Pages

Wednesday, October 6, 2010

சச்சின் டெண்டுல்கருக்கு 2010-ன் சிறந்த வீரருக்கான ஐசிசி விருது!

நடப்பு ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான ஐ.சி.சி. விருதைப் பெற்றார், இந்தியாவின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர்.


ஆண்டின் சிறந்த வீரருக்கான ஐசிசி விருதை சச்சின் டெண்டுல்கர் பெறுவது இதுவே முதல்முறை.


சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) 2010-ம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர்கள் விருதுகள் வழங்கும் விழா பெங்களூரில்  புதன்கிழமை நடைபெற்றது.


இதில், 2010 ஆம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரராக இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் தேர்ந்தெடுக்கப்பட்டர். சிறந்த டெஸ்ட் கேட்பன் விருதை தோனி பெற்றார். சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருது, வீரேந்திர சேவாக்குக்கு வழங்கப்பட்டது.

ஐ.சி.சி. விருதுகள் விவரம்..


* ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் : சச்சின் டெண்டுல்கர், இந்தியா


* சிறந்த டெஸ்ட் கேப்டன் : மகேந்திர சிங் தோனி, இந்தியா


* சிறந்த டெஸ்ட் வீரர் : வீரேந்திர சேவாக், இந்தியா


* சிறந்த ஒருநாள் போட்டி வீரர் : டி வில்லியர்ஸ், 


* சிறந்த டிவென்டி 20 வீரர் : மெக்கலம், நியூஸிலாந்து


* சிறந்த ஒருநாள் கேப்டன் : ரிக்கி பான்டிங், ஆஸ்திரேலியா


* சிறந்த வளரும் வீரர் : ஸ்டீபன் ஃபின், இங்கிலாந்து


மக்கள் நாயகன் சச்சின்!


* ஆண்டின் சிறந்த அம்பயர் :  அலீம் டர் (Aleem Dar)
 

ஐசிசி விருதுகளில், இந்த முறை புதிய அம்சமாக, 'பீப்பிள் சாய்ஸ் அவார்ட்' என்ற மக்கள் ஆதரவு பெற்ற கிரிக்கெட் நாயகனை தேர்ந்தெடுக்கும் பிரிவு இணைக்கப்பட்டது.

ரசிகர்களே தேர்வு செய்யும் இந்த விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட வீரர்களின் பெயர் விவரத்தை ஐ.சி.சி. வெளியிட்டது. அதில், அதிக வாக்குகள் பெற்ற இந்திய நட்சத்திர வீரர் டெண்டுல்கர், மக்கள் மனம் கவர்ந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கே 'பீப்பிள் சாய்ஸ் அவார்ட்' விருது வழங்கப்பட்டது.


இந்த விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் மைக் ஹஸ்சி (ஆஸ்திரேலியா), ஜெயவர்த்தனே (இலங்கை), ஆண்டரு ஸ்டார்ஸ் (இங்கிலாந்து), டி வில்லியர்ஸ் (தென் ஆப்பிரிக்கா) ஆகியோர் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
Blog Widget by LinkWithin

No comments:

Post a Comment