Pages

Thursday, October 7, 2010

குப்பை மெயில் (Spam) தெரியுமா..?

குப்பை மெயில் (Spam) தெரியுமா..?

நமக்கு வரும் மின்னஞ்சல்களில் 'ஸ்பேம்' எனப்படும் நமக்கு வேண்டாத (Spam) குப்பை மெயில்கள்தான் அதிகம். அதன் விவரங்கள் இங்கே...

உலகில் ஒட்டுமொத்தமாக அனுப்பப்படும் மின்னஞ்சல்களில் 90% குப்பை மின்னஞ்சல்கள்தான். இதில் 64% குப்பை மெயில் சர்வர்கள் தைவானில் உள்ளன, 23% அமெரிக்காவில்.

ஏன் வருகின்றன, யார் அனுப்புகிறார்கள் இந்த குப்பை மெயில்கள்களை? ஒவ்வொரு 1.2 கோடி குப்பை மெயில்களுக்கு சராசரியாக ஒரு பதில் கிடைக்கும். இந்த ஒரு பதிலுக்காகத்தான் இவ்வளவு மின்னஞ்சல்களை 'ஸ்பாமர்கள்' எனும் விளம்பர நிறுவனங்கள் அனுப்புகின்றன.

 இணைப்புகள் இல்லாதபோதும் மின்னஞ்சல்களின் அளவு பெரிதாக இருத்தல் மற்றும் குப்பை மெயில்களுக்கென தாங்கள் வரையறுத்த சொற்களில் ஏதேனும் ஒன்று மின்னஞ்சல்களில் இருத்தல் ஆகிய காரணங்களைக் காட்டி குப்பை மெயில்களை இணைய தளங்கள் கண்டறிந்து வடிகட்டுகின்றன.

அனைத்து மின்னஞ்சல் சேவை அளிக்கும் இணைய தளங்களிலும் குப்பை மெயில்களை தனியாக வடிகட்டும் வசதி உள்ளது. உங்களுக்கு வரும் குப்பை மெயில்கள், தனி கோப்பு உறையில் (Spam) சேகரிக்கப்படும். தேவைப்பட்டால் அவற்றை ஒருமுறை பார்த்துவிட்டு அப்படியே அழித்துவிடலாம்.

தானியங்கியாக குப்பை மெயில்கள் வடிகட்டப்பட்டாலும், உங்களுக்கு தொல்லை தரும் சில மின்னஞ்சல்களைக் குறிப்பிட்டு, அவற்றை நிரந்தரமாக நீங்கள் குப்பைத் தொட்டிக்கு அனுப்பலாம்.

குப்பைக்குள் மாணிக்கக் கல் கிடைப்பது போல, குப்பை மெயில்களுக்குள் நல்ல மின்னஞ்சல்களும் சில நேரம் மாட்டிக் கொள்ளும். எனவே ஒவ்வொரு முறை குப்பை மெயில்களை அழிப்பதற்கு முன்பும், ஒருமுறை அவற்றை சோதித்து விடுவது நல்லது.

உங்கள் மின்னஞ்சல் கணக்கின் 'ஸ்பேம்' பகுதியில் உள்ள மின்னஞ்சல் உங்களுக்கு பயனளிக்கும் என்று தெரிந்தால், அதை மட்டும் தேர்வு செய்து எளிதாக நகர்த்திக் கொள்ளலாம்.

தெரியாத்தனமாக குப்பை மெயில்களுக்கு 'என்னை இனிமேல் தொல்லை செய்ய வேண்டாம்' என்ற ரீதியில் எல்லாம் பதில் அனுப்ப வேண்டாம். அதன் பின் உங்களுக்கு இன்னும் அதிகமாக தொல்லை கொடுக்கத் தொடங்கிவிடுவார்கள்.
Blog Widget by LinkWithin

No comments:

Post a Comment