சென்னை: தெற்கு ரயில்வே நாளை முதல் 20க்கும் மேற்பட்ட புதிய ரயில்களை அறிமுகம் செய்கிறது. பல ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்படுகிறது.
தெற்கு ரயில்வேயின் புதிய கால அட்டவணை இன்று வெளியிடப்பட்டது. இதை பொது மேலாளர் தீபக் கிஷன் வெளியிட்டு தமிழகத்துக்கு மத்திய ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய எக்ஸ்பிரஸ் ரயில்களை அறிமுகம் செய்தார். அதன் விவரம்:
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கோவைக்கு 'தூரந்தோ எக்ஸ்பிரஸ்” என்ற புதிய ரயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது சென்னையில் புறப்பட்டு வழியில் எங்கும் நிற்காமல் கோவை செல்லும் 'நான் ஸ்டாப்' ரயில் ஆகும்.
இந்த ரயில் செவ்வாய்க்கிழமை தவிர வாரத்தின் அனைத்து நாட்களும் இயக்கப்படும்.
சென்னையிலிருந்து காலை 6.50 மணிக்கு கோவைக்கு இந்த ரயில் புறப்பட்டுச் செல்லும். மறுமார்க்கத்தில், கோவையிலிருந்து மாலை 3.05 மணிக்கு துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு இரவு 9.50 மணிக்கு சென்னையை வந்தடையும்.
சென்னை-ஹால்டியா (அஸ்ஸாம்) எக்ஸ்பிரஸ் ரயில். இது வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் சென்னையில் இருந்து புறப்படும்.
சென்டிரல்-நியூ ஜல்பால்புரி (அஸ்ஸாம்) எக்ஸ்பிரஸ் ரயில். இது வாரந்தோறும் சனிக்கிழமைகளில் சென்னையில் புறப்படும்.
கோவை-திருப்பதி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ். இந்த ரயில் வாரந்தோறும் செவ்வாய், வெள்ளி, ஞாயிறுக்கிழமைகளில் கோவையில் இருந்து புறப்படும்.
மதுரை-திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில். வியாழன், சனிக்கிழமைகளில் மதுரையில் இருந்து கேரள மாநிலம் போத்தனூர் வழியாக இந்த ரயில் செல்லும்.
திருச்சி-மங்களூர் எக்ஸ்பிரஸ். இந்த ரயில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் புறப்படும்.
நாகர்கோவில்- பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில். இந்த ரயில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மதுரை, ஓசூர் வழியாகச் செல்லும்.
புதுச்சேரி-காட்பாடி எக்ஸ்பிரஸ். இது வாரந்தோறும் புதன்கிழமைகளில்புதுச்சேரியில் இருந்து காட்பாடி செல்லும்.
மின்சார ரயில்கள்:
சென்னை- திருப்பதி- நெல்லூர் இடையே புதிய மின்சார ரயில்
வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும். இதேபோல சேலம்- காட்பாடி இடையே 6 நாட்களும், கோவை- ஈரோடு இடையே 6 நாட்களும் மின்சார ரயில்கள் இயக்கப்படும்.
மேலும் திருச்செந்தூர்-நெல்லை, மயிலாடுதுறை-தஞ்சாவூர், கோவை-பொள்ளாச்சி இடையே புதிய பயணிகள் ரயில் இயக்கப்படும். இந்த ரயில்களின் நேர அட்டவணை விரைவில் வெளியிடப்படும்.
சென்னை சென்ட்ரல்- அரக்கோணம், கடற்கரை- வேளச்சேரி, கடற்கரை- திருத்தணி இடையிலான ரயில்கள் அதிகரிக்கப்படுகின்றன. மேலும் பல ரயில்களின் வேகமும் அதிகரிக்கப்படுகிறது.
இன்று வெளியிடப்பட்டுள்ள புதிய ரயில்வே கால அட்டவணை நாளை முதல் அமலுக்கு வரும். தெற்கு ரயில்வேயில் 208 எக்ஸ்பிரஸ் ரயில்களும், 254 பாசஞ்சர் ரயில்களும், 688 மின்சார ரயில்களும் இயக்கப்படுகின்றன. இதன் மூலம் கடந்த ஆண்டு ரூ.2,354 கோடி வருவாய் கிடைத்தது.
தினமும் சராசரியாக 18 லட்சம் மக்கள் பயணிக்கிறார்கள். வருடத்துக்கு 68 கோடி பேர் பயணம் செய்கிறார்கள்.
சேலம்- நாமக்கல் 51 கிமீ புதிய ரயில் பாதை அமைக்கும் பணி 2011 மார்ச் மாதம் முடிவடையும் நாகூர்- காரைக்கால், நாகப்பட்டினம்- வேளாங்கண்ணி அகல ரயில் பாதை பணிகள் விரைவில் முடிக்கப்படும். மயிலாடுதுறை- திருவாரூர், திண்டுக்கல்- பழனி, நெல்லை- தென்காசி ஆகிய அகலப்பாதை பணிகள் மார்ச் மாதம் முடிவடையும்.
அனந்தபுரி, ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்களின் எண்கள் மாற்றப்பட்டுள்ளன என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
புதிய அட்டவணையில் ரயில்கள் நேரம் மாற்றம்
சென்னை சென்ட்ரல் - கோவை இடையே வாரத்தில் செவ்வாய் கிழமை தவிர, ஆறு நாட்கள் பகல் நேரத்தில் துரந்தோ ரயில் இயக்கப்படும். இந்த ரயில் (எண்.2243) சென்னை சென்ட்ரலிலிருந்து காலை 6.50 மணிக்கு புறப்பட்டு, மதியம் 1.30 மணிக்கு கோவை சென்றடையும். கோவையிலிருந்து (எண்.2244) மதியம் 3.05 மணிக்கு புறப்பட்டு, இரவு 9.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
கோவை - திருப்பதி இடையே, வாரத்தில் இரண்டு நாட்கள் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் (எண்.2758)கோவையிலிருந்து செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை 6 மணிக்கு புறப்பட்டு, அன்று மதியம் 1.30 மணிக்கு திருப்பதி சென்றடையும். திருப்பதியிலிருந்து புதன் மற்றும் சனிக்கிழமைகளில் இயக்கப்படும் ரயில் (எண்.2757) மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு, இரவு 10.40 மணிக்கு கோவை சென்றடையும்.
மதுரை - திருப்பதி இடையேயான எக்ஸ்பிரஸ் ரயில் மயிலாடுதுறை - விழுப்புரம் - வேலூர் - காட்பாடி வழியாக, வாரத்தில் சனி மற்றும் வியாழக்கிழமைகளில் மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 6.45 மணிக்கு திருப்பதி சென்றடையும். திருப்பதியிலிருந்து ஞாயிறு மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 10.25 மணிக்கு புறப்பட்டு, அன்று இரவு 10.25 மணிக்கு மதுரை சென்றடையும்.திருச்சி - மங்களூர் இடையே வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் (எண்.2653) திருச்சியிலிருந்து வாரத்தில் சனிக்கிழமைகளில் மாலை 6 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.25 மணிக்கு மங்களூர் சென்றடையும். மங்களூரிலிருந்து வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை (2654) இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8.15 மணிக்கு திருச்சி வந்தடையும்.நாகர்கோவில் - பெங்களூருவுக்கு மதுரை - ஓசூர் வழியாக வாராந்திர எக்ஸ்பிரஸ் சனி தோறும் இயக்கப்படுகிறது.
இந்த ரயில் (எண்.6538) நாகர்கோவிலில் இருந்து, சனிக்கிழமை பகல் 12.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4 மணிக்கு பெங்களூரு சென்றடையும். பெங்களூருவிலிருந்து இயக்கப்படும் வியாழக்கிழமை இரவு 11 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 2 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். இந்த ரயில்கள் அனைத்தும் விரைவில் இயக்கப்படவுள்ளன.புதுச்சேரியிலிருந்து வேலூர் - புவனேஸ்வர் வழியாக ஹவுராவுக்கு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் (எண்.2868) புதுச்சேரியிலிருந்து வாரத்தில் புதன் கிழமை மதியம் 1.20 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 10.25 மணிக்கு ஹவுரா சென்றடையும்.ஹவுராவிலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு, செவ்வாய் கிழமை காலை 8.50 மணிக்கு புதுச்சேரி சென்றடையும். இந்த ரயில் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து விழுப்புரம் செங்கல்பட்டு வழியாக இயக்கப்படுகிறது
நன்றி : தட்ஸ்தமிழ்
No comments:
Post a Comment