Pages

Wednesday, October 6, 2010

இந்திய அணிக்கு "திரில்' வெற்றி

மொகாலி: மொகாலியில் நடந்த பரபரப்பான முதல் டெஸ்டில் இந்திய அணி, ஒரு விக்கெட் வித்தியாசத்தில் "திரில்' வெற்றி பெற்றது. முதுகு வலியை பொருட்படுத்தாது தூணாக நின்று போராடிய லட்சுமண், லட்சிய வீரராக ஜொலித்தார். ஆஸ்திரேலிய அணி பரிதாபமாக தோல்வியடைந்தது.


இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் மொகாலியில் நடந்தது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 428, இந்தியா 405 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலியா 192 ரன்கள் எடுத்தது.

வெற்றிக்கு 216 ரன்கள் தேவை என்ற நிலையில், நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 55 ரன்கள் எடுத்து இருந்தது.

சச்சின் ஏமாற்றம்:

நேற்று ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. போட்டி துவங்கிய சிறிது நேரத்தில் ஜாகிர் கான் (10), ஹாரிட்ஸ் சுழலில் சிக்கினார். காயம் காரணமாக லட்சுமண் ரன்னருடன் களமிறங்கினார். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய சச்சின் 38 ரன்களில் பெவிலியன் திரும்பினார். பின் கேப்டன் தோனி (2) ரன் அவுட்டாக, இந்தியாவுக்கு சிக்கல் ஏற்பட்டது.

லட்சுமண் அபாரம்:

வெற்றிக்கு 92 ரன்கள் தேவை என்ற நிலையில், இந்திய அணி 8 விக்கெட்டுக்கு 124 ரன்கள் எடுத்து திணறியது. இந்நிலையில் லட்சுமணுடன் ஜோடி சேர்ந்த இஷாந்த் சர்மா, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 9 வது விக்கெட்டுக்கு 81 ரன்கள் சேர்த்த நிலையில், இஷாந்த் சர்மா (31) நடுவரின் சர்ச்சைக்குரிய தீர்ப்பில் வெளியேறினார்.

"திரில்' வெற்றி:


வெற்றிக்கு தேவை 11 ரன்கள், கைவசம் இருப்பது ஒரு விக்கெட். ரசிகர்களுக்கு "டென்ஷன்' எகிறியது. இந்நிலையில் ஜான்சன் பந்தை எதிர்கொண்ட பிரக்யான் ஒஜா, "ரன் அவுட்' வாய்ப்பில் இருந்து, அதிர்ஷ்டவசமாக தப்பினார். வெற்றிக்கான கடைசி 2 ரன்கள் "லெக் பையாக' கிடைக்க, இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 216 ரன்கள் எடுத்து, ஒரு விக்கெட் வித்தியாசத்தில் "திரில்' வெற்றி பெற்றது.


அரைசதம் கடந்த லட்சுமண் (73), பிரக்யான் ஓஜா (5) ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸ்திரேலியாவின் ஹில்பெனாஸ் 4, போலிஞ்சர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். ஆட்டநாயகன் விருதை ஜாகிர் கான் தட்டிச் சென்றார். இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் தொடரில், இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இரு அணிகள் இரு அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் வரும் அக்., 9ல் பெங்களூருவில் துவங்குகிறது.
Blog Widget by LinkWithin

No comments:

Post a Comment