Pages

Sunday, October 24, 2010

தமிழ் சினிமாவில் 'மைனா' உருவாக்கும் டிரென்ட்!

தமிழ் சினிமாவில் புதிய படங்களைப் பிரபலப்படுத்தும் யுக்தியில், புதிய டிரென்டை உருவாக்கி வருகிறது, 'மைனா'


பிரபு சாலமன் இயக்கிய திரைப்படம் 'மைனா'. இதை, உதயநிதி ஸ்டாலினுக்கு திரையிட்டு காட்டினார்கள். அப்படம் மிகவும் பிடித்து போகவே 'மைனா'வை வினியோகிப்பது என முடிவு செய்தார் உதயநிதி.

அவரது ரெட் ஜெயண்ட் நிறுவனம் இதுவரை பெரிய பட்ஜெட் மற்றும் பெரிய ஹீரோக்களின் படங்களை மட்டுமே வெளியிட்டு வந்தது. 'விண்ணைத்தாண்டி வருவாயா', ' பாஸ் என்கிற பாஸ்கரன்' 'மதராசப்பட்டினம்' போன்ற படங்களை வினியோகித்தது.

'மைனா' ஒரு சிறிய பட்ஜெட் படம். இருந்தாலும், தரத்தில் சிறப்பாக இருக்கிறது எனக் கருதி தனது ரெட் ஜெய்ண்ட் நிறுவனம் மூலம் தீபாவளி தினத்தன்று வெளியிடுகிறார்.

முதலில் நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் பாலா முதலானோருக்கு 'மைனா', சிறப்புத் திரையிடல் மூலம் காண்பிக்கப்பட்டது.

ஆடியோ வெளியீட்டு விழாவில், படத்தை முன்னணி நட்சத்திரங்கள் பலரும் புகழ்ந்து தள்ளினார்கள்.

இதன் தொடர்ச்சியாக வெற்றிமாறன், ஜெகன்நாதன், பாக்யராஜ் உள்ளிட்ட இயக்குனர்களுக்கும் திரையிட்டு காட்டியிருக்கிறார்.

ஒருபுறம் கோடம்பாக்கத்திலேயே 'மவுத் டாக்' வாயிலாக மைனாவின் சிறப்புப் பரவ, அதன் பத்திரிகை கவரேஜ் மூலமாக மறுபுறம் ரசிகர்களிடையேயும் கவனத்தை ஈர்த்திருக்கிறது படம்.

பாலிவுட் உலகில் பின்பற்றப்பட்டும் 'சிறப்புத் திரையிடல்' டிரென்ட் இங்கேயும் நல்ல பலனைத் தரும் என நம்பப்படுவதால், கோடம்பாக்கத்தில் மேலும் சிலரும் இந்த யுக்தியை கடைபிடிக்க இருக்கிறார்களாம்.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடித்த 'கோ' படத்தையும் ரெட் ஜெய்ண்ட் வாங்கியிருக்கிறது. அந்நிறுவனத் தயாரிப்பில் கமல் நடிக்கும் 'மன்மதன் அம்பு' படத்தை டிசம்பர் 10 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது இங்கே கூடுதல் தகவல்.
Blog Widget by LinkWithin

No comments:

Post a Comment