Pages

Thursday, May 13, 2010

வெப்பம்: 2300ம் ஆண்டில் பூமியில் மனிதர்கள் வாழ முடியாது-ஆய்வு முடிவு



சிட்னி: இன்னும் 300 ஆண்டுகளில் பூமியின் வெப்பம் மிக பயங்கரமாக அதிகரித்து மனிதன் உள்பட எந்த உயிரினமும் வாழவே முடியாத நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவின் பர்டியூ பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் இணைந்து பூமியின் முந்தைய பல நூற்றாண்டு வெப்பநிலை குறித்த தகவல்களை பல வகைகளில் சேகரித்து ஆய்வு நடத்தினர்.

தங்கள் ஆய்வு முடிவுகளை Proceedings of the National Academy of Sciences, Australian National University academics ஆகியவற்றிடம் தாக்கல் செய்துள்ளனர்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

இதே விகிதத்தில் நாம் நிலக்கரி, பெட்ரோலியத்தை எரித்து புகையை வெளியிட்டு வந்தால் உலகின் வெப்ப நிலை தொடர்ந்து அதிகரித்து, 2300ம் ஆண்டில் உலகின் சராசரி வெப்பநிலை குறைந்தபட்சம் 7 டிகிரி சென்டிகிரேட் (13 பாரன்ஹீட்) அளவுக்கு அதிகரித்துவிடும்.

இதனால் உலகின் சில பகுதிகளில் வெப்பநிலை மிகக் கடுமையாகி உயிர்கள் வாழவே முடியாத நிலை உருவாகும். 11 முதல் 12 டிகிரி வரை வெப்ப நிலை அதிகரித்தால், உலகம் [^] முழுவதுமே மனிதன் உள்பட எந்த உயிரினமும் தப்ப முடியாது.

இப்படிப்பட்ட ஒரு சூழல் உருவாக 50/50 வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.


நன்றி: தட்ஸ்தமிழ்
Blog Widget by LinkWithin

No comments:

Post a Comment