Pages

Monday, July 12, 2010

ரசிகர்கள் அபிமான நடிகர்-விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் விருது

சென்னையில் நடந்த கலைஞர் இசையருவி தொலைக்காட்சி விழாவில் நடிகர் விஜய்க்கு ரசிகர்கள்  அபிமான நடிகர் என்ற விருதினை, தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின்  வழங்கினார்.


கலைஞர் இசையருவி தொலைக்காட்சி சார்பில் ஆண்டுதோறும் இசைக்கலைஞர்கள், மற்றும் இசைக்கேற்ப நடித்தவர்கள் உள்ளிட்ட கலைஞர்களுக்கு பாராட்டு விழா நடத்தி விருதுகள் வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது.

அதில் ரசிகர்கள் அபிமான நடிகர் விருது விஜய்க்கு வழங்கப்பட்டது. இதனை உதயநிதி ஸ்டாலின் மற்றும் இயக்குநர்  தரணி வழங்கினர்.

சிறந்த அறிமுகப் பாடகராக ராகுல் நம்பியாருக்கு இயக்குநர் வசந்த் விருது வழங்கினார்.

சிறந்த அறிமுகப்பாடகி விருது நடிகையும் பாடகியுமான ஆன்ட்ரியாவுக்கு கிடைத்தது.

சிறந்த அறிமுக இசையமைப்பாளர் விருதை வெண்ணிலா கபடிக்குழு படத்தின் இசையமைப்பாளர் வி.செல்வகணேஷுக்கு இசையமைப்பாளர் (சங்கர்) கணேஷ் வழங்கினார்.

'அசிலிபிசிலி' சிறந்த பாடல்!

சிறந்த அறிமுகப்பாடலாக ஆதவன் படத்தில் இடம் பெற்ற அசிலி பிசிலி பாடல் தேர்வானது.

இந்தப் பாடலுக்கான விருதை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜுக்கு நடிகர் கார்த்தி வழங்கினார்.

சிறந்த முறையில் பாடலை காட்சிப்படுத்துவதற்கான விருதை சர்வம் படத்துக்காக டைரக்டர் விஷ்ணுவர்த்தன் பெற்றுக் கொண்டார்.

சிறந்த பாடல்ஆசிரியருக்கான விருது கவிஞர் பா.விஜய்க்கும், பாடகி விருது சின்மயிக்கும், சர்வதேச இசை சாதனையாளர் விருது ஏ.ஆர்.ரஹ்குமானுக்கும் வழங்கப்பட்டது.

பாடல் காட்சியில் சிறந்த நடிப்புக்கான விருது சூர்யாவுக்கு கிடைத்தது. ஒளிப்பதிவில் சிறந்த பாடலாக பொக்கிஷம் படத்தில் இடம் பெற்ற `நிலா நீ அது வானம்' பாடல் தேர்ந்தெடுக்கப்பட்டது.

கருணாஸுக்கு சிறந்த குத்துப்பாட்டு விருது

சிறந்த குத்துப்பாட்டுக்கான இசையமைப்பாளர் விருது ராஜாதி ராஜா படத்துக்கு இசைமைத்த நடிகரும் இசையமைப்பாளருமான கருணாசுக்கும், பின்னணி இசைக்கான விருது உன்னைப்போல் ஒருவன் படத்துக்கு இசையமைத்த ஸ்ருதி ஹாசனுக்கும் கிடைத்தது. ஸ்ருதி ஹாசனுக்கு விருதை இசையமைப்பாளர் இளையராஜா வழங்கினார்.

விழாவில் கலைஞர் டி.வி.யின் முதன்மை நிர்வாகி அமிர்தம், இளையராஜாவுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்தினார்.

விழாவில் கவிஞர் வாலிக்கும், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிமணியத்துக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டன.

நன்றி : தட்ஸ்தமிழ் 
Blog Widget by LinkWithin

No comments:

Post a Comment