Pages

Saturday, June 12, 2010

உலக கோப்பை கால்பந்து முதல் நாள் ஆட்டங்கள் - ஒரு பார்வை

முதல் ஆட்டம்:

 தென்னாப்பிரிக்கா - மெக்சிகோ மோதல்: டிராவில் முடிந்தது 


ஜோகன்னஸ்பர்க், ஜூன் 11: தென்னாப்பிரிக்கா-மெக்சிகோ அணிகள் மோதிய உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் ஆட்டம் டிராவில் முடிவடைந்தது..

தென்னாப்பிரிக்கா-மெக்சிகோ அணிகள் மோதிய முதல் ஆட்டம் ஜோகன்னஸ்பர்க் சாக்கர்சிட்டி மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இரு அணி வீரர்களும் ஆரம்பம் முதலே அபாரமாக விளையாடினர். முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் இரு அணிகளும் கோல் ஏதும் போடவில்லை.

இரண்டாவது பாதி ஆட்டத்தின் 55-வது நிமிடத்தில் தென்னாப்பிரிக்க வீரர் சிபிவே ஷபலால் ஒரு கோல் அடித்து தென்னாப்பிரிக்க ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். இதனால் தென்னாப்பிரிக்க அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
தொடர்ந்து தென்னாப்பிரிக்க வீரர்கள் தடுப்பாட்டம் ஆடினர். மெக்சிகோ அணி வீரர்கள் கோல் அடிக்க தீவிரமாகப் போராடினர். அதன்பலனாக 79-வது நிமிடத்தில் மெக்சிகோ வீரர் ரபேல் மார்கஸ் கோல் அடித்தார். ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சம நிலையில் இருந்தன. இதையடுத்து ஆட்டம் டிராவில் முடிந்தது.


இரண்டாவது ஆட்டம்

பிரான்ஸ் - உருகுவே ஆட்டம் டிராவில் முடிந்தது
கேப்டவுன்: முன்னாள் உலகச் சாம்பியன்களான பிரான்ஸ் இந்த உலகக் கோப்பையின் முதல் போட்டியில் உருகுவே அணியுடன் டிரா செய்தது.


உலகக் கோப்பை போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் நேற்றுத் தொடங்கின. இதி்ல் கேப்டவுன் கிரீன்பாயிண்ட் மைதானத்தில் நேற்று நடந்த ஏ பிரிவு ஆட்டமொன்றில் பிரான்ஸும் உருகுவேயும் மோதின. பிரான்சின் நட்சத்திர வீரர்களான தியரி ஹென்றி மற்றும் புளோரெனட் மலௌடா ஆகியோர் ஆடும் அணியில் இடம்பெறவில்லை.


இரு அணிகளுமே தொடக்கத்தில் சிறப்பாக ஆடின. எனினும் அடுத்தடுத்து கிடைத்த கோல் வாய்ப்புகளை இரு அணிகளுமே தவறவிட்டன.


எட்டு நிமிடங்கள் மீதமிருக்கும்போது முரட்டு ஆட்டம் ஆடியதற்காக உருகுவே அணியின் நிகோலஸ் லோடீரோ சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார்.


ஆட்டத்தின் இறுதிவரை இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனால் ஆட்டம் டிராவில் முடிந்தது.

இன்றைய ஆட்டங்கள் 
இன்று ஆர்ஜென்டீனா - நைஜீரியா மோதல்

ஆர்ஜென்டீனா அணியைப் பொறுத்தவரையில் லயோனல் மெஸ்ஸி தற்போது முன்னணி வீரராக வலம் வருகிறார். உலகக் கோப்பை போட்டியின் நட்சத்திர வீரர்களில் அவரும் ஒருவர்.

ஜோகன்னஸ்பர்க், ஜூன் 12: உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் சனிக்கிழமை நடைபெறும் முதல்சுற்று ஆட்டத்தில் ஆர்ஜென்டினா-நைஜீரியா அணிகள் மோதுகின்றன.

இவ்விரு அணிகள் மோதும் ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறுகிறது.
Blog Widget by LinkWithin

No comments:

Post a Comment