சென்னை: எந்திரன் பட பாடல்கள் நேற்று வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் பாடல் சிடி விற்பனை சூடு பிடித்திருக்கிறது.சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிப்பில் ரஜினிகாந்த் ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள படம் எந்திரன். ஷங்கர் இயக்கியுள்ளார்.
ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல் சிடி உலகம் முழுவதும் நேற்று விற்பனைக்கு வந்தது.சன் பிக்சர்ஸ் ரஜினிகாந்த் ஷங்கர் ரகுமான் கூட்டணி என்பதால் உலகம் முழுவதும் இப்படத்துக்கு எதிர்ப்பார்ப்பு கூடியுள்ளது.
உலக தமிழர்கள் அனைவரும் பட பாடல்களை கேட்க ஆவலாக இருந்தனர். பாடல் நேற்று வெளியிடப்படுவதை அறிந்து நேற்று முன்தினமே பலர் ஆடியோ சிடி கடைகளில் திரண்டனர். எந்திரன் பாடல் சிடி வந்துவிட்டதா எங்களுக்காக சிடியை எடுத்து வையுங்கள் என ரசிகர்கள் கேட்டபடி இருந்தனர்.
பல இடங்களில் நேற்று அதிகாலை முதல் சிடி கடைகளில் கூட்டம் கூடிவிட்டது. கடைகளுக்கு சிடி வந்ததும் அதை வாங்க ரசிகர்கள் குவிந்துவிட்டனர்.தமிழகம் முழுவதும் ரஜினி ரசிகர்கள் பட்டாசு வெடித்து பாடல் சிடி வெளியானதை கொண்டாடினர்.
இதே போல அமெரிக்கா லண்டன் கனடா சிங்கப்பூர் மலேசியா என வெளிநாடுகளிலும் எந்திரன் சிடி விற்பனை விறுவிறுப்பாக நடைபெறுவதாக ஆடியோ நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.
எந்திரன்‘ படத்தில் மொத்தம் 7 பாடல்கள் இடம்பெறுகின்றன. ‘புதிய மனிதா‘ ‘காதல் அணுக்கள்‘ ‘அரிமா அரிமா‘ ஆகிய பாடல்களை கவிஞர் வைரமுத்து எழுதியுள்ளார். ‘கிளிமஞ்சாரோ‘ என்ற பாடலை பா.விஜய்யும் ‘இரும்பிலே ஒரு இருதயம்‘ ‘பூம்பூம் ரோபோடா‘ ஆகிய பாடலை கார்க்கியும் எழுதியுள்ளனர். இதுதவிர ‘சிட்டி டான்ஸ் ஷோகேஸ்‘ என்ற பாடலை ராப் பாடகர் யோகி. பி பிரவீன் மணி பிரதீப் விஜய் இணைந்து பாடியுள்ளனர்.
ஒவ்வொரு பாடலுக்கும் வித்தியாசமான முறையில் இசை அமைத்துள்ளார் ஏ.ஆர்.ரகுமான். பாடல்கள் அனைத்தும் சூப்பராக உள்ளது. இந்த பாடல்களை காட்சி வடிவத்தில் காண ஆவலாக உள்ளோம் என ரசிகர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment