மும்பை:"கேன்சர்' நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மருத்துவ சிகிச்சைக்காக நிதி திரட்டுகிறார் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின். இதனை "டுவிட்டர்' இணையதளம் மூலம் அறிவித்துள்ளார்.
இந்திய அணியின் சாதனை வீரர் சச்சின். இவர், "டுவிட்டர்' இணையதளத்தில் சேர்ந்துள்ளார். முதலிரண்டு நாட்களுக்குள் இவரது ஆதரவாளர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்துள்ளது. மிக விரைவில் ஹாலிவுட் நடிகர் அஷ்டான் கச்சரின் 10 லட்சம் "டுவிட்டர்' ஆதரவாளர்கள் சாதனையை தகர்க்க உள்ளார்.
"டுவிட்டர்' ஏன்?: முன்பு சச்சின் பெயரில் சிலர் போலியாக "டுவிட்டரில்' கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இதனை தடுக்கவே முறைப்படி "டுவிட்டரில்' இணைந்ததாக சச்சின் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தனது நலனில் அக்கறை கொண்டவர்களுடன் உடனுக்குடன் தொடர்பு கொள்ள முடிவதாக குறிப்பிட்டுள்ளார்.
"கேன்சர்' உதவி: பல்வேறு சேவை பணிகளில் ஈடபட்டு வரும் சச்சின், "கேன்சர்' நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக நிதி திரட்ட உள்ளார். இது தொடர்பாக இவர், நேற்று "டுவிட்டரில்' வெளியிட்டுள்ள செய்தியில்,""கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட சில குழந்தைகள் போதிய வசதி இல்லாததால் சிகிச்சை பெற முடியாமல் தவிக்கின்றனர். இவர்கள், மருந்துகள் வாங்கவும், "ஆப்பரேஷன்' செலவுக்கு பணம் கொடுத்து உதவவும், நிதி திரட்ட உள்ளேன்,''என குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment