Pages

Friday, May 14, 2010

வீரர்களை ஆதரிக்க சச்சின் சிபாரிசு


சண்டிகர் : உலக கோப்பை டி20 தொடரில் இந்திய அணி மோசமாக விளையாடி தோற்ற நிலையில் வீரர்களுக்குத் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்று மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் கூறியுள்ளார்.இது குறித்து சண்டிகரில் நேற்று அவர் கூறியதாவது உலக கோப்பை டி20ல் இந்திய அணி அரை இறுதிக்கு தகுதி பெறாதது வருத்தம் அளிக்கிறது. எனினும் இந்த தோல்விக்காக கேப்டன் டோனி மற்றும் வீரர்களை குறை கூறுவது தவறு.

கிரிக்கெட் விளையாட்டில் வெற்றி தோல்வியை கணிக்க முடியாது. ஒரு சில பந்துகளில் ஆட்டத்தின் போக்கு தலைகீழாக மாறிவிடும். இதே அணிதான் முதலாவது உலக கோப்பை டி20 தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது என்பதை மறந்துவிடக் கூடாது. இது போன்ற இக்கட்டான சமயத்தில் வீரர்களை ஆதரிக்க வேண்டும். உலக கோப்பையில் தோற்றாலும் என்னைப் பொருத்தவரை இந்தியாதான் நம்பர் 1 அணி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இவ்வாறு சச்சின் கூறினார்.

உலக கோப்பை டி20ல் தோற்றது குறித்து இந்திய அணி பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் பல வீரர்கள் முழு உடல்தகுதியுடன் இல்லை. சொல்லப் போனால் அவர்களை விட நான் நல்ல உடல் தகுதியுடன் இருப்பதாக நினைக்கிறேன்.
Blog Widget by LinkWithin

No comments:

Post a Comment