Pages

Wednesday, June 30, 2010

உலக கோப்பை கால்பந்து "ரவுண்ட்-16' - 29.06.2010 போட்டி மற்றும் காலிறுதி அட்டவணை

பராகுவே - ஜப்பான் ( வெற்றி : பராகுவே ( 5 - 3 ) )

பிரிடோரியா: உலக கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதிக்கு முதல் முறையாக முன்னேறி வரலாறு படைத்தது பராகுவே அணி. நேற்று நடந்த "ரவுண்ட்-16' போட்டியில் "பெனால்டி ஷூட் அவுட்' முறையில் ஜப்பான் அணியை 5-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. ஜப்பான் அணி, தொடரில் இருந்து வெளியேறியது.


தென் ஆப்ரிக்காவில் 19வது உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. நேற்று நடந்த "ரவுண்ட்-16' போட்டியில் உலக ரேங்கிங் பட்டியலில் 31வது இடத்தில் <உள்ள பராகுவே, ஆசிய அணியான ஜப்பானை(45வது இடம்) எதிர்கொண்டது.


முதல் பாதியில் பராகுவே பக்கம் பந்து அதிகமாக இருந்தது. ஆனால், கோல் அடிக்க முடியாமல் திணறியது. மறுபக்கம் ஜப்பான் வீரர்களும் போராடினர். ஆட்டத்தின் 3வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் கொமானோ அடித்த பந்தை பராகுவே கோல்கீப்பர் வில்லர் அருமையாக தடுத்தார். பின் 20வது நிமிடத்தில் பராகுவே வீரர் லூகாஸ் அடித்த பந்து இலக்கு மாறி பறந்தது. ஜப்பான் அணியின் நட்சத்திர வீரரான ஹோண்டா மேற்கொண்ட முயற்சிகளும் வீணாகின. முதல் பாதி முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

கூடுதல் நேரம்:


இரண்டாவது பாதியிலும் கோல் அடிக்கப்படாததால், ஆட்டம் கூடுதல் நேரத்துக்கு சென்றது. முதல் 15 நிமிடங்களில் எந்த ஒரு வீரரும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது 15 நிமிடங்களிலும் கோல் அடிக்கப்படவில்லை.

பெனால்டி ஷூட் அவுட் :


இதையடுத்து முடிவு "பெனால்டி ஷூட் அவுட்' முறையில் தீர்மானிக்கப்பட்டது. இதில் அதிர்ஷ்டம் தான் அதிகம் வேண்டும்.

* முதல் வாய்ப்பில் பாரட்டோ(பராகுவே), எண்டோ(ஜப்பான்) கோல் அடித்தனர்.

* இரண்டாவது வாய்ப்பில் லூகாஸ்(பராகுவே), ஹசிபி(ஜப்பான்) சாதிக்க, ஸ்கோர், 2-2 என சமநிலை எட்டியது.

* மூன்றாவது வாய்ப்பில் ஜப்பான் வீரர் கொமானோ அடித்த பந்து "பாரில்' பட்டு மேலே பறக்க, தோல்வி உறுதியானது. பராகுவே சார்பில் ரிவரோஸ் சூப்பராக கோல் அடித்தார்.

* நான்காவது வாய்ப்பை வால்டஸ்(பராகுவே), ஹோண்டா(ஜப்பான்) சரியாக பயன்படுத்தினர்.

* ஐந்தாவது வாய்ப்பில் பராகுவேயின் கார்டோசா சூப்பராக கோல் அடித்து வெற்றியை உறுதி செய்தார். இறுதியில் பராகுவே அணி "பெனால்டி ஷூட் அவுட்' முறையில் 5-3 என வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றது. கொமானோ செய்த தவறு காரணமாக ஜப்பான் அணி பரிதாபமாக வெளியேறியது.

ஸ்பெயின் - போர்ச்சுகல் ( வெற்றி : ஸ்பெயின் ( 1 - 0 ) )

கேப்டவுன்: உலக கோப்பை கால்பந்து தொடரில் இன்னொரு அதிர்ச்சி. பரபரப்பான "ரவுண்ட்-16' போட்டியில் ஸ்பெயின் அணி, போர்ச்சுகலை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதன் மூலம் உலகின் "நம்பர்-2' அணியான ஸ்பெயின், காலிறுதிக்கு ஜோராக முன்னேறியது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போர்ச்சுகல் வெளியேறியது.


தென் ஆப்ரிக்காவில் 19வது உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. நேற்று நடந்த "ரவுண்ட்-16' போட்டியில் "யூரோ' சாம்பியன் ஸ்பெயின், போர்ச்சுகலை(உலகின் "நம்பர்-3') எதிர்கொண்டது. இரு அணிகளும் சமபலம் வாய்ந்தவை என்பதால், எதிர்பார்ப்பு எகிறியது.

ஸ்பெயின் ஆதிக்கம்:


துவக்கத்தில் இருந்தே ஸ்பெயின் ஆதிக்கம் செலுத்தியது. இரண்டாவது நிமிடத்தில் டோரஸ் அடித்த பந்தை, போர்ச்சுகல் கோல்கீப்பர் எட்வார்டோ துடிப்பாக தடுத்தார். இதற்கு பின் மற்றொரு ஸ்பெயின் வீரர் டேவிட் வில்லா அடுத்தடுத்து தாக்குதல் நடத்தி மிரட்டினார். 22வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணிக்கு கிடைத்த வாய்ப்பை டியாகோ கோட்டை விட்டார். 


28வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ "பிரீகிக்' வாய்ப்பை வீணாக்கினார். பின் 38வது நிமிடத்தில் ரொனால்டோ பந்தை அருமையாக "பாஸ்' செய்தார். ஆனால், அல்மீடா தலையால் முட்டி கோல் அடிக்க தவறினார். முதல் பாதி கோல் எதுவும் அடிக்கப்படாமல் முடிந்தது.

டேவிட் அபாரம்:


இரண்டாவது பாதியில் ஸ்பெயின் அணி தொடர்ந்து தாக்குதல் நடத்தியது. 63வது நிமிடத்தில் இந்த அணியின் டேவிட் வில்லா அடித்த பந்தை போர்ச்சுகல் கோல்கீப்பர் எட்வார்டோ தடுத்து, வெளியே தள்ளினார். அதனை அப்படியே மீண்டும் கோல் போஸ்டுக்குள் வில்லா சாமர்த்தியமாக அடிக்க, ஸ்பெயின் 1-0 என முன்னிலை பெற்றது.

காலிறுதி அட்டவணை

DATE                               MATCH                            TIME

ஜூலை 2          நெதர்லாந்து - பிரேசில்      07.30PM (IST) 

ஜூலை 3          உருகுவே  - கானா              12:00AM (IST)

ஜூலை 3         ஆர்ஜென்டினா - ஜெர்மனி 07.30PM (IST) 

ஜூலை 4          பராகுவே  -   ஸ்பெயின்     12:00AM (IST)
Blog Widget by LinkWithin

No comments:

Post a Comment