தம்புல்லா, ஜூன் 14: இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் செவ்வாய்க்கிழமை துவங்குகிறது.
15 ஆண்டுக்கு பின்: ஆசிய கோப்பை தொடரில் 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி, கடைசியாக கடந்த 1995ல் சார்ஜாவில் நடந்த தொடரில் கோப்பை வென்றது. இம்முறை கோப்பை வெல்லும் பட்சத்தில், சுமார் 15 ஆண்டுக்கு பின் ஆசிய கோப்பை வென்று அசத்தலாம்.
மீண்டும் "நம்பர்-2': சமீபத்தில் ஜிம்பாப்வேயில் நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடரில் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்தது. இதனால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) ஒருநாள் போட்டிக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலில் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டது. ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி சாதிக்கும் பட்சத்தில், மீண்டும் "நம்பர்-2' இடத்தை பெறலாம்.
சச்சின் இல்லை: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், சொந்த வேலை காரணமாக "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் பங்கேற்கவில்லை. இதேபோல மோசமான "பார்ம்' காரணமாக யுவராஜ் சிங், யூசுப் பதான் நீக்கப்பட்டனர். ஜிம்பாப்வே தொடரின்போது ஓய்வு அளிக்கப்பட்டிருந்த கேப்டன் தோனி, சேவக், காம்பிர், ஜாகிர், ஹர்பஜன், நெஹ்ரா, பிரவீண் குமார் உள்ளிட்ட சீனியர் வீரர்கள் மீண்டும் அணிக்கு திரும்புகின்றனர்.
ஐ.பி.எல்., தொடரில் அசத்திய சவுரப் திவாரி புதுமுக வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜிம்பாப்வே தொடரில் அசத்திய சுரேஷ் ரெய்னா, ரோகித் சர்மா, விராத் கோஹ்லி, ரவிந்திர ஜடேஜா, அஸ்வின், அசோக் டிண்டா, பிரக்யான் ஓஜா ஆகியோருக்கு, இத்தொடரில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி தனது முதல் போட்டியில் வங்கதேச அணியை நாளை எதிர்கொள்கிறது
÷தம்புலாவில் இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் இலங்கை அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
இலங்கையைப் பொறுத்தவரையில் மூத்த வீரர்கள் இல்லாமலேயே ஜிம்பாப்வேயில் நடைபெற்ற முத்தரப்புத் தொடரை வென்று வந்துள்ளது.
÷முத்தரப்புத் தொடரிலிருந்து ஓய்வில் இருந்த கேப்டன் சங்ககரா, ஜெயவர்த்தனே, மலிங்கா, முத்தையா முரளிதரன் உள்ளிட்டோர் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளனர். இதுமட்டுமின்றி சொந்த மண்ணில் விளையாடுவது இலங்கைக்கு கூடுதல் பலம்.
÷÷பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரையில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி நீண்டகாலமாக கிரிக்கெட்டிலிருந்து ஒதுங்கியிருந்த ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் சோயிப் அக்தர் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். இது தவிர அப்துல் ரசாக், சோயிப் மாலிக் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர். இலங்கை பேட்ஸ்மேன்களுக்கு அக்தர் நெருக்குதலை அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நான்கு முறை
ஆசிய கோப்பை கிரிக்கெட் அரங்கில் அதிக முறை கோப்பை வென்ற அணிகள் வரிசையில், இந்தியா (1984, 88, 90-91, 95) மற்றும் இலங்கை (1986, 97, 2004, 08) அணிகள் உள்ளன. இவ்விரு அணிகள் தலா நான்கு முறை கோப்பை வென்றுள்ளன. பாகிஸ்தான் அணி ஒரு முறை (2000) கோப்பை வென்றுள்ளது.
÷இந்தப்போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்குத் துவங்குகிறது. போட்டியை நியோ ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
÷ஜூன் 16-ம் தேதி இந்தியா அணி வங்கதேசத்தையும், ஜூன் 18-ம் தேதி இலங்கை வங்கதேசத்தையும், ஜூன் 19-ம் தேதி இந்தியா பாகிஸ்தானையும், ஜூன் 21-ம் தேதி பாகிஸ்தான் வங்கதேசத்தையும், ஜூன் 22-ம் தேதி இந்தியா இலங்கையையும் எதிர்கொள்கிறது.
No comments:
Post a Comment