Pages

Wednesday, November 17, 2010

வந்தது பேஸ்புக் மின்னஞ்சல் (E-MAIL) - அறிமுகப்படுத்தியது பேஸ்புக்

வாஷிங்டன்: 500 மில்லியன் பயனாளர்களைக் கொண்ட பேஸ்புக்குக்கென தனி இமெயில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை அமெரிக்காவில் தொடங்கிய இணைய தள மாநாட்டில் அறிமுகப்படுத்தினார் பேஸ்புக் சிஇஓ ஜுகர்பெர்க்.


கூகுளுக்குப் போட்டியாகவே ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த மெயில் வசதியில் இனி பயனாளர்கள் @facebook.com ஐடியைப் பெற முடியும்.

பேஸ்புக் CEO ஜுகர்பெர்க்

இமெயில் சேவையில் ஜாம்பவானான கூகுளுக்கு இது பெரும் சவாலாக மாறியுள்ளது.

பேஸ்புக்கின் இந்த போட்டியைச் சமாளிக்க பல வழிகளை யோசித்து வருகிறது கூகுள். பெரும்பாலான பேஸ்புக் பயனாளர்கள், கூகுள் மெயிலைப் பயன்படுத்துபவர்களாகவே உள்ளதால், அவர்களைத் தக்க வைக்க பேஸ்புக்கை விட அதிக வசதி கொண்ட சமூகத் தளத்தை உருவாக்கும் வேலைகளில் மும்முரமாக உள்ளது கூகுள்.
Blog Widget by LinkWithin

No comments:

Post a Comment