Pages

Wednesday, October 20, 2010

ஆங்கிலத்தில், 3 டி காட்சிகளுடன் தயாராகிறது எந்திரன்!

வசூல், தரம் இரண்டிலுமே இந்தியாவின் அவதார் என்று வர்ணிக்கப்படும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் திரைப்படம் அடுத்த பரிமாணத்துக்குப் போகிறது.


ஆங்கில சப் டைட்டில்களுடன் வெளிநாடுகளில் இப்படத்தைத் திரையிட்ட சன் பிக்சர்ஸ், அடுத்து இந்தப் படத்தின் ஆங்கில டப்பிங் வடிவத்தை ஜப்பான் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் பெருமளவில் வெளியிடத் திட்டமிட்டுள்ளது.

இந்த ஆங்கிலப் பதிப்பில், குறிப்பிட்ட காட்சிகள் 3 டி தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டு இணைக்கப்பட உள்ளன.

இதுகுறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா கூறுகையில், "எந்திரன் / ரோபோ படத்துக்கு வட இந்தியாவில் கிடைத்த பிரமாதமான வரவேற்பைப் பார்த்த பிறகு, இந்தப் படத்தின் ஆங்கில வடிவத்தை சர்வதேச அளவில் வெளியிட முடிவு செய்துள்ளோம்.

இந்த ஆங்கிலப் பதிப்பில் குறிப்பிட்ட காட்சிகளை 3 டியில் உருவாக்கி இணைக்கிறோம். ஏற்கெனவே எந்திரனுக்காக 7 நிமிட 3டி காட்சிகள் உருவாக்கப்பட்டது. ஆனால் அதை பின்னர் இணைத்துக் கொள்ளலாம் என எடுத்து வைத்துவிட்டுத்தான் எந்திரனை ரிலீஸ் செய்தோம். இப்போது அந்தக் காட்சிகளை தமிழ் [^], தெலுங்கு [^] மற்றும் இந்திப் பதிப்பிலும் இணைக்கப் போகிறோம்," என்றார்.
Blog Widget by LinkWithin

No comments:

Post a Comment