முதல் ஆட்டம்
செர்பியா - ஜெர்மனி ( வெற்றி : செர்பியா ( 1 - 0 ) )
போர்ட் எலிசபெத், ஜூன் 18: உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் செர்பியா 1-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனிக்கு அதிர்ச்சித் தோல்வியை அளித்தது.
இவ்விரு அணிகள் மோதிய ஆட்டம் தென்னாப்பிரிக்காவின் போர்ட் எலிசபெத்தில் நடைபெற்றது. இதில் பலம் வாய்ந்த அணியான ஜெர்மனி, செர்பியாவை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக ஆடினர். இதனால்அவ்வப்போது இரு அணி வீரர்களும் மஞ்சள் அட்டையால் எச்சரிக்கப்பட்டனர்.
முதல் பாதி ஆட்டம் முடிவடைய 7 நிமிடங்கள் இருந்தபோது மெக்சிகோ வீரர் மிலன் ஜொவானோவிக் கோல் அடித்து ஜெர்மனிக்கு அதிர்ச்சி அளித்தார். முதல் பாதி ஆட்டநேர முடிவில் செர்பியா 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
இதையடுத்து நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தில் ஜெர்மனி வீரர்கள் கோல் அடிக்க மேற்கொண்ட முயற்சியை செர்பியா வீரர்கள் தடுப்பாட்டத்தால் தகர்த்தனர்.
ஆட்டத்தின் 60-வது நிமிடத்தில் ஜெர்மனிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த வாய்ப்பையும் ஜெர்மனி தவறவிட்டது. இறுதியில் ஜெர்மனி 0-1 என்ற கோல் கணக்கில் செர்பியாவிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்தது.
இந்த ஆட்டத்தில் ஜெர்மனி வீரர் க்ளோஸ், ரெட் கார்டு பெற்று ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். ஜெர்மனி தரப்பில் 3 வீரர்களும், செர்பியா தரப்பில் 4 வீரர்களும் மஞ்சள் அட்டையால் எச்சரிக்கப்பட்டனர்.
முதல் ஆட்டத்தில் ஜெர்மனி வீரர்கள் ஆக்ரோஷமாக ஆடி 4-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் ஆட்டம்
அமெரிக்கா - ஸ்லோவேனியா ஆட்டம் "டிரா" ( 2 - 2 ) ஆனது
ஜோகன்னஸ்பர்க், ஜூன் 18: உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமெரிக்கா-ஸ்லோவேனியா ஆட்டம் டிராவில் (2-2) முடிந்தது.
முதல் பாதி ஆட்டத்தில் ஸ்லோவேனிய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். ஆட்டத்தின் 13-வது நிமிடத்தில் ஸ்லோவேனிய வீரர் பிர்சா கோல் அடித்து தனது அணியை முன்னிலை பெறச் செய்தார். முதல்பாதி ஆட்டம் முடிய 3 நிமிடங்கள் இருந்தபோது ஸ்லோவேனிய வீரர் லாடன் ஜூபிஜான்கிக் கோல் அடித்தார்.
இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் ஸ்லோவேனியா 2-0 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலை பெற்றது. இதையடுத்து நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் கோல் அடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதால் அமெரிக்க வீரர்கள் ஆக்ரோஷமாக ஆடினர்.
ஆட்டத்தின் 48-வது நிமிடத்தில் அமெரிக்க வீரர் லேன்டன் கோல் அடித்தார். அவரைத் தொடர்ந்து மற்றொரு அமெரிக்க வீரர் மைக்கேல் பிராட்லே 82-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இறுதியில் இரு அணிகளும் 2-2 என்ற கோல்கள் கணக்கில் சமநிலை பெற்றதால் ஆட்டம் டிராவில் முடிந்தது.
முன்றாம் ஆட்டம்
இங்கிலாந்து - அல்ஜீரியா ஆட்டம் "டிரா" ( 0 - 0 ) ஆனது
கேப்டவுன்: உலக கோப்பை கால்பந்து லீக் போட்டியில் இங்கிலாந்து அணி ஏமாற்றியது. அல்ஜீரியாவுக்கு எதிரான போட்டியை பரிதாபமாக "டிரா'(0-0) செய்தது.தென் ஆப்ரிக்காவில் 19வது உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. நேற்று கேப்டவுனின் நடந்த "சி' பிரிவு லீக் போட்டியில் உலக ரேங்கிங் பட்டியலில் 8வது இடத்தில் உள்ள இங்கிலாந்து, 30வது இடத்தில் அல்ஜீரிய அணியை எதிர்கொண்டது.
இப்போட்டியில் முன்னாள் சாம்பியனான இங்கிலாந்து அணி எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அல்ஜீரிய வீரர்கள் கடும் சவால் கொடுத்தனர். ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் ஹெஸ்கி அடித்த பந்து, இலக்கு தவறி பறந்தது.
அடுத்த நிமிடத்தில் அல்ஜீரியாவின் பவுகிரா நடத்திய தாக்குதலும் வீணானது. பின் இந்த அணியின் எப்டா, மாட்மோர் மேற்கொண்ட முயற்சிகளும் பலன் அளிக்கவில்லை. இங்கிலாந்து சார்பில் நட்சத்திர வீரர்களான வெய்ன் ரூனே, ஸ்டீவன் ஜெரார்டு, டெர்ரி உள்ளிட்டோர் கோல் வாய்ப்புகளை கோட்டை விட்டனர். இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில், முதல் பாதி மந்தமாக முடிந்தது.
இரண்டாவது பாதியில் இங்கிலாந்து வீரர்கள் துடிப்பாக ஆடிய போதும் "பினிஷிங்' இல்லாததால் கோல் அடிக்க இயலவில்லை. ஆட்டத்தின் 72வது நிமிடத்தில் ஜெரார்டு தலையால் முட்டி அடித்த பந்தை, அல்ஜீரிய கோல்கீப்பர் மெபோல்ஹி அருமையாக தடுத்தார்.
பின் 75வது நிமிடத்தில் ரூனே அடித்த பந்தையும் அழகாக தடுத்தார் மெபோல்ஹி. இப்படி கைக்கு எட்டிய வாய்ப்புகள் எல்லாம் வீணாக, களத்திற்கு வெளியே இருந்து இங்கிலாந்து அணிக்கு உற்சாகம் அளித்த பெக்காம் வெறுத்துப் போனார்.
அல்ஜீரிய தற்காப்பு பகுதி வீரர்கள் கடைசி வரை உறுதியாக போராட, போட்டி கோல் எதுவும் அடிக்கப்படாமல் டிராவில்(0-0) முடிந்தது. இரு அணிகளும் தலா ஒரு புள்ளி பெற்றன.
இன்றைய ஆட்டங்கள்
நெதர்லாந்து-ஜப்பான், நேரம்: மாலை 5 மணி.
கானா-ஆஸ்திரேலியா, நேரம்: இரவு 7.30.
கேமரூன்-டென்மார்க், நேரம்: இரவு 12 மணி.
No comments:
Post a Comment