பெங்களூர், ஜூலை 23: நித்யானந்தாவுடன் நான் இருப்பது போன்று சில தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான விடியோ காட்சிகள் போலியானவை என்று நடிகை ரஞ்சிதா தெரிவித்துள்ளார்.
தன்மீது பதிவு செய்யப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நித்யானந்தா தாக்கல் செய்த மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரித்து வரும் சிஐடி
போலீஸ் தரப்பில் ஒரு மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில் நடிகை ரஞ்சிதாவின் வாக்குமூலம் இணைக்கப்பட்டுள்ளது. அந்த வாக்குமூலத்தில் ரஞ்சிதா கூறியிருப்பதாவது:
நித்யானந்தாவின் பக்தை என்ற அடிப்படையில் அவரது படுக்கை அறைக்கு ஒரு முறையோ அல்லது 2 முறையோ மட்டும் சென்றிருப்பேன். அவருடன் உடல் ரீதியில் எந்த வகையான உறவும் நான் வைத்துக்கொண்டதில்லை.
நித்யானந்தாவுடன் என்னை இணைத்து வெளியிடப்பட்ட விடியோ டேப் போலியானது. அதில் இருப்பது நான் அல்ல என்று அந்த வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment