தலைநகரம் படத்தில் துhள் கிளப்பிய சுந்தர் சி. - வடிவேலு கூட்டணி அந்தப் படத்துடன் உடைந்தது. குஷ்பு முதற்கொண்டு பலரும் ஒட்ட வைக்க முயன்றும் இந்த கூட்டணி கலகத்தை சரி செய்ய முடியவில்லை.
இந்நிலையில் ஷக்தி சிதம்பரத்தின் குரு சிஷ்யனில் சுந்தர் சி.யுடன் நடிக்க ஒப்பந்தமானார் வடிவேலு. சில காரணங்களால் இயக்குனருக்கும் வடிவேலுக்கும் முட்டிக் கொள்ள, மீண்டும் பிரிவு.
வடிவேலு இல்லாததால் தனது படங்களில் விவேக்கை நடிக்க வைத்தார் சுந்தர் சி. ஆனால் வடிவேலுவின் பிரசன்டேஷனில் கால்வாசியை கூட விவேக்கால் தர முடியவில்லை.
இந்நிலையில் சண்டையை மறந்து சுந்தர் சி. யின் நகரம் மறுபக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் வடிவேலு. இது தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகம் என்பதும், அனுயா ஹீரோயினாக நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment