Pages

Saturday, October 2, 2010

முதல் டெஸ்ட் : இந்தியா அபார பந்துவீச்சு

மொகாலி: மொகாலி டெஸ்டில், இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜாகிர் கான் துல்லியமாக பந்துவீச, ஆஸ்திரேலிய "டாப்-ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். பொறுப்புடன் ஆடிய வாட்சன் சதமடித்து கைகொடுக்க, ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 224 ரன்கள் எடுத்திருந்தது.


இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் மொகாலியில் நேற்று துவங்கியது. "டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங், பேட்டிங் தேர்வு செய்தார்.




முதல் இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலிய அணிக்கு சைமன் காடிச் (6), ஜாகிர் வேகத்தில் வெளியேறி மோசமான துவக்கம் கொடுத்தார். பின்னர் இணைந்த ஷேன் வாட்சன், ரிக்கி பாண்டிங் ஜோடி இந்திய பந்துவீச்சை எளிதாக சமாளித்தது. 


அபாரமாக ஆடிய பாண்டிங், டெஸ்ட் அரங்கில் தனது 53வது அரைசதமடித்தார். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 141 ரன்கள் சேர்த்த போது, ரெய்னாவின் துல்லிய "த்ரோ'வில், பாண்டிங் (71) "ரன்-அவுட்' ஆனார்.

வாட்சன் சதம்:


அடுத்து வந்த மைக்கேல் கிளார்க் (14), ஹர்பஜன் சுழலில் சிக்கினார். "மிடில்-ஆர்டரில்' களமிறங்கிய மைக்கேல் ஹசி (17), மார்கஸ் நார்த் (0) இருவரும் ஜாகிர் வேகத்தில் பெவிலியன் திரும்பினர். 


விக்கெட் ஒருபுறம் சரிந்தாலும், மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வாட்சன், ஹர்பஜன் வீசிய ஆட்டத்தின் 84வது ஓவரில், டெஸ்ட் அரங்கில் தனது 2வது சதமடித்தார்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 224 ரன்கள் எடுத்திருந்தது. வாட்சன் (101), டிம் பெய்னே (1) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் ஜாகிர் கான் 3, ஹர்பஜன் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

ஜாகிர்-பாண்டிங் வாக்குவாதம்


நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங், இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜாகிர் கான் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.ஹர்பஜன் வீசிய ஆட்டத்தின் 42வது ஓவரில், 4வது பந்தை எதிர்கொண்ட வாட்சன், ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்டு பாண்டிங்கை அழைத்தார். 

அப்போது 71 ரன்கள் எடுத்திருந்த பாண்டிங், ரெய்னாவின் துல்லிய த்ரோவில் "ரன்-அவுட்' ஆனார். இந்நிலையில் பெவிலியன் திரும்பிய பாண்டிங்கை நோக்கி இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜாகிர் கான் ஏதோ கூறினார். 


பதிலுக்குல் பாண்டிங்கும் ஏதோ கூற, வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அம்பயர் பில்லி பவுடன் தலையிட்டு, சமாதான் செய்து வைத்தார். முதல் நாள் ஆட்டம் முடிந்த பின், போட்டி நடுவர் கிறிஸ் பிராட், ஜாகிர் கானை எச்சரித்தார்.

நேற்றுமுன்தினம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாண்டிங், "இத்தொடரில் இந்திய வீரர்களிடம் எவ்வித வாக்குவாதத்தில் ஈடுபட கூடாது என சகவீரர்களிடம் தெரிவித்துள்ளதாக' கூறினார். இந்நிலையில் இவரே வாக்குவாதத்தில் ஈடுபட்டது வருத்தமான விஷயம்.
Blog Widget by LinkWithin

No comments:

Post a Comment