Pages

Friday, May 28, 2010

முத்தரப்பு கிரிக்கெட்: வெற்றியுடன் துவக்குமா ரெய்னா கூட்டணி ?

கோப்பையுடன் இந்திய கேப்டன் ரெய்னா, ஜிம்பாப்வே கேப்டன் எல்டன் சிகும்புரா, இலங்கை கேப்டன் தில்ஷன்.



புலவாயோ, மே 27: இந்தியா, இலங்கை, ஜிம்பாப்வே நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டி ஜிம்பாப்வேயின் புலவாயோ நகரில் வெள்ளிக்கிழமை துவங்குகிறது.

மூன்று அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை லீக் ஆட்டங்களில் மோதவுள்ளன. லீக் சுற்றின் முடிவில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் ஜூன் 9ம் தேதி இறுதிப் போட்டியில் மோதும்.

வெள்ளிக்கிழமை நடைபெறும் முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்தியாவும்-ஜிம்பாப்வேயும் சந்திக்கின்றன. இந்திய அணியில் டெண்டுல்கர், அதிரடி நாயகன் சேவாக், கேப்டன் மகேந்திர சிங் தோனி, யுவராஜ், ஜாகிர்கான் உள்பட 8 முன்னணி வீரர்கள் இடம்பெறாத நிலையில் இளம் வீரர்களுடன் களம் காண்கிறது ரெய்னா தலைமையிலான இந்திய அணி.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் துவங்க இன்னும் 9 மாதங்களே உள்ள நிலையில் தற்போது இந்திய அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரர்கள் தங்கள் திறமைகளை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

கேப்டன் ரெய்னா, இருபது உலகக்கோப்பையில் ஆடாத தற்போதைய துணை கேப்டன் விராட் கோலி, இடது கை சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஒஜா, லெக் ஸ்பின்னர் அமித் மிஸ்ரா ஆகியோர் தேர்வுக்குழுவினரின் நம்பிக்கையை காப்பாற்ற சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்னர்.

இருபது ஓவர் உலகக்கோப்பையில் ஆடிய ரோஹித் சர்மா, தினேஷ் கார்த்திக், யூசுப் பதான் ஆகியோரும், இளம் வீரர்களும் சிறப்பாக விளையாடினால் இந்தியா எளிதாக கோப்பையை வெல்லும். ஆப் ஸ்பின்னர் அஸ்வின், விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான நமன் ஒஜா ஆகியோர் மீதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு திரும்பியுள்ளது.

தற்போதைய ரெய்னா தலைமையிலான இந்திய அணிக்கு கவலையளிக்கும் ஒரே விஷயம் பெüலிங்தான். தற்போது இடம்பெற்றுள்ள அசோக் திண்டா, வினய் குமார், பங்கஜ் சிங், உமேஷ் யாதவ் உள்ளிட்ட பெüலர்கள் அனுபவம் குறைந்த இளம் வீரர்கள். இவர்கள் சிறப்பாக பந்து வீசும் பட்சத்தில் இந்தியா எளிதாக வெல்லும். இதில் பங்கஜ்சிங், ரோஹித், பிரக்யான் ஒஜா ஆகியோர் 2007-ல் தென்னாபிரிக்காவில் விளையாடிய அனுபவம் உள்ளவர்கள். இந்தியா கடைசியாக 2006-ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு சென்று விளையாடியது. அதன் பிறகு தற்போதுதான் அங்கு சென்றுள்ளது.

இந்தியாவைப்போல் இலங்கை அணியிலும் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, இளம் வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணி:

ரெய்னா (கேப்டன்), விராட் கோலி, அஸ்வின், அசோக் திண்டா, ரவீந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக், அமித் மிஸ்ரா, நமன் ஒஜா, பிரக்யான் ஒஜா, பங்கஜ் சிங், யூசுப் பதான், ரோஹித் சர்மா, முரளி விஜய், வினய் குமார், உமேஷ் யாதவ்.

ஜிம்பாப்வே அணி:

எல்டன் சிகும்புரா (கேப்டன்), ஆண்டி பிளிக்நாட், சாமு சிபாபா, சார்லஸ் கன்வென்ட்ரி, கிரீம் கிரீமெர், கிரேக் இர்வின், கிரேக் லம்ப், ஹாமில்டன் மசாகாட்ஸô, கிறிஸ் மோபு, ரே பிரைஸ், ரெய்ன்ஸ்போர்டு, உசி சிபந்தா, தட்டேன்டா தைபு, பிரெண்டன் டெய்லர், பிராஸ்பர் உட்சேயா.

இந்திய நேரப்படி

இந்தப்போட்டி பகல் {12.30}க்கு துவங்குகிறது. போட்டியை டென் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.


1) Fri May 28
07:00 GMT | 09:00 local
12:30 IST 1st Match - Zimbabwe v India

2) Sun May 30
07:00 GMT | 09:00 local
12:30 IST 2nd Match - India v Sri Lanka
Queens Sports Club, Bulawayo Mostly Cloudy 11 - 18° C


3) Tue Jun 1
07:00 GMT | 09:00 local
12:30 IST 3rd Match - Zimbabwe v Sri Lanka
Queens Sports Club, Bulawayo Showers 10 - 16° C

4) Thu Jun 3
07:00 GMT | 09:00 local
12:30 IST 4th Match - Zimbabwe v India
Harare Sports Club


5) Sat Jun 5
07:00 GMT | 09:00 local
12:30 IST 5th Match - India v Sri Lanka
Harare Sports Club


6) Mon Jun 7
07:00 GMT | 09:00 local
12:30 IST 6th Match - Zimbabwe v Sri Lanka
Harare Sports Club


7) Wed Jun 9
07:00 GMT | 09:00 local
12:30 IST Final - TBC v TBC
Harare Sports Club
Blog Widget by LinkWithin

No comments:

Post a Comment