Pages

Wednesday, June 30, 2010

உலகக் கோப்பை வரை வெளிநாடுகளில் சென்று விளையாட இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு தடை

கொழும்பு, ஜூன் 29: அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை வரை வெளிநாடுகளில் சென்று விளையாட இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு தாற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் அணியின் மேலாளர் பிரையன் தாம்ஸ் கூறியதாவது:

உலகக் கோப்பை போட்டியில் விளையாடும் கிரிக்கெட் அணியை தேர்வு செய்வதற்காக இலங்கை கிரிக்கெட் வாரிய தேர்வுக்குழு பயிற்சி முகாமை நடத்தவுள்ளது. இதனால் 76 வீரர்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரை வெளிநாடுகளில் நடைபெறும் எந்தவொரு சாம்பியன்ஸ் லீக் போட்டிகளிலும் விளையாட முடியாது என்றார்.

இலங்கையின் அதிரடி பேட்ஸ்மேன் ஜயசூர்யா, முன்னணி வேகப்பந்து வீச்சாளர் சமிந்தா வாஸ் ஆகியோர் இங்கிலாந்து கிரிக்கெட் கிளப்புகளில் விளையாடி வருகின்றனர். அவர்கள் இருவரும் விரைவில் இலங்கை திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 1996-ம் ஆண்டு இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் ஆகியவை இணைந்து நடத்திய உலகக் கோப்பை போட்டியில் இலங்கை கோப்பையை வென்றது.

அப்போது இலங்கை அணி கோப்பையை வெல்வதற்கு பெரிதும் காரணமாக இருந்த அரவிந்த டி சில்வா, இலங்கை கிரிக்கெட் வாரிய தேர்வுக்குழு தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Blog Widget by LinkWithin

No comments:

Post a Comment