முதல் ஆட்டம்
ஆர்ஜென்டீனா - தென்கொரியா ( வெற்றி : ஆர்ஜென்டீனா (4-1) )
ஜோகன்னஸ்பர்க், ஜூன் 17: உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஆர்ஜென்டீனா 4-1 என்ற கோல்கள் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தியது.
"ஹாட்ரிக்' கோல் அடித்த கொன்ஸôலோ
ஆர்ஜென்டீன வீரர் கொன்ஸôலோ ஹி குய்ன் அபாரமாக விளையாடி ஹாட்ரிக் கோல்கள் அடித்து தனது அணிக்கு வெற்றியைத் தேடி தந்தார்.
இந்த உலகக் கோப்பை கோப்பை போட்டியில் இதுவரை நடைபெற்ற ஆட்டங்களில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற பெருமையையும் கொன்ஸôலோ பெற்றார்.
இவ்விரு அணிகள் மோதிய ஆட்டம் ஜோகன்னஸ்பர்க் சாக்கர் சிட்டி மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் பலம் வய்ந்த அணிகளான ஆர்ஜென்டீனாவும் தென்கொரியாவும் ஆரம்பம் முதல் ஆக்ரோஷமாக விளையாடின.
ஆட்டத்தின் 16-வது நிமிடத்தில் ஆர்ஜென்டீன வீரர் லயோனல் மெஸ்ஸி, பந்தை கோல் கம்பத்தை நோக்கி அடித்தார். அப்போது தென்கொரிய வீரர் பார்க் சூ யாங் பந்தை தடுத்தார். ஆனால் பந்து எதிர்பாராவிதமாக கோல் வலைக்குள் சென்று சேம் சைடு கோலானது. இதனால் ஆர்ஜென்டீன அணிக்கு முதல் கோல் கிடைத்தது.
தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆர்ஜென்டீன வீரர் கொன்ஸôலோ குய்ன், ஆட்டத்தின் 33-வது நிமிடத்தில் கோல் அடித்தார். முதல் பாதி ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் தென்கொரிய வீரர் லீ சங் யாங் கோல் அடித்தார். இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் ஆர்ஜென்டீனா 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
ஹாட்ரிக்' கோல் அடித்த கொன்ஸôலோ ஹி குயினை பாராட்டும் ஆர்ஜென்டீனாவின் பயிற்சியாளர் மரடோனா.
ஆர்ஜென்டீன வீரர்கள் ஜோனஸ், ஜேவியர், காபிரியேல் ஆகியோரும், தென்கொரிய வீரர்கள் லீ சங் யாங், இயோம் ஆகியோரும் மஞ்சள் அட்டையால் எச்சரிக்கப்பட்டனர்.
இரண்டாவது பாதி ஆட்டத்தின் 76, 80-வது நிமிடங்களில் அடுத்தடுத்து இரு கோல்களை அடித்து ஆர்ஜென்டீனா ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார் கொன்ஸôலோ. இறுதியில் 4-1 என்ற கோல்கள் கணக்கில் ஆர்ஜென்டீனா வெற்றி பெற்றது.
இரண்டாம் ஆட்டம்
கிரீஸ் - நைஜீரியா ( வெற்றி : கிரீஸ் (2 - 1) )
புளோயம்பாண்டீன், ஜூன் 17: உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் நைஜீரியாவை வீழ்த்தியதன் மூலம் கிரீஸ் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
இந்த ஆட்டத்தில் கிரீஸ் அணி 2-1 என்ற கோல்கள் கணக்கில் நைஜீரியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இவ்விரு அணிகள் மோதிய ஆட்டம் புளோயம்பாண்டீனில் இரவு 7.30 மணிக்கு நடைபெற்றது. ஆட்டத்தின் 16-வது நிமிடத்தில் நைஜீரிய வீரர் காலு உச்சே கோல் அடித்தார். முதல் பாதி ஆட்டத்தின் 44-வது நிமிடத்தில் கிரீஸ் வீரர் டிமிட்ரியோஸ் கோல் அடித்தார்.
முதல் பாதி ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் 1-1 கோல் கணக்கில் சமநிலை பெற்றன. இரண்டாவது பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கப் போராடியது.
அதன்பலனாக ஆட்டத்தின் 71-வது நிமிடத்தில் கிரீஸ் அணிக்கு கோல் கிடைத்தது. அந்த அணியின் வசிலிஸ் இந்த கோலை அடித்தார். இறுதியில் 2-1 கோல்கள் கணக்கில் கீரிஸ் அணி வெற்றி பெற்றது.
முன்றாம் ஆட்டம்
மெக்சிகோ - பிரான்ஸ் ( வெற்றி : மெக்சிகோ (2 - 0) )
போலாக்வானி: உலககோப்பை கால்பந்து தொடரிலிருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது முன்னாள் சாம்பியன் (1998) பிரான்ஸ் அணி. நேற்று நடந்த லீக் போட்டியில், பிரான்ஸ் அணி, மெக்சிகோவிடம் 0-2 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
தென் ஆப்ரிக்காவில் உலககோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. போலாக்வானியில் நேற்று நடந்த லீக் போட்டியில், "ஏ' பிரிவில் இடம் பெற்ற பிரான்ஸ், மெக்சிகோ அணிகள் மோதின.
பிரான்ஸ் ஏமாற்றம்: இப்போட்டியின் துவக்கம் முதலே இரு அணிகளும் கோல் அடிக்க கடுமையாகப் போராடின. நான்கு முறை (3, 10, 24, 31 வது நிமிடம்) "கார்னர் கிக்' வாய்ப்புகளை கோட்டை விட்டது பிரான்ஸ் அணி.
4 வது நிமிடத்தில் முரட்டாட்டம் ஆடிய மெக்சிகோ வீரர் பிரான்கோ "எல்லோ கார்டு' பெற்றார். எவ்ரா, ரிபரி, கல்லாஸ் உள்ளிட்ட பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர்கள் எதிர்பார்த்த அளவுக்கு விளையாட வில்லை. முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்க வில்லை.
இரண்டாவது பாதியில் மெக்சிகோ அணி அபாரமாக ஆடியது. 64 வது மெக்சிகோ வீரர் ஹெர்னாண்டஸ் சூப்பர் கோலடித்தார். இந்த சமயத்தில் பிரான்ஸ் வீரர் ஒருவர் கூட தற்காப்பு பகுதியில் இல்லை. இது பிரான்ஸ் அணியின் படுமோசமான ஆட்டத்தை காட்டியது.
இதனையடுத்து 78 வது நிமிடத்தில் மெக்சிகோ வீரர் பெரேராவை, பெனால்டி ஏரியாவில் காலால் தட்டினார் பிரான்ஸ் வீரர் அபிடால். இதனால் மெக்சிகோவுக்கு "பெனால்டி கிக்' வாய்ப்பு கிடைத்தது.
இதை கோலாக மாற்றினார் பிளான்கோ. தொடர்ந்து மோசமாக ஆடிய பிரான்ஸ் அணியால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் மெக்சிகோ வெற்றி பெற்றது.
இன்றைய ஆட்டங்கள்
ஜெர்மனி-செர்பியா, நேரம்: மாலை 5.
ஸ்லோவேனியா-அமெரிக்கா, நேரம்: இரவு 7.30.
இங்கிலாந்து-அல்ஜீரியா, நேரம்: இரவு 12 மணி.
No comments:
Post a Comment