புதுடெல்லி: தமிழகத்தின் விருதுநகரில் கைத்தறிப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் கொண்ட தொழில்பேட்டை விரைவில் செயல்படத் தொடங்கும் என மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன் தெரிவித்தார். பருத்தி நியாய விலையில் கிடைப்பதற்காக கோவை மற்றும் ராஜபாளையத்தில் இரண்டு விற்பனை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
திருப்பூரில் சாயப் பட்டரை கழிவுநீரை சுத்திகரிக்கும் ஆலைக்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். கைவினை பொருட்களுக்கு சர்வதேச விற்பனை சந்தையை உருவாக்கும் நோக்கத்தில் புதிதாக இரண்டு இணையதளங்கள் மற்றும் இபுக் வசதியை மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன் டெல்லியில் நேற்று துவக்கிவைத்தார்.
அதோடு ஜவுளித் துறையின் மறுமலர்ச்சி 2009 - 2010ல் கடந்து வந்த மைல்கற்கள் என்ற தலைப்பில் ஜவுளித் துறையின் ஓராண்டு சாதனைகள் குறித்த கையேட்டையும் வெளியிட்டார். இது தொடர்பாக நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தயாநிதி மாறன் பேசியதாவது கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் மத்திய ஜவுளித் துறை அமைச்சராக நான் பொறுப்பேற்றபோது சர்வதேச நிதிநெருக்கடியால் உலக பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது.
இந்திய ஜவுளிகளுக்கு முக்கிய சந்தையாக விளங்கும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து ஆர்டர்கள் குறைந்து ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டது.இத்துறையை சரிவிலிருந்து மீட்பதற்காக ஒவ்வொரு பிரிவுக்கும் 100 நாள் செயல் திட்டம் வகுக்கப்பட்டது. அரசின் அனைத்து ஊக்குவிப்பு திட்டங்களும் விரைவுபடுத்தப்பட்டது. இதன்படி குறிப்பிட்ட நாட்களுக்குள் 100 சதவீத இலக்கு எட்டப்பட்டது. மத்திய அரசு ஜவுளித் துறைக்கு ஒதுக்கிய ரூ.500 கோடியில் 99.4 சதவீதம் பயன்படுத்தப்பட்டது.
ஊக்குவிப்புச் சலுகையின் ஒரு பகுதியாக தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் பெற்ற கடனுக்கு செலுத்திய வட்டியான ரூ.546 கோடியை திருப்பித் தர கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி உத்தரவிட்டேன். இந்தத் தொகை 12,514 பயனாளிகளுக்கு மூன்றே நாட்களில் வழங்கப்பட்டது. இதனால் இத்துறையில் பணப்புழக்கம் அதிகரித்தது.
கடந்த ஆண்டு ஜவுளித் துறையின் முன்னேற்றத்துக்காக சில திட்டங்களை வகுத்து அதற்கு அனுமதி அளிக்குமாறு மத்திய நிதி அமைச்சருக்கு கோரிக்கை வைத்தேன். இதை ஏற்றுக் கொண்டு கடந்த ஆண்டு ஜூலையில் பட்ஜெட் உரையின்போது 5 புதிய மெகா கிளஸ்டர்களை அமைப்பதற்கான அறிவிப்பை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளியிட்டார்.
தமிழகத்தின் விருதுநகரில் கைத்தறிப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் அடங்கிய மையத்தை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதேபோல் ராஜஸ்தானின் பில்வாரா உத்தர பிரதேசத்தின் மிர்சாபூர் பதோஹி ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகர் மற்றும் மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் ஆகிய இடங்களிலும் கைத்தறி தயாரிப்பு மையங்களை நிறுவுவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.காஞ்சிபுரத்தில் அறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு ஒருங்கிணைந்த பட்டு ஜவுளி பூங்கா அமைக்கப்பட உள்ளது.
இதற்கு மத்திய அரசு ரூ.40 கோடி வரை வழங்கும். திருப்பூர் சாயப் பட்டரை உரிமையாளர்கள் ஆலைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரிப்பதற்கான ஆலை அமைப்பதற்கு போதுமான நிதி இல்லாமல் தவித்தனர். இதுகுறித்து மத்திய அரசுக்கு எடுத்துக் கூறினேன். இதையடுத்து திருப்பூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்க மத்திய அரசு ரூ.200 கோடி ஒதுக்கி உள்ளது. சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்பட்டு வருகிறது. மூடப்பட்ட என்டிசி ஆலைகளை நவீனப்படுத்துவதற்கான திட்டம் வகுக்கப்பட்டது.
இதன்படி கடந்த நிதியாண்டில் 18 மில்கள் நவீனப்படுத்தப்பட்டு மீண்டும் உற்பத்தியை தொடங்கி உள்ளன.அண்மையில் பருத்தி விலை அதிகரித்ததால் ஜவுளித் துறைக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. சர்வதேச சந்தையில் போட்டி போடுவதற்கு ஜவுளித் துறையினருக்கு நியாயமான விலையில் பருத்தி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதை உணர்ந்து பருத்தி விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பருத்தி ஏற்றுமதிக்கான ஏற்றுமதி வரியை டன் ஒன்றுக்கு ரூ.500 ஆக உயர்த்தியது பருத்தி நூல் மீதான ஊக்கத் தொகையை திரும்பப் பெற்றது உள்ளிட்ட நடவடிக்கைகளால் விலை குறைந்துள்ளது. மேலும் நியாய விலையில் கிடைப்பதற்காக கோயம்புத்தூர் மற்றும் ராஜபாளையத்தில் 2 விற்பனை மையங்கள் திறக்கப்பட்டன.ஜவுளித் துறையினர் நவீன தொழில்நுட்பங்களை தெரிந்து கொள்வதற்கு வசதியாக ஜவுளி அமைச்சகத்தின் இணையதளம் பல்வேறு புதிய தகவல்களுடன் மேம்படுத்தப்பட்டது.
மார்க்கெட்டிங் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. நெசவாளர்கள் இலவசமாக டவுன்லோடு செய்வதற்கு வசதியாக தேசிய டெக்ஸ்டைல் டிசைன் மைய இணையதளத்தில் 1150 நவீன டிசைன்கள் வழங்கப்பட்டுள்ளன.இவ்வாறு அமைச்சர் தயாநிதி மாறன் தெரிவித்தார்.

No comments:
Post a Comment