முதல் ஆட்டம்
ஜப்பான் - காமரூன் ( வெற்றி : ஜப்பான் ( 1 - 0) )
வெளிநாட்டு மண்ணில் ஜப்பான் பெறும் முதல் உலகக் கோப்பை கால்பந்து வெற்றி இது என்பதால் ஜப்பான் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
காமரூன் அணி பல ஜாம்பவான்களை கடந்த காலத்தில் வீழ்த்திய அணி என்பதால் இந்தத் தொடரிலும் அது பயமுறுத்தலாம் என நம்பப்படுகிறது. மேலும், அந்த அணியின் இளம் வீரர் எட்டோ, முன்னாள் ஜாம்பவான் ரோஜர் மில்லாவைப் போல மிரட்டுவார் என காமரூன் பயிற்சியாளரும் கூறியிருந்தார்.
ஆனால் நேற்றைய ஆட்டத்தில் ஹோண்டா சக்தி, எட்டோ சக்தியை அடக்கி விட்டது. கெல்சுகே ஹோண்டா 39வது நிமிடத்தில் அபாரமான கோலைப் போட்டார். அதன் பிறகு ஜப்பானியர்கள் தடுப்பாட்டத்திற்குப் போய் விட்டனர்.
2வது பாதி ஆட்டத்தில் காமரூன் மிகவும் தீவிரமாக ஆடியது. இதனால் ஜப்பான் வீரர்கள் திணற நேரிட்டது. இருப்பினும் அதை லாவகமாக சமாளித்து காமரூன் கோல் போட்டு விடாமல் தடுத்து விட்டனர்.
ஞாயிற்றுக்கிழமைதான் தனது 24வது பிறந்த நாளைக் கொண்டாடினார் ஹோண்டா. அவருக்கு நேற்றைய ஆட்டம் தாமதமான பிறந்த நாள் பரிசாக வந்து சேர்ந்துள்ளது.
இரண்டாம் ஆட்டம்
நெதர்லாந்து - டென்மார்க் ( வெற்றி : நெதர்லாந்து ( 2 - 0 ) )
ஜோகன்னஸ்பர்க், ஜூன் 14: உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் நெதர்லாந்து 2-0 என்ற கோல்கள் கணக்கில் டென்மார்க்கை வென்றது.
÷இந்த ஆட்டத்தில் டென்மார்க் வீரர் சைமன் பவுல்சன் சேம் சைடு கோல் மூலம் எதிரணியான நெதர்லாந்துக்கு கோல் பெற்றுத்தந்தது குறிப்பிடத்தக்கது.
÷இவ்விரு அணிகள் மோதிய ஆட்டம் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள சாக்கர்சிட்டி மைதானத்தில் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. ஆட்டத்தின் துவக்கம் முதலே இரு அணிகளும் சிறப்பாக விளையாடியதால் முதல் பாதி ஆட்டம் வரை இரு அணிகளுக்கும் கோல் கிடைக்கவில்லை.
÷இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில் இரண்டாவது பாதி ஆட்டம் துவங்கியது. ஆட்டத்தின் 46-வது நிமிடத்தில் டென்மார்க் வீரர் சைமன் பவுல்சன் சேம் சைடு கோல் அடித்தார். இதன்மூலம் 1-0 என்ற கணக்கில் நெதர்லாந்து முன்னிலை பெற்றது.
÷சேம் சைடு கோலால் அதிர்ச்சியடைந்த டென்மார்க் வீரர்கள் கோலடிக்க எடுத்த முயற்சிகள் அனைத்தையும் நெதர்லாந்து வீரர்கள் தடுத்து நிறுத்தினர். ஆட்டம் முடிவதற்கு 5 நிமிடங்கள் இருந்த நிலையில் 85-வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் திர்க் குய்த் கோல் அடித்தார். இறுதியில் நெதர்லாந்து 2-0 என்ற கணக்கில் டென்மார்க்கை வீழ்த்தியது.
÷நெதர்லாந்து வீரர்கள் இருவருக்கும், டென்மார்க் வீரர் ஒருவருக்கும் மஞ்சள் அட்டை எச்சரிக்கை விடப்பட்டது.
சேம் சைடு கோல்
ஆட்டத்தின் 46-வது நிமிடத்தில் டென்மார்க்கின் கோல் கம்பத்தை நோக்கி நெதர்லாந்து வீரர்கள் பந்தை எடுத்துச் சென்றனர். நெதர்லாந்து வீரர் ராபின் வான் பெர்ஸி பந்தை கோலை நோக்கி அடித்தார். அப்போது டென்மார்க் வீரர் சைமன் பவுல்சன் தலையால் பந்தை தடுத்தார்.
ஆனால் எதிர்பாராதவிதமாக பந்து பவுல்சனின் தலையில் பட்டு கோலானது. இந்த உலகக் கோப்பையில் முதல் சேம் சைடு கோல் அடித்த வீரர் சைமன் பவுல்சன் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்றாம் ஆட்டம்
இத்தாலி - பராகுவே போட்டி "டிரா"
கேப்டவுன்: இத்தாலி, பராகுவே அணிகள் மோதிய உலககோப்பை லீக் போட்டி "டிராவில்' முடிந்தது.
தென் ஆப்ரிக்காவில் நடக்கும் உலககோப்பை கால்பந்து தொடரின், நேற்றைய லீக் போட்டியில், குரூப் "எப்' பிரிவை சேர்ந்த இத்தாலி, பராகுவே அணிகள் மோதின.
பராகுவே அசத்தல்: பரபரப்பாக நடந்த இப்போட்டியின் 3 வது நிமிடத்தில் இத்தாலி அணிக்கு "கார்னர் கிக்' வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இதனை கோட்டை விட்டது இத்தாலி. பராகுவே அணி வீரர்கள் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இத்தாலி வீரர்கள் அடிக்கடி தவறுகள் செய்ய, அது பராகுவே அணிக்கு நல்ல வாய்ப்பாக அமைந்தது. ஆட்டத்தின் 39 வது நிமிடத்தில் பராகுவே அணிக்கு "பிரீ-கிக்' வாய்ப்பு கிடைத்தது. டாரஸ் அடித்த பந்தை, லாவகமாக தலையில் முட்டி சூப்பர் கோலடித்தார் பராகுவே வீரர் அன்டோலின் அல்காரஸ்.
இத்தாலி பதிலடி: இதற்கு இரண்டாவது பாதியில் இத்தாலி பதிலடி கொடுத்தது. 63 வது நிமிடத்தில் கிடைத்த "கார்னர் கிக்' வாய்ப்பில், இத்தாலி வீரர் டி ரோசி கோலடித்து அசத்தினார்.
அதற்குப் பின் பராகுவே அணி தடுப்பாட்டம் ஆட, இத்தாலி அணியால் சாதிக்க முடியவில்லை. இறுதியில் 1-1 என்ற கோல் கணக்கில் இப்போட்டி "டிராவில்' முடிந்தது.
இன்றைய ஆட்டங்கள்
- நியூசிலாந்து-சுலோவேகியா,ரஸ்டன்பர்க்
- போர்ச்சுகல்-ஐவரி கோஸ்ட்,போர்ட் எலிசபெத்
- பிரேசில்-வட கொரியா,ஜோகனஸ்பர்க்
No comments:
Post a Comment