
புதுடில்லி: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியிலிருந்து சச்சின் விலகியுள்ளார். சமீபகாலமாக சொதப்பி வரும் யுவராஜ், யூசுப் பதான் அதிரடியாக நீக்கப்பட்டனர். ஐ.பி.எல்., தொடரில் அசத்திய சவுரவ் திவாரி, அஸ்வின் ஆகியோர் அணியில் வாய்ப்பு பெற்றனர்.
இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 15 ம் தேதி முதல் 24 வரை இலங்கையில் நடக்க உள்ளது. இத்தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று டில்லியில் தேர்வு செய்யப்பட்டது.
சச்சினுக்கு ஓய்வு:ஆசிய கோப்பை தொடருக்கான அணியிலிருந்து சச்சின் தாமாக விலகியுள்ளார். தனது குழந்தைகளுடன் நேரத்தை செலவழிக்க விரும்பிய சச்சின், இத்தொடரிலிருந்து தனக்கு ஓய்வு அளிக்குமாறு இந்திய கிரிக்கெட் போர்டிடம் (பி.சி.சி.ஐ.,) கேட்டுக் கொண்டார். இதனையடுத்து அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
திவாரிக்கு வாய்ப்பு:
சமீபத்தில் இந்தியாவில் நடந்த மூன்றாவது ஐ.பி.எல்., தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் அசத்தினார் ஜார்கண்டை சேர்ந்த சவுரப் திவாரி. இவருக்கு அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதே போல தமிழக வீரர் அஸ்வின், பெங்கால் வேகப்பந்து வீச்சாளர் அசோக் டின்டா ஆகியோரும் அணியில் வாய்ப்பு பெற்றுள்ளனர்.
மீண்டும் வருகை:
ஜிம்பாப்வே முத்தரப்பு தொடரில் பங்கேற்காமல் ஓய்விலிருந்த தோனி, மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். காயத்திலிருந்து குணமடைந்த சேவக், துணை கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். இவர்கள் தவிர, காம்பிர், ஜாகிர் கான், நெஹ்ரா, ஹர்பஜன், பிரவீண் குமார் ஆகியோர் அணிக்கு திரும்பினர். விராட் கோஹ்லி, ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னா, ரவிந்திர ஜடேஜா, பிரக்யான் ஓஜா ஆகியோரும் தங்களது இடத்தை உறுதி செய்தனர்.
யுவராஜ் நீக்கம்:
சமீபகமாலமாக சொதப்பி வந்த முன்னணி வீரர்களான யுவராஜ் சிங், யூசுப் பதான், தினேஷ் கார்த்திக் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டனர். அமித் மிஸ்ராவுக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இந்திய தேர்வுக் குழு தலைவர் ஸ்ரீகாந்த் கூறியது: கடந்த ஓராண்டுகளாக அணியின் செயல்பாடுகளை வைத்து வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள அணி, முற்றிலும் பலமானது. கேப்டன் தோனிக்கும் அணித் தேர்வு திருப்தி அளித்துள்ளது. தகுதியின் அடிப்படையில் தான் வீரர்கள் தேர்வு நடந்துள்ளது. இதில், தனி ஒரு வீரரைப் பற்றி கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. சமீபகாலமாக அணியின் பீல்டிங் பெரும் ஏமாற்றம் அளித்தது. தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள அணியில், பீல்டிங்கிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
இளம் வீரர்களின் திறமையை பரிசோதிக்கவே, ஜிம்பாப்வே முத்தரப்பு தொடருக்கான அணி தேர்வு செய்யப்பட்டது. இத்தொடரில் ஒரு சிலர் சிறப்பாக செயல்பட்டனர். மற்றவர்களுக்கு திறமையை நிரூபிக்க இன்னும் கால அவகாசம் தேவை. இவ்வாறு ஸ்ரீகாந்த் கூறினார்.
அணி விபரம்:இளம் வீரர்களின் திறமையை பரிசோதிக்கவே, ஜிம்பாப்வே முத்தரப்பு தொடருக்கான அணி தேர்வு செய்யப்பட்டது. இத்தொடரில் ஒரு சிலர் சிறப்பாக செயல்பட்டனர். மற்றவர்களுக்கு திறமையை நிரூபிக்க இன்னும் கால அவகாசம் தேவை. இவ்வாறு ஸ்ரீகாந்த் கூறினார்.
தோனி (கேப்டன்), சேவக் (துணை கேப்டன்), காம்பிர், விராட் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா, ரோகித் சர்மா, ரவிந்திர ஜடேஜா, ஹர்பஜன், பிரவீண் குமார், ஜாகிர் கான், நெஹ்ரா, பிரக்யான் ஓஜா, அசோக் டின்டா, அஸ்வின் மற்றும் சவுரப் திவாரி.
போட்டி அட்டவணை
தேதி போட்டி அணிகள்ஜூன் 15 முதல் போட்டி இலங்கை-பாக்.,
ஜூன் 16 2 வது போட்டி இந்தியா-வங்கதேசம்
ஜூன் 18 3 வது போட்டி இலங்கை-வங்கதேசம்
ஜூன் 19 4 வது போட்டி இந்தியா-பாக்.,
ஜூன் 21 5 வது போட்டி பாக்.,-வங்கதேசம்
ஜூன் 22 6 வது போட்டி இந்தியா-இலங்கை
ஜூன் 24 பைனல்
* போட்டிகள் அனைத்தும் தம்புலாவில் நடக்க உள்ளன.
No comments:
Post a Comment