Pages

Sunday, October 24, 2010

லிபியாவில் சிக்கித் தவித்த 80 தமிழக தொழிலாளர்கள்-அழகிரி முயற்சியால் மீண்டனர்

மதுரை: மத்திய அமைச்சர் [^] மு.க.அழகிரியின் முயற்சியால் லிபியாவில் சிக்கித் தவித்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் அங்கிருந்து மீண்டுள்ளனர்.


இதுகுறித்து மதுரையில் அரசு அதிகாரிகள் கூறுகையில், மதுரையைச் சேர்ந்த ஒரு வேலை [^] வாய்ப்பு நிறுவனத்தால் இவர்கள் அனைவரும் லிபியாவில் வேலை பார்க்க அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் அங்கு அவர்களுக்கு உரிய சம்பளம் தரவில்லை. இதனால் கடந்த பல மாதங்களாக பணமின்றி, உணவின்றி இவர்கள் தவித்து வந்தனர்.

இதையடுத்து சென்னையைச் சேர்ந்த முனியசாமி என்ற தொழிலாளர் தங்களது நிலையை விவரித்து உறவினர்களுக்கு கடிதம் எழுதி மீட்குமாறு கோரினார். அதேபோல கடலூரைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்களது மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திற்கு நிலையை விளக்கி கடிதம் எழுதினர்.

இதையடுத்து அமைச்சர் பன்னீர்செல்வம், அழகிரியிடம் இதுகுறித்து பேசினார். அழகிரியும் உடனடியாக களத்தில் இறங்கி லிபியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு அனைவரையும் மீட்குமாறு உத்தரவிட்டார்.

இதையடுத்து 80க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கையில் தூதரகம் இறங்கியது. முதல்கட்டமாக தற்போது 40 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்களையும் மீட்கும் முயற்சிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. விரைவில் அனைவரும் இந்தியா [^] திரும்பவுள்ளனர்.
Blog Widget by LinkWithin

No comments:

Post a Comment