ஐந்தாவது முறையாக உலக குத்துச் சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய வீராங்கனை மேரி கோமுக்கு கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
அண்மையில், பார்படாஸில் நடைபெற்ற 6-வது உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியின், 48 கிலோஎடை பிரிவில் இந்திய வீராங்கனை மேரி கோம் தங்கப் பதக்கம் வென்றார்.
இதன் மூலம், தொடர்ந்து 5வது முறையாக தங்கப் பதக்கம் வென்று அவர் சாதனை படைத்தார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது டிவிட்டர் பக்கத்தில், மேரி கோமுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேரிகோம் சாதனை பற்றி தாம் அறிந்ததாகவும், இரண்டு குழந்தைகளுக்கு தாயான நிலையில் அவர் தங்கம் வென்று இருப்பது மிகப்பெரிய சாதனையாகும் என்று சச்சின் புகழாரம் சுட்டியுள்ளார்.
சச்சின் டெண்டுல்கரின் பாராட்டு தமக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருவதாக கூறியுள்ள மேரி கோம், இந்தியாவில் உள்ள அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் முன்னோடியாக உள்ள சச்சின் தன்னை பாராட்டியிருப்பது ஆனந்தத்தை தருவதாக தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment