Pages

Wednesday, June 30, 2010

Airtel சாம்பயின்ஸ் லீக் T20 (CLT20) கிரிக்கெட் 2010 பங்கு பெரும் அணிகள் மற்றும் அட்டவணை

சர்வதேச உள்நாட்டு கிளப் அணிகளுக்கு இடையே நடைபெறும் சாம்பியன் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் முறை மாற்றப்பட்டுள்ளது.


10 அணிகள், 5 அணிகள் கொண்ட இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. இந்த பிரிவு அளவிலான சுழல் சுற்றுப் போட்டிகளில் வென்று ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களில் முடிவடையும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

கடந்த சாம்பியன் லீக் இருபதுக்கு 20 தொடரில் 4 பிரிவுகளில் ஒவ்வொரு பிரிவிலும் 3 அணிகள் மோதி முதல் இரண்டு இடங்களில் வரும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறி அதன் பிறகு அரையிறுதி தீர்மானிக்கப்பட்டது.

தற்போது இந்த மாற்றங்கள் செய்யப்பட்டாலும் விளையாடப்படும் மொத்த போட்டிகள் எண்ணிக்கையில் மாற்றமில்லை. அது 23 போட்டிகளாகவே இருக்கும்.

பிரிவு ஏ அணிகள்: சென்னை சூப்பர் கிங்ஸ், விக்டோரியா, வாரியர்ஸ், வயாம்பா, சென்ட்ரல் டிஸ்ட்ரிக்ட்ஸ்.

பிரிவு பி அணிகள்: மும்பை இந்தியன்ஸ் , ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு, லயன்ஸ், தெற்கு ஆஸ்ட்ரேலியா,  மேற்கிந்திய இருபது ஓவர் லீகில் வெல்லும் அணி.

தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ள இந்த சாம்பியன் லீக் போட்டியில் 10ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் ஐ.பி.எல். ரன்னர் அணியான மும்பை இந்தியன் அணி, தென் ஆப்பிரிக்காவின் லயன்ஸ் அணியை வாண்டரர்ஸ் மைதானத்தில் சந்திக்கிறது.

செப்டம்பர் 26ஆம் தேதி இறுதிப் போட்டியும் வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.

அனைத்து போட்டிகளும் இந்திய நேரப்படி  மாலை 5  மணிக்கும், இரவு 9 மணிக்கும் நடை பெறுகிறது.

சாம்பயின்ஸ் லீக் அட்டவணை


  நாள்                         போட்டி &   மைதானம்                                                  நேரம்

செப் 10         Mumbai Indians vs Highveld Lions, Johannesburg                             09.00PM 

செப் 11         Warriors vs Wayamba Elevens, Port Elizabeth                                  05:00PM 

                       Chennai Super Kings vs Central Stags, Durban                                  09.00PM 

செப் 12         Highveld Lions vs South Australian Redbacks, Centurion                   05:00PM 

                       Royal Challengers Bangalore vs WI team, Centurion                          09.00PM 

செப் 13        Warriors vs Victorian Bushrangers, Port Elizabeth                               09.00PM 

செப் 14        Mumbai Indians vs South Australian Redbacks, Durban                      09.00PM 

செப் 15       Victorian Bushrangers vs Central Stags, Centurion                               05.00PM 

                     Chennai Super Kings vs Wayamba Elevens, Centurion                         09.00PM 

செப் 16       Mumbai Indians vs WI team, Durban                                                   09.00PM 

செப் 17      South Australian Redbacks vs Royal Challengers Bangalore, Durban     09.00PM 

செப் 18      Warriors vs Central Stags, Port Elizabeth                                              05.00PM 

                    Chennai Super Kings vs Victorian Bushrangers, Port Elizabeth               09.00PM 

செப் 19      Highveld Lions vs WI team, Johannesburg                                             05.00PM 

                    Mumbai Indians vs Royal Challengers Bangalore, Durban                      09.00PM  

செப் 20      Victorian Bushrangers vs Wayamba Elevens, Centurion                         09.00PM 

செப் 21      South Australian Redbacks vs WI team, Johannesburg                          05.00PM 

                    Highveld Lions vs Royal Challengers Bangalore, Johannesburg              09.00PM  

செப் 22      Wayamba Elevens vs Central Stags, Port Elizabeth                               05.00PM 

                     Chennai Super Kings vs Warriors, Port Elizabeth                                 09.00PM 

செப் 24       Semi-final 1, 1st Group A vs 2nd Group B, Durban                             09.00PM 

செப் 25       Semi-final 2, 1st Group B vs 2nd Group A, Centurion                          09.00PM 

செப் 26       Final, Johannesburg                                                                             09.00PM 

உலகக் கோப்பை வரை வெளிநாடுகளில் சென்று விளையாட இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு தடை

கொழும்பு, ஜூன் 29: அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை வரை வெளிநாடுகளில் சென்று விளையாட இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு தாற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் அணியின் மேலாளர் பிரையன் தாம்ஸ் கூறியதாவது:

உலகக் கோப்பை போட்டியில் விளையாடும் கிரிக்கெட் அணியை தேர்வு செய்வதற்காக இலங்கை கிரிக்கெட் வாரிய தேர்வுக்குழு பயிற்சி முகாமை நடத்தவுள்ளது. இதனால் 76 வீரர்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரை வெளிநாடுகளில் நடைபெறும் எந்தவொரு சாம்பியன்ஸ் லீக் போட்டிகளிலும் விளையாட முடியாது என்றார்.

இலங்கையின் அதிரடி பேட்ஸ்மேன் ஜயசூர்யா, முன்னணி வேகப்பந்து வீச்சாளர் சமிந்தா வாஸ் ஆகியோர் இங்கிலாந்து கிரிக்கெட் கிளப்புகளில் விளையாடி வருகின்றனர். அவர்கள் இருவரும் விரைவில் இலங்கை திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 1996-ம் ஆண்டு இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் ஆகியவை இணைந்து நடத்திய உலகக் கோப்பை போட்டியில் இலங்கை கோப்பையை வென்றது.

அப்போது இலங்கை அணி கோப்பையை வெல்வதற்கு பெரிதும் காரணமாக இருந்த அரவிந்த டி சில்வா, இலங்கை கிரிக்கெட் வாரிய தேர்வுக்குழு தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உலக கோப்பை கால்பந்து "ரவுண்ட்-16' - 29.06.2010 போட்டி மற்றும் காலிறுதி அட்டவணை

பராகுவே - ஜப்பான் ( வெற்றி : பராகுவே ( 5 - 3 ) )

பிரிடோரியா: உலக கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதிக்கு முதல் முறையாக முன்னேறி வரலாறு படைத்தது பராகுவே அணி. நேற்று நடந்த "ரவுண்ட்-16' போட்டியில் "பெனால்டி ஷூட் அவுட்' முறையில் ஜப்பான் அணியை 5-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. ஜப்பான் அணி, தொடரில் இருந்து வெளியேறியது.


தென் ஆப்ரிக்காவில் 19வது உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. நேற்று நடந்த "ரவுண்ட்-16' போட்டியில் உலக ரேங்கிங் பட்டியலில் 31வது இடத்தில் <உள்ள பராகுவே, ஆசிய அணியான ஜப்பானை(45வது இடம்) எதிர்கொண்டது.


முதல் பாதியில் பராகுவே பக்கம் பந்து அதிகமாக இருந்தது. ஆனால், கோல் அடிக்க முடியாமல் திணறியது. மறுபக்கம் ஜப்பான் வீரர்களும் போராடினர். ஆட்டத்தின் 3வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் கொமானோ அடித்த பந்தை பராகுவே கோல்கீப்பர் வில்லர் அருமையாக தடுத்தார். பின் 20வது நிமிடத்தில் பராகுவே வீரர் லூகாஸ் அடித்த பந்து இலக்கு மாறி பறந்தது. ஜப்பான் அணியின் நட்சத்திர வீரரான ஹோண்டா மேற்கொண்ட முயற்சிகளும் வீணாகின. முதல் பாதி முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

கூடுதல் நேரம்:


இரண்டாவது பாதியிலும் கோல் அடிக்கப்படாததால், ஆட்டம் கூடுதல் நேரத்துக்கு சென்றது. முதல் 15 நிமிடங்களில் எந்த ஒரு வீரரும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது 15 நிமிடங்களிலும் கோல் அடிக்கப்படவில்லை.

பெனால்டி ஷூட் அவுட் :


இதையடுத்து முடிவு "பெனால்டி ஷூட் அவுட்' முறையில் தீர்மானிக்கப்பட்டது. இதில் அதிர்ஷ்டம் தான் அதிகம் வேண்டும்.

* முதல் வாய்ப்பில் பாரட்டோ(பராகுவே), எண்டோ(ஜப்பான்) கோல் அடித்தனர்.

* இரண்டாவது வாய்ப்பில் லூகாஸ்(பராகுவே), ஹசிபி(ஜப்பான்) சாதிக்க, ஸ்கோர், 2-2 என சமநிலை எட்டியது.

* மூன்றாவது வாய்ப்பில் ஜப்பான் வீரர் கொமானோ அடித்த பந்து "பாரில்' பட்டு மேலே பறக்க, தோல்வி உறுதியானது. பராகுவே சார்பில் ரிவரோஸ் சூப்பராக கோல் அடித்தார்.

* நான்காவது வாய்ப்பை வால்டஸ்(பராகுவே), ஹோண்டா(ஜப்பான்) சரியாக பயன்படுத்தினர்.

* ஐந்தாவது வாய்ப்பில் பராகுவேயின் கார்டோசா சூப்பராக கோல் அடித்து வெற்றியை உறுதி செய்தார். இறுதியில் பராகுவே அணி "பெனால்டி ஷூட் அவுட்' முறையில் 5-3 என வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றது. கொமானோ செய்த தவறு காரணமாக ஜப்பான் அணி பரிதாபமாக வெளியேறியது.

ஸ்பெயின் - போர்ச்சுகல் ( வெற்றி : ஸ்பெயின் ( 1 - 0 ) )

கேப்டவுன்: உலக கோப்பை கால்பந்து தொடரில் இன்னொரு அதிர்ச்சி. பரபரப்பான "ரவுண்ட்-16' போட்டியில் ஸ்பெயின் அணி, போர்ச்சுகலை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதன் மூலம் உலகின் "நம்பர்-2' அணியான ஸ்பெயின், காலிறுதிக்கு ஜோராக முன்னேறியது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போர்ச்சுகல் வெளியேறியது.


தென் ஆப்ரிக்காவில் 19வது உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. நேற்று நடந்த "ரவுண்ட்-16' போட்டியில் "யூரோ' சாம்பியன் ஸ்பெயின், போர்ச்சுகலை(உலகின் "நம்பர்-3') எதிர்கொண்டது. இரு அணிகளும் சமபலம் வாய்ந்தவை என்பதால், எதிர்பார்ப்பு எகிறியது.

ஸ்பெயின் ஆதிக்கம்:


துவக்கத்தில் இருந்தே ஸ்பெயின் ஆதிக்கம் செலுத்தியது. இரண்டாவது நிமிடத்தில் டோரஸ் அடித்த பந்தை, போர்ச்சுகல் கோல்கீப்பர் எட்வார்டோ துடிப்பாக தடுத்தார். இதற்கு பின் மற்றொரு ஸ்பெயின் வீரர் டேவிட் வில்லா அடுத்தடுத்து தாக்குதல் நடத்தி மிரட்டினார். 22வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணிக்கு கிடைத்த வாய்ப்பை டியாகோ கோட்டை விட்டார். 


28வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ "பிரீகிக்' வாய்ப்பை வீணாக்கினார். பின் 38வது நிமிடத்தில் ரொனால்டோ பந்தை அருமையாக "பாஸ்' செய்தார். ஆனால், அல்மீடா தலையால் முட்டி கோல் அடிக்க தவறினார். முதல் பாதி கோல் எதுவும் அடிக்கப்படாமல் முடிந்தது.

டேவிட் அபாரம்:


இரண்டாவது பாதியில் ஸ்பெயின் அணி தொடர்ந்து தாக்குதல் நடத்தியது. 63வது நிமிடத்தில் இந்த அணியின் டேவிட் வில்லா அடித்த பந்தை போர்ச்சுகல் கோல்கீப்பர் எட்வார்டோ தடுத்து, வெளியே தள்ளினார். அதனை அப்படியே மீண்டும் கோல் போஸ்டுக்குள் வில்லா சாமர்த்தியமாக அடிக்க, ஸ்பெயின் 1-0 என முன்னிலை பெற்றது.

காலிறுதி அட்டவணை

DATE                               MATCH                            TIME

ஜூலை 2          நெதர்லாந்து - பிரேசில்      07.30PM (IST) 

ஜூலை 3          உருகுவே  - கானா              12:00AM (IST)

ஜூலை 3         ஆர்ஜென்டினா - ஜெர்மனி 07.30PM (IST) 

ஜூலை 4          பராகுவே  -   ஸ்பெயின்     12:00AM (IST)

Tuesday, June 29, 2010

செம்மொழி மாநாட்டு நேரடிச் செலவுகள் ரூ.69 கோடி : கருணாநிதி

கோவையில் நடந்து முடிந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தொடர்பான நேரடிச் செலவுகள் ரூ.69 கோடி என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.


இதுதொடர்பாக கோவையில் திங்கட்கிழமை நிருபர்களிடம் அவர் கூறியது:

"கடந்த 23 ஆம் தேதி தொடக்க விழாவில் பந்தலில் கூடியிருந்தோர் சுமார் 2 லட்சம் பேர். அன்று மாலையில் நடைபெற்ற 'இனியவை நாற்பது' என்ற தலைப்பிட்ட கலை, இலக்கிய, வரலாற்று ஊர்திகளின் அணிவகுப்பில் சாலையின் இருபுறமும் நின்று கண்டு களித்தோர் சுமார் 5 லட்சம் பேர்.

24 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை 3 நாட்களிலும் மாநாட்டுப் பந்தலில் நடந்த கருத்தரங்கம், கவியரங்கம், பட்டிமன்றங்களில் தினமும் சராசரியாக சுமார் ஒன்றரை லட்சம் பேர் கலந்து கொண்டார்கள். பொதுக் கண்காட்சி அரங்குகளிலும் மணிக்கு சுமார் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் பேர் வரையிலும், தினமும் 13 மணி நேரம் சுமார் 40 ஆயிரம் பேர் கண்டுகளித்தனர். மொத்தம் இதுவரை சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் முதல் 1 லட்சத்து 70 ஆயிரம் பேர் வருகை தந்துள்ளனர்.

மாநாட்டினையொட்டி வெளியிடப்பட்டுள்ள சிறப்பு மலரில் 129 கட்டுரைகள், 34 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு, கட்டுரையாளர்களுக்கு 3,200 மலர்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 2,300 மலர் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது மாநாட்டிற்கான சிறப்பு மலர். இதுதவிர வேறு சில மலர்களும் - ஏடுகளின் சார்பில் வெளியிடப்பட்ட மலர்களும் இந்தக் கணக்கிலே வராது.

தமிழ் இணைய தள மாநாட்டில் மொத்தம் வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் 110; அந்த மாநாட்டில் கலந்துகொள்ள பதிவு செய்து அதன்படி கலந்து கொண்டவர்கள் 300 பேர். தமிழ் ஆய்வரங்க அறிஞர்களில் கலந்து கொண்டவர்கள் 200; எனவே மொத்தம் கலந்து கொண்டவர்கள் - 500 பேர்கள்.

தினமும் ஒரு முகப்பரங்கம் வீதம் 4 முகப்பரங்குகள் நடத்தப்பட்டன. இவை ஒவ்வொன்றிலும் 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இணைய தள மாநாட்டினையொட்டியும் ஒரு சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. இதில் 130 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

பொது கண்காட்சிக்கு வந்த அனைவரும் இணையக் கண்காட்சியினைக் கண்டு சென்றனர். ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இதனைக் கண்டு சென்றிருக்கிறார்கள்.

அரசு சலுகை விலையில் உணவு வழங்கும் உணவுக்கூடங்களில் மாநாடு நடந்த 5 நாட்களும் மொத்தமாக சுமார் நான்கு லட்சம் பேருக்கு முப்பது ரூபாய் சலுகை விலையில் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு விருந்தினர்கள் தங்கியிருந்த ஓட்டல்கள் 92. தங்கியிருந்த அறைகள் 1,642. தங்கியிருந்த விருந்தினர்கள் எண்ணிக்கை 2,605.

மாநாடு தொடர்பான நேரடி செலவுகள் ரூ.69 கோடி. மாநாட்டை ஒட்டி கோவை நகரிலும் சுற்று வட்டாரத்திலும் அடிப்படை கட்டமைப்பு பணிகள் செலவு அதாவது பாலங்கள், சாலைகள், புதிய சாலைகள், பழுது பார்க்கப்பட்ட சாலைகள் என்ற நிலையில் 243 கோடி ரூபாய்.

24 ஆம் தேதி முதல் 27 வரையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் ஆய்வரங்குகள் மொத்த அமர்வுகள் 239. மொத்த கட்டுரைகள் 913. மொத்த பொருண்மைகள் 55. வருகை தந்த வெளிநாட்டினர் 840 பேர். கலந்து கொண்ட நாடுகள் 50. கட்டுரைகள் தாக்கல் செய்தவர்கள் 152 பேர்.

ஆஸ்திரேலியாவிலிருந்து 4 ஆய்வாளர்கள், கனடா - 11 ஆய்வாளர், சீனா 1 ஆய்வாளர், செக் 1 ஆய்வாளர், பின்லாந்து 1 ஆய்வாளர், பிரான்ஸ் 3 ஆய்வாளர், ஜெர்மனி 5 ஆய்வாளர், கிரீஸ் 1 ஆய்வாளர், ஹாங்காங் 1 ஆய்வாளர், இத்தாலி 1 ஆய்வாளர், ஜப்பான் 2 ஆய்வாளர், மலேசியா 23 ஆய்வாளர், மொரீஷியஸ் 3 ஆய்வாளர், நெதர்லாந்து 2 ஆய்வாளர் நிïசிலாந்து 1 ஆய்வாளர், ஓமன் 1 ஆய்வாளர், ரஷ்யா 1 ஆய்வாளர், சிங்கப்பூர் 22 ஆய்வாளர். தென்னாப்பிரிக்கா 3 ஆய்வாளர், தென்கொரியா 1 ஆய்வாளர், இலங்கை 38 ஆய்வாளர், தாய்லாந்து 2 ஆய்வாளர், யுனைடெட் அரப் எமிரேட்ஸ் 1 ஆய்வாளர், இங்கிலாந்து 9 ஆய்வாளர், அமெரிக்கா 14 ஆய்வாளர் ஆக மொத்தம் 152 பேர்," என்றார் முதல்வர் கருணாநிதி.

உலக கோப்பை கால்பந்து "ரவுண்ட்-16' - 28.06.2010 போட்டி

நெதர்லாந்து - ஸ்லோவேகியா ( வெற்றி : நெதர்லாந்து ( 2  - 1 ) )

டர்பன், ஜூன் 28: உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் நெதர்லாந்து 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்லோவேகியாவை வென்று காலிறுதிக்குள் நுழைந்தது.


தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள பலம் வாய்ந்த அணியான நெதர்லாந்து, தரவரிசையில் 34-வது இடத்தில் ஸ்லோவேகியாவை எதிர்கொண்டது.


ஆட்டம் துவங்கியதிலிருந்தே அபாரமாக ஆடிய நெதர்லாந்து அணிக்கு 18-வது நிமிடத்தில் அந்த அணியின் ராபென் கோல் அடித்தார்.

இதன்பிறகு முதல் பாதி ஆட்டம் முழுவதும் இரு அணிகளுக்கும் கோல் கிடைக்கவில்லை.


இரண்டாவது பாதி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ஸ்லோவேகியா, நெதர்லாந்து அணிக்கு கடும் சவாலை அளித்தது. 84-வது நிமிடத்தில் நெதர்லாந்தின் வெஸ்லே கோல் அடித்தார். இதனால் நெதர்லாந்து 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.


கடைசி வரை தொடர்ந்து போராடிய ஸ்லோவேகியா அணிக்கு ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் கோல் கிடைத்தது.


அந்த அணியின் ராபர்ட் இந்த கோலை அடித்தார். இறுதியில் 2-1 என்ற கணக்கில் ஸ்லோவேகியாவை வீழ்த்தி நெதர்லாந்து காலிறுதி சுற்றுக்குள் நுழைந்தது.

பிரேசில் - சிலி ( வெற்றி : பிரேசில் ( 3 - 0 ) )

ஜோகனஸ்பர்க்: உலக கோப்பை கால்பந்து தொடரில், "ரவுண்டு-16' போட்டியில் பிரேசில் அணி, 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. பதிலுக்கு ஒரு கோல் கூட அடிக்கமுடியாமல் தோல்வியடைந்த சிலி அணி, தொடரில் இருந்து பரிதாபமாக வெளியேறியது.


தென் ஆப்ரிக்காவில் உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இதில் நேற்று நடந்த "ரவுண்டு-16' போட்டியில் உலகின் "நம்பர்-1' அணியான பிரேசில், 18வது இடத்திலுள்ள சிலியை சந்தித்தது.


போட்டி துவங்கியது முதல் சிலி அணியினர், கோல் அடிப்பதை விட, தற்காப்பு ஆட்டத்தில் அதிக கவனம் செலுத்தினர். பிரேசில் அணியினரின் பல கோல் வாய்ப்புகளை, சிலி அணியினர் முறியடித்து வந்தனர். போட்டியின் 9வது நிமிடத்தில் பேபியானோ அடித்த பந்தை, சிலி கோல் கீப்பர் பிராவோ அசத்தலாக தடுத்தார். ஆனால் இது நீண்ட நேரத்துக்கு நீடிக்கவில்லை.

பிரேசில் முன்னிலை:


ஆட்டத்தின் 34வது நிமிடத்தில் பிரேசில் அணிக்கு "கார்னர் கிக்' வாய்ப்பு கிடைத்தது. இதை மைகான், சிலியின் கோல் ஏரியாவுக்குள் அடிக்க, அங்கிருந்த ஜுவான் அதை தலையால் முட்டி கோலாக மாற்றினார். அடுத்த சில நிமிடங்களில் (38வது நிமிடம்) பிரேசிலின் பேபியானோ, ஒரு கோல் அடிக்க, பிரேசில் வலுவான முன்னிலை பெற்றது. இது, இத்தொடரில் இவர் அடிக்கும் மூன்றாவது கோல் ஆகும்.
பதிலடி தர, சிலி அணியினர் நடத்திய தாக்குதல்கள் வீணானது. இதையடுத்து முதல் பாதியில் பிரேசில் அணி, 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்று இருந்தது.

மீண்டும் கோல்:

இரண்டாவது பாதி துவங்கியதும் சிலி அணியினர், பிரேசில் பகுதிக்குள் அடுத்தடுத்து தாக்குதல் தொடுத்தனர். இருப்பினும் கோல் அடிக்க முடியவில்லை. இந்நிலையில் 59 வது நிமிடத்தில் பிரேசிலின் ரொபினியோ, இந்த உலக கோப்பை தொடரில், தனது முதல் கோல் அடிக்க, பிரேசில் 3-0 என அசைக்கமுடியாத முன்னிலை பெற்றது.

பிரேசில் வெற்றி:


ஆட்டநேர முடிவில் இரு அணியும், மேலும் எதுவும் கோல் அடிக்கவில்லை. இறுதியில் 3-0 என்ற கோல் கணக்கில், பிரேசில் அபார வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறியது. ஒரு கோல் கூட அடிக்க முடியாத சோகத்தில், சிலி அணி பரிதாபமாக வெளியேறியது.

வரும் ஜூலை 2ம் தேதி, போர்ட் எலிசபெத்தில் நடக்கும் காலிறுதியில் பிரேசில் அணி, நெதர்லாந்தை சந்திக்கவுள்ளது.

இன்றைய ஆட்டங்கள்

1) பராகுவே-ஜப்பான், இடம்: பிரிட்டோரியா,

நேரம்: இரவு 7.30.

2) ஸ்பெயின்-போர்ச்சுகல், இடம்: கேப்டவுன்,

நேரம்: இரவு 12.

Monday, June 28, 2010

உலக கோப்பை கால்பந்து "ரவுண்ட்-16' - 27.06.2010 போட்டி

"ரவுண்ட்-16' முதல் போட்டி 
ஜெர்மனி - இங்கிலாந்து ( வெற்றி :  ஜெர்மனி ( 4 - 1 ) )

புளோயம்பாண்டீன், ஜூன் 27: உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 3-வது காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் ஜெர்மனி 4-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.


ஜெர்மனியின் தாமஸ் முல்லர் அபாரமாக ஆடி இரு கோல்களை அடித்து வெற்றியை எளிதாக்கினார்.

இந்த உலகக் கோப்பையில் பலம் வாய்ந்த அணிகளாகக் கருதப்படும் இங்கிலாந்து-ஜெர்மனி அணிகள் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் மோதின.


ஆட்டத்தின் துவக்கத்தில் இரு அணிகளும் அபாரமாக ஆடினாலும், ஜெர்மனி வீரர்கள் பந்தை தங்கள் கட்டுப்பாட்டிலேயே எடுத்துச்சென்றனர். ஆட்டத்தின் 20-வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் மிரோஸ்லேவ் க்ளோஸ் கோல் அடித்தார். தொடர்ந்து ஆட்டத்தின் 32-வது நிமிடத்தில் லூக்காஸ் பொடோல்ஸ்கி கோல் அடித்து ஜெர்மனியை 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெறச்செய்தார்.

37-வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் மேத்யூ அப்சன் கோல் அடித்து ஆறுதல் அளித்தார். முதல் பாதி ஆட்டத்தில் 2-1 என்ற கணக்கில் ஜெர்மனி முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதி ஆட்டத்திலும் ஜெர்மனி வீரர்களின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது.


ஜெர்மனியின் தாமஸ் முல்லர் 67 மற்றும் 70-வது நிமிடங்களில் அடுத்தடுத்து இரண்டு கோல்கள் அடித்து ஜெர்மனியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றார்.

அதன்பின்னர் இங்கிலாந்து கடுமையாகப் போராடியும் ஜெர்மனி வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் கோல் அடிக்க முடியாமல் போனது.


இறுதியில் ஜெர்மனி 4-1 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. பலம் வாய்ந்த அணியாகக் கருதப்பட்ட இங்கிலாந்து, ஜெர்மனியிடம் தோற்றதால் போட்டியிலிருந்து வெளியேற நேரிட்டது.

"ரவுண்ட்-16' இரண்டாம்  போட்டி
அர்ஜென்டினா - மெக்சிகோ ( வெற்றி : அர்ஜென்டினா ( 3 - 1 ) )

ஜோகனஸ்பர்க்: மெக்சிகோ அணிக்கு எதிரான உலக கோப்பை கால்பந்து தொடரின் "ரவுண்ட்-16' சுற்று போட்டியில், அர்ஜென்டினா அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் அர்ஜென்டினா அணி காலிறுதிக்கு ஜோராக முன்னேறியது. கோல் அடிக்க முடியாமல் திணறிய மெக்சிகோ அணி தொடரில் இருந்து வெளியேறியது.


தென் ஆப்ரிக்காவில், 19வது "பிபா' உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. நேற்று ஜோகனஸ்பர்க்கில் உள்ள "சாக்கர் சிட்டி' மைதானத்தில் நடந்த "ரவுண்ட் ஆப் 16' சுற்றுக்கான போட்டியில், உலக தரவரிசை பட்டியலில் 7வது இடத்தில் உள்ள அர்ஜென்டினா, மெக்சிகோ (17வது இடம்) அணிகள் மோதின.

டெவேஸ் அபாரம்:

துவக்கத்தில் இருந்து ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இரு அணி வீரர்கள், தங்களுக்கு கிடைத்த ஒரு சில வாய்ப்புகளை வீணடித்தனர்.


இந்நிலையில் ஆட்டத்தின் 26வது நிமிடத்தில் பந்தை அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்சி அருமையாக "பாஸ்' செய்தார். அதனை பெற்ற கார்லோஸ் டெவேஸ், தலையால் முட்டி கோல் அடித்து நம்பிக்கை அளித்தார். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்ஜென்டினா அணிக்கு ஹிகுவேன், 33வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து 2-0 என முன்னிலை பெற்றுத்தந்தார். 


இதற்கு மெக்சிகோ வீரர்களால் பதிலடி கொடுக்க முடியவில்லை. இதனால் முதல் பாதி முடிவில் அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்திருந்தது.

அர்ஜென்டினா ஆதிக்கம்:

இரண்டாவது பாதியில் ஆதிக்கம் செலுத்திய அர்ஜென்டினா அணிக்கு, ஆட்டத்தின் 52வது நிமிடத்தில் கார்லோஸ் டெவேஸ், 23 மீட்டர் தொலைவில் இருந்து ஒரு சூப்பர் கோல் அடித்து அசத்தினார். பின்னர் சுதாரித்துக் கொண்ட மெக்சிகோ அணிக்கு, ஆட்டத்தின் 71வது நிமிடத்தில் ஹெர்ணான்டஸ் ஒரு கோல் அடித்து ஆறுதல் அளித்தார். இருப்பினும் மெக்சிகோ அணியினரால் அடுத்தடுத்து கோல் அடிக்க முடியவில்லை.

இதனால் ஆட்டநேர முடிவில் அர்ஜென்டினா அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, உலக கோப்பை கால்பந்து அரங்கில் 8வது முறையாக காலிறுதிக்கு முன்னேறியது. மெக்சிகோ அணி பரிதாபமாக வெளியேறியது. ஆட்ட நாயகனாக கார்லோஸ் டெவேஸ் தேர்வு செய்யப்பட்டார்.


இதன்மூலம், வரும் ஜூலை 3ம் தேதி டர்பனில் நடக்கும் காலிறுதியில் அர்ஜென்டினா அணி, ஜெர்மனி அணியை சந்திக்கிறது.

இன்றைய ஆட்டங்கள்


1 ) நெதர்லாந்து-ஸ்லோவேகியா, இடம்: டர்பன்நேரம்: இரவு 7.30.

2) பிரேசில்-சிலி, இடம்: ஜோகன்னஸ்பர்க்நேரம்: இரவு 12.

தமிழில் படித்தவர்களுக்கே அரசு வேலை

கோவை, ஜூன் 27: தமிழகத்தில் தமிழில் படித்தவர்களுக்கே அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் வகையில் சட்டம் இயற்றப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.


கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு நிறைவு விழாவில் பேசுகிறார் முதல்வர் மு.கருணாநிதி.
கோவையில் கடந்த 5 நாள்களாக நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நிறைவு விழாவில் முதல்வர் கருணாநிதி 15 அறிவிப்புகள், புதிய திட்டங்களை வெளியிட்டார். அவையாவன:

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சங்க காலத்தில் தமிழகத்தை சூழலியல் அடிப்படையில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என 5 நிலங்களாகப் பிரித்திருந்தனர். ஒவ்வொரு பகுதியும் வெவ்வேறு நிலப் பகுதிகள், தாவரங்கள், விலங்குகளைக் கொண்டவை.

இந்த அமைப்பு இயற்கை வளம், உணவு உத்தரவாதம், உடல் நலம் காக்கவும், சித்த மருத்துவத்துக்கும் பேருதவியாக இருந்து வந்துள்ளது. மேலும், ஐக்கிய நாடுகள் சபை 2010-ம் ஆண்டை உலக உயிரியல் பன்மை ஆண்டாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் நினைவாக, தமிழக அரசு சார்பில் ஐந்திணை நில வகைகளில் பாரம்பரிய மரபணுப் பூங்காக்கள் அமைக்கப்படும். வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் இதன் அமைப்பாளராக இருப்பார்.

இலங்கைப் பிரச்னைக்கு அரசியல் தீர்வு

இலங்கையில் போர் முடிவடைந்த பிறகும் தமிழர்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பப்படாமல் முகாம்களிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் மறு குடியமர்வுக்கும், அந்த நாட்டுத் தமிழர்கள் தமது மொழி, இன உரிமையை நிலைநாட்டிக் கொள்ளவும் நீண்ட காலமாகக் கோரி வரும் அரசியல் தீர்வு இதுவரை காணப்படவில்லை.

மேலும், அவர்களுக்கு அவ்வப்போது அளிக்கப்படும் உறுதிமொழிகள் முறையாக நிறைவேற்றப்படாதது உலகத் தமிழர்களுக்கு வேதனையை அளிக்கிறது. எனவே இலங்கைத் தமிழர் பிரச்னையைத் தீர்ப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ள இலங்கை அரசை இந்தியா வலியுறுத்த வேண்டும்.

தமிழ் வளர்ச்சிக்கு ரூ. 100 கோடி

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் தொடர்ச்சியாக, தமிழ் வளர்ச்சிக்கென்று தனியாக தமிழக அரசு சார்பில் ரூ.100 கோடி சிறப்பு நிதி ஒதுக்கப்படும்.

மத்தியில் தமிழ் ஆட்சி மொழியாக்கப்பட வேண்டும் என்பது தமிழக மக்களின் நீண்டகாலக் கோரிக்கை. மத்திய அரசு அனைத்து மாநில மொழிகளையும் ஆட்சி மொழியாக்க கால தாமதம் ஏற்படும் என்பதால் செம்மொழியான தமிழை முதல் கட்டமாக ஆட்சி மொழியாக்க வேண்டும்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழைப் பயன்பாட்டு மொழியாக அங்கீகரிக்கக் கோரி 2006-ல் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனவே உயர் நீதிமன்றத்தில் தமிழைப் பயன்பாட்டு மொழியாக மத்திய அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்.

சம்ஸ்கிருத மொழி வளர்ச்சிக்கும், ஆய்வுக்கும் வழங்கப்படுவதைப் போன்று தமிழின் வளர்ச்சிக்கும் ஆய்வுக்கும் தேவையான அளவு மானியத்தை மத்திய அரசு வழங்க வேண்டும்.

நாட்டில் இதுவரை அனைத்து இந்திய மொழிகளிலும் சேர்த்து தோராயமாக ஒரு லட்சம் கல்வெட்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதில் குறைந்தது 60 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழ்க் கல்வெட்டுகள். எனவே இதையும் இனி கண்டுபிடிக்கப்பட வேண்டிய கல்வெட்டுகளின் எண்ணிக்கையையும் கருத்தில் கொண்டு மத்திய அரசு உருவாக்கத் திட்டமிட்டுள்ள இந்திய தேசிய கல்வெட்டியல் நிறுவனத்தை தமிழகத்தில் அமைக்க வேண்டும்.

கடல் கொண்ட பூம்புகார் பகுதியையும், குமரிக் கண்டத்தையும் ஆழ்கடல் அகழ்வாராய்ச்சி செய்யத் தேவையான திட்டம் வகுத்து மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்.

அரசு ஊழியர்களின் ஒத்துழைப்பு...

தமிழகத்தின் ஆட்சி மொழியாக, நிர்வாக மொழியாக தமிழ் ஆக்கப்பட வேண்டும் எனும் நீண்ட நாள் கனவு இன்னும் முழுமையாக நிறைவு பெறவில்லை. அதை நிறைவேற்ற அரசு அலுவலர்களும் பொதுமக்களும் தேவையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

தமிழில் சிறந்த மென்பொருள் தயாரித்தவர்களுக்கு ஆண்டுதோறும் கணியன் பூங்குன்றனார் பெயரில் ஒரு லட்சம் பரிசுத் தொகையுடன் கூடிய விருது வழங்கப்படும்.

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக பாடத் திட்டங்களில் தமிழ்ச் செம்மொழி என்ற தலைப்பு அடுத்த கல்வியாண்டு முதல் இடம் பெற ஏற்பாடு செய்யப்படும்.

தமிழின் சிறந்த படைப்புகளை இந்திய மொழிகளிலும், ஐரோப்பிய, ஆசிய மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிடவும், பிற மொழி இலக்கியங்களைத் தமிழில் மொழிபெயர்க்கவும், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணினியியல், மருத்துவம் போன்ற அறிவியல் திறனை வளர்ப்பதற்குத் தேவையான நூல்களை பிற மொழிகளில் இருந்து தமிழாக்கம் செய்யவும் தேவையான பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார் முதல்வர் கருணாநிதி.

செம்மொழி மாநாடுகள் தொடரும்

உலகெங்கும் உள்ள தமிழ் அறிஞர்கள், இந்திய, தமிழக தமிழ் அறிஞர்களைக் கொண்டு மதுரையில் தொல்காப்பியர் உலகத் தமிழ்ச் செம்மொழிச் சங்கம் அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

இந்த அமைப்பு குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்யும். மேலும் திராவிட மொழி, கலை, பண்பாடு, வாழ்வியல் ஆகியவற்றைத் தொகுத்து நிரந்தரக் கண்காட்சி அமைக்கவும், தமிழ் மொழியின் அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கிய ஆவணக் காப்பகம் அமைத்து பராமரிக்கும் பணியையும் தொல்காப்பியர் உலகத் தமிழ்ச் செம்மொழிச் சங்கம் மேற்கொள்ளும்.

பல்வேறு தனித்தனித் தீவுகளைப் போல் இப்போது சிதறுண்டு கிடக்கும் தமிழ் ஆராய்ச்சி உலகத்தை ஒருங்கிணைக்கும் பணியையும், மொழி ஆராய்ச்சி, மொழித் தொண்டு போன்றவற்றில் தன்னலம் கருதாது செயல்படும் தமிழ் அறிஞர்களை உரிய முறையில் ஆதரித்து அவர்களைத் தமிழ் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்ளும் பணியையும் இந்தச் சங்கம் மேற்கொள்ளும்.

மேலும் உலகம் முழுவதும் உள்ள தமிழர் அறிஞர்களைப் பற்றிய விவரங்களைத் தொகுத்து கையேடு தயாரித்து வழங்குவதுடன், உலக அளவில் உள்ள தமிழ் அமைப்புகளுடன் தொடர்பு கொள்ளும் பணியையும் தொல்காப்பியர் உலகத் தமிழ்ச் செம்மொழிச் சங்கம் மேற்கொள்ளும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

கோவை மாநகரில் ரூ.100 கோடியில் பாலம்

கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நினைவாக கோவை காந்திபுரம் பகுதியில் ரூ.100 கோடி செலவில் மேம்பாலம் அமைக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

காந்திபுரம் பகுதியில் பஸ் நிலையங்கள் உள்ளதால் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே அங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று கோவை மக்கள் நீண்டகாலமாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

எனவே குறுக்குச் சாலை, நூறடிச் சாலை, சத்தியமங்கலம் சாலை ஆகியவற்றை கடக்கக் கூடிய சந்திப்புகளில் ஒரு கிலோ மீட்டருக்கு மேல் நீளமுள்ள பெரிய மேம்பாலம் ரூ.100 கோடி செலவில் அமைக்கப்படும் என்று நிறைவு விழாவில் முதல்வர் அறிவித்துள்ளார்.

Saturday, June 26, 2010

ஐசிசி தலைவராக சரத்பவார் ஜூலை 1-ல் பதவியேற்கிறார்

சிங்கப்பூர், ஜூன்.26: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக மத்திய அமைச்சர் சரத்பவார் ஜூலை 1-ம் தேதி பதவியேற்க உள்ளார். இதன்மூலம் ஜக்மோகன் டால்மியாவுக்குப் பின்னர் அந்தப் பதவியைப் பெறும் இரண்டாவது இந்தியராகிறார் சரத்பவார்.


தற்போது ஐசிசி தலைவராக உள்ள டேவிட் மோர்கனின் இரண்டாண்டு பதவிக்காலம் முடிவடைய உள்ளது.. ஐசிசி வருடாந்திர கூட்டம் நாளை தொடங்கி ஜூலை 1-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் தலைவர் பொறுப்பை டேவிட் மோர்கனிடமிருந்து சரத்பவார் பெறுவார் என ஐசிசி நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

ஐசிசி துணைத் தலைவர் பதவிக்கு ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் ஜான் ஹோவர்டை நியமிப்பது குறித்தும் ஐசிசி கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவித்தன.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு : இனியவை நாற்பது வீடியோ (MP4)

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு-
இனியவை நாற்பது [2010]
Download Tamil Show [Dual Audio][150MB][High Quality]




AUDIO I - செம்மொழி மாநாடு ஆடியோ பாடல்

AUDIO II- பதிவு செய்த ஆடியோ (Recorded Audio)

SERVER :: MEGAUPLOAD



SERVER :: RAPIDSHARE


இலங்கை டெஸ்ட் : இந்தியா அணி அறிவிப்பு

சென்னை: இலங்கையுடனான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பார்மில் இல்லை, உடல் தகுதியுடன் இல்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில் யுவராஜ் சிங்கை அணியில் சேர்த்துள்ளனர். அதேபோல ராகுல்டிராவிடும் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார்.


சமீபத்தில் முடிந்த ஆசிய கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் யுவராஜ் சேர்க்கப்படவில்லை. இதற்குக் காரணமாக அவர் உடல் தகுதியுடன் இல்லாததையும், பார்மில் இல்லாததையும் கூறியிருந்தனர்.

இருப்பினும் இரண்டையும் மேம்படுத்திக் கொள்ள அவர் எந்த பயிற்சியையும் செய்ததாக தெரியவில்லை. ஆனால் தற்போது அவரை டெஸ்ட் அணியில் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இரு அணிகளும் 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடவுள்ளன. முதல்டெஸ்ட் போட்டி ஜூலை 18 முதல் 22 வரை காலே நகரிலும், 2வது மற்றும் 3வது டெஸ்ட் போட்டிகள் முறையே ஜூலை 26-30, ஆகஸ்ட் 3-7ல் கொழும்பிலும் நடைபெறவுள்ளன.

அணி விவரம்:

டோனி, கம்பீர், ஷேவாக், ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், வி.வி.எஸ்.லட்சுமண், சுரேஷ் ரெய்னா, முரளி விஜய் , விருத்திமான் சாஹா, ஹர்பஜன் சிங், ஜாகிர் கான், அமீத் மிஸ்ரா, பிரக்யான் ஓஜா, இஷாந்த் சர்மா, ஸ்ரீசாந்த்.

Thursday, June 24, 2010

உலக கோப்பை கால்பந்து 23 .06 .2010 ஆட்டம் - ஒரு பார்வை

ஜெர்மனி - கானா ( வெற்றி : ஜெர்மனி ( 1 - 0 ) )

ஜோகனஸ்பர்க்: கானா அணிக்கு எதிரான உலக கோப்பை கால்பந்து லீக் போட்டியில் ஜெர்மனி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, 6 புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இப்போட்டியில் தோல்வியடைந்து கானா அணி, 4 புள்ளிகளுடன் கோல் அடிப்படையில் "ரவுண்ட் ஆப் 16' சுற்றுக்கு தகுதிபெற்றது.



தென் ஆப்ரிக்காவில், 19வது "பிபா' உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இதில் நேற்று ஜோகனஸ்பர்கில் நடந்த "டி' பிரிவு லீக் போட்டியில், உலக தரவரிசையில் 6வது இடத்தில் உள்ள ஜெர்மனி, கானா (32வது இடம்) அணிகள் மோதின. இதில் ஜெர்மனி அணி கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்கியது.


 துவகத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜெர்மனியின் பொடோல்ஸ்கி, முல்லர் மேற்கொண்ட முயற்சிகள், கானா அணியினரால் தடுக்கப்பட்டது. இரு அணியினரும் தங்களுக்கு கிடைத்த "கார்னர் கிக்' வாய்ப்புகளை வீணடிக்க, முதல் பாதியின் முடிவு 0-0 என பரிதாபமாக இருந்தது.


இரண்டாவது பாதியில் சுதாரித்துக் கொண்ட ஜெர்மனி அணிக்கு, 60வது நிமிடத்தில் ஓசில் ஒரு கோல் அடித்து நம்பிக்கை அளித்தார். தொடர்ந்து போராடிய கானா அணியினரால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் ஆட்டநேர முடிவில் ஜெர்மனி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.


இதன்மூலம் 6 புள்ளிகள் பெற்ற ஜெர்மனி, "டி' பிரிவில் இருந்து முதல் அணியாக முன்னேறியது. இப்போட்டியில் தோல்வியடைந்த போதிலும், 4 புள்ளிகள் பெற்ற கானா அணி கோல் அடிப்படையில், "ரவுண்ட் ஆப் 16' சுற்றுக்கு ஜெர்மனி அணியுடன் இணைந்து சென்றது.

ஜெர்மனி-இங்கிலாந்து மோதல்: இதன்மூலம் "டி' பிரிவில் முதலிடம் பிடித்த ஜெர்மனி அணி, "ரவுண்ட் ஆட் 16' சுற்றில் வரும் 27ம் தேதி புளோயம்போன்டைன் நகரில் நடக்கும் போட்டியில், "சி' பிரிவில் 2வது இடம் பிடித்த இங்கிலாந்து அணியுடன் மோதுகிறது.

இதேபோல "டி' பிரிவில் 2வது இடம் பிடித்த கானா அணி, வரும் 26ம் தேதி ரஸ்டன்பர்க் நகரில் நடக்கும் "ரவுண்ட் ஆப் 16' போட்டியில், "சி' பிரிவில் முதலிடம் பிடித்த அமெரிக்கா அணியுடன் பலப்பரீட்சை மேற்கொள்கிறது.


ஆஸ்திரேலியா - செர்பியா ( வெற்றி: ஆஸ்திரேலியா  ( 2 - 1 ) ) 

நெல்ஸ்புரூட்: நேற்று நெல்புரூட் நகரில் நடந்த மற்றொரு "டி' பிரிவு லீக் போட்டியில், உலக தரவரிசையில் 15வது இடத்தில் உள்ள செர்பியா, ஆஸ்திரேலியா (20வது இடம்) அணிகள் மோதின. 


துவக்கம் முதல் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவ்விரு அணிகள், முதல் பாதியில் கோல் அடிக்க முடியாமல் திணறின. இதனால் முதல் பாதியின் முடிவு (0-0) இரு அணி வீரர்களுக்கும் ஏமாற்றமாக இருந்தது. இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட ஆஸ்திரேலிய அணிக்கு காஹில் (69வது நிமிடம்), ஹால்மேன் (73வது நிமிடம்) தலா ஒரு கோல் அடித்து நம்பிக்கை அளித்தனர். 


தொடர்ந்து போராடிய செர்பிய அணிக்கு பான்டலிச் (84வது நிமிடம்) ஒரு கோல் அடித்து ஆறுதல் அளித்தார். ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 


இதன்மூலம் 4 புள்ளிகள் பெற்ற ஆஸ்திரேலிய அணி, கோல் அடிப்படையில் (-3 கோல்) அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. இதேபோல 3 புள்ளிகள் மட்டும் பெற்ற செர்பிய அணியும், அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்து வெளியேறியது.

இங்கிலாந்து - சுலோவேனியா ( வெற்றி : இங்கிலாந்து ( 1 - 0 ) )

போர்ட் எலிசபெத்: உலக கோப்பை கால்பந்து தொடரின் முக்கிய லீக் போட்டியில் இங்கிலாந்து அணி, சுலோவேனியாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.இதன் மூலம் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.தென் ஆப்ரிக்காவில் 19வது உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. 


நேற்று "சி' பிரிவில் நடந்த முக்கிய லீக் போட்டியில் உலக ரேங்கிங் பட்டியலில் 8வது இடத்தில் உள்ள இங்கிலாந்து அணிசுலோவேனியாவை(25வது இடம்) எதிர்கொண்டது. இப்போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து களமிறங்கியது.



துவக்கத்தில் இருந்தே இரு அணிகளும் ஆக்ரோஷமாக ஆடின. ஆட்டத்தின் 7வது நிமிடத்தில் சுலோவேனிய வீரர் பிர்சா அடித்த பந்து கோல் போஸ்டில் இருந்து விலகிச் சென்றது. 


இதற்கு பின் இங்கிலாந்து வீரர்கள் வெய்ன் ரூனே, லாம்பார்ட், ஜெரார்டு மேற்கொண்ட முயற்சிகள் வீணாகின. ஆட்டத்தின் 23வது நிமிடத்தில் இங்கிலாந்தின் ஜேம்ஸ் மில்னர், பந்தை அருமையாக "பாஸ்' செய்தார். அதனை பெற்ற ஜெர்மைன் டீபோ, மின்னல் வேகத்தில் கோல் அடித்தார். 

இதற்கு சுலோவேனியாவால் பதிலடி கொடுக்க முடியவில்லை. முதல் பாதி முடிவில் இங்கிலாந்து 1-0 என முன்னிலை பெற்றிருந்தது.இரண்டாவது பாதியிலும் இங்கிலாந்து ஆதிக்கம் செலுத்தியது. 48வது நிமிடத்தில் மீண்டும் கோல் அடிக்கும் வாய்ப்பை டீபோ நழுவவிட்டார். 


இறுதியில் இங்கிலாந்து அணி 1-0 என வெற்றி பெற்றது. இதன் மூலம் காலிறுதிக்கு முந்தைய "ரவுண்ட்-16' சுற்றுக்கு முன்னேறியது. சுலோவேனியா பரிதாபமாக வெளியேறியது.

அமெரிக்கா-அல்ஜீரியா (வெற்றி : அமெரிக்கா ( 1 - 0 ) )

பிரிடோரியா: அமெரிக்கா-அல்ஜீரியா அணிகள் மோதிய, "சி' பிரிவு லீக் போட்டி பிரிடோரியாவில் நேற்று நடந்தது. இதில் இரு அணி வீரர்களும் துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, 89 நிமிடம் வரை கோல் எதுவும் அடிக்கவில்லை.


கடைசி நிமிடத்தில் எழுச்சி கண்ட அமெரிக்க அணிக்கு, டொனோவான் ஒரு சூப்பர் கோல் அடித்து கைகொடுக்க, 1-0 என்ற கோல் கணக்கில் "திரில்' வெற்றி பெற்றது.


இதன்மூலம் மூன்று லீக் போட்டியில் ஒரு வெற்றி, 2 "டிரா' உட்பட 5 புள்ளிகள் பெற்ற அமெரிக்கா, "சி' பிரிவில் இருந்து இங்கிலாந்து அணியுடன் இணைந்து, "ரவுண்ட் ஆப் 16' சுற்றுக்கு முன்னேறியது. அல்ஜீரிய அணி, தொடரிலிருந்து வெளியேறியது.

இன்றைய ஆட்டங்கள்

* ஸ்லோவேகியா-இத்தாலி, இடம்: ஜோகன்னஸ்பர்க், நேரம்: இரவு 7.30.

* பராகுவே-நியூசிலாந்து, இடம்: போலக்வானே, நேரம்: இரவு 7.30.

* டென்மார்க்-ஜப்பான், இடம்: ரஸ்டன்பர்க், நேரம்: இரவு 12.

* கேமரூன்-நெதர்லாந்து, இடம்: கேப்டவுன், நேரம்: இரவு 12.

இந்திய விமானப் படையில் சச்சினுக்கு குரூப் கேப்டன் அந்தஸ்து

புது தில்லி, ஜூன் 23: இந்திய கிரிக்கெட் அணி வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு விமானப் படையில் குரூப் கேப்டன் என்கிற கௌரவ பதவி வழங்கப்படவுள்ளது.


இதுகுறித்து விமானப் படை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சாதனையாளர்களுக்கு இந்திய ராணுவத்தின் முப்படைகளில் கெüரவ பதவிகளை வழங்குவது வழக்கம். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், மலையாள நடிகர் மோகன்லால் உள்ளிட்டோருக்கு இத்தகைய கெüரவப் பதவிகள் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் சச்சினுக்கு விமானப்படையில் குரூப் கேப்டன் பதவி அளித்து கெüரவிக்கப்படவுள்ளது. கிரிக்கெட்டில் சச்சின் படைத்துள்ள சாதனைகளை கெüரவிக்கும் விதமாக இந்த பதவி அவருக்கு வழங்கப்படவுள்ளது.

சச்சினுக்கு விமானப் படையில் கெüரவ பதவி அளிப்பதன்மூலம், படையில் சேர்வதற்கு இளைய தலைமுறையினருக்கு உத்வேகம் கிடைக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. சச்சினுக்கு குரூப் கேப்டன் பதவியை அளிப்பதற்கான ஏற்பாடுகளை விமானப் படை செய்து முடித்துள்ளது. குடியரசுத் தலைவரும், பிரதமர் அலுவலகமும் ஒப்புதல் அளித்த பின்னர் இந்த கெüரவப் பதவி சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்படும்.

சச்சின் பெருமிதம்: குரூப் கேப்டன் கெüரவப் பதவி தனக்கு வழங்கப்படவுள்ளது பெருமிதம் அளிக்கிறது என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

லண்டனிலிருந்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு: இந்த கெüரவம் எனக்கு வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்திய விமானப் படையுடன் இணைந்து பணியாற்றவுள்ளது இந்தியனாக எனக்கு பெருமை அளிக்கிறது.

இந்திய விமானப் படையின் விளம்பரத் தூதராக பணியாற்றவுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு அளிக்கப்பட்டுள்ள மிகப் பெரிய கெüரவத்துக்காக மீண்டும் ஒரு முறை வணங்குகிறேன் என்றார் அவர்.