய்திருக்கிறது.

(http://en.wikipedia.org/wiki/List_of_acquisitions_by_google). இதைப் பார்க்கையில் இதுவரை தான் ஈடுபடாத சமூக விளையாட்டு ஏரியாவில் கூகுள் இறங்க தொடை தட்டித் தயாராவது தெரிகிறது. 

நன்றி - அண்டன் பிரகாஷ் 
Blog Widget by LinkWithin

No comments:

Post a Comment