Pages

Thursday, May 6, 2010

மும்பை தீவிரவாத தாக்குதல்-கசாப்புக்கு தூக்கு தண்டனை




மும்பை: மும்பை தீவிரவாத் தாக்குதல் வழக்கில் குற்றவாளி கசாப்புக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மும்பை தீவிரவாத தாக்குல் வழக்கை விசாரித்து வந்த தனி கோர்ட், மே3ம் தேதி தீர்ப்பளித்தது. அதில் கசாப் உள்ளிட்ட 20 பேரை குற்றவாளிகள் என கோர்ட் தீர்ப்பளித்தது. இந்தியர்களான பஹீம் அன்சாரி, சபாபுதீன் அகமது ஆகியோர் மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க அரசுத் தரப்பு போதிய ஆதாரங்களை தாக்கல் செய்யாததால், சந்தேகத்தின் பலனை அவர்களுக்கு சாதகமாக தந்து விடுதலை [^] செய்வதாக நீதிபதி தஹிளியானி உத்தரவிட்டார்.

கசாப்புக்கான தண்டனை குறித்து மே 4ம்தேதி அரசு வக்கீல் உஜ்வால் நிகாம் மற்றும் கசாப் வக்கீல் பவார் ஆகியோர் வாதிட்டனர். உஜ்வால் நிகாம் வாதிடுகையில், கசாப் ஒரு கொலை இயந்திரம். அப்பாவி மக்களை ரசித்து, மகிழ்ச்சியுடன் கொலை செய்துள்ளான். எனவே அவனுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று வாதிட்டார்.

கசாப் வக்கீல் பவார் வாதிடுகையில், கசாப்புக்கு வயது மிகவும் குறைவு. எனவே அவன் திருந்தி வாழ வாய்ப்பளிக்கும் வகையில், ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என்றார்.

தண்டனை குறித்த வாதங்கள் முடிந்த நிலையில் இன்று நீதிபதி தஹிளியானி கசாப்புக்கான தண்டனை விவரங்களை வெளியிட்டார்.

கசாப் மீதான 86 குற்றச்சாட்டுகளில் 4 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவனுக்கு தூக்கு தண்டனையும், 5 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

தீர்ப்பின்போது நீதிபதி கூறுகையில், கசாப் செய்த செயல வார்த்தைகளால் விவரிக்க முடியாது. கசாப் மனம் திருந்தி மறு வாழ்வு பெறுவான் என்பதை எதிர்பார்க்க முடியாது. அவனாகவே விரும்பி லஷ்கர் இ தொய்பா அமைப்பில் இணைந்து இந்த படு பாதகச் செயலை அவன் செய்துள்ளான். எனவே அவன் திருந்துவான் என்பதை எதிர்பார்க்க முடியாது. எனவே மரண தண்டனையைத் தவிர வேறு எந்தத் தண்டனையும் குறைந்ததாக இருக்க முடியாது. கசாப்புக்கு இரக்கம் காட்டவும் முடியாது என்றார்.

கதறி அழுதான்:

தீர்ப்பை நீதிபதி வாசித்து முடித்ததும், ஏதாவது சொல்ல விரும்புகிறாயா என்று கேட்டார். அதற்கு வாய் திறக்காமல் அமைதியாக இருந்தான் கசாப்.

பின்னர் சொல்வதற்கு எதுவும் இல்லை என்று கூறியபடி கதறி அழுதான் கசாப்.

மும்பை போலீஸ் வரவேற்பு:

கசாப்புக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதற்கு மும்பை காவல்துறை வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மும்பை குற்றப் பிரிவு துணை ஆணையர் ஹிமன்ஷு ராய் கூறுகையில், இந்த தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. தெளிவான தீர்ப்பை நீதிமன்றம் கொடுத்துள்ளது. இதனால் இந்தமரண தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்ய முடியாது என்றார்.

இன்று தீர்ப்பு வழங்கப்பட்டதை முன்னிட்டு தனி நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தண்டனையை கேட்பதற்காக ஏராளமான பொது மக்கள் நீதிமன்ற வளாகத்தில் திரண்டிருந்தனர்.

இந்த சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் தீவிரவாதிகளோடு நடந்த சண்டையில் உயிர்தியாகம் செய்த அதிரடிப்படையினரைச் சேர்ந்த குடும்பத்தினரும் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர்.
Blog Widget by LinkWithin

No comments:

Post a Comment