
ஹராரே; முத்தரப்பு லீக் போட்டியில் இன்று இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் மீண்டும் மோதுகின்றன. இத்தொடரில் ஏற்கனவே ஜிம்பாப்வேயிடம் சந்தித்த தோல்விக்கு, இம்முறை ரெய்னா தலைமையிலான இளம் இந்திய அணி பழிதீர்க்க காத்திருக்கிறது.
முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயில் நடக்கிறது. இதன் முதல் சுற்று லீக் போட்டிகள் முடிந்த நிலையில் இந்தியா (4), இலங்கை, ஜிம்பாப்வே (4) அணிகள் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன. தவிர, ஒரு "போனஸ்' புள்ளி பெற்ற இலங்கை அணி (5) புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் இன்று துவங்கும் இரண்டாவது சுற்று லீக் போட்டியில் இந்திய அணி, ஜிம்பாப்வேயை சந்திக்கிறது.
ரோகித் நம்பிக்கை:இளம் இந்திய அணிக்கு பேட்டிங் மிகவும் பலமாக உள்ளது. கடந்த இரு போட்டிகளிலும் சதம் விளாசிய ரோகித் சர்மா தனது சூப்பர் ஆட்டத்தை தொடரலாம். ரவிந்திர ஜடேஜா, விராத் கோஹ்லியும் அசத்த உள்ளனர். கேப்டன் ரெய்னாவிடம் இருந்து அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.
துவக்க வீரர்கள் தினேஷ் கார்த்திக், முரளி விஜய் தொடர்ந்து சொதப்புவது கவலை அளிக்கிறது. யூசுப் பதானும் பொறுப்பாக ஆட காண வேண்டும். பேட்டிங் படை எழுச்சி கண்டால், இந்திய அணி பைனல் வாய்ப்பை உறுதி செய்யலாம்.
பவுலிங் ஆறுதல்:துவக்க வீரர்கள் தினேஷ் கார்த்திக், முரளி விஜய் தொடர்ந்து சொதப்புவது கவலை அளிக்கிறது. யூசுப் பதானும் பொறுப்பாக ஆட காண வேண்டும். பேட்டிங் படை எழுச்சி கண்டால், இந்திய அணி பைனல் வாய்ப்பை உறுதி செய்யலாம்.
ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் லீக் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு அனுபவமில்லாத பந்துவீச்சு தான் முக்கிய காரணம். இம்முறை டிண்டா, உமேஷ் யாதவ் ஆகியோர் பொறுப்பாக பந்துவீசி, ஜிம்பாப்வேயின் ரன் குவிப்பை கட்டுப்படுத்த வேண்டும். பிரக்யான் ஓஜா, அமித் மிஸ்ரா, ரவிந்திர ஜடேஜா ஆகியோரும் பொறுப்பாக பந்துவீச வேண்டும்.
மசகட்சா பலம்:ஜிம்பாப்வே அணியின் துவக்க வீரர் மசகட்சா முதல் இரு போட்டிகளில் 46, 62 ரன்கள் எடுத்து நல்ல "பார்மில்' உள்ளார். தவிர, கடந்த போட்டியில் இந்தியாவுக்கு எதிராக 81 ரன்கள் எடுத்த பிரண்டன் டெய்லர் மீண்டும் மிரட்டலாம். எர்வின், கவன்ட்ரி, கேப்டன் சிகும்பரா கைகொடுத்தால் இந்தியாவுக்கு கடும் போட்டியை தரலாம்.
இன்று சாதிப்பார்களா?முதல் போட்டியில் சற்று ஆறுதல் தந்த ஜிம்பாப்வேயின் பவுலர்கள், இலங்கைக்கு எதிரான ஒட்டுமொத்தமாக சொதப்பினர். இதனை உணர்ந்து இன்று மபோபு, பிரைஸ், சிகும்பரா, உத்சேயா மற்றும் லாம்ப் ஆகியோர் எழுச்சி காணலாம்.
இன்று வெற்றிபெறும் அணிக்கு, பைனல் வாய்ப்பு அதிகரிக்கும் என்பதால், இரு அணிகளும் கடும் போராட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது
இரு அணிகளும் தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் உள்ளதால் இந்த ஆட்டத்தில் வெற்றி பெறுவது இரு அணிகளுக்குமே முக்கியமானது.
இன்று மதியம் 12.30-க்கு ஹராரே நகரில் தொடங்குகிறது.
டென் ஸ்போர்ட்ஸ் சேனல் மற்றும் டிடி சேனல் ஆட்டத்தை நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.
No comments:
Post a Comment