Pages

Wednesday, June 16, 2010

உலக கோப்பை கால்பந்து நான்காம் நாள் ஆட்டம் - ஒரு பார்வை

முதல் ஆட்டம் 

ஸ்லோவேகியா - நியூசிலாந்து ஆட்டம் டிரா ஆனது ( 1 - 1) 
ரஸ்டன்பர்க், ஜூன் 15: உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஸ்லோவேகியா-நியூசிலாந்து ஆட்டம் டிராவில் (1-1) முடிந்தது.


÷இவ்விரு அணிகள் மோதிய ஆட்டம் கேப்டவுன் மைதானத்தில் நடைபெற்றது. இரண்டாவது முறையாக உலகக் கோப்பைக்கு தகுதிபெற்றுள்ள நியூசிலாந்து அணி முதல் ஆட்டத்தில் ஸ்லோவேகியாவை எதிர்கொண்டது.


÷இரு அணிகளும் சிறப்பாக விளையாடினாலும், முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளுக்குமே கோல்கள் கிடைக்கவில்லை. இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கிய 5-வது நிமிடத்தில் ஸ்லோவேகியா வீரர் ராபர்ட் விட்டேக் கோல் அடித்து நியூசிலாந்து அணிக்கு அதிர்ச்சி அளித்தார். இதனால் ஸ்லோவேகியா 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.


÷இதையடுத்து நியூசிலாந்து வீரர்கள் கோல் அடிக்க எடுத்த முயற்சிகளை ஸ்லோவேகியா வீரர்கள் சிறப்பான தடுப்பாட்டத்தின் மூலம் தகர்த்தனர். இதனால் நியூசிலாந்து அணிக்கு தோல்வி உறுதி என ரசிகர்கள் நினைத்திருந்தபோது எதிர்பாராதவிதமாக ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் நியூசிலாந்து வீரர் வின்ஸ்டன் ரெய்டு கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் தலா ஒரு கோலுடன் சமநிலை பெற்றன.


÷கடைசி நிமிடத்தில் நியூசிலாந்து வீரர் கோல் அடித்ததால் ஸ்லோவேகியாவின் வெற்றி பறிபோனது.



÷ஆட்டத்தின் 42-வது நிமிடத்தில் நியூசிலாந்து வீரர் டானி டாக்ஹெட்டும், 55-வது நிமிடத்தில் ஸ்லோவேகியா வீரர் டினோ ஸ்டிர்பாவும் மஞ்சள் அட்டையால் எச்சரிக்கப்பட்டனர். உலகக் கோப்பை போட்டியில் விளையாட இரண்டாவது முறையாக தகுதிபெற்றுள்ள நியூசிலாந்து அணி, தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் முதல் ஆட்டத்தை டிராவில் முடித்துள்ளது.
இரண்டாம் ஆட்டம்
போர்ச்சுக்கல்-ஐவரிகோஸ்ட் ஆட்டம் டிரா (0-0)
போர்ட் எலிசபெத், ஜூன் 15: உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் போர்ச்சுக்கல்-ஐவரி கோஸ்ட் ஆட்டம் (0-0) டிராவில் முடிந்தது.


÷இவ்விரு அணிகள் மோதிய ஆட்டம் போர்ட் எலிசபெத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்ளிட்ட முன்னணி வீரர்கள் அடங்கிய போர்ச்சுக்கல், ஐவரி கோஸ்ட் அணியுடன் ஆரம்பம் முதலே போராடினாலும் முதல் பாதி ஆட்டத்தில் கோல் போடவில்லை. 


இரண்டாவது பாதி ஆட்டத்திலாவது கோல் அடித்துவிடலாம் என்று நினைத்த போர்ச்சுக்கல் அணியின் கோல் கனவு ஐவரி கோஸ்ட் வீரர்களின் தடுப்பாட்டத்தால் தகர்ந்துபோனது.


÷ஆட்டத்தின் 80-வது நிமிடத்தில் போர்ச்சுக்கல் அணியின் ரொனால்டோ 40 அடி தூரத்தில் இருந்து கோல் கம்பத்தை நோக்கி பந்தை அடித்தார். அது கோலாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் துரதிருஷ்டவசமாக பந்து கோல் கம்பத்தை தாண்டி வெளியில் சென்றது. 


ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் கூடுதலாக 3 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டன. கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதையடுத்து ஆட்டம் டிராவில் (0-0) முடிவடைந்தது.
முன்றாம் ஆட்டம்
பிரேசில் - வடகொரியா ( வெற்றி : பிரேசில் ( 2 - 1 ) )


ஜோகனஸ்பர்க்: வடகொரியாவுக்கு எதிரான உலககோப்பை கால்பந்து லீக் போட்டியில் பிரேசில் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.


உலககோப்பை கால்பந்து தொடர் தென் ஆப்ரிக்காவில் நடக்கிறது. நேற்று நடந்த லீக் போட்டியில், "ஜி' பிரிவில் இடம் பெற்ற பிரேசில், வடகொரியா அணிகள் மோதின.


துவக்கம் ஏமாற்றம்: பரபரப்புடன் நடந்த இப்போட்டியின் 27 வது நிமிடத்தில் பிரேசில் அணிக்கும், 31 வது நிமிடத்தில் வடகொரியா அணிக்கும் "கார்னர் கிக்' வாய்ப்புகள் கிடைத்தன. 


இரு அணிகளும் வாய்ப்பை கோட்டை விட்டன. 21 வது நிமிடத்தில் கிடைத்த அருமையான வாய்ப்பை, பிரேசில் வீரர் ராபின்ஹோ தவற விட்டார். முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்க வில்லை.

சூப்பர் கோல்: இரண்டாவது பாதியில், பிரேசில் அசத்தியது. ஆட்டத்தின் 55 வது நிமிடத்தில் எலனோ கொடுத்த "சூப்பர் பாசை' கோலாக மாற்றினார் பிரேசில் வீரர் மைகான். இதனையடுத்த 72 வது நிமிடத்தில் ராபின்ஹோவிடம் பந்தை பெற்றுக் கொண்ட எலனோ சூப்பர் கோலடித்தார். 


இதற்கு 89 வது நிமிடத்தில் வடகொரியா பதிலடி கொடுத்தது. அந்த அணியின் ஜி யன் னாம் சற்றும் எதிர்பாராத வகையில் மின்னல் வேகத்தில் ஒரு கோலடித்தார். இருப்பினும் இறுதியில் பிரேசில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.


இன்றைய ஆட்டங்கள்

1) ஹோண்டுராஸ்-சிலி

இடம்: நெல்ஸ்புரூட்,

நேரம்: மாலை 5 மணி.

2) ஸ்விட்சர்லாந்து-ஸ்பெயின்

இடம்: டர்பன்,

நேரம்: இரவு 7.30.

3) தென்னாப்பிரிக்கா-உருகுவே

இடம்: பிரிடோரியா,

நேரம்: இரவு 12.
Blog Widget by LinkWithin

No comments:

Post a Comment