Pages

Wednesday, September 29, 2010

கை கொடுத்த தயாநிதி அழகிரி

சூர்யா, விவேக் ஒபராய் நடித்துள்ள 'ரத்த சரித்திரம்', தமிழகத்தில் வெளிவருவது கேள்விக்குறியாக இருந்த நிலையில், தயாநிதி அழகிரி கை கொடுத்ததால் 'எல்லாம்' சுபமாகியிருக்கிறது!


பாலிவுட்டின் முன்னணி இயக்குனரான ராம் கோபால் வர்மாவின் இயக்கத்தில் நடிகர் சூர்யா, ப்ரியாமணி மற்றும் நடிகர் விவேக் ஒபராய் நடித்திருக்கும் படம்,'ரத்த சரித்திரம்'.

ஆந்திராவில் நடந்த அரசியல் கொலைகளை பின்னணியாக கொண்ட இப்படத்தில், விவேக் ஓபராயும் முக்கிய கதாப்பாத்திரம் என்பதால் தான் பிரச்னை தொடங்கியது.

ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்...

சில மாதங்களுக்கு முன் இலங்கையில் நடந்த இந்திய திரைப்பட விருதுகள் விழாவுக்கு நடிகர் - நடிகைகள் செல்லக் கூடாது என தென்னிந்திய திரைப்பட சங்கங்கள் தடை விதித்தன. குறிப்பாக, தமிழ் சினிமா அமைப்புகள் கண்டிப்புடன் இருந்தன.

சல்மான்கான், ஹிரித்திக் ரோஷன், விவேக் ஒபராய் முதலான இந்தி நடிகர்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் இலங்கை பட விழாவில் பங்கேற்று திரும்பினர்.

அவ்விழாவில் கலந்து கொண்டதன் எதிரொலியாக, ஹிரித்திக் ரோஷன் நடித்து தமிழகத்தில் ஓடிக் கொண்டிருந்த 'கைட்ஸ்' படத்தின் படப்பெட்டிகள் திருப்பி அனுப்பப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக, சூர்யாவின் 'ரத்த சரித்தரம்' படத்தில் விவேக் ஒபராயும் நடித்திருப்பதால், அப்படத்டை தமிழகத்தில் திரையிடுவதை எதிர்த்து போராட்டம் நடத்துவோம் என்று இந்து மக்கள் கட்சி அமைப்புச் செயலாளர் கண்ணன் அறிவித்திருந்தார்.

இதனால், தமிழில் 'ரத்த சரித்திரம்' வெளிவருவதில் சிக்கல் வலுவானது. இப்படத்தை வாங்க எந்த வினியோகஸ்தரும் முன்வரவில்லை.

இந்தச் சூழலில், 'ரத்த சரித்திர'த்தை வாங்கியிருக்கிறது, தயாநிதி அழகிரியின் கிளவுட் நைன் மூவீஸ்.

இப்படத்தின் ஆடியோ வெளியீடு நாளை (செப்.30) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், ரத்த சரித்திரம் எவ்வித தடையும் இன்றி வெளிவரவிருக்கிறது!
Blog Widget by LinkWithin

No comments:

Post a Comment