Pages

Tuesday, September 28, 2010

சச்சினுக்கு ஒரு நியாயம்... ரஹ்மானுக்கு ஒரு நியாயமா? - லதா மங்கேஷ்கர்

காமன்வெல்த் போட்டி மைய நோக்கு பாடலுக்காக, ஏ.ஆர்.ரஹ்மானை கடுமையாக விமர்சிப்பது குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ளார், இந்திய திரையிசைப் பாடகி லதா மங்கேஷ்கர்.


அண்மையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த மைய நோக்கு பாடல் வெளியானது. அந்தப் பாடல் சரியில்லை என பல தரப்பிடம் இருந்தும் எதிர்மறை விமர்சனங்கள் எழுந்தன.

ரசிகர்களுக்கு உத்வேகத்தைத் தூண்டும் வகையில் பாடல் அமையவில்லை என்ற கருத்து நிலவியது.

இதன் எதிரொலியாக, காமன்வெல்த் போட்டி ஒருங்கிணைப்புக் குழு கேட்டுக் கொண்டதற்கு இணங்க, அப்பாடலின் நேர அளவைக் குறைத்து துடிப்பினை அதிகரித்துக் கொடுத்தார், ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்.

இந்த நிலையில், காமன்வெல்த் போட்டி மைய நோக்கு பாடலுக்காக ரஹ்மான் விமர்சிக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள லதா மங்கேஷ்கர், "நான் இன்னும் அந்தப் பாடலைக் கேட்கவில்லை. ஆனால், அந்தப் பாடல் மீதான விமர்சனங்களை தான் அதிகாமாக கேட்டு வருகிறேன்.

ரஹ்மான்... அளப்பறிய அர்ப்பணிப்பு மிக்க இசைக் கலைஞர். ஒரே ஒரு தோல்வியை முன்வைத்து மக்கள் கடுமையாக நடந்துகொள்வது ஏற்புடையதல்ல.

சச்சின் டெண்டுல்கர் தனது ஒவ்வொரு போட்டியிலும் செஞ்சுரி அடிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதைப் போன்றது இந்த விஷயமும்.

எல்லா ஜாம்பவான்களும் சில தவறுகளை இழைப்பது இயல்புதான். நான் பாடிய ஒவ்வொரு பாடலுமே மிகச் சிறந்தது என்றும், கச்சிதமானது என்றும் ஒருபோதும் சொல்ல மாட்டேன். பல நேரங்களில், நான் பாடிய பாடல்கள் எனக்கு ஏமாற்றத்தைத் தந்துள்ளன," என்றார் 'பாரத ரத்னா' லதா மங்கேஷ்கர்.
Blog Widget by LinkWithin

No comments:

Post a Comment