சென்னை, ஜூலை 8: இந்திய கிரிக்கெட் அணி சென்னையில் இருந்து வெள்ளிக்கிழமை இலங்கை புறப்பட்டுச் செல்கிறது.
இந்திய அணி இலங்கைக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. டெஸ்ட் போட்டிகள் ஜூலை 18 முதல் ஆகஸ்டு 7 வரை நடைபெறவுள்ளன. இதில் விளையாடும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் அனைவரும் வியாழக்கிழமை இரவு சென்னை வந்தனர்.
வெள்ளிக்கிழமை இந்திய அணி சென்னையில் இருந்து இலங்கை புறப்பட்டுச் செல்கிறது.
சில தினங்களுக்கு முன்பு திருமணம் செய்த இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி நேரடியாக இலங்கை செல்வதாக இருந்தது.
இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் உள்ள சென்னை கிரிக்கெட் கிளப்பில் வெள்ளிக்கிழமை இரவு பாராட்டு விழா நடைபெறுகிறது.
இதையடுத்து தோனி நேரடியாக இலங்கை செல்லாமல் சென்னை வந்து பாராட்டு விழாவில் பங்கேற்கிறார். பின்னர் சென்னையில் இருந்து இலங்கை புறப்பட்டுச் செல்கிறார்.
இந்தியா அணி விவரம்:
டோனி, கம்பீர், ஷேவாக், ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், வி.வி.எஸ்.லட்சுமண், சுரேஷ் ரெய்னா, முரளி விஜய் , விருத்திமான் சாஹா, ஹர்பஜன் சிங், அபிமன்யு மிதுன், அமீத் மிஸ்ரா, பிரக்யான் ஓஜா, இஷாந்த் சர்மா, ஸ்ரீசாந்த்.
இந்தியா & இலங்கை டெஸ்ட் தொடர் அட்டவணை
தேதி நேரம் போட்டி மைதானம்
ஜூலை 18 10:00AM 1st Test Sri Lanka v India Galle International Stadium
ஜூலை 26 10:00AM 2nd Test Sri Lanka v India Sinhalese Sports Club Ground, Colombo
ஜூலை 30 10:00AM 3rd Test Sri Lanka v India P Sara Oval, Colombo

No comments:
Post a Comment