சென்னை: இலங்கையில் நடக்க உள்ள கிரிக்கெட் தொடரில் பங்கேற்க, இந்திய கேப்டன் தோனி, அவரது மனைவி சாக்ஷியுடன் நேற்று கொழும்பு சென்றார்.
இலங்கை சென்றுள்ள இந்திய அணி, மூன்று டெஸ்ட் மற்றும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் 18ம் தேதி காலேயில் நடக்கிறது. இதற்காக சச்சின், சேவக், ரெய்னா உள்ளிட்ட இந்திய அணியினர் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து கொழும்பு சென்றனர்.
ஆனால் கேப்டன் தோனி, ஐ.பி.எல்., சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்பதற்காக இவர்களுடன் செல்லவில்லை.
பாராட்டுவிழாவில் பங்கேற்ற தோனிக்கு "மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்' சார்பில் கவுரவ உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. அதன்பின் தோனி, தனது மனைவி சாக்ஷியுடன் நேற்று சென்னையில் இருந்து கொழும்பு புறப்பட்டுச் சென்றார்.

No comments:
Post a Comment