Pages

Monday, September 27, 2010

‘‘எந்திரன்" ஒரு டெக்னிக்கல் மிரட்டல்

உலகம் முழுக்க பரபரத்துக் கிடக்கிறது, சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன் தயாரித்துள்ள ‘எந்திரன்’ பட ரிலீசுக்கு. படத்தின் டிரெய்லர், பிரமாண்டத்தை பறைசாற்றி விட்டதால் எதிர்பார்ப்பு டிரிபிள் மடங்கு எகிறியிருக்கிறது. 


பட வெளியீட்டுக்காக பிரபஞ்சமே காத்திருக்கும் நேரத்தில் எவர்க்ரீன் சூப்பர் ஸ்டாரான ரஜினியை இப்படத்தில் இன்னும் இளமையாக்கியிருக்கிற ஹைடெக் ஒளிப்பதிவாளர் ஆர்.ரத்னவேலுவிடம் பேசினோம்.

‘‘‘எந்திரன்’ ஒரு டெக்னிக்கல் மிரட்டல். படத்தின் ஒவ்வொரு ஷாட்டும் பிரமிப்பா இருக்கும். இந்த பிரமிப்புக்கு டைரக்டர் ஷங்கரின் திரைக்கதைதான் காரணம். கதையை அவர் சொன்னதுமே ரொம்ப ரிஸ்கான வேலைங்கறதை புரிஞ்சுகிட்டேன். டாப் ஹீரோ ரஜினி, டாப் ஹீரோயின் ஐஸ்வர்யா, டாப் டைரக்டர் ஷங்கர். 

இதோட டாப் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ்... இந்த மாதிரி காம்பினேஷன்ல வேலை பார்த்தா எந்த ரிஸ்கையும் எடுக்கலாம்னு முடிவு பண்ணி, களத்துல இறங்கிட்டேன். முதல்ல, பாட்டை ஷூட் பண்ணினோம். பெரு நாட்டுல இருக்கிற எட்டாவது

உலக அதிசயமான ‘மச்சுபிச்சு’ல ‘கிளிமாஞ்சாரோ...’பாடலை எடுத்தோம். வழக்கமான டான்சர்ஸ், விஷுவல்ஸ் எதுவும் இருக்கக் கூடாதுன்னு பிரேசில்ல சம்பா டான்ஸ் ஸ்கூல்ல போய் அந்த டான்சர்களை வரவழைச்சோம். 

நம்ம பாரம்பரிய நடனம் மாதிரி சம்பா டான்ஸுக்கு பெரிய வரலாறே இருக்கு. இந்த பாடலை ஷூட் பண்ணும் போது அந்த மலைல லைட் வைக்கக் கூடாதுன்னு சொல்லிட்டாங்க.

அங்க இருக்கிற ஒவ்வொரு கல்லையும் அவங்க தெய்வமா மதிக்கிறாங்க. சரியான லைட்டிங் இல்லாம இதை எடுக்க முடியுமான்னு ரஜினி சார் என்னை பார்த்தார். முடியும்னு, வேற டெக்னிக் பயன்படுத்தி எடுத்தேன். அதேமாதிரி ரோபோ ரஜினி, விஞ்ஞானி ரஜினி இந்த ரெண்டு பேரையும் வித்தியாசமா காட்ட ரொம்ப மெனக்கெட்டோம்.

என்னதான் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்ல பண்ணினாலும் படத்துல பார்க்கிறப்ப அது கிராபிக்ஸ்னு தெரிஞ்சுரும். ‘எந்திரன்’ல அப்படி தெரிய கூடாதுனுஹாலிவுட்ல இருக்கிற ஸ்டான் வின்ஸ்டன் ஸ்டூடியோவுக்கு போனோம். 

இங்கதான் ‘ஜூராசிக் பார்க்’லேந்து ‘அவதார்’ வரைக்கும் சிஜி பண்ணியிருக்காங்க. அங்க போய் அனிமேட்ரானிக்சை பயன்படுத்தி, ரஜினி மாதிரியே ஒரு அசையும் எந்திர மனிதரை உருவாக்கினோம்.

அதுதான் ரோபோ ரஜினி. ஒவ்வொரு ஸ்டேஜா வந்துதான் மனித உருவத்துக்கு இந்த கேரக்டர் வரும். இப்ப மெட்டல் உருவம், ரொம்ப பளிச்சுன்னு தெரியும். விஞ்ஞானி ரஜினியும் அதே கலர்ல தெரியக் கூடாதில்லையா? அதனால, லைட்டிங்ல வித்தியாசம் காட்டி பண்ணினோம். வழக்கமா தமிழ் படங்கள்ல லைட்டிங்னா, கயிறுகட்டி தொங்க விட்டுட்டு நிறைய வேலை பார்ப்பாங்க.

ஆனா, நான் எல்லத்தையும் புரோக்ராமா மாத்திட்டேன். அதாவது இதை இன்டலின்ட் லைட்டிங்னு சொல்வாங்க. 2008ல ஆரம்பிச்சப் படம் 2010ல ரிலீஸ்னா, லைட்டிங் ஒரே மாதிரி இருக்கணும். அதுக்காக ரொம்ப சிஸ்டமேட்டிக்கா கேமரா ரிப்போர்டை தயார் பண்ணினேன். 

எனக்கு ரொம்ப சவாலான வேலைன்னா, அது ‘அரிமா அரிமா...’ பாடல்தான். டெக்னிக்கலா இதுல புதுமையான வேலை பண்ணியிருக்கோம். இப்ப நான் சொல்லக்கூடாத பல விஷயங்கள் இந்த பாடல் காட்சியில இருக்கு.

இந்த பாடல்ல மூணு வித்தியாசமான லொகேஷனை லைட்டிங்ல காட்டணும். ஆனா, நேரமேயில்லை. இடைவிடாம ஷூட்டிங். ஸோ, பகல்ல ஷூட் பண்ணிட்டு, ராத்திரி லைட்டிங்கை மாத்துவோம். 

இப்படி ரஜினில ஆரம்பிச்சு யூனிட்ல இருக்கிற எல்லாருமே முழு உழைப்பை இறக்கியிருக்கோம். இப்ப நான் சொல்றதை விட பட ரிலீசுக்கு பிறகு பேச நிறைய விஷயங்கள் இருக்கு. இந்தப் படத்துல ஷங்கரோட டெடிகேஷனை பார்த்து மிரண்டு போயிருக்கேன்.

ஒவ்வொரு காட்சிக்கும் பத்து தடவை திட்டமிடுவார். இப்படியொரு படத்தை சன் பிக்சர்ஸை விட்டா வேற யாரும் தயாரிச்சிருக்கவே முடியாது. எந்த நிமிஷம் எதை கேட்டாலும் அடுத்த நிமிஷமே நமக்கு அது கிடைக்கும். 

இதுக்காக அவங்க தனி டீமையே உருவாக்கியிருந்தாங்க. ஒரு நாள் டப்பிங் பேசிட்டு இரவு நேரத்துல ரஜினி எனக்கு போன் பண்ணினார். தெரியாத நம்பர்களை நான் எடுக்கறதில்லை.


யார் ஃபோனோன்னு விட்டுட்டேன். அப்புறம் தொடர்ந்து கால் வந்துட்டே இருந்தது. எடுத்து பேசினா, ரஜினி. ‘படம் பார்த்தேன். உங்க வேலை ரொம்ப பிரமாதம்’னு பாராட்டினார். ‘ஏன் சார், இதை காலையில சொல்லியிருக்கலாமே’னு கேட்டேன். ‘இல்லை... சந்தோஷத்தை உடனே பகிர்ந்துக்கணும்னுதான் ராத்திரி ஃபோன் பண்றேன்’னு சொன்னார். இன்னும் பிரமிப்பாதான் தெரியறார் ரஜினி’’ வியப்பாக முடிக்கிறார் ரத்னவேலு.
Blog Widget by LinkWithin

1 comment:

Narayan. said...

http://bit.ly/ai8Y0a

Enthiran Preview Show Result!

Excellent Songs Visualisation!

Post a Comment