Pages

Sunday, June 13, 2010

உலக கோப்பை கால்பந்து இரண்டாம் நாள் - ஒரு பார்வை

முதல் ஆட்டம்
தென் கொரியாவிடம் வீழ்ந்தது கிரீஸ்

போர்ட் எலிசபெத், ஜூன் 12: உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மூன்றாவது ஆட்டத்தில் கிரீûஸ வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தது தென்கொரியா (2}0).


÷போர்ட் எலிசபெத்தின் நெல்சன் மண்டேலா மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து முதல் சுற்றின் மூன்றாவது ஆட்டத்தில் தென்கொரியா-கிரீஸ் அணிகள் மோதின.


÷ஆட்டம் தொடங்கியது முதலே இரு அணிகளும் அபாரமாக விளையாடின. குறிப்பாக தென்கொரியாவின் லீ ஷங் யாங், லீ ஜங் ஸý, பார்க் ஜி சங், லீ யங் பியோ ஆகியோரின் ஆட்டத்தில் அனல் பறந்தது. ஆட்டத்தின் 7-வது நிமிடத்தில் தென்கொரிய வீரர் லீ ஜங் ஸý கோல் அடித்து கிரீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்தார். இதையடுத்து கிரீஸ் வீரர்களும் அபாரமாக விளையாடி கோல் அடிக்க முயற்சித்தனர். ஆனால் அவர்களின் முயற்சி பலிக்கவில்லை.

÷முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் தென்கொரிய அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

÷இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியதில் இருந்தே இரு அணி வீரர்களும் மிகவும் கவனமுடன் விளையாடினர். இரு நாட்டு ரசிகர்களும் அவ்வப்போது கரகோஷம் எழுப்பி தங்கள் அணியை உற்சாகப்படுத்தினர். ஆட்டத்தின் 52-வது நிமிடத்தில் தென்கொரிய வீரர் பார்க் ஜி சங் ஒரு கோல் அடித்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். அதன்பிறகு கிரீஸ் வீரர்கள் கோல் அடிக்க கடுமையாகப் போராடியும், தென்கொரிய வீரர்களின் சிறப்பான தடுப்பாட்டத்தால் கோல் அடிக்கமுடியவில்லை.

÷ஆட்டத்தின் 56-வது நிமிடத்தில் விதிகளை மீறியதாக கிரீஸ் வீரர் வசிலிஸ் டோரோசிடிஸýக்கு யெல்லோ கார்டு காண்பிக்கப்பட்டது.

÷இறுதியில் தென்கொரிய அணி 2-0 என்ற கோல்கள் கணக்கில் கிரீûஸ வீழ்த்தியது.

இதன்மூலம் இந்த உலகக் கோப்பையில் முதல் வெற்றியைப் பதிவு செய்த அணி மற்றும் இரு கோல்கள் அடித்த அணி என்ற பெருமையைப் பெற்றது.

இரண்டாம் ஆட்டம்
நைஜீரியாவை வீழ்த்தியது ஆர்ஜென்டீனா (1-0)
ஜோகன்னஸ்பர்க், ஜூன் 12: உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் சுற்று 4-வது ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் நைஜீரியாவை வீழ்த்தியது ஆர்ஜென்டீனா.


இவ்விரு அணிகள் மோதிய ஆட்டம் ஜோகன்னஸ்பர்க்கின் எல்லிஸ் பார்க்கில் சனிக்கிழமை நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 7-வது நிமிடத்தில் ஆர்ஜென்டீனா வீரர் கேபிரியேல் ஹெய்ன்ஸ் கோல் அடித்து ஆர்ஜென்டீனா ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். இதையடுத்து இரு அணிகளும் ஆக்ரோஷமாக ஆடின.


ஆட்டத்தின் 41-வது நிமிடத்தில் விதிமுறைகளை மீறிய ஆர்ஜென்டீனா வீரர் ஜோனாஸ் குட்டியெர்ரேஸýக்கு யெல்லோ கார்டை காண்பித்து நடுவர் எச்சரித்தார்.

கோல் அடித்த மகிழ்ச்​சி​யில் ஆர்​ஜென்​டீனா வீரர்​கள்

முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் ஆர்ஜென்டீனா அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதி ஆட்டத்தில் ஆர்ஜென்டீனா வீரர்களின் தடுப்பாட்டத்தால் நைஜீரியா வீரர்கள் கோல் அடிக்க முடியாமல் கடும் நெருக்கடிக்கு உள்ளாயினர்.

ஆர்ஜென்டீனா வீரர்கள் கோலடிப்பதைவிட தடுப்பாட்டத்திலேயே அதிக கவனம் செலுத்தியதால் நைஜீரிய அணியின் கோல் அடிக்கும் கனவு தகர்ந்தது. ஆட்டத்தின் 77-வது நிமிடத்தில் நைஜீரிய வீரர் லுக்மான் ஹருணாவுக்கு யெல்லோ கார்டு எச்சரிக்கை விடப்பட்டது.

இறுதியில் ஆர்ஜென்டீனா அணி 1-0 என்ற கோல் கணக்கில் நைஜீரியாவை வீழ்த்தியது.

ஆர்ஜென்டீனா பயிற்சியாளர் மரடோனா வெளியிலிருந்து தனது அணி வீரர்களுக்கு உற்சாகம் ஊட்டும் வகையில் அவ்வப்போது செய்கைமூலம் டிப்ஸ் வழங்கினார். 

முன்றாம் ஆட்டம்

இங்கிலாந்து - அமெரிக்கா போட்டி "டிரா' ஆனது 

ரஸ்டன்பர்க்: இங்கிலாந்து, அமெரிக்க அணிகள் மோதிய பரபரப்பான
உலக கோப்பை லீக் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் "டிரா'வில் முடிந்தது. இங்கிலாந்து கோல்கீப்பர் ராபர்ட் கிரீன் செய்த தவறு, அமெரிக்காவுக்கு சாதகமாக அமைந்தது.


தென் ஆப்ரிக்காவில் 19வது உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. நேற்று இரவு ரஸ்டன்பர்க்கில் நடந்த "சி' பிரிவு லீக் போட்டியில் இங்கிலாந்து, அமெரிக்க அணிகள் மோதின.

ஜெரார்டு கோல்:



முன்னாள் உலக சாம்பியனான இங்கிலாந்து அணி, எதிர்பார்த்தது போலவே துவக்கத்தில் கலக்கலாக ஆடியது. ஆட்டம் துவங்கிய நான்காவது நிமிடத்திலேயே கேப்டன் ஸ்டீவன் ஜெரார்டு சாமர்த்தியமாக கோல் அடிக்க, இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றது. 14வது நிமிடத்தில் அமெரிக்காவின் ஆன்யவு தனக்கு கிடைத்த வாய்ப்பை வீணாக்கினார்.

கீப்பர் தவறு:


ஆட்டத்தின் 40வது நிமிடத்தில் அந்த அதிர்ச்சி அரங்கேறியது. அமெரிக்காவின் கிளின்ட் டெம்ப்சி அசுர வேகத்தில் பந்தை அடித்தார். அதனை இங்கிலாந்து கோல்கீப்பர் ராபர்ட் கிரீன் பிடித்து, பின் நழுவவிட, பந்து கோல் லைனை கடந்து உள்ளே செல்ல, அமெரிக்க ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்தனர். இங்கிலாந்துக்கு எதிராக கோல் அடித்து வரலாறு படைத்தார் டெம்ப்சி. அதே நேரத்தில் மாபெரும் தவறு செய்த கிரீன், ரசிகர்களிடம் கை அசைத்து மன்னிப்பு கேட்டவாறு சோகத்தில் மூழ்கினார்.

முயற்சி வீண்:

இரண்டாவது பாதியில் இங்கிலாந்து வீரர்கள் கோல் அடிக்க கடுமையாக போராடிய போதும், பலன் கிடைக்கவில்லை. 52வது நிமிடத்தில் ஹெஸ்கி, வாய்ப்பை நூலிழையில் நழுவ விட்டார். அமெரிக்க தற்காப்பு பகுதி பலமாக இருந்ததால், லாம்பார்ட், ரூனேயின் முயற்சிகளும் வீணாகின. 



கோல்கீப்பர் கிரீன் செய்த தவறு, இங்கிலாந்தின் வெற்றியை பறிக்க, போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் "டிரா' ஆனது. இரு அணிகளும் தலா ஒரு புள்ளி பெற்றன.

இன்றைய ஆட்டங்கள்

1) அல்ஜீரியா-ஸ்லோவேனியா

இடம்: போலக்வானே நேரம்: மாலை 5.

2) செர்பியா-கானா

இடம்: பிரிடோரியா நேரம்: இரவு 7.30

3) ஜெர்மனி-ஆஸ்திரேலியா

இடம்: டர்பன் இரவு: இரவு 12 மணி.

நேரடி ஒளிபரப்பு ஈ.எஸ்.பி.என்

தொலைக்காட்சி
Blog Widget by LinkWithin

No comments:

Post a Comment