Pages

Saturday, October 30, 2010

எந்திரன் ஒரிஜினல் படம்! - 'ஆஸ்கர்' இயக்குநர் ஆலிவர் ஸ்டோன் பாராட்டு!

மும்பை: உள்ளூரில் ஆளாளுக்கு 'எந்திரன் என்னோட கதை' என்று கிளம்ப, மூன்று ஆஸ்கார் விருதுகளை வென்ற பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஆலிவர் ஸ்டோன், அந்தப் படத்தை மிகவும் பாராட்டியுள்ளார்.


"இந்தப் படம் ஒரு ஒரிஜினல் ஸ்கிரிப்ட், மிகவும் சுவாரஸ்யமானது, அனுபவித்து மகிழ்ந்தேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

உலக அளவில் பார்வையாளர்களைக் கவர்ந்த, ரூ 400 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்துள்ள எந்திரன் திரைப்படம், அடுத்து சர்வதேச திரைப்பட விழாக்களுக்குச் செல்ல ஆரம்பித்துள்ளது.

ஆண்டுதோறும் மும்பையில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழா, இந்த ஆண்டு எட்டு தினங்கள் நடந்தது. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் 250 படங்கள் திரையிடப்பட்டன.

இந்த விழாவின் இறுதிநாளில் திரையிடப்பட்ட ஒரே Mainstream Cinema ரோபோ(எந்திரன்)தான். நிறைவு நாள் நிகழ்ச்சியில் உலகின் சிறந்த படைப்பாளிகள் பலர் பங்கேற்றனர். இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிலிருந்து பல இயக்குநர்கள், நடிகர்கள் இதில் கலந்து கொண்டு ரஜினி நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவான எந்திரனின் இந்தி வடிவமான ரோபோவைப் பார்த்தனர். சப் டைட்டில்களுடன் இந்தப் படம் திரையிடப்பட்டது.

ஹாலிவுட்டின் பிரபல இயக்குநர், தயாரிப்பாளரான ஆலிவர் ஸ்டோனும் பங்கேற்றார். சிறந்த திரைக்கதை மற்றும் இயக்கதத்துக்காக மூன்று ஆஸ்கர் விருதுகளை வென்ற ஆலிவர் ஸ்டோன், ரோபோவை ரசித்துப் பார்த்தார்.

விழாவின் முடிவில் ஆலிவர் ஸ்டோனுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. அவர் பேசுகையில், "இந்தியப் படங்கள், அவற்றில் காண்பிக்கப்படும் கலாச்சாரம் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த விழாவில் நான் பார்த்த படங்களில் என்னைக் கவர்ந்தது, ரோபோ-தான். மிகவும் அருமையாக, சுவாரஸ்யமாக எடுத்திருந்தனர். முற்றிலும் புதிதாக, ஒரிஜினலாக இருந்தது. நான் மிகவும் அனுபவித்து ரசித்தேன்..", என்றார்.

Tuesday, October 26, 2010

தினமலரின் முதல் சந்தோசம்

தினமலர் தனது இணைய தளத்தில் வெளியிட்டு உள்ள செய்தி: திருட்டு கதையில் உருவானதாம் எந்திரன்......இவர்களின் பரபரப்பு புகார்.....

எனது கதையை திருடி எந்திரன் என்ற பெயரில் படம் எடுத்துள்ளனர் என்று படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மீது எழுத்தாளர் அமுதா பரபரப்பு புகார் அளித்துள்ளார். சென்னை, வேளச்சேரி எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் அமுதா தமிழ்நாடன். 

வாரமிருமுறை வெளிவரும் புலனாய்வு இதழில் துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர், நேற்று (25ம்தேதி) சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

நான் எழுதிய "ஜூகிபா எனும் சிறுகதை, "இனிய உதயம் எனும் பத்திரிகையில் 1996ம் ஆண்டு ஏப்ரலில் வெளிவந்தது. தொடர்ந்து 2007ம் ஆண்டில், சாருபிரபா பப்ளிகேஷன்ஸ் சார்பில் வெளிவந்த "திக் திக் தீபிகா என்ற புத்தகத்திலும் வெளிவந்தது.

சமீபத்தில் திரைக்கு வந்த, "எந்திரன் திரைப்படத்தை பார்த்த என் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் நேரிலும், போனிலும் மற்றும் கடிதம் மூலமும், இந்த படம் என் படைப்பான "ஜூகிபா என்ற சிறுகதையை அப்படியே எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.

சமீபத்தில் நானும் அந்த படத்தை தியேட்டரில் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். என், "ஜூகிபா கதையை மூலக்கதையாக வைத்து, சினிமா சங்கதிகளான பாட்டு, சண்டை, கிராபிக்ஸ் காட்சிகளை சேர்த்து, "எந்திரன் படத்தை எடுத்து வெளியிட்டுள்ளனர். இந்திய பத்திரிகை பதிவாளர் முன் பதியப்பட்ட, "இனிய உதயம் இதழில் வெளியான காப்புரிமை கொண்ட எனது, "ஜூகிபா கதையை படமாக்க, என்னிடமோ, இனிய உதயம் வெளியீட்டாளரிடமோ எந்த முன் அனுமதியும் பெறவில்லை. மோசடி செய்து, லாபம் சம்பாதிக்கும் உள்நோக்கத்துடன் இயக்குனர் சங்கர், 1997 - 98ல் தான் கற்பனை செய்தது போல் பொய்யாகக் கூறி, "எந்திரன் படத்தை உருவாக்கி, அவரே அதன் இயக்குனராக செயல்பட்டுள்ளார்.

இயக்குனரும், தயாரிப்பாளரும் சேர்ந்து கூட்டு சதி செய்து இந்த படத்தை தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியிட்டு, என் காப்புரிமையை சட்டத்திற்கு விரோதமாக உரிமை மீறல் செய்துள்ளனர். இந்திய காப்புரிமை சட்டத்தின்படி, கிரிமினல் குற்றம் புரிந்துள்ள இயக்குனர், தயாரிப்பாளர் மீது வழக்கு பதிவு செய்து, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

புகார் மனுவுடன் தனது கதை வெளியாகி இருந்த பத்திரிகையின் நகலையும் ஆரூர் தமிழ்நாடன் இணைத்திருந்தார். கமிஷனரிடம் அளிக்கப்பட்ட புகார் குறி்தது அமுதா தமிழ்நாடன் கூறுகையில், "இரண்டு முறை இந்த சிறுகதை வெளிவந்துள்ளது. முதலில் நண்பர்கள் கூறியதை நான் நம்பவில்லை. 

நான் பார்த்த பின்புதான் தெரிந்து கொண்டேன். இதுகுறித்து சிவில் வழக்கு தொடரப்படும். இப்பிரச்னையில் நடவடிக்கை எடுப்பதாகவும், சைபர் கிரைம் பிரிவில் விசாரிக்கும்படி பரிந்துரை செய்தும் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார், என்றார்.

அமுதா தமிழ்நாடனின் வக்கீல் எட்விக் அளித்த பேட்டியி்ல, காப்புரிமை சட்டத்தை அவர்கள் மீறியுள்ளனர் என்பதுதான் எங்கள் குற்றச்சாட்டு. இது கிரிமினல் குற்றமாகும். இதற்கு 3 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை உண்டு. இதுதவிர சிவில் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறோம். 

இந்த புகார், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசின் சைபர் குற்றப்பிரிவுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். வேறு மொழியில் வெளியாகி இருக்கும் `எந்திரன் சினிமாவை எதிர்த்தும் வழக்கு தொடர இருக்கிறோம், என்று கூறியுள்ளார். 

இன்னும் கொஞ்சம் நாளில் அவர்க்கு கொலை மிரட்டல் என்றும் செய்தி வெளியிடுவர்கள்.

Monday, October 25, 2010

சிங்கப்பூரில் வெளியாகும் மன்மதன் அம்பு இசை!

கமல்ஹாஸனின் மன்மதன் அம்பு படத்தின் இசை சிங்கப்பூரில் வைத்து வெளியிடப்படுகிறது.


இதற்கான விரிவான ஏற்பாடுகளில் உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயன்ட் மூவீஸ் இறங்கியுள்ளது.

மன்மதன் அம்பு படத்தை உலகம் முழுவதும் வெளியிடும் முயற்சியின் ஒரு அங்கமாக இந்த ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி அமையும்.

சிங்கப்பூரில் உள்ள எக்ஸ்போ அரங்கில் நவம்பர் 20 -ம் தேதி நடக்கும் இந்த விழாவில் கமல்ஹாஸன் உள்ளிட்ட படத்தின் கலைஞர் [^] களும், தமிழ் சினிமா [^] பிரமுகர்களும் பங்கேற்கிறார்கள்.

படத்தின் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், அனைத்துப் பாடல்களையும் இசை நிகழ்ச்சியாக மேடையில் பாடவைக்கிறார்.

ஆடியோ வெளியீட்டுக்கு முன் தினம், 500 ரசிகர்களை, ஒரு சொகுசு கப்பலில் அழைத்துச் செல்கிறது மன்மதன் அம்பு டீம்.

அனைத்து நிகழ்ச்சிகளையும் கலைஞர் தொலைக்காட்சி [^] ஒளிபரப்புகிறது.

Sunday, October 24, 2010

தமிழ் சினிமாவில் 'மைனா' உருவாக்கும் டிரென்ட்!

தமிழ் சினிமாவில் புதிய படங்களைப் பிரபலப்படுத்தும் யுக்தியில், புதிய டிரென்டை உருவாக்கி வருகிறது, 'மைனா'


பிரபு சாலமன் இயக்கிய திரைப்படம் 'மைனா'. இதை, உதயநிதி ஸ்டாலினுக்கு திரையிட்டு காட்டினார்கள். அப்படம் மிகவும் பிடித்து போகவே 'மைனா'வை வினியோகிப்பது என முடிவு செய்தார் உதயநிதி.

அவரது ரெட் ஜெயண்ட் நிறுவனம் இதுவரை பெரிய பட்ஜெட் மற்றும் பெரிய ஹீரோக்களின் படங்களை மட்டுமே வெளியிட்டு வந்தது. 'விண்ணைத்தாண்டி வருவாயா', ' பாஸ் என்கிற பாஸ்கரன்' 'மதராசப்பட்டினம்' போன்ற படங்களை வினியோகித்தது.

'மைனா' ஒரு சிறிய பட்ஜெட் படம். இருந்தாலும், தரத்தில் சிறப்பாக இருக்கிறது எனக் கருதி தனது ரெட் ஜெய்ண்ட் நிறுவனம் மூலம் தீபாவளி தினத்தன்று வெளியிடுகிறார்.

முதலில் நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் பாலா முதலானோருக்கு 'மைனா', சிறப்புத் திரையிடல் மூலம் காண்பிக்கப்பட்டது.

ஆடியோ வெளியீட்டு விழாவில், படத்தை முன்னணி நட்சத்திரங்கள் பலரும் புகழ்ந்து தள்ளினார்கள்.

இதன் தொடர்ச்சியாக வெற்றிமாறன், ஜெகன்நாதன், பாக்யராஜ் உள்ளிட்ட இயக்குனர்களுக்கும் திரையிட்டு காட்டியிருக்கிறார்.

ஒருபுறம் கோடம்பாக்கத்திலேயே 'மவுத் டாக்' வாயிலாக மைனாவின் சிறப்புப் பரவ, அதன் பத்திரிகை கவரேஜ் மூலமாக மறுபுறம் ரசிகர்களிடையேயும் கவனத்தை ஈர்த்திருக்கிறது படம்.

பாலிவுட் உலகில் பின்பற்றப்பட்டும் 'சிறப்புத் திரையிடல்' டிரென்ட் இங்கேயும் நல்ல பலனைத் தரும் என நம்பப்படுவதால், கோடம்பாக்கத்தில் மேலும் சிலரும் இந்த யுக்தியை கடைபிடிக்க இருக்கிறார்களாம்.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடித்த 'கோ' படத்தையும் ரெட் ஜெய்ண்ட் வாங்கியிருக்கிறது. அந்நிறுவனத் தயாரிப்பில் கமல் நடிக்கும் 'மன்மதன் அம்பு' படத்தை டிசம்பர் 10 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது இங்கே கூடுதல் தகவல்.

லிபியாவில் சிக்கித் தவித்த 80 தமிழக தொழிலாளர்கள்-அழகிரி முயற்சியால் மீண்டனர்

மதுரை: மத்திய அமைச்சர் [^] மு.க.அழகிரியின் முயற்சியால் லிபியாவில் சிக்கித் தவித்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் அங்கிருந்து மீண்டுள்ளனர்.


இதுகுறித்து மதுரையில் அரசு அதிகாரிகள் கூறுகையில், மதுரையைச் சேர்ந்த ஒரு வேலை [^] வாய்ப்பு நிறுவனத்தால் இவர்கள் அனைவரும் லிபியாவில் வேலை பார்க்க அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் அங்கு அவர்களுக்கு உரிய சம்பளம் தரவில்லை. இதனால் கடந்த பல மாதங்களாக பணமின்றி, உணவின்றி இவர்கள் தவித்து வந்தனர்.

இதையடுத்து சென்னையைச் சேர்ந்த முனியசாமி என்ற தொழிலாளர் தங்களது நிலையை விவரித்து உறவினர்களுக்கு கடிதம் எழுதி மீட்குமாறு கோரினார். அதேபோல கடலூரைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்களது மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திற்கு நிலையை விளக்கி கடிதம் எழுதினர்.

இதையடுத்து அமைச்சர் பன்னீர்செல்வம், அழகிரியிடம் இதுகுறித்து பேசினார். அழகிரியும் உடனடியாக களத்தில் இறங்கி லிபியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு அனைவரையும் மீட்குமாறு உத்தரவிட்டார்.

இதையடுத்து 80க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கையில் தூதரகம் இறங்கியது. முதல்கட்டமாக தற்போது 40 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்களையும் மீட்கும் முயற்சிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. விரைவில் அனைவரும் இந்தியா [^] திரும்பவுள்ளனர்.

பிருந்தாவனம்... விஜய் - ஜெயம் ரவி போட்டி?

அண்மையில் வெற்றி பெற்றுள்ள 'பிருந்தாவனம்' தெலுங்கு படத்தை தமிழில் யார் ரீமேக்குவது என்பதில் பெரும் போட்டி நிலவுவதாகவே தெரிகிறது.


ஜூனியர் என்.டி.ஆர் நடித்த தெலுங்கு படம் 'பிருந்தாவனம்'. ஆந்திராவில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இப்படத்தின் சிறப்புக் காட்சியை நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் ஜெயம் ராஜா ஆகியோர் தனித்தனியே பார்த்துள்ளனர்.

தனது தம்பி ஜெயம் ரவியை வைத்து ஜெயம், எம்.குமரன் S/O மகாலெட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம் என தொடர்ந்து தெலுங்கு ரீமேக்கில் வெற்றி பெற்றவர், ஜெயம் ராஜா.

தற்போது விஜய் நடிக்கும் வேலாயுதம் (தெலுங்கில் 'ஆசாத்') படத்தை இயக்கி வருகிறார், ஜெயம் ராஜா.

இதைத் தொடர்ந்து, தனது தம்பியை வைத்து பிருந்தாவனத்தை இயக்கலாம் என திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

இந்தச் சூழலில், தனது நேரடிப் படங்கள் தொடர்ந்து மண்ணைக் கவ்வ, ரிமேக்குகளில் கவனம் செலுத்தி வரும் விஜய், தனியாக பிருந்தாவனம் படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்திருக்கிறாராம்.

இதனால், அவரும் அப்படத்தை தமிழில் ரீமேக்குவது குறித்து தீவிர ஆலோசனையில் உள்ளதாக கோடம்பாக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிருந்தாவனத்தை அடையப் போகும் நந்தகுமாரன் விஜய்யா அல்லது ரவியா என்பது விரைவில் தெரிந்துவிடும்.

Wednesday, October 20, 2010

வ - குவாட்டர் கட்டிங் - மு‌ன்னோ‌ட்ட‌ம்

ஒய் நாட் புரொட‌க்சன், கிளவுட் நைன் இணைந்து வ குவாட்டர் கட்டிங் படத்தை தயா‌ரித்துள்ளன. ஓரம்போ படத்தை இயக்கிய புஷ்கர் - காயத்‌ரியின் இரண்டாவது படம் இது. இதில் வ என்பது படத்தின் பெயர். 


இதற்கு தமிழில் ஒன்றின் கீழ் நான்கு அதாவது குவாட்டர் என்ற பொருள். குவாட்டர் கட்டிங் என்பது படத்தின் கேப்ஷன்.

வெளிநாட்டு வேலைக்காக சென்னை வருகிறார் சிவா. மறுநாள் அவர் வெளிநாடு கிளம்ப வேண்டும். அதற்கு முதல் நாள் இரவு தனக்கு விருப்பப்பட்டதை எல்லாம் அனுபவிக்க அவர் ஆசைப்படுகிறார். அவரது ஆசையை தீர்த்து வைப்பவர் எஸ்.பி.‌பி.சரண். இவர் சிவாவின் அக்காவை திருமணம் செய்து கொள்ளப் போகிறவர். 

அந்த ஒரு நாள் இரவு சென்னையில் அவர்கள் எதிர்கொள்ளும் நபர்களும், பிரச்சனைகளும்தான் படத்தின் கதை.

ஹீரோயினாக லேகா வாஷிங்டன் நடித்துள்ளார். இசை ‌ஜி.வி.பிரகாஷ்குமார். உன்னை கண் தேடுதே பாடலை ‌ரீமிக்ஸ் செய்துள்ளனர். அத்துடன் பிரகாஷ்குமாரும் ஒரு பாடலை பாடியுள்ளார். இந்தி வார்த்தைகள் நிறைந்த ஒரு பாடலை சிவா எழுதியுள்ளார்.

சென்னை நக‌ரின் இரவு வாழ்க்கையை திரையில் கொண்டு வருவதற்காக இந்தப் படத்தை எடுத்திருப்பதாக புஷ்கர் - காயத்‌ரி தெ‌ரிவித்துள்ளனர். 

நீரவ் ஷாவின் ஒளிப்பதிவும், ஆண்டனியின் எடிட்டிங்கும் படத்தின் முக்கியமான அம்சங்கள்.

இரண்டு மணி நேரம் சி‌ரித்துவிட்டு வர வ குவாட்டர் கட்டிங் உத்தரவாதம் என்கின்றனர் இயக்குனர் தம்பதிகளான புஷ்கரும் காயத்‌ரியும்.

உத்தமபுத்திரன் - மு‌ன்னோ‌ட்ட‌ம்

பாலா‌ஜி ஸ்டுடியோஸ் மோகன்ராவ், டி.ரமேஷ் தயா‌ரித்திருக்கும் படம் உத்தமபுத்திரன். மித்ரன் ஜவஹர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.


யாரடி நீ மோகினி, குட்டி படங்களுக்குப் பிறகு மித்ரன் ஜவஹர் இயக்கும் மூன்றாவது ‌ரீமேக் படம் இது. இந்த மூன்றிலும் ஹீரோ தனுஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் ஜெனிலியா தனுஷின் ஜோடியாக நடித்துள்ளார். உத்தமபுத்திரனின் ஒ‌ரி‌ஜினலான ரெடி தெலுங்குப் படத்திலும் இவர்தான் ஹீரோயின்.

படத்துக்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். தனுஷுடன் பாக்யரா‌‌‌ஜ், ஆசிஷ் வித்யார்த்தி, ஆர்.சுந்தர்ராஜன், மயில்சாமி, கருணாஸ், விவேக், உமா பத்மநாபன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

நண்பனின் காதலியை கடத்துவதற்குப் பதில் தவறுதலாக தனுஷ் ஜெனிலியாவை கடத்துவதும் அதனால் உருவாகும் குழப்பங்களும் படத்தில் பிரதானமாக வருகிறது.

பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் தீபாவளிக்கு வெளியாகிறது.

ஆங்கிலத்தில், 3 டி காட்சிகளுடன் தயாராகிறது எந்திரன்!

வசூல், தரம் இரண்டிலுமே இந்தியாவின் அவதார் என்று வர்ணிக்கப்படும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் திரைப்படம் அடுத்த பரிமாணத்துக்குப் போகிறது.


ஆங்கில சப் டைட்டில்களுடன் வெளிநாடுகளில் இப்படத்தைத் திரையிட்ட சன் பிக்சர்ஸ், அடுத்து இந்தப் படத்தின் ஆங்கில டப்பிங் வடிவத்தை ஜப்பான் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் பெருமளவில் வெளியிடத் திட்டமிட்டுள்ளது.

இந்த ஆங்கிலப் பதிப்பில், குறிப்பிட்ட காட்சிகள் 3 டி தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டு இணைக்கப்பட உள்ளன.

இதுகுறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா கூறுகையில், "எந்திரன் / ரோபோ படத்துக்கு வட இந்தியாவில் கிடைத்த பிரமாதமான வரவேற்பைப் பார்த்த பிறகு, இந்தப் படத்தின் ஆங்கில வடிவத்தை சர்வதேச அளவில் வெளியிட முடிவு செய்துள்ளோம்.

இந்த ஆங்கிலப் பதிப்பில் குறிப்பிட்ட காட்சிகளை 3 டியில் உருவாக்கி இணைக்கிறோம். ஏற்கெனவே எந்திரனுக்காக 7 நிமிட 3டி காட்சிகள் உருவாக்கப்பட்டது. ஆனால் அதை பின்னர் இணைத்துக் கொள்ளலாம் என எடுத்து வைத்துவிட்டுத்தான் எந்திரனை ரிலீஸ் செய்தோம். இப்போது அந்தக் காட்சிகளை தமிழ் [^], தெலுங்கு [^] மற்றும் இந்திப் பதிப்பிலும் இணைக்கப் போகிறோம்," என்றார்.

Thursday, October 7, 2010

குப்பை மெயில் (Spam) தெரியுமா..?

குப்பை மெயில் (Spam) தெரியுமா..?

நமக்கு வரும் மின்னஞ்சல்களில் 'ஸ்பேம்' எனப்படும் நமக்கு வேண்டாத (Spam) குப்பை மெயில்கள்தான் அதிகம். அதன் விவரங்கள் இங்கே...

உலகில் ஒட்டுமொத்தமாக அனுப்பப்படும் மின்னஞ்சல்களில் 90% குப்பை மின்னஞ்சல்கள்தான். இதில் 64% குப்பை மெயில் சர்வர்கள் தைவானில் உள்ளன, 23% அமெரிக்காவில்.

ஏன் வருகின்றன, யார் அனுப்புகிறார்கள் இந்த குப்பை மெயில்கள்களை? ஒவ்வொரு 1.2 கோடி குப்பை மெயில்களுக்கு சராசரியாக ஒரு பதில் கிடைக்கும். இந்த ஒரு பதிலுக்காகத்தான் இவ்வளவு மின்னஞ்சல்களை 'ஸ்பாமர்கள்' எனும் விளம்பர நிறுவனங்கள் அனுப்புகின்றன.

 இணைப்புகள் இல்லாதபோதும் மின்னஞ்சல்களின் அளவு பெரிதாக இருத்தல் மற்றும் குப்பை மெயில்களுக்கென தாங்கள் வரையறுத்த சொற்களில் ஏதேனும் ஒன்று மின்னஞ்சல்களில் இருத்தல் ஆகிய காரணங்களைக் காட்டி குப்பை மெயில்களை இணைய தளங்கள் கண்டறிந்து வடிகட்டுகின்றன.

அனைத்து மின்னஞ்சல் சேவை அளிக்கும் இணைய தளங்களிலும் குப்பை மெயில்களை தனியாக வடிகட்டும் வசதி உள்ளது. உங்களுக்கு வரும் குப்பை மெயில்கள், தனி கோப்பு உறையில் (Spam) சேகரிக்கப்படும். தேவைப்பட்டால் அவற்றை ஒருமுறை பார்த்துவிட்டு அப்படியே அழித்துவிடலாம்.

தானியங்கியாக குப்பை மெயில்கள் வடிகட்டப்பட்டாலும், உங்களுக்கு தொல்லை தரும் சில மின்னஞ்சல்களைக் குறிப்பிட்டு, அவற்றை நிரந்தரமாக நீங்கள் குப்பைத் தொட்டிக்கு அனுப்பலாம்.

குப்பைக்குள் மாணிக்கக் கல் கிடைப்பது போல, குப்பை மெயில்களுக்குள் நல்ல மின்னஞ்சல்களும் சில நேரம் மாட்டிக் கொள்ளும். எனவே ஒவ்வொரு முறை குப்பை மெயில்களை அழிப்பதற்கு முன்பும், ஒருமுறை அவற்றை சோதித்து விடுவது நல்லது.

உங்கள் மின்னஞ்சல் கணக்கின் 'ஸ்பேம்' பகுதியில் உள்ள மின்னஞ்சல் உங்களுக்கு பயனளிக்கும் என்று தெரிந்தால், அதை மட்டும் தேர்வு செய்து எளிதாக நகர்த்திக் கொள்ளலாம்.

தெரியாத்தனமாக குப்பை மெயில்களுக்கு 'என்னை இனிமேல் தொல்லை செய்ய வேண்டாம்' என்ற ரீதியில் எல்லாம் பதில் அனுப்ப வேண்டாம். அதன் பின் உங்களுக்கு இன்னும் அதிகமாக தொல்லை கொடுக்கத் தொடங்கிவிடுவார்கள்.

Wednesday, October 6, 2010

சச்சின் டெண்டுல்கருக்கு 2010-ன் சிறந்த வீரருக்கான ஐசிசி விருது!

நடப்பு ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான ஐ.சி.சி. விருதைப் பெற்றார், இந்தியாவின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர்.


ஆண்டின் சிறந்த வீரருக்கான ஐசிசி விருதை சச்சின் டெண்டுல்கர் பெறுவது இதுவே முதல்முறை.


சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) 2010-ம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர்கள் விருதுகள் வழங்கும் விழா பெங்களூரில்  புதன்கிழமை நடைபெற்றது.


இதில், 2010 ஆம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரராக இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் தேர்ந்தெடுக்கப்பட்டர். சிறந்த டெஸ்ட் கேட்பன் விருதை தோனி பெற்றார். சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருது, வீரேந்திர சேவாக்குக்கு வழங்கப்பட்டது.

ஐ.சி.சி. விருதுகள் விவரம்..


* ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் : சச்சின் டெண்டுல்கர், இந்தியா


* சிறந்த டெஸ்ட் கேப்டன் : மகேந்திர சிங் தோனி, இந்தியா


* சிறந்த டெஸ்ட் வீரர் : வீரேந்திர சேவாக், இந்தியா


* சிறந்த ஒருநாள் போட்டி வீரர் : டி வில்லியர்ஸ், 


* சிறந்த டிவென்டி 20 வீரர் : மெக்கலம், நியூஸிலாந்து


* சிறந்த ஒருநாள் கேப்டன் : ரிக்கி பான்டிங், ஆஸ்திரேலியா


* சிறந்த வளரும் வீரர் : ஸ்டீபன் ஃபின், இங்கிலாந்து


மக்கள் நாயகன் சச்சின்!


* ஆண்டின் சிறந்த அம்பயர் :  அலீம் டர் (Aleem Dar)
 

ஐசிசி விருதுகளில், இந்த முறை புதிய அம்சமாக, 'பீப்பிள் சாய்ஸ் அவார்ட்' என்ற மக்கள் ஆதரவு பெற்ற கிரிக்கெட் நாயகனை தேர்ந்தெடுக்கும் பிரிவு இணைக்கப்பட்டது.

ரசிகர்களே தேர்வு செய்யும் இந்த விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட வீரர்களின் பெயர் விவரத்தை ஐ.சி.சி. வெளியிட்டது. அதில், அதிக வாக்குகள் பெற்ற இந்திய நட்சத்திர வீரர் டெண்டுல்கர், மக்கள் மனம் கவர்ந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கே 'பீப்பிள் சாய்ஸ் அவார்ட்' விருது வழங்கப்பட்டது.


இந்த விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் மைக் ஹஸ்சி (ஆஸ்திரேலியா), ஜெயவர்த்தனே (இலங்கை), ஆண்டரு ஸ்டார்ஸ் (இங்கிலாந்து), டி வில்லியர்ஸ் (தென் ஆப்பிரிக்கா) ஆகியோர் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணிக்கு "திரில்' வெற்றி

மொகாலி: மொகாலியில் நடந்த பரபரப்பான முதல் டெஸ்டில் இந்திய அணி, ஒரு விக்கெட் வித்தியாசத்தில் "திரில்' வெற்றி பெற்றது. முதுகு வலியை பொருட்படுத்தாது தூணாக நின்று போராடிய லட்சுமண், லட்சிய வீரராக ஜொலித்தார். ஆஸ்திரேலிய அணி பரிதாபமாக தோல்வியடைந்தது.


இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் மொகாலியில் நடந்தது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 428, இந்தியா 405 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலியா 192 ரன்கள் எடுத்தது.

வெற்றிக்கு 216 ரன்கள் தேவை என்ற நிலையில், நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 55 ரன்கள் எடுத்து இருந்தது.

சச்சின் ஏமாற்றம்:

நேற்று ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. போட்டி துவங்கிய சிறிது நேரத்தில் ஜாகிர் கான் (10), ஹாரிட்ஸ் சுழலில் சிக்கினார். காயம் காரணமாக லட்சுமண் ரன்னருடன் களமிறங்கினார். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய சச்சின் 38 ரன்களில் பெவிலியன் திரும்பினார். பின் கேப்டன் தோனி (2) ரன் அவுட்டாக, இந்தியாவுக்கு சிக்கல் ஏற்பட்டது.

லட்சுமண் அபாரம்:

வெற்றிக்கு 92 ரன்கள் தேவை என்ற நிலையில், இந்திய அணி 8 விக்கெட்டுக்கு 124 ரன்கள் எடுத்து திணறியது. இந்நிலையில் லட்சுமணுடன் ஜோடி சேர்ந்த இஷாந்த் சர்மா, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 9 வது விக்கெட்டுக்கு 81 ரன்கள் சேர்த்த நிலையில், இஷாந்த் சர்மா (31) நடுவரின் சர்ச்சைக்குரிய தீர்ப்பில் வெளியேறினார்.

"திரில்' வெற்றி:


வெற்றிக்கு தேவை 11 ரன்கள், கைவசம் இருப்பது ஒரு விக்கெட். ரசிகர்களுக்கு "டென்ஷன்' எகிறியது. இந்நிலையில் ஜான்சன் பந்தை எதிர்கொண்ட பிரக்யான் ஒஜா, "ரன் அவுட்' வாய்ப்பில் இருந்து, அதிர்ஷ்டவசமாக தப்பினார். வெற்றிக்கான கடைசி 2 ரன்கள் "லெக் பையாக' கிடைக்க, இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 216 ரன்கள் எடுத்து, ஒரு விக்கெட் வித்தியாசத்தில் "திரில்' வெற்றி பெற்றது.


அரைசதம் கடந்த லட்சுமண் (73), பிரக்யான் ஓஜா (5) ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸ்திரேலியாவின் ஹில்பெனாஸ் 4, போலிஞ்சர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். ஆட்டநாயகன் விருதை ஜாகிர் கான் தட்டிச் சென்றார். இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் தொடரில், இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இரு அணிகள் இரு அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் வரும் அக்., 9ல் பெங்களூருவில் துவங்குகிறது.

Sunday, October 3, 2010

அமெரிக்க பாக்ஸ் ஆபீஸ்-முதலிடத்தில் ரஜினியின் எந்திரன்!

அமெரிக்க பாக்ஸ் ஆபீஸில் முதலிடத்தைப் பிடித்துள்ளது சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் / ரோபோ திரைப்படம்.

படம் வெளியாவதற்கு முதல் நாள் இரவு அமெரிக்க [^]ா மற்றும் கனடாவின் பல இடங்களில் கட்டண சிறப்புக் காட்சி நடைபெற்றது. ஹாலிவுட் [^] படங்களுக்குத்தான் இதுபோன்ற காட்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.

இந்த சிறப்புக் காட்சிகளில் வசூலான தொகை, மற்ற தமிழ்ப் படங்களின் ஓவர்சீஸ் வசூலுக்கு நிகராக இருந்ததாக அமெரிக்க விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

படம் வெளியான முதல் தினம் எந்திரன் இரண்டாம் இடத்திலும், ஹாலிவுட் படமான சோஷியல் நெட்வொர்க் முதலிடத்திலும் இருந்தது. அப்போதே, எந்திரன் முதலிடத்துக்கு வந்துவிடும் என கணிப்பு வெளியிட்டிருந்தனர். 

அதன்படி அக்டோபர் இரண்டாம் தேதி நிலவரப்படி ரோபோ / எந்திரன் அமெரிக்க பாக்ஸ் ஆபீஸில் முதலிடத்துக்கு வந்துள்ளது.

பெரிய ஹாலிவுட் படங்களின் வெளியீடு இல்லாத சூழல் என்றாலும், அமெரிக்க டாப் 10-ல் இந்தியப் படங்களுக்கும் ஒரு இடம் கிடைப்பதே பெரிய விஷயம். ஆனால் ரஜினியின் படமோ முதலிடத்தையே பிடித்து சாதனைப் படைத்துள்ளது.

பிரிட்டனில்...

மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்க்கப்படும் பிரிட்டிஷ் டாப் 10 -ல் எந்திரனுக்கு எந்த இடம் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. முதல் மூன்று இடங்களுக்குள் எந்திரன் இடம்பெறும் என்று லண்டன் [^] நகர விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

ரஜினியின் சிவாஜி - தி பாஸ் பிரிட்டிஷ் டாப் 10-ல் 9வது இடம் பெற்றது நினைவிருக்கலாம். இந்தப் பட்டியலில் இடம் பெற்ற முதல் தமிழ்ப் படம் என்ற பெருமையும் சிவாஜிக்கே கிடைத்தது.

Saturday, October 2, 2010

எந்திரன் - ஒரு சிறப்பு பார்வை

இந்திய திரையுலகமே இது... என்ற ஆச்சரியத்தை உண்டாக்கிருக்கும் படம் தான் எந்திரன். ஒரே வட்டபாதையில் சுற்றிக் கொண்டிருந்த தமிழ் சினிமாவை ஒரு புதிய பாதைக்கு கொண்டு சென்றிருக்கிறது இந்த எந்திரன். ஏன் இந்த புகழாரம்... என்பதற்கு ஒரே காரணம் இந்த படைப்பை உருவாக்கி தமிழ் உழைப்பாளிகள்.


பொதுவாக ஒரு படத்தின் விமர்சனம் என்றால் 'இதுதான் கதை... இதற்கு பிறகு என்ன நடக்கிறது'' என்று சொல்லாம். ஆனால் எந்திரன் பொறுத்த வரை நீங்கள் விமர்சனத்தை கேட்பதை விட, இந்த பிரம்மாண்ட படைப்பை தியேட்டரில் சென்று பார்த்தால் தான் அனைத்து அற்புதங்களையும் உணர்வீர்கள். 

ஹாலிவுட் படங்களை பார்க்கும் போது, தமிழில் இது போன்ற படங்கள் வராத என ஏங்கிய ரசிகர்களுக்கு எந்திரன் மெகா விருந்ததாக அமைந்துள்ளது.


விஞ்ஞானி வசீகரன் தனது உழைப்பால் மனித உருவம் கொண்ட ரோபோவை உருவாக்கிறார். அதற்கு 'சிட்டி' என்று பெயர் வைக்கிறார். சில காலம் கழித்து சிட்டிக்கு உணர்வையும் கொடுக்கிறார். மனித குணங்களை உணர்ந்த ரோபோ செய்யும் குறும்புகளும், சாகஸங்களும் படம் முழுக்க பிரம்மாண்ட காட்சிகளோடு சொல்லியிருக்கிறார் ஷங்கர்.

கிரிக்கெட் போட்டியில் கங்குலி-சச்சின் பாட்னர் ஷிப் போல ஷங்கர்-ரஜினியின் பாட்னர் ஷிப் ஒரு இமலாய இலக்கை எட்டியிருக்கிறது. அதே போல எந்திரன் படைப்பிற்கு உழைத்த அனைத்து டெக்னிஷியங்களுக்கும் ஹேட்ஸ் ஆஃப்.

கலை இயக்குனர் சாபுசிரில்

ஒரு விஞ்ஞானியின் ஆய்வுக் கூடம் எப்படியிருக்கும், அவரது வீடு எப்படியிருக்கும், கருத்தரங்கங்கள் எப்படியிருக்கும் என்பதை புரிந்து வேலை செய்திருக்கிறார் சாபுசிரில், பாடல் காட்சிகளிலும், சாகச காட்சிகள் தனது செட்டுகளை அமைத்து அசதாரண காரியங்களை செஞ்சி அசத்திருக்கிறார் சாபுசிரில்!

வசனகர்த்தா சுஜாதா!

அமரர் சுஜாதாவின் வசனங்கள் எளிமை...ஆனால் மகா அர்த்தமுள்ளவை, 'காதல் வந்தால் ரோபாவிற்கும் நெட்டு களண்டு விடும்' என ரோபோ சொல்லும் வசனங்கள் அரங்குகளில் கைதட்டல் பெறுகிறது. 

ஒரு உண்மையான எழுத்தாளர் நினைத்தால் கொசுக்கும் வசன எழுத முடியும் என நிரூபித்திருக்கிறார் சுஜாதா. மனிதனைப் போல் கொசுவிற்கும் பேசும் திறமை இருந்தால் இப்படி தான் பேசியிருக்கும் என ரசிகர்களுக்கு உணர்த்திருக்கிறார் சுஜாதா. அவரது உழைப்புக்கு இந்த படைப்பு சமர்ப்பணம் என்று தான் சொல்ல வேண்டும்.

ஒளிப்பதிவாளர் ஆர்.ரத்னவேலு!

எந்திரன் போன்ற படைப்பை உருவாக்க இந்த மனிதனின் உழைப்பை பாராட்டியாக வேண்டும். ஒரு கமிராமேனின் பங்கு இவ்வளவு தான் என்று சொல்வதை விட, காட்சிக்கு காட்சி அற்புதமாக உழைத்து தெளிந்த நீரோடை போல காட்சிகளை கண்ணிற்கு விருந்து படைத்திருக்கிறார் ஆர்.ரத்னவேலு. 

இயக்குனரின் உணர்வை உள் வாங்கி அதை அப்படியே வெளிகாட்டியிருக்கிறார் ரத்னவேலு. பாடல் காட்சியில் தெளிவும் அழகும், சாகச காட்சியில் பிரம்மாண்டத்தையும் அற்புதமாக படமாக்கியிருக்கிறார் ரத்னவேலு. இந்த படத்திலிருந்து ரண்டி-க்கு (ரத்னவேலுவிற்கு) ஹாலிவுட் பட வாய்ப்புகள் வர வாய்ப்பும் உண்டு!

எடிட்டிங் ஆண்டனி!

மின்னல் வேக கதைக்கு அற்புதமாக எடிட்டிங் செய்து அசித்திருக்கிறார் ஆண்டனி. முதல் பாதியில் தொடங்கி இரண்டாவது பாதி வரை கதையை உணர்ந்து படிப்படியாக வேகத்தை கூட்டியிருக்கிறார் ஆண்டனி. 

விஞ்ஞான பூர்வமான ஒரு படத்திற்கு புதுவிதமான எடிட்டிங் ஸ்டைலை உருவாக்கி அசித்திருக்கிறார் ஆண்டனி.

கிராபிக்ஸ் காட்சி

அவதார்’, ‘டெர்மினேட்டர்’ உட்பட பல ஹாலிவுட் படங்களை உருவாக்கிய, அமெரிக்காவில் உள்ள ஸ்டான் வின்ஸ்டைன் ஸ்டூடியோ கிராபிக்ஸ் காட்சியில் அசத்தியிருக்கிறது. அந்த அளவு மிரட்டல், அசத்தல். 

ஸ்டான்வின்ஸ்டன் ஸ்டுடியோ மற்றும் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் செய்த ஹாலிவுட் நிறுவனத்தினர் கலக்கி இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் ஏ,ஆர்.ரகுமான்!

எந்திரனின் திரைக்கு பின்னால் இருக்கும் இன்னொரு ஹீரோ என்றால் அது ரகுமான் தான். இந்த படத்திற்காக தனது உழைப்பை டபுள் ஆக்கி காட்சிகளுக்கு இசையமைத்துள்ளார் ரகுமான். 

ஒரு படத்திற்கு பின்னணி இசை எவ்வளவு முக்கியம் என்பதை இந்த படத்தை பார்த்தால் புரியும். குறிப்பாக க்ளைமாக்ஸ் காட்சி நெருங்க... நெருங்க... அவர் ஏற்படுத்திய இசை ஒலிகளும் வியக்க வைக்கிறது. 

'புதிய மனிதா பூமிக்கு வா' என்ற டைட்டல் சாங் தொடங்கி. 'அரிமா, அரிமா' சாங் வரை ரகுமானின் இசை தாளம் போட வைக்கிறது. குறிப்பாக 'பூம்.. பூம்.. ரோபாடா' 'கிளிமாஞ்ரோ' பாடல் குழந்தைகள் முதல் அனைத்து தரப்பினரையும் கவர்கிறது. 

தீம் மியூசிக் இசையமைத்த ஏ.ஆர்.ரகுமானிற்கு இன்னொரு ஆஸ்கார் கொடுத்தால் கூட தவறில்லை என்று தான் சொல்ல வேண்டும். படத்தின் பாடல்களுக்காகவே தனியாக இன்னொரு முறை பார்க்கலாம். குறிப்பாக கிளிமாஞ்சாரோ கலக்கல் வெல் டன் ஏ,ஆர்.ரகுமான்.

ரசூல் பூக்குட்டி

‘எந்திரனு’க்கான விசேஷ ஒலிகளை டி.டி.எஸ்ல மிக்ஸ் பண்ணியிருக்கார் ரசூல் பூக்குட்டி. ஸ்லம் டாக் மில்லியினர் படத்தில் டி.டி.எஸ் ஒலிகளை வித்தியசமான முறையில் எழுப்பி அனைவரின் கவனத்தை ஈர்த்த ரசூல் பூக்குட்டி, எந்திரன் படத்திலும் தன் பாணியை கையாண்டு தனது முத்திரையை பதித்துள்ளார்.

நாயகி ஐஸ்வர்யா ராய்!

ஐஸ்வர்யா ராய்-ரஜினி கம்பினேஷன் அற்புதமாக பொருந்திருக்கிறது. இவரை விட பொருத்தமான ஒரு ஜோடியை இனி ரஜினிக்கு கண்டுபிடிக்கவே முடியாது. ஷங்கர் ஐஸ்வர்ய ராயை லேடி சூப்பர் ஸ்டார் என வர்ணித்தது தவறில்லை. கோபம், அழுகை, கொஞ்சல், கெஞ்சல், நடனம் என அனைத்திலும் ரஜினிக்கு இணையாக அசத்தியிருக்கிறார்.


இயக்குனர் ஷங்கர்!

'பத்து வருஷ உழைப்பு, அதற்கு பலனே இல்லையா' எந்திரன் படத்தில் ரஜினி பேசும் வசனம் இது. ஆனால் ஷங்கருக்கு பலன் கிடைத்துவிட்டது. பத்து வருஷமாக தனது கனவுப் படத்தை மெருகுப்படுத்திய ஷங்கரின் உழைப்பை எப்படி பாராட்டுவது, வார்த்தைகளே இல்லை ஹேட்ஸ் ஆஃப் ஷங்கர். 

ஒரு தமிழன் எப்படிப்பட்ட கதையும் எடுக்க முடியும் என ஷங்கர் நிரூபித்துள்ளார். சர்வதேச அளவில் ஒரு இந்தியனால் இப்படியும் எடுக்க முடியுமா என்ற தடையை உடைத்து விட்டார் ஷங்கர். தனது கற்பனைக்கு ரஜினி மூலம் உயிர் கொடுத்து அழகு பார்த்திருக்கிறார் ஷங்கர்.

ஷங்கரின் அசுர உழைப்பு படத்தின் காட்சிகள் மூலம் தெரிகிறது. இந்தியாவில் மீண்டும் இந்த படம் போல் படம் வருமா... சான்ஸே இல்ல சூப்பர் ஷங்கர் சார். பஞ்ச் டயலாக் இல்லாத, இயல்பான ரஜினியைப் பார்க்க முடிகிறது. இயக்குநர் ஷங்கருக்கு நன்றிகள். இந்தப் படம் சர்வதேச அளவில் விருதுகள் குவிக்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை. 

இறுதிக்கட்டத்தில் எந்திரன் படத்தை தனது திரைக்கதையை மூலம் விறுவிறுப்பாகவும், சீட் நுனியில் அனைவரையும் உட்கார வைத்திருக்கிறார் ஷங்கர். இந்த படைப்பாளின் உழைப்பிற்கு ஹேட்ஸ் ஆஃப் ஷங்கர். சூப்பர்... சூப்பர்...


தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன்!

இரண்டு பேர் இல்லையென்றால் ஷங்கரின் கனவு நனவாகி இருக்காது. ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினி, மற்றொருவர் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன். அவர் இல்லையென்றால் இந்தப் படம் முடிந்திருக்காது. இயக்குனர் ஷங்கர் மீது நம்பிக்கை வைத்து ஷங்கரின் கனவுப் படத்தை கொண்டு வந்த கலாநிதி மாறனுக்கு நன்றிகள்.

படத்திற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளைளயும் குறையின்றி செய்து கொடுத்து, தமிழ் திரையுலகிற்கும், இந்திய திரையுலகிற்கும் ஒரு அற்புத மற்றும் பிரம்மாண்ட படைப்பை வெளிக் கொண்டிருக்கிறார் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன். 

வாய்ப்பும் வசதியும் அமைத்து கொடுத்து ஹாலிவுட்டுக்கே சவால் விடும் படைப்பை கொடுத்த சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறனுக்கு நன்றிகள்.

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்!

சான்ஸே இல்ல என்ன சொல்வது இந்த மனிதனின் உழைப்பை. ரஜினியின் நடிப்புக்கு இந்த முறை தேசிய விருது நிச்சயம். எந்த படத்திலும் இல்லாத அளவுக்கு அழகாக இருக்கிறார் ரஜினி. இந்த மனிதரை இதற்கு முன் யாருமே இத்தனை அற்புதமாகக் காட்டியதில்லை. 

விஞ்ஞானியாக நடிக்கும் போது தனது நடிப்பின் அனுபவத்தை வெளிகாட்டியிருக்கிறார். அதே ரஜினி, சாதுவான ரோபோவிற்கும், விஸ்ரூப ரோபோவிற்கும் நடிப்பு மூலம் வேறுபடுத்தி நடிப்பில் உச்ச கட்டத்தை எடடியுள்ளார் நம்ம சூப்பர் ஸ்டார். 

விஸ்ரூப ரோபோவாக ரஜினி செய்யும் நடிப்பை வர்ணயிக்க வார்த்தை இல்லை. பஞ்ச் டயலாக் இல்லாத ரஜினி ஸ்டைல் மானரிஸங்கள், அதிரடி அறிமுகக் காட்சி, எதுவுமே இல்லாமல் இயக்குனரின் ஷங்கரின் உணர்வுகளை உள்வாங்கி அப்படியே வெளி காட்டியிருக்கிறார் ரஜினி. 

பஞ்ச் டயலாக் இல்லாமல் அதற்கெல்லாம் வட்டியும் முதலுமாகச் சேர்த்து இரண்டு பாதியில் மிரட்டியிருக்கிறார் ரஜினிகாந்த்.

ஒன்றுமறியாத ஒரு குழந்தையின் மனநிலையில் உள்ள ரோபோ எப்படியிருக்கும்... வில்லத்தனத்தின் மொத்த உருவம் எப்படி இருக்கும்... அத்தனைக்கும் ஒரே விடை ரஜினி எந்திரனில் செய்துள்ள வேடங்களே.

ஹேட்ஸ் ஆஃப் ரஜினி சார்!

மொத்தத்தில் 'எந்திரன்' இந்திய சினிமாவில் சர்வதே அளவில் தலைநிமிர செய்துள்ளது.

"மிரட்டிட்டீங்க ரஜினி": முதல்வர் பெருமிதம்

சென்னையில் சத்யம் திரையரங்கில் அதிகாலை 5 மணிக்கு எந்திரன் படத்தின் சிறப்புக் காட்சி முதல்வர் கருணாநிதிக்காக திரையிடப்பட்டது.


இந்தக் காட்சியில் முதல்வர் கருணாநிதி, சூப்பர் ஸ்டார் ரஜினி, மத்திய ரசாயணம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி, மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதிமாறன், சன் குழும நிறுவனத்தின் தலைவர் கலாநிதிமாறன், தயாளு அம்மாள், செல்வி செல்வம் , காந்தி அழகிரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பார்த்தனர்.

மூன்று மணிநேரம் படம் ஓடியது. கலைஞருக்கு அருகில் ரஜினி அமர்ந்து பார்த்தார். ரோபோ ரஜினி வரும் சில காட்சிகளில் ரஜினிடம் முதல்வர் ஏதோ கூற, ரஜினி சிரித்துக் கொண்டார்.

படம் முடிந்ததும் கைதட்டி பாராட்டிய முதல்வர், ரஜினியிடம் "நடிப்பில் மிரட்டிட்டீங்க ரஜினி. எந்திரன் அனைவரையும் கவரும் மந்திரன்தான்" என்றார்.

முதல்வருக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார் ரஜினி.

முன்னதாக வியாழக்கிழமை இரவுக் காட்சியில் கலாநிதி மாறன் மற்றும் அவரது குடும்பத்தினர், இயக்குநர் ஷங்கர் ஆகியோர் எந்திரன் படம் பார்த்தனர்.

முதல் டெஸ்ட் : இந்தியா அபார பந்துவீச்சு

மொகாலி: மொகாலி டெஸ்டில், இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜாகிர் கான் துல்லியமாக பந்துவீச, ஆஸ்திரேலிய "டாப்-ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். பொறுப்புடன் ஆடிய வாட்சன் சதமடித்து கைகொடுக்க, ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 224 ரன்கள் எடுத்திருந்தது.


இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் மொகாலியில் நேற்று துவங்கியது. "டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங், பேட்டிங் தேர்வு செய்தார்.




முதல் இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலிய அணிக்கு சைமன் காடிச் (6), ஜாகிர் வேகத்தில் வெளியேறி மோசமான துவக்கம் கொடுத்தார். பின்னர் இணைந்த ஷேன் வாட்சன், ரிக்கி பாண்டிங் ஜோடி இந்திய பந்துவீச்சை எளிதாக சமாளித்தது. 


அபாரமாக ஆடிய பாண்டிங், டெஸ்ட் அரங்கில் தனது 53வது அரைசதமடித்தார். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 141 ரன்கள் சேர்த்த போது, ரெய்னாவின் துல்லிய "த்ரோ'வில், பாண்டிங் (71) "ரன்-அவுட்' ஆனார்.

வாட்சன் சதம்:


அடுத்து வந்த மைக்கேல் கிளார்க் (14), ஹர்பஜன் சுழலில் சிக்கினார். "மிடில்-ஆர்டரில்' களமிறங்கிய மைக்கேல் ஹசி (17), மார்கஸ் நார்த் (0) இருவரும் ஜாகிர் வேகத்தில் பெவிலியன் திரும்பினர். 


விக்கெட் ஒருபுறம் சரிந்தாலும், மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வாட்சன், ஹர்பஜன் வீசிய ஆட்டத்தின் 84வது ஓவரில், டெஸ்ட் அரங்கில் தனது 2வது சதமடித்தார்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 224 ரன்கள் எடுத்திருந்தது. வாட்சன் (101), டிம் பெய்னே (1) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் ஜாகிர் கான் 3, ஹர்பஜன் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

ஜாகிர்-பாண்டிங் வாக்குவாதம்


நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங், இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜாகிர் கான் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.ஹர்பஜன் வீசிய ஆட்டத்தின் 42வது ஓவரில், 4வது பந்தை எதிர்கொண்ட வாட்சன், ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்டு பாண்டிங்கை அழைத்தார். 

அப்போது 71 ரன்கள் எடுத்திருந்த பாண்டிங், ரெய்னாவின் துல்லிய த்ரோவில் "ரன்-அவுட்' ஆனார். இந்நிலையில் பெவிலியன் திரும்பிய பாண்டிங்கை நோக்கி இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜாகிர் கான் ஏதோ கூறினார். 


பதிலுக்குல் பாண்டிங்கும் ஏதோ கூற, வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அம்பயர் பில்லி பவுடன் தலையிட்டு, சமாதான் செய்து வைத்தார். முதல் நாள் ஆட்டம் முடிந்த பின், போட்டி நடுவர் கிறிஸ் பிராட், ஜாகிர் கானை எச்சரித்தார்.

நேற்றுமுன்தினம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாண்டிங், "இத்தொடரில் இந்திய வீரர்களிடம் எவ்வித வாக்குவாதத்தில் ஈடுபட கூடாது என சகவீரர்களிடம் தெரிவித்துள்ளதாக' கூறினார். இந்நிலையில் இவரே வாக்குவாதத்தில் ஈடுபட்டது வருத்தமான விஷயம்.

எந்திரன் Premier Show படங்கள்









Friday, October 1, 2010

காமன்வெல்த் போட்டியில் எந்திரன்

காமன்வெல்த் போட்டிக்காக வருகை தந்திருக்கும் வீரர், வீராங்கனைகள், அதிகாரிகளை குஷிப்படுத்துவதற்காக ஒரு சினிமா தியேட்டரை ரெடி செய்துள்ளனர்.


கேம்ஸ் வில்லேஜில். இதில் ரோபோ (எந்திரனின் இந்திப் பதிப்பு) உள்ளிட்ட படங்களைப் போட்டுக் காட்டப் போகிறார்களாம்.

இதுகுறித்து டெல்லி [^] முதல்வர் [^] ஷீலா தீட்சித் கூறுகையில், காமன்வெல்த் போட்டிக்கு வரும் வீரர், வீராங்கனைகள், அதிகாரிகள் ஆகியோர் பார்த்து ரசிப்பதற்காக இந் தியேட்டர் திறக்கப்படுகிறது. அனைவரும் இங்கு திரையிடப்படும் படங்களைப் பார்த்து ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்.

போட்டிக்கு டெல்லி தயாராகி விட்டது. சில வீரர் வீராங்கனைகளை சந்தித்தேன். அவர்கள் கேம்ஸ் வில்லேஜ் குறித்து திருப்தியும், மகிழ்ச்சியும் தெரிவித்தனர் என்றார்.

ரோபோ தவிர அஞ்சானா அஞ்சானி உள்ளிட்ட பல லேட்டஸ்ட் படங்களையும் போட்டுக் காட்ட திட்டமிட்டுள்ளனராம்.

எந்திரன் விமர்சனம் - இந்திய சினிமாவை தலைநிமிர வைத்துள்ள படம்

டெர்மினேட்டர், அவதார் போன்ற ஹாலிவுட் பிரமாண்டங்களைப் பார்க்கும் போதெல்லாம், "தமிழில் இப்படியெல்லாம் படமெடுப்பது சாத்தியம்தானா...அதற்கேற்ற நடிகர்கள், இயக்குநர்கள் இருக்கிறார்களா...?" என்ற கேள்வி மனதுக்குள் எழுந்து பாடாய்படுத்தும்.


இதோ... வாய்ப்பும் வசதியும் அமைந்தால் ஹாலிவுட்டுக்கே சவால் விடும் படைப்புகளை நம்மாலும் தர முடியும் என்று சொல்லியிருக்கிறார் இயக்குனர் [^] ஷங்கர்.


ரசிகர்கள், சினிமா [^] விரும்பிகளின் தேடலுக்கும் பசிக்கும் சரியான மெகா விருந்து எந்திரன்.


படத்தில் ரஜினியின் பங்களிப்பைப் பாராட்டுவதா, ஷங்கரின் அசுர உழைப்பைப் புகழ்வதா... ஐஸ்வர்யா ராயின் இதயம் வருடும் அழகை வர்ணிப்பதா..இப்படி, விமர்சனம் எழுதுபவர்களுக்கு சவால்விடும் சமாச்சாரங்கள் ஏராளம்.



இந்தப் படத்தின் மையக் கருவை ரொம்ப சிம்பிளாக ஒரு வரியில் சொல்வதென்னால், வரம் கொடுத்தவன் தலையில் கைவைத்த கதை. விஞ்ஞானத்தை எந்த அளவு வரை பயன்படுத்தலாம்... எந்த அளவுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்பதை இத்தனை அழுத்தமாகவும் அழகாகவும் சொல்லியிருக்கிறார்கள்.



டாக்டர் வசீகரன் 10 வருடம் முயன்று ஒரு மனித ரோபோவை உருவாக்கி அதற்கு உயிர் கொடுக்கிறார். சில காலம் கழித்து உணர்வையும் கொடுக்கிறார். மனிதனாகவே மாறிய ரோபோ அடுத்து மனித இனத்தின் ஒட்டுமொத்த தீய குணங்களையும் சுவீகாரம் எடுத்துக் கொள்கிறது. 
 
 
அடுத்து என்ன நடக்கிறது என்பது தெரிந்த முடிவுதான் என்றாலும், யாரும் அத்தனை சுலபத்தில் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத க்ளைமாக்ஸ்.

 ரஜினியா இது... வழக்கமான பஞ்ச் டயலாக், ஸ்டைல் மானரிஸங்கள், அதிரடி அறிமுகக் காட்சி, நூறுபேரை பறந்து பறந்து புரட்டியெடுக்கும் மிகைப்படுத்தல் எதுவுமே இல்லை. ஆனால் அதற்கெல்லாம் வட்டியும் முதலுமாகச் சேர்த்து மிரட்டுகிறார்.


ஒன்றுமறியாத ஒரு குழந்தையின் மனநிலையில் உள்ள ரோபோ எப்படியிருக்கும்... வில்லத்தனத்தின் மொத்த உருவம் எப்படி இருக்கும்... அத்தனைக்கும் ஒரே விடை ரஜினி எந்திரனில் செய்துள்ள வேடங்களே.

கிளிமாஞ்சாரோ, காதல் அணுக்கள் பாடல்களில் ரஜினியை என்றும் மார்க்கண்டேயனாக மனதில் நிறுத்துகிறது.


ஐஸ்வர்யா ராய்... அழகின் மொத்த உருவமாய் வந்து மனதை அள்ளிக் கொண்டு விட்டார். இவரை விட பொருத்தமான ஒரு ஜோடியை இனி ரஜினிக்கு கண்டுபிடிக்கவே முடியாது. கோபம், அழுகை, கொஞ்சல், கெஞ்சல், நடனம் என அனைத்திலும் ரஜினிக்கு இணையாக அசத்தியிருக்கிறார்.


விஞ்ஞானி ரஜினிக்கும் அவருக்கும் நடக்கும் காதல் ஊடலும் அதை ஐஸ் தீர்க்கிற விதமும் காதலர்களை சூடேற்றும் சமாச்சாரங்கள்.

வில்லனாக வரும் டேனி டெங்ஸோஹ்பாவுக்கு பெரிதாக வேலையில்லை. காமெடிக்காக சேர்க்கப்பட்ட சந்தானத்தையும் கருணாஸையும் சிட்டி பாத்திரமே ஓரங்கட்டி விடுகிறது.

சிட்டி ரஜினி செய்யும் குறும்புகளும், சாகஸங்களும் குழந்தைகளை மட்டுமல்ல, பெரியவர்களையும் குதூகலப்படுத்தக்கூடியது.


இந்தப் படத்தில் மிக முக்கிய அம்சம் ஸ்டான்வின்ஸ்டன் ஸ்டுடியோசின் ரோபோட்ரானிக்ஸ் உத்திகள் மற்றும் லெகஸி எஃபக்ட்ஸின் கிராபிக்ஸ் பிரமாண்டம்.

ரத்தினவேலுவின் ஒளிப்பதிவும் சாபு சிரிலின் கலையும் ஆண்டனியின் எடிட்டிங்கும், பீட்டர்ஹெய்னின் ஸ்டன்ட்டும் அருமை அருமை. அமரர் சுஜாதாவின் வசனங்கள் எளிமை...ஆனால் மகா அர்த்தமுள்ளவை!

ஏ.ஆர். ரஹ்மானின் இசை இன்னொரு ஹீரோ என்றுதான் சொல்ல வேண்டும். பொதுவாக பின்னணி் இசையில் பெரிதாக அலட்டிக் கொள்ளாத ரஹ்மான், இந்தப் படத்தில் காட்டியிருப்பது விஸ்வரூம்.

இடைவேளைக்குப் பிந்தைய காட்சிகள் சில மெதுவாகச் செல்வதாக சிலர் குறை சொல்லக் கூடும்..

எந்திரன்... புதிய தலைமுறைக்கான படம் மட்டுமல்ல, இந்திய சினிமாவை தலைநிமிர வைத்துள்ள படம்.

இந்த படத்தை தயாரித்த SUN PICTURES கலாநிதி மாறனுக்கு மாபெரும்  வெற்றி படம்