Pages

Tuesday, June 22, 2010

உலக கோப்பை கால்பந்து 21 .06 . 2010 ஆட்டம் - ஒரு பார்வை

முதல் ஆட்டம்

போர்ச்சுக்கல் கோல் மழை (7-0) வடகொரியாவை வீழ்த்தியது.

கேப்டவுன், ஜூன் 21: உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் போர்ச்சுக்கல் 7-0 என்ற கோல் கணக்கில் வடகொரியாவை வீழ்த்தியது.


முதல் பாதி ஆட்டத்தில் ஒரு கோல், இரண்டாவது பாதி ஆட்டத்தில் அடுத்தடுத்து 6 கோல்கள் என மொத்தம் 7 கோல்கள் அடித்து போர்ச்சுக்கல் அணி கோல் மழை பொழிந்தது. இதன்மூலம் இந்த உலகக்கோப்பையில் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த அணி என்ற பெருமையைப் பெற்றது போர்ச்சுக்கல்.


ஆட்டம் துவங்கியது முதலே போர்ச்சுக்கல் வீரர்கள் அபாரமாக ஆடினர். குறிப்பாக ரொனால்டோ, ஷிமோ, தியாகோ, லீட்சன் ஆகியோர் ஆக்ரோஷமாக ஆடி வடகொரிய வீரர்களுக்கு கடும் சவாலை அளித்தனர். ஆட்டத்தின் 29-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார் போர்ச்சுக்கல்லின் ரெüல் மியர்லெஸ்.


முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் ஒரு கோல் மட்டுமே அடித்திருந்த போர்ச்சுக்கல், இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியதும் வெளுத்து வாங்கியது. 59-வது நிமிடத்தில் ஷிமோவும், 56-வது நிமிடத்தில் அல்மெய்டாவும், 60-வது நிமிடத்தில் தியாகோவும் கோல் அடித்து கால்பந்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தனர்.

ஒருமுனையில் போர்ச்சுக்கல் வீரர்கள் அடுத்தடுத்து கோல்கள் அடிக்க மறுமுனையில் வடகொரிய வீரர்கள் கோல் அடிக்கமுடியாமலும், போர்ச்சுக்கல் அணியின் கோல் மழையை தடுக்க முடியாமலும் தடுமாறினர்.


81-வது நிமிடத்தில் லீட்சனும், 87-வது நிமிடத்தில் ரொனால்டோவும், 89-வது நிமிடத்தில் தியாகோவும் கோல் போட்டனர்.

இறுதியில் போர்ச்சுக்கல் அணி 7 கோல்களை போட்டு 7-0 என்ற கோல் கணக்கில் வடகொரியாவை வீழ்த்தியது. இதுவரை நடைபெற்ற ஆட்டங்களில் மிகச்சிறந்த ஆட்டமாக இந்த ஆட்டம் அமைந்தது.

இரண்டாம் ஆட்டம்

ஸ்விட்சர்லாந்தை வீழ்த்தியது சிலி (1-0)

போர்ட் எலிசபெத், ஜூன் 21: உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் சிலி 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்விட்சர்லாந்தை வீழ்த்தியது.


இதன்மூலம் இரண்டாவது வெற்றியை ருசித்த சிலி, 6 புள்ளிகள் பெற்று எச் பிரிவில் முதலிடத்தில் உள்ளது. இதனால் சிலி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக ஆடினர். இதனால் அவ்வப்போது மஞ்சள் அட்டை எச்சரிப்புக்கு வீரர்கள் உள்ளாயினர்.


ஆட்டத்தின் 31-வது நிமிடத்தில் ஸ்விட்சர்லாந்து வீரர் வாலன் பெக்ராமி சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இதனால் அந்த அணி 10 வீரர்களுடன் விளையாடும் நிலைக்கு தள்ளப்பட்டது. முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளுக்கும் கோல்கள் கிடைக்கவில்லை.


இதையடுத்து நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தின் 75-வது நிமிடத்தில் சிலி வீரர் மார்க் கொன்ஸôலெஸ் கோல் அடித்தார். இதன்மூலம் சிலி அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்விட்சர்லாந்தை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் 9 வீரர்களுக்கு மஞ்சள் அட்டை எச்சரிக்கை விடப்பட்டது.

மூன்றாம் ஆட்டம்

ஸ்பெயின் அணி அசத்தல் வெற்றி - வெளியேறியது ஹோன்டுராஸ்

ஜோகனஸ்பர்க்: ஹோன்டுராஸ் அணிக்கு எதிரான உலக கோப்பை கால்பந்து லீக் போட்டியில், ஸ்பெயின் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் காலிறுதிக்கு முந்தைய சுற்றான "ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கான வாய்ப்பை அதிகப்படுத்திக் கொண்டது. தொடர்ந்து இரண்டு போட்டியில் தோல்வி கண்ட ஹோன்டுராஸ் அணி வெளியேறியது.


தென் ஆப்ரிக்காவில், 19வது "பிபா உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இதில் நேற்று ஜோகனஸ்பர்க், எல்லீஸ் பார்க் மைதானத்தில் நடந்த, "எச் பிரிவு லீக் போட்டியில் உலக ரேங்கிங் (தரவரிசை) பட்டியலில் 2வது இடத்தில் உள்ள ஸ்பெயின் அணி, ஹோன்டுராஸ் ("நம்பர்-38) அணியை எதிர்கொண்டது.

ஸ்பெயின் ஆதிக்கம்:


கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்கிய ஸ்பெயின் அணி, போட்டியின் துவக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் டேவிட் வில்லா, ஒரு சூப்பர் கோல் அடித்து நம்பிக்கை அளித்தார். தொடர்ந்து போராடிய ஹோன்டுராஸ் அணியினரால் பதிலடி கொடுக்க முடியவில்லை. இதனால் முதல் பாதி முடிவில் ஸ்பெயின் அணி 1-0 என முன்னிலை வகித்தது.

வீணான "ஹாட்ரிக்:

இரண்டாவது பாதியிலும் ஆதிக்கம் செலுத்திய ஸ்பெயின் அணிக்கு, டேவிட் வில்லா 51வது நிமிடத்தில் 2வது கோல் அடித்து அசத்தினார். இருப்பினும் ஸ்பெயின் அணியினர் தங்களுக்கு கிடைத்த "கார்னர் கிக் வாய்ப்புகளை வீணடித்தனர். 


இந்நிலையில் 62வது நிமிடத்தில் கிடைத்த "பெனால்டி கிக் வாய்ப்பை வீணடித்ததன்மூலம் டேவிட் வில்லா, தனது "ஹாட்ரிக் கோல் வாய்ப்பை கோட்டைவிட்டார். கடைசி வரை போராடிய ஹோன்டுராஸ் அணியினரால், ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. 


ஆட்டநேர முடிவில் ஸ்பெயின் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் "ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கான வாய்ப்பை அதிகப்படுத்திக் கொண்டது. ஆட்டநாயகனாக டேவிட் வில்லா தேர்வு செய்யப்பட்டார்.


இன்றைய ஆட்டங்கள்

1) மெக்சிகோ-உருகுவே, இடம்: ரஸ்டன்பர்க், நேரம்: இரவு 7.30.

2) பிரான்ஸ்-தென்னாப்பிரிக்கா, இடம்: புளோயம்பாண்டீன், நேரம்: இரவு 7.30.

3) நைஜீரியா-தென்கொரியா, இடம்: டர்பன், நேரம்: இரவு 12 மணி.

4) கிரீஸ்-ஆர்ஜென்டீனா, இடம்: போலக்வானே, நேரம்: இரவு 12 மணி.
Blog Widget by LinkWithin

No comments:

Post a Comment