Pages

Wednesday, May 19, 2010

Youtube Reaches to 2 Crore Viewers Daily

யூ டியூப் பார்ப்பவர்கள் தினமும் 2 கோடி பேர்

லண்டன் வீடியோ தேடுதல் தளமான யூ டியூப் தனது 5வது ஆண்டு விழா கொண்டாடுகிறது. அதை உலகம் முழுவதும் தினமும் 2 கோடிப் பேர் பார்த்து ரசிக்கின்றனர்.சர்வதேச நம்பர் ஒன் இன்டர்நெட் சேவை நிறுவனம் கூகுள்.

அதற்குச் சொந்தமான வீடியோ தேடுதல் தளம் யூ டியூப். நேற்று அதற்கு 5வது ஆண்டு தொடக்கம்.அமெரிக்காவின் முன்னணி 3 டிவி நிறுவனங்களின் பார்வையாளர்களைக் கூட்டினால் அதைவிட யூ டியூப் பார்வையாளர்கள் 2 மடங்கு அதிகம்.கடந்த் 7 மாதங்களுக்கு முன்புதான் யூ டியூப் வீடியோ தேடுதல் தளத்தின் தினசரி பார்வையாளர்கள் எண்ணிக்கை 1 கோடியைத் தொட்டது. இப்போது குறுகிய காலத்தில் மேலும் 1 கோடி பேர் அதிகரித்து 2 கோடியைத் தாண்டியுள்ளது.

இதுபற்றி யூ டியூப் இணை நிறுவனர் சாட் ஹர்லி கூறியதாவதுஆன்லைன் வீடியோ மார்க்கெட்டில் சிறந்த வளர்ச்சி வாய்ப்புகள் உள்ளன. அதை யூ டியூப்பின் அபார வளர்ச்சி உறுதி செய்கிறது. ஆன்லைன் வீடியோவில் நாங்கள் முதலிடம் வகிக்கிறோம். யார் வேண்டுமானாலும் விரும்பிய வீடியோவை அப்லோட் செய்யவும் டவுன்லோடு செய்யவும் வசதி அளிப்பதே இந்த வெற்றிக்கு காரணம்.

மக்கள் சராசரியாக தினமும் 5 மணி நேரம் டிவி பார்க்கும் நிலையில் இணைய தளத்தில் வீடியோவை 15 நிமிடங்களே பார்க்கின்றனர். அதற்கு 200 கோடி வீடியோக்களை யூ டியூப் அளிப்பது மிகப் பெரிய எண்ணிக்கையாகும் என்றார்.
Blog Widget by LinkWithin

No comments:

Post a Comment