Pages

Thursday, May 6, 2010

"சூப்பர்-8' போட்டிகள் இன்று துவக்கம்

பார்படாஸ்: "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் லீக் போட்டிகள் முடிந்து, விறு விறுப்பான "சூப்பர்-8' போட்டிகள் இன்று துவங்குகின்றன. இதில் பங்கேற்கும் இந்திய அணியினர் பார்படாசில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். லீக் போட்டியை போல, இந்த சுற்றிலும் பிற அணிகளுக்கு, ரெய்னா அச்சுறுத்தலாக இருப்பார் எனத் தெரிகிறது.

வெஸ்ட் இண்டீசில் நடக்கும் மூன்றாவது "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் லீக் போட்டிகள் நேற்றுடன் முடிந்தது. இன்று "சூப்பர்-8'
"இ' பிரிவில் போட்டிகள் நடக்கிறது. இதனிடையே இந்திய அணி, "சூப்பர்-8' சுற்றின் முதல் போட்டியில், நாளை ஆஸ்திரேலியாவை எதிர்த்து களம் காண்கிறது. இதற்காக வீரர்கள் பார்படாஸ், போய் சேர்ந்தனர்.

பயிற்சியில் வீரர்கள்: வயிற்று உபாதையில் இருந்து மீண்ட காம்பிர், ரெய்னா, யூசுப் பதான், ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக், ரெய்னா ஆகியோர், நேற்று கிறிஸ்டன் மேற்பார்வையில் லேசான பயிற்சியில் ஈடுபட்டனர். செயின்ட் லூசியா மைதானத்தை விட, பார்படாஸ் ஆடுகளம் வேகத்துக்கு ஒத்துழைக்கும் எனத்தெரிகிறது. தவிர, இங்கு பந்துகள் அதிகமாக பவுன்ஸ் ஆகும் என்பதால், இந்திய அணியினர் இதற்கேற்ப தயாராக உள்ளனர்.
ரெய்னா முன்னிலை: இதனிடையே இந்திய அணியில் பல பிரபலங்கள் இருந்த போதிலும், இத்தொடரின் அதிக ரன்குவிக்கும் வீரர் என, பலரும் சுட்டிக்காட்டுவது, இளம் ரெய்னாவைத் (23) தான். கடந்த ஐ.பி.எல்., தொடர் பைனலில், தனது சென்னை அணி கோப்பை வெல்ல காரணமாக இருந்த இவர், இப்போது தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக சதம் கடந்து அசத்தினார். தவிர, கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்ற இவர், கிளார்க் தலைமையிலான ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் தொல்லையாக இருப்பார் எனத் தெரிகிறது.
அனுபவம் உதவும்: இதுகுறித்து ரெய்னா கூறுகையில், "ஆஸ்திரேலிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்றது நல்ல அனுபவம். இங்கு பாண்டிங், ஹைடன் போன்றவர்கள் எனக்கு ஆலோசனை அளித்தனர். இவர்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். இது எனது எதிர்கால கிரிக்கெட்டுக்கு பெரும் உதவியாக இருக்கும்,'' என்றார். பலவீனம் தெரியும்.
இந்நிலையில் ரெய்னாவுடன் ஐ.பி.எல்., போட்டியில் பங்கேற்ற மைக்கேல் ஹசி கூறியது: ரெய்னா அதிக ஆற்றல் வாய்ந்த கிரிக்கெட் வீரர். இவர் சர்வதேச போட்டிகளில் ஜொலிப்பது உறுதி. ஐ.பி.எல்., தொடரில் இவருடன் இணைந்து விளையாடி உள்ளேன். போட்டியில் எந்த பகுதியில் அடித்து விளையாடுவாரோ, அதற்கு தகுந்து பீல்டர்களை நிறுத்துவோம். தவிர, இவரது பலவீனமும் தெரியும். இதுகுறித்து கேப்டன் மற்றும் சக வீரர்களுடன் ஆலோசித்து, அதற்கேற்ப திட்டமிட்டு குறிப்பிட்ட இடத்தில் பவுலிங் செய்து இவரை வீழ்த்துவோம். இவ்வாறு ஹசி கூறினார்.
பிளமிங் பாராட்டு: ரெய்னாவின் பேட்டிங் குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர் பிளமிங் (நியூசி.,) கூறுகையில்,"" கடந்த "டுவென்டி-20' உலக கோப்பை தொடரின் போது, "ஷார்ட் பிட்ச்' பந்துகளில் ரெய்னா திணறியது வெளிப்படையாக தெரிந்தது. ஆனால் தற்போது கடுமையான பயிற்சிகளுக்கு பின், இதில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளார். இதனால் தான் ஐ.பி.எல்., தொடரில் ரெய்னா சாதிக்க முடிந்தது. தவிர, இப்போது வெஸ்ட் இண்டீசிலும் அசத்துகிறார்,'' என்றார்.


































































































ICC T20 SUPER 8 FIXTURES


Thu 06 1st Match – PAK vs ENG 07:00 PM IST Kensington Oval, Barbados
Thu 06 2nd Match – SA vs NZ 11:00 PM IST Kensington Oval, Barbados
Fri 07 3rd Match – AUS vs IND 07:00 PM IST Kensington Oval, Barbados
Fri 07 4th Match WI vs SL11:00 PM IST Kensington Oval, Barbados
Sat 08 5th Match PAK vs NZ07:00 PM IST Kensington Oval, Barbados
Sat 08 6th Match ENG vs SA11:00 PM IST Kensington Oval, Barbados
Sun 09 7th Match WI vs IND 07:00 PM IST Kensington Oval, Barbados
Sun 09 8th Match SL vs AUS11:00 PM IST Kensington Oval, Barbados
Mon 10 9th Match PAK vs SA07:00 PM IST Beausejour Cricket Ground, St. Lucia
Mon 10 10th Match NZ vs ENG11:00 PM IST Beausejour Cricket Ground, St. Lucia
Tue 11 11th Match SL vs IND 10:30 PM IST Beausejour Cricket Ground, St. Lucia
Tue 12 12th Match WI vs AUS02:30 PM IST Beausejour Cricket Ground, St. Lucia
Thu 13 1st Semi-Final – TBC v TBC09:00 PM IST Beausejour Cricket Ground, St. Lucia
Fri 14 2nd Semi-Final – TBC v TBC09:00 PM IST Beausejour Cricket Ground, St. Lucia
Sun 16 Final – TBC v TBC09:00 PM IST Kensington Oval, Barbados
Blog Widget by LinkWithin

No comments:

Post a Comment