மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘எந்திரன்‘ படத்துக்கு ‘யு’ சர்டிபிகேட் வழங்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் அதிக பொருட்செலவில் தயாரித்துள்ள படம் ‘எந்திரன்’.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக அழகி ஐஸ்வர்யா ராய் ஜோடியாக நடித்துள்ளனர். பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ளார். ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். ஆர்.ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா ரசிகர்கள் அனைவரும் வியக்கும் வகையில் மலேசியாவில் கோலாகலமாக நடந்தது. ஒரு தமிழ்ப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா மலேசியாவில் நடந்தது இதுவே முதல்முறை. மற்றொரு சிறப்பாக சென்னையில் கடந்த சனி அன்று ‘எந்திரன்’ டிரெய்லர் வெளியீட்டு விழா மிகப் பிரமாண்டமான முறையில் நடந்தது.
இதில் ஏராளமான திரையுலகினர் கலந்துகொண்டனர். இம்மாதம் ரிலீஸ் ஆக உள்ள ‘எந்திரன்’ படத்தை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் ‘எந்திரன்’ படத்தின் சென்சார் நேற்று நடந்தது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் ‘யு‘ சான்றிதழ் வழங்கினர்.

No comments:
Post a Comment