Pages

Wednesday, June 16, 2010

ஆசிய கோப்பை: இலங்கையிடம் பாகிஸ்தான் தோல்வி

தம்புல்லா, ஜூன் 15: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் லீக் ஆட்டத்தில் 16 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையிடம் பாகிஸ்தான் தோற்றது.


÷முதலில் ஆடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 242 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி 47 ஓவர்களில் 226 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.


÷பாகிஸ்தான் கேப்டன் அப்ரிதி சதமடித்தும் மற்ற வீரர்கள் சிறப்பாக விளையாடாததால் இலங்கையிடம் பாகிஸ்தான் தோல்வியடைந்தது.


÷இவ்விரு அணிகள் மோதிய ஆட்டம் தம்புல்லா மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 242 ரன்கள் எடுத்தது. இலங்கை தரப்பில் ஜெயவர்த்தனே 54 ரன்களும், மேத்யூஸ் 55* ரன்களும் எடுத்தனர்.


÷பாகிஸ்தானின் சோயிப் அக்தர் 10 ஓவர்கள் வீசி 41 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


÷இரண்டாவதாக பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 47 ஓவர்களில் 226 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பாகிஸ்தான் கேப்டன் அப்ரிதி, 76 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 109 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 


பாக்., தோல்வி: பின் வரிசையில் ஆமெர் (5), அக்தர் (1) ஏமாற்ற, பாகிஸ்தான் அணி 47 ஓவரில் 226 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. ரசாக் (26) அவுட்டாகாமல் இருந்தார். இலங்கை தரப்பில் மலிங்கா 5 விக்கெட் வீழ்த்தினார்.  


÷சதமடித்த அப்ரிதி ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த ஆட்டத்தில் வென்றதன் மூலம் இலங்கை அணி 2 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
Blog Widget by LinkWithin

No comments:

Post a Comment