Pages

Monday, June 21, 2010

உலக கோப்பை கால்பந்து 20 .06 .2010 ஆட்டம் - ஒரு பார்வை

முதல் ஆட்டம்

ஸ்லோவேகியாவை வென்றது பராகுவே (2-0)

புளோயம்பாண்டீன், ஜூன் 20: உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பராகுவே 2-0 என்ற கோல்கள் கணக்கில் ஸ்லோவேகியாவை வென்றது. இந்த போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் முதல் வெற்றியை ருசித்துள்ளது பராகுவே.


இவ்விரு அணிகள் மோதிய ஆட்டம் புளோயம்பாண்டீனில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. ஆட்டம் தொடங்கியதும் அதிரடி காட்டிய ஸ்லோவேகியாவால் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. 


ஆட்டம் துவங்கிய சில நிமிடங்களில் பராகுவே அணிக்கு மூன்று பிரீ கிக் வாய்ப்புகளை வாரி வழங்கிய ஸ்லோவேகியா வீரர்கள், அதை கோலாகாமல் பார்த்துக்கொண்டனர்.

ஆனாலும் ஆட்டத்தின் 27-வது நிமிடத்தில் பராகுவே வீரர் என்ரிக் வேரா கோல் அடித்தார். அவரின் இந்த கோலால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் பராகுவே 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. 


இதையடுத்து இரண்டாவது பாதி ஆட்டத்தில் கோல் அடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட ஸ்லோவேகியாவின் கோல் முயற்சிகளை சிறப்பான தடுப்பாட்டத்தால் தகர்த்தனர் பராகுவே வீரர்கள்.

 ஆட்டத்தின் 86-வது நிமிடத்தில் கிடைத்த நல்ல வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட கிறிஸ்டியன் ரிவோராஸ் அற்புதமாக கோல் அடித்தார். இதனால் பராகுவே அணி 2-0 என்ற கோல்கள் கணக்கில் ஸ்லோவேகியாவை வென்றது.


இந்த ஆட்டத்தில் பராகுவே வீரர் ஒருவருக்கும், ஸ்லோவேகியா வீரர்கள் 3 பேருக்கும் மஞ்சள் அட்டை எச்சரிக்கை விடப்பட்டது.

இரண்டாம் ஆட்டம்

 இத்தாலி - நியூசிலாந்து ஆட்டம்  "டிரா" ஆனது  (1-1)

நெல்ஸ்புரூட், ஜூன் 20: உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் பலம் வாய்ந்த இத்தாலியுடன் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது நியூசிலாந்து.


கடந்த உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற இத்தாலி முதல் ஆட்டத்திலும், தரவரிசையில் 78-வது இடத்தில் இருக்கும் நியூசிலாந்துடனும் வெற்றி பெற முடியாமல் டிரா செய்துள்ளதால் தடுமாற்றம் கண்டுள்ளது. 


இவ்விரு அணிகள் மோதிய ஆட்டம் நெல்ஸ்புரூட் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெற்றது. ஆட்டம் துவங்கிய 7-வது நிமிடத்தில் நியூசிலாந்து வீரர் ஷானே ஸ்மெல்ட்ஸ் கோல் அடித்து நடப்பு சாம்பியன் இத்தாலிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.


முன்னணி வீரர்களைக் கொண்ட இத்தாலி, கோல் அடிக்க நியூசிலாந்து அணியுடன் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இத்தாலிக்கு அதிர்ஷ்டவசமாக ஆட்டத்தின் 29-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதை சரியாகப் பயன்படுத்திய இத்தாலி வீரர் வின்சென்úஸô கோலாக மாற்றினார்.


இரண்டாவது பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் போராடியும் கோல் கிடைக்காமல் போனது. இறுதியில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை பெற்றதையடுத்து ஆட்டம் டிராவில் முடிந்தது.

இதனால் இத்தாலிக்கு காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பு குறைந்துள்ளது.


இந்த உலகக் கோப்பையில் இத்தாலி மட்டுமின்றி, பலம் வாய்ந்த அணிகளான பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் உள்ளிட்ட அணிகளும் ஆட்டம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்றாம் ஆட்டம்

பிரேசில் - ஐவரி கோஸ்ட் ( வெற்றி : பிரேசில் ( 3 - 1 ) )

ஜோகனஸ்பர்க்: ஐவரி கோஸ்ட் அணிக்கு எதிரான உலக கோப்பை கால்பந்து லீக் போட்டியில், ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற பிரேசில் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

தென் ஆப்ரிக்காவில், "பிபா 19வது உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இதில் நேற்று ஜோகனஸ்பர்க், "சாக்கர் சிட்டி மைதானத்தில் நடந்த "ஜி பிரிவு லீக் போட்டியில், உலகின் "நம்பர்-1 அணியான பிரேசில் அணி, ஐவரி கோஸ்ட் ("நம்பர்-26) அணியை எதிர்கொண்டது.


பேபியானோ நம்பிக்கை:

விறுவிறுப்பான போட்டியின் துவக்கத்தில் இருந்தே, இரு அணி வீரர்களும் துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஐவரி கோஸ்ட் அணியினர் தங்களுக்கு கிடைத்த "பிரி கிக் வாய்ப்பை கோட்டைவிட்டனர். 


ஆட்டத்தின் 18, 20வது நிமிடத்தில் கிடைத்த "கார்னர் கிக் வாய்ப்பை வீணடித்த பிரேசில் அணிக்கு, 25வது நிமிடத்தில் லூயிஸ் பேபியானோ சூப்பர் கோலடித்து நம்பிக்கை தந்தார். தொடர்ந்து போராடிய ஐவரி கோஸ்ட் வீரர்களால் பதிலடி கொடுக்க முடியவில்லை. 

இதனால் முதல் பாதியின் முடிவில் பிரேசில் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்திருந்தது.

பிரேசில் ஆதிக்கம்:


இரண்டாவது பாதியில் ஆதிக்கம் செலுத்திய பிரேசில் அணிக்கு, ஆட்டத்தின் 50வது நிமிடத்தில் லூயிஸ் பேபியானோ 2வது கோல் அடித்து அசத்தினார். பின்னர் 62வது நிமிடத்தில் காகா கொடுத்த "பாசை பெற்ற இலானோ, ஒரு சூப்பர் கோல் அடிக்க பிரேசில் அணி 3-0 என வலுவான முன்னிலை பெற்றது.

டிரோக்பா ஆறுதல்:


இந்நிலையில் சுதாரித்துக் கொண்ட ஐவரி கோஸ்ட் அணிக்கு, 79வது நிமிடத்தில் டிரோக்பா ஒரு கோல் அடித்து ஆறுதல் அளித்தார். இருப்பினும் இவர்களால் அடுத்தடுத்து கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் பிரேசில் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக பேபியானோ தேர்வு செய்யப்பட்டார்.

முதல் அணி:

லீக் போட்டியில் முன்னதாக வட கொரியா அணியை வீழ்த்திய பிரேசில் அணி, நேற்றைய போட்டியில் ஐவரி கோஸ்ட் அணியை வீழ்த்தியது. இதன்மூலம் அடுத்தடுத்து இரண்டு வெற்றி கண்ட பிரேசில் அணி, 6 புள்ளிகளுடன் "ஜி பிரிவில் இருந்து முதல் அணியாக "ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு முன்னேறியது.

காகா "ரெட் கார்டு:

நேற்றைய போட்டியில் 85வது நிமிடத்தில் ஐவரி கோஸ்ட் அணி வீரருடன் முரட்டு ஆட்டத்தில் ஈடுபட்ட காரணத்திற்காக, பிரேசில் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான காகாவுக்கு, "மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது. இதேநிலை 88வது நிமிடத்திலும் நீடித்ததால், இவருக்கு 2வது முறையாக "மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது. இதனால் உடனடியாக "ரெட் கார்டு காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

இன்றைய ஆட்டங்கள்


போர்ச்சுக்கல்-வடகொரியா, இடம்: கேப்டவுன், நேரம்: மாலை 5 மணி.

சிலி-ஸ்விட்சர்லாந்து, இடம்: போர்ட் எலிசபெத், நேரம்: இரவு 7.30

ஸ்பெயின்-ஹோண்டுராஸ், இடம்: ஜோகன்னஸ்பர்க், நேரம்: இரவு 12.
Blog Widget by LinkWithin

No comments:

Post a Comment