Pages

Thursday, June 17, 2010

உலக கோப்பை கால்பந்து ஐந்தாம் நாள் ஆட்டம் - ஒரு பார்வை

முதல் ஆட்டம்
ஹோண்டுராஸ் - சிலி  ( வெற்றி : சிலி  ( 1 - 0 )  )

நெல்ஸ்புரூட், ஜூன் 16: உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 48 ஆண்டுகளுக்குப்பின் சிலி அணி தனது வெற்றியைப் பதிவு செய்தது.


நெல்ஸ்புரூட்டில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஹோண்டுராஸ் அணியை சிலி 1-0 என்ற கோல்கணக்கில் வென்றது.

இந்த ஆட்டம் தொடங்கியது முதலே பரபரப்பாக இருந்தது. பந்து இரு அணி வீரர்களிடமும் மாறிமாறி சென்றது. ஆட்டத்தின் 5-வது நிமிஷத்திலேயே சிலி வீரர் கார்மோனா மஞ்சள் அட்டை எச்சரிப்புக்கு உள்ளானார்.


தொடர்ந்து முரட்டு ஆட்டம் ஆடியதாக சிலியின் பெர்ணான்டஸýம் நடுவரால் எச்சரிக்கப்பட்டார். கோல் அடிக்கும் முயற்சியில் முதலில் சிலி வெற்றி பெற்றது. 


இந்த அணியின் ஜீன் பிஸýஜெர், தனக்குக் கிடைத்த வாய்ப்பை அருமையாகப் பயன்படித்து கோலாக்கினார். 34-வது நிமிடத்தில் இந்த கோல் அடிக்கப்பட்டது. இதன் மூலம் முதல்பாதியில் சிலி 1-0 என்ற கோல்கணக்கில் முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் ஹோண்டுராஸ் அணியினர் கோல் அடிக்க கடுமையாக முயற்சி மேற்கொண்டனர். எனினும் சிலி வீரர்களின் சிறப்பான தடுப்பு ஆட்டத்துக்கு முன் அவர்களின் முயற்சி பலிக்கவில்லை. இறுதியில் 1-0 கோல் கணக்கில் சிலி வென்றது.


இதன் மூலம் உலகக் கோப்பை கால்பந்தில் 48 ஆண்டுகளுக்குப் பின் சிலி தனது மற்றொரு வெற்றியைப் பதிவு செய்துள்ளது. முன்னதாக 1962-ம் ஆண்டில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்தில் யுகோஸ்லாவியாவை வென்றதே சிலி பெற்ற கடைசி வெற்றியாக இருந்தது.
இரண்டாம் ஆட்டம்
ஸ்பெயின் - ஸ்விட்சர்லாந்து ( வெற்றி : ஸ்விட்சர்லாந்து ( 1 - 0 ) )
டர்பன், ஜூன் 16: உலகக் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக எதிர்பார்க்கப்பட்ட ஸ்பெயின் முதல் ஆட்டத்திலேயே அதிர்ச்சித் தோல்வியடைந்தது. ஸ்விட்சர்லாந்து அணி ஒரு கோல் போட்டு வெற்றி பெற்றது.


டர்பனில் புதன்கிழமை நடைபெற்ற எச் பிரிவு முதல் ஆட்டத்தில் ஐரோப்பிய சாம்பியனும், இந்த உலகக் கோப்பையில் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாகக் கருதப்பட்ட ஸ்பெயின், பலம் குறைந்த ஸ்விட்சர்லாந்தை எதிர்கொண்டது. 


தொடக்கம் முதலே ஸ்பெயின் வீரர்களுக்கு ஈடுகொடுத்து ஸ்விட்சர்லாந்து வீரர்கள் விளையாடினர். இதனால் முதல் பாதி கோல் எதுவும் இல்லாமலேயே முடிவுக்கு வந்தது. இரண்டாவது பாதியில் இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக விளையாடினர். 


52-வது நிமிஷத்தில் ஸ்விட்சர்லாந்து வீரர் பெர்ணான்டஸ் கோல் அடித்து அசத்தினார். அவரது கோல் மூலம் ஸ்விட்ர்சர்லாந்து 1-0 என்ற முன்னிலையைப் பெற்றது.

பதிலுக்கு கோல் அடிக்க ஸ்பெயின் வீரர்கள் கடுமையாகப் போராடியும் பலன் ஏதும் கிடைக்கவில்லை. அவர்களின் கோல் அடிக்கும் முயற்சிகள் அனைத்தையும், ஸ்விட்சர்லாந்து முறியடித்தது.


இறுதியில் 1-0 என்ற கோல்கணக்கில் ஸ்விட்சர்லாந்து வென்றது. ஸ்பெயின் கால்பந்து தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்றாம் ஆட்டம்
உருகுவே - தென் ஆப்ரிக்கா ( வெற்றி : உருகுவே ( 3 - 0 ) )
பிரிடோரியா: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான உலககோப்பை கால்பந்து லீக் போட்டியில், உருகுவே அணி 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.


தென் ஆப்ரிக்காவில் 19 வது உலககோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. நேற்று பிரிடோரியாவில் நடந்த லீக் போட்டியில், "ஏ' பிரிவில் இடம் பெற்ற தென் ஆப்ரிக்கா, உருகுவே அணிகள் மோதின.


உருகுவே முன்னிலை: இப்போட்டியின் 22 வது நிமிடத்தில் உருகுவே அணிக்கு "பிரீ கிக்' வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இதை கோலாக்க தவறினார் சோரஸ். ஆட்டத்தின் 24 வது நிமிடத்தில், 90 அடி தூரத்திலிருந்து "பீல்டு கோல்' அடித்து அசத்தினார் உருகுவே வீரர் போர்லான். முதல் பாதியில் உருகுவே 1-0 என்ற முன்னிலை பெற்றது.


"ரெட் கார்டு': இரண்டாவது பாதியில் கோல் அடிக்க கடுமையாக போராடிய தென் ஆப்ரிக்க அணியினர் முரட்டாட்டத்தில் ஈடுபட்டனர். உருகுவே நட்சத்திர வீரர் சோரசை குறிவைத்து தாக்கினர் தென் ஆப்ரிக்க வீரர்கள். ஆட்டத்தின் 76 வது நிமிடத்தில் கோல் அடிக்க முற்பட்ட சோரசை, தென் ஆப்ரிக்க கோல் கீப்பர் குனே காலால் தட்டினார். இதனால் இவர் "ரெட் கார்டு' வழங்கப்பட்டு வெளியேறினார்.


இதன் மூலம் உருகுவே அணிக்கு "பெனால்டி கிக்' வாய்ப்பு கிடைத்தது. இதனை கோலாக மாற்றினார் போர்லான். ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் பெரைரா தலையால் முட்டி சூப்பர் கோலடிக்க, உருகுவேயிடம் 3-0 என்ற கோல் கணக்கில் பரிதாபமாக வீழ்ந்தது தென் ஆப்ரிக்கா.
Blog Widget by LinkWithin

No comments:

Post a Comment